இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சொல்லுதல் யாவர்க்கும் எளியது!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சொல்லுதல் யாவர்க்கும் எளியது!
Permalink  
 


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
 
என்பது திருக்குறள்: இதன் விளக்கம் என்னவெனில்
 
எந்த ஒரு காரியத்தையும் அடுத்தவருக்கு  போதிப்பதும், இப்படி செய்யவேண்டும் அப்படி நடக்க வேண்டும் என்று வழிமுறைகளை சொல்வதும்  எல்லோருக்கும் சுலபம். ஆனால தான் சொல்லிய  வார்த்தைகள்படி வாழ்வது என்பது ஒரு சுலபமான  காரியம் அல்ல!  
 
விடாமல் ஒரு நாளைக்கு 10 சிகரெட்டை ஊதி தள்ளுபவர்கூட  அடுத்தவர்களிடம் நீங்கள் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று அறிவுரை சொல்ல முடியும். எனக்கு தெரிந்த ஒருவர்  பொய்யை மிக தாராளமாக பேசுவர் ஆனால் அடுத்தவர்களிடம் "இந்த பொய் பேசுபவர்களை பார்த்தால் மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது" என்பார். இதெல்லாம் உலக மக்களிடையே நாம் அடிக்கடி பார்ப்பதுதான். எனவே ஒரு கருத்தை சொல்லி சென்றவர்கள் எல்லோருமே அதன்படி வாழ்ந்தார்கள் என்ற முடிவுக்கு நாம் வரமுடியாது.    
     
வள்ளுவர் சொன்ன இந்த கருத்து ஒரு சாதாரண அனுபவ கருத்து. ஒருவர் ஒரு கருத்தை மேடையில்  ஏறி பேசிவிட்டாலோ அல்லது ஒரு கருத்தை அவர் எழுதி வைத்துவிட்டாலோ அவர் அதனபடி நிச்சயம் நடந்திருப்பார் என்று நாம் கூறிவிட முடியாது. ஒரு வேளை காந்தியடிகள் எழுதியதுபோல் ஒரு சுய சரிதையை எழுதி நான் இவ்வாறெல்லாம் நடந்தேன் என்று எழுதினால் மட்டுமே நாம் அவரின் நடத்தைகள பற்றி அறிந்துகொள்ள முடியும்.
 
அடுத்தவருக்கு அனேக  அறிவுரைகளை  கூறிவிட்டு தான் தவறிப்போன ஒரு மனுஷனுக்கு நல்ல உதாரணம் பெரிய ஞானநியாகிய சாலமோன்தான். ஊருக்கெல்லாம் உபதேசம் எழுதிவைத்தான் ஆனால் அவனோ இறுதி காலத்தில் கர்த்தரை விட்டு  பிரிந்து போனான் என்று வேதம் சொல்கிறது.
 
நீதி 1:7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்
என்று முதல் அதிகாரத்திலேயே கர்த்தருக்கு பயப்படுதலின் முக்கியத்துவத்தை  எழுதிவிட்டு, கர்த்தருக்கு பயப்படாமல் அந்நிய தேவர்களை பின்பற்றும் காரியங்களை செய்தவன் இந்த சாலமோன் ராஜா.
 
I இரா 11:9 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, 10. அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.
 
எனவே ஒருவர் எழுதுவதை வைத்தோ அல்லது 
வர் பேசுவதைவைத்தோ அவர் பரிசுத்தவான் என்ற ஒரு முடிவுக்கு யாரும் வந்துவிட முடியாது என்றே நான் கருதுகிறேன்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஒரு  மனுஷன் தான் சொன்னபடி வாழவில்லை என்பதற்காகவோ  அல்லது தான் சொன்ன சொல்லி  நிலை நிற்கவில்லை என்பதற்க்காகவோ அவரையம் அவரது வார்த்தையையும் அவரது கருத்துக்களையும் ஆகாது என்று நாம்  தள்ளிவிடமுடியாது என்றே நான் கருதுகிறன். ஏனெனில் பல நேரங்களில் தேவனே தன்னுடய வார்த்தையை சொல்வதற்கு எந்த மனுஷனாவது பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
 
வேத புத்தகத்தில்  கழுதைகூட தீர்க்கதரிசனம் சொல்லி பிலேயாம் என்னும் பெரியமனுஷனுக்கு கர்த்தரின் செயலை புரியவைத்ததாக சொல்லபட்டுள்ளது.  
 
II பேதுரு 2:15 செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,16. தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.

எனவே, சொல்வது கழுதையா மனுஷனா நல்லவனா கெட்டவனா என்பது இங்கு கருத்தல்ல! எவர் ஒருவர்  சொல்லுதையும்  சரியாக அராய்ந்து பார்க்காமல் நாம் அலட்சியம் பண்ணும் நிலையானது சில நேரம்  நம்மை அழிவின் பாதையில் கொண்டு போக வாய்ப்புண்டு என்பதே உண்மை!    
 
வேதாகமத்தில் சில  மனுஷர்கள் சொன்ன சாதாரண வார்த்தைகளை தேவன் அப்படியே தீர்க்கதரிசனமாகவும் மாற்றியிருக்கிறார். உதாரணமாக யேசுவை சிலுவையில் அறைந்து கொல்வதற்கு துணிந்து நின்ற பிரதான ஆசாரியனின் வார்த்தையை இங்கு எடுத்து கொள்ளலாம்.
 
யோவான் 11:49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;
50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
51. இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
52 அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
 
இங்கு இந்த பிரதான ஆசாரியன் சாதாரணமாக சொன்ன வார்த்தைகள் தீர்க்கதரிசனமாகிபோனது. அதுபோல  எவருடைய வார்த்தைக்கும்  மதிப்பை கூட்டிவிடவோ அல்லது எவருடைய வார்த்தைக்கும் உள்ள மதிப்பை குறைத்துவிடவோ தேவனாலே ஆகும். எனவே நாம் யாருடய வார்த்தைகளையும் அலட்சியம் பண்ண முடியாது என்றே நான் கருதுகிறேன்!
 
சொல்லுவது யாவருக்கு எளிதுதான்! ஆனால் எல்லோராலுமே அநேகர் வாழ்க்கைக்கு தேவையான அருமையான நல்ல கருத்துக்களை  கூறி விடமுடியாது.  அழிவின் பாதையில் கொண்டுசெல்லும் தீய கருத்துக்களை சொல்வதும் பொதுவான சில நல்ல கருத்துக்களையும் எல்லோராலும்  முடியும் என்றாலும், மிக சிறந்த  கருத்துக்களை சொல்வதுகூட எளிதல்ல அதற்க்கும் நல்ல தேவ ஞானம் நிச்சயம் அவசியம். 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)புதியவர்

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 

நல்ல படைப்பு,,, ஆனால் நாம் நமக்கு தேவையான கறுத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வது சிறந்தது-- Edited by jamesdhurai on Wednesday 30th of November 2011 10:01:23 AM

__________________

 

காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்மாற்கு:1:15

 மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

jamesdhurai wrote:

நல்ல படைப்பு,,, ஆனால் நாம் நமக்கு தேவையான கறுத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வது சிறந்தது


தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரர்  அவர்களே! 

இந்த தளத்திலும் வேதாகமத்தின் அடிப்படையில்  எழுதப்பட்ட  அனேக நல்ல கருத்துக்களோடு தேவையற்றதுபோல் தோன்றும் சில கருத்துக் களும் இருக்கலாம். அவரவருக்கு தேவன்அருளிய வெளிப்பாடு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் இங்கு கருத்துக்கள எழுதபட்டுள்ளது. நலமானதை பிடித்து கொள்ளுங்கள் தேவையற்றதை விட்டுவிடுங்கள். 

இங்கு ஒரு திருக்குறளை சுட்டுவதற்காக மன்னிக்க வேண்டும்!  

எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்ற குறளுக்கு ஒப்பாக,
 
I கொரிந்தியர் 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்;
 
என்று வசனம் சொல்வதால், சொல்லப்படும் எந்த ஒரு கருத்தையும் ஆவிக்குரிய நிலையில்  நாம் சரியாக ஆராய்ந்து பார்க்காமல் நாம் ஒதுக்கிவிட முடியாது என்றே நான் கருதுகிறேன். ஒரு கருத்து நமக்கு தேவையான கருத்து என்பதை எதன் அடிப்படையில் தீர்மானிப்பது? அதற்க்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா?  வேதாகமத்தையே  முடிவான  அளவுகோலாக எடுத்துகொண்டாலும், தவறான உபதேசம் செய்பவர்களும் அதற்க்கு சாட்சியாக  அனேக வேதே  வசனத்தையே சுட்டுகின்றனரே!  எல்லாமே எழுதி நமது கையில் கொடுக்கபட்டு விட்டது என்றாலும் அநேகர் அவரவர்களின் சுய  விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி பொருள் கொண்டு போதிக்கின்றனர்.  
 
இன்று வேதாகமத்தை படிக்கும் அநேகர் ஏதாவது ஒரு முன்  தீர்மானத்தின் அடிப்படையிலேயோ  அல்லது  யாராலோ கற்ப்பிக்கபட்ட ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே முன் நிரப்பபட்ட ஒரு பாத்திரமாய் அதை படிப்பதால், அவர்களால் தேவனை பற்றியும் அவரது கடைசிகால திட்டங்கள் பற்றியும் ஒரு முழுமையான அறிதல் நிலைக்கு வரமுடியாமல் போகிறது என்றே நான் கருதுகிறேன். தேவனிடத்தில் இருந்து உண்மைகளை  அறிந்துகொள்ள நிரப்பபட்ட பாத்திரம் அல்ல வெறும் பாத்திரமே அவசியமாகிறது.  
 
எனவே  நமக்கு தெரியாத  அல்லது நமக்கு புரியாத ஒரு கருத்தை  ஓரிடத்தில் எழுதியிருக்க கண்டோமானால் அதை அலட்சியம் பண்ணாமல், அல்லது  இது நமக்கு தேவையற்றது என்று ஒதுக்காமல் அதை குறித்து மிக அதிகமாக ஜெபித்து ஆண்டவரிடம் விசாரித்து  அல்லது மிக அதிகமாக தியானித்து அதன் பின்னரே அது நமக்கு தேவையா  இல்லையா என்ற முடிவுக்கு வருவதே  நல்லது  என்பது என்னுடய கருத்து. அதன் அடிப்படையிலேயே நான் எல்லோருடைய கருத்துக்களையும் எடுத்து நிதானிக்கிறேன்.
 
தேவன்  தன்னை வாஞ்சையோடு தேடும் பிள்ளைகளை ஒருநாளும் வழிதப்ப விடுவது இல்லை என்பது என்னுடய உறுதியான கருத்து.  
 
யோவான் 10:28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை
 
யோவான் 17:12 வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
 
கேடான சிந்தனை உள்ளவன்  மட்டுமே கெட்டுபோவான்! நல்ல  சிந்தனை  நல்ல நோக்கங்களுடன்  கர்த்தரை பற்றும் உத்தம இருதயம் உள்ளவர்கள் தங்கள் சுய புத்தியின் பக்கம் சாயாமல் தேவன்மேல்  நம்பிக்கையாய் இருந்து ஜெபித்தால், அவர் நிச்சயம் தீமையான  வழியை  குறித்து எச்சரித்து  நம்மை அதினின்று விலக்கிவிடுவார்!   
 
II நாளாகமம் 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிற வர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard