இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வண்ணத்துப்பூச்சியா? பச்சோந்தியா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
வண்ணத்துப்பூச்சியா? பச்சோந்தியா?
Permalink  
 


'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'. - (ரோமர் 12:2).


கிறிஸ்தவர்களில் இந்த நாட்களில் இரண்டு வகையினர் காணப்படுகின்றனர். ஒரு வகையினர் பக்தியின் வேஷத்தை தரித்தவர்கள். மற்றவர்கள் உண்மையிலேயே புதிதாக்கப்பட்டவர்களாக கர்த்தருக்குள் வளருகிறவர்கள்.

மேற்கண்ட வசனத்தில் வேஷந்தரித்தல், மற்றும் புதிதாகுதல் என்ற இரண்டு வார்த்தைகளை பார்க்கிறோம். வேஷந்தரித்தல் என்பது சபைக்கு வரும்போது, அவர்களை போல பரிசுத்தவான்கள் யாரும் இருக்க முடியாது என்பது போன்று மிகவும் பரிசுத்தமாய் தோற்றமளிப்பார்கள். அவர்கள் காட்டும் தாழ்மையும், மிகவும் அன்போடு இருப்பவர்கள் போலவும் காட்சியளிப்பார்கள். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போன்று, வெளியே பரிசுத்தமாயும், உள்ளேயோ எலும்பும், சகல அசுத்தமும் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை அவர்கள் வெளிப்படுத்தாமல், போலியான ஒரு பரிசுத்தத்தை அணிந்து கொண்டு, அதையே வெளியே வெளிப்படுத்துகிறார்கள்.

புதிதாக்கப்படுதல் என்பது, உள்ளத்திலிருந்து உண்மையாக புதிதாக்கப்பட்டவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக, கர்த்தருக்குள் வளருகிறவர்களை குறிக்கும்.

நாம் பச்சோந்திகளை (Chameleon) பார்த்திருக்கிறோம். அவை தாங்கள் செல்லும் இடத்திற்கேற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றி கொள்ளும். சிவப்பான ஒரு இடத்திற்கு செல்லும்போது அது தன் நிறத்தை சிவப்பாக மாற்றி கொள்ளும், பச்சையான இடத்திற்கு செல்லும்போது, அதன் நிறத்தை பச்சையாக மாற்றி கொள்ளும். அது செல்லும் இடம் எதுவோ அதன் நிறம் எதுவோ அதுவாக தன்னை மாற்றி கொள்ளும் வகையை அது சேர்ந்தது. அதுபோல சில கிறிஸ்தவர்களும் வேஷந்தரிக்கிறவர்களாக, சபையிலோ, வேதப்பாட வகுப்பிலோ அங்கு இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு பரிசுத்தமாய் காட்சி அளிப்பார்கள். ஆனால் அதை விட்டு வெளியே உலகத்தில் வரும்போது, உலகத்திற்குரியவர்களாக மாறிவிடுவார்கள். எப்படி பச்சோந்தி, தன் நிறத்தை மாற்றினாலும், அது பச்சோந்தியாகவே இருக்கிறதோ, அப்படியே இவர்களும், தங்கள் உள்ளான இருதயத்தில் மாயக்காரர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களே அல்ல!

ஆனால் வண்ணத்துப்பூச்சியை பார்த்தோமானால், அது அற்புத விதமாக முழு மாற்றத்தையும் பெறும்போது, மிகவும் அழகுள்ளதாக மாறுகிறது. முதலில் கூட்டுப்புழுவாக இருந்த பூச்சி, புதிதாக்கப்படுவதினால், அது முற்றிலுமாக மாறி விடுகிறது. அதுதான் உண்மை கிறிஸ்தவ வாழ்க்கையாகும். உண்மை கிறிஸ்தவனாகும். சபைக்கு வரும்போதும், வெளியே செல்லும்போதும், அவர்கள் கிறிஸ்துவினால் மாற்றப்பட்டவர்களாக, புதிதாக்கப்பட்டவர்களாக, உருமாறினாலும், அது நிரந்தரமானதாக இருப்பார்கள். எப்படி வண்ணத்துப்பூச்சி, ஒரு முறை வண்ணத்துப்பூச்சியாக மாறியப்பின் அது வண்ணத்துப்பூச்சியாகவே இருக்கிறதோ, அப்படியே இவர்களும் புதிதாக்கப்பட்டப்பின,; மறுரூபமாக்கப்பட்டப்பின், உண்மை கிறிஸ்தவர்களாக, கர்த்தரின் சாயலில் பூரண வளர்ச்சியை அடைந்தவர்களாக இருப்பார்கள்.

பிரியமானவர்களே, நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? பச்சோந்தியை போல நாம் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றி கொள்கிறவர்களாக, இந்த உலகத்திற்கு உரிய வேஷத்தை தரித்தவர்களாக இருக்கிறோமா? அல்லது, வண்ணத்துப்பூச்சியை போல உருமாற்றம் பெற்று, நம் மனம் புதிதாகிறதினால், கிறிஸ்துவை போல மறுரூபமாகி கொண்டிருக்கிறோமா? உலகத்தின் வேஷம் ஒரு நாள் கடந்து போய் விடும் (1 கொரிந்தியர் 7:31). வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக வெளி தோற்றத்திற்கு பக்தியுள்ளவர்களாக வாழாதபடி, உள்ளேயே எல்லாவித அசுத்தத்தாலும் நிறைந்திருக்காதபடி, உள்ளான இருதயத்தில் மாற்றமுள்ளவர்களாக, பரிசுத்தமுள்ளவர்களாக வாழுவோமா? 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2 கொரிந்தியர் 5:17)' என்ற வசனத்தின்படி, வண்ணத்துப்பூச்சியை போல முற்றிலும் புதிதாக்கப்பட்டவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக கர்த்தருக்காக எழும்பி பிரகாசிப்போமாக! ஆமென் அல்லேலூயா!.................__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இந்த திரியின் தலைப்பை படித்ததும் என்னுடய சிந்தனைகள் வேறு மாதிரி போய்விட்டது: வந்த சிந்தனையை எழுதிவிட்டேன்.  
 
மலர்கள் பூத்து குலுங்கும் வசந்த காலத்தில் அனேக வண்ணத்து பூச்சிகள அங்கும் இங்கும் பரந்து திரிவதை நாம் பார்க்கமுடியும். இவைகளை  பிடிப்பதற்கு இலை தழைகளின் நிறத்தைபோல் தாங்கள் நிறத்தையும் மாற்றிக்கொண்டு பூவோடு பூவாக இலை யோடு இலையாக அமர்ந்திருக்கும் பச்சோந்திகள் நம் கண்களுக்கு அவ்வளவு சுலபமாக தெரிவதில்லை. 
 
அங்கும் இங்கும் ஆடிபறக்கும் வண்ணத்து பூச்சுகள் எதிர்பாராத விதமாக இந்த பச்சோந்திகள் பக்கத்தில் வந்துவிட்டால் அவவளவுதான் அதன் ஆயுசு முடிந்துபோனது. வண்ணத்து பூச்சால் பறக்காமலும் இருக்க முடியாது பச்சோந்தியால்  அதை பிடித்து உண்ணாமலும் இருக்க முடியாது. 
 
"பச்சோந்தியா? அல்லது வண்ணத்து பூச்சா?"  இரண்டுக்கும் எப்பொழுதம் ஒரு போராட்டமே! 
 
இந்த போராட்டம் என்பது எல்லா உயிரிகளுக்குள்ளும் ஒவ்வொரு விதமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது!  இங்கு யாரை குறை  சொல்வது? உணவை தேடி அலையும்  வண்ணத்து பூச்சை குறை சொல்வதா அலல்து அதை  உண்டால்தான் வயிறு நிரம்பி பிழைக்க முடியும் என்ற நிலையில் இருக்கும்  பச்சோந்தியை குறைகூறுவதா  அல்லது இவைகளை இதுபோன்ற ஒரு நிலையில் உண்டாக்கிய ஆண்டவரை  கேள்வி கேட்பதா?  
 
அதுபோல் நமது மாம்ச சரீரமானது எப்பொழுதும் இன்பத்தை தேடி ஓடுவதாகவே இருக்கிறது. அதேநேரம் உலகில் இருக்கும் பச்சோந்திபோன்ற  சாத்தானோ நேரத்துக்கு தகுந்தால்போல் நிறத்தை மாற்றி மனுஷர்களுக்கு இன்பத்தைகாட்டி தேவன் நியமித்த கொட்டை தண்டி  தன் பக்கம் வருபவரகளை எல்லாம் விழுங்கி அழிவை நோக்கி நடத்துகிறான்.
 
எச்சரிக்கை இல்லாத ஜனங்களோ அறிவில்லாமல் சங்காரம் ஆகிறார்கள்
 


-- Edited by SUNDAR on Tuesday 22nd of November 2011 04:17:16 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard