பணியின் இடையே தலத்தில் பதிய பெற்ற சில திரித்துவத்தை பற்றிய கட்டுரைகளை படித்து மனவேதனை அடைந்தேன்..
ஆவியில் வளரும் படி தான் நான் நான் இத்தலத்திற்கு வந்தேன்.. அனால் ஆவியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கத அனேக கருத்துகள் உலவுவதை படித்து கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன்.. அனால் திரித்துவத்தை பற்றிய கருத்தை பதில் அளிக்காமல் விட்டு விட என் பக்திவைராக்கியம் தடை செய்கின்றது..
பொய்யின் ஆவியின் செயல் பாடுகளை கர்த்தரின் ஆவியினை கொண்டு இயேசுவின் நாமத்தினால் சபிக்கின்றேன்.. கள்ள போதகர்களின் வினோத போதனைகளையும் இயேசுவின் நாமத்தினால் சங்கரித்து போடுகிறேன்...
திரித்துவத்திற்கு ஆதரவான வேத வசனம்
I யோவான் 5:7 பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்...
வெளி 4:8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்பரிசுத்தர்பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
இங்கு ஏன் மூன்று முறை "பரிசுத்தர்" என்கிற பதங்கள் வருகின்றது..
நம் தேவன் சிங்காசனத்தில் மேற்கூறியவாறாக கேருபீன்களால் துதிக்கபட்டார்.
பிதா -பரிசுத்தர்
யோவான் 17:11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
குமாரன்- பரிசுத்தர்
மாற்கு 1:24 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
அப்போஸ்தலர் 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
அப்போஸ்தலர் 13:35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
I பேதுரு 1:16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
ஆவியானவர்- பரிசுத்தர்
யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
தேவரீர் ஒருவரே
I இராஜாக்கள் 8:40தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர்ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.
II நாளாகமம் 6:31தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக்கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர்ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலனளிப்பீராக.
சங்கீதம் 83:17யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர்ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
சங்கீதம் 86:10தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
வெளி 15:4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர்ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
வேதாகமம் சொகிறது நாம் கர்த்தரின் சாயல் என்று.. இப்போது நமது சாயலை கொண்டு நம்மை படைத்தவரை அவர் கொடுத்த அறிவை கொண்டு சிந்திப்போம்..
வேத அடிப்படையில் நாம் ஆவி,ஆத்மா,சரிரம் என மூன்றும் கொண்டு ஒரே ஆள் தத்துவமாய் இருக்கிறோம்..
அதே போல கர்த்தரும் மூன்று நிலையில், ஒன்றாக இருக்க வேண்டும்..
கவனிக்க..
ஆவி,ஆத்மா,சரீரம் இம்மொன்றும் சேர்ந்தால் மாத்திரம் நாம் ஒரு வேலையை செய்ய முடியும்..
தேவனுக்கு இவ்வாறில்லை..
பிதாவானவர் தனியாகவும் கிரியை செய்ய இயலும்..
யோவான் 5:17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்
அவர் குமாரனாய் தனியேயும் கிரியை செய்ய இயலும்..
யோவான் 5:17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்
பரிசுத்த ஆவியானவர் தனியேயும் கிரியை செய்ய முடியும்.(பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூசணங்களை அவர் பிதா, குமாரன் போல மன்னிகிறதில்லை.
அப்போஸ்தலர் 13:2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்..
இவைகளில் இருந்து நீங்கள் யாவரும் பற்றுதலோடு அறிய வேண்டியது யாதெனில்...
மேற்கூறிய காரியங்களில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை சகோதரரே. மூன்று நிலைகளில் இருந்தாலும் அவர்கள் மூவரும் ஒருவர்தான் என்ற கருத்தை நாங்களும் ஏற்கிறோம்.
ஆனால் மூன்று தேவன்கள் ஒன்றாய் இருக்கிறார்கள் அவர்கள் சமமான வல்லமை உடையவர்கள் என்பது போன்ற கருத்தை மட்டுமே நாங்கள் மறுக்கிறோம்.
JOHN12 wrote:
/////அனால் திரித்துவத்தை பற்றிய கருத்தை பதில் அளிக்காமல் விட்டு விட என் பக்திவைராக்கியம் தடை செய்கின்றது////
தாங்கள் பக்தி வைராக்கியத்து நன்றி. தங்களிடம் இருந்து அனேக காரியங்களை நாங்கள் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவே கருதுகிறோம். தங்களுக்கு எந்த கட்டுரை மன வேதனையை தந்தது? அதில் உள்ள தவறு என்னவென்பதை சம்பந்தபட்ட இடத்தில் சுட்டினால் எங்கள் புரிதலுக்கு ஏற்றதாக இருக்கும்! ஓரிரு வசன ஆதாரத்துடன் சுட்டினால் போதும் சகோதரரே
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
I யோவான் 5:7 பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்...
வெளி 4:8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர்பரிசுத்தர்பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிரு
சரி உங்களிடத்தில் 2 கேள்விகளை கேட்க்கின்றேன் அதற்க்கு எனக்கு பதில் தாருங்கள்
சகரியா : 4
10. அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்
சகோதரர் john அவர்களே இங்கு கர்த்தருக்கு 7 கண்கள் என்று வசனம் சொல்கின்றது நீங்கள் சொல்கின்றபடி பிதா- குமாரன் - பரிசுத்த ஆவி என்றால் இங்கு கர்த்தருக்கு 6 கண்கள் என்று தானே சொல்ல பட்டு இருக்க வேண்டும் ஆனால் 7 என்று சொல்ல பட்டுள்ளதே எனவே எனக்கு கர்த்தருடைய ஏழு கண்கள் என்றால் என்ன என்று விளக்கவும்
மற்றும்
வெளிபடுத்தின விசேஷம் : 3
1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது
சகோதரர் JOHN அவர்களே இங்கு இயேசு தன வாக்கியத்தில் தேவனுடைய 7 ஆவிகளை உடையவர் என்று சொல்கின்றார்
எனவே இங்கு ஆண்டவராகிய இயேசு சொன்ன 7 ஆவிகள் என்றால் என்ன என்று விளக்கவும்
உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.............
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 13th of December 2011 09:53:26 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
நல்லது சகோதரரே... என்னை சோதிக்க விரும்புகிறீர்கள் என்று அறிகிறேன்..
////சகோதரர் john அவர்களே இங்கு கர்த்தருக்கு 7 கண்கள் என்று வசனம் சொல்கின்றது நீங்கள் சொல்கின்றபடி பிதா- குமாரன் - பரிசுத்த ஆவி என்றால் இங்கு கர்த்தருக்கு 6 கண்கள் என்று தானே சொல்ல பட்டு இருக்க வேண்டும் ஆனால் 7 என்று சொல்ல பட்டுள்ளதே எனவே எனக்கு கர்த்தருடைய ஏழு கண்கள் என்றால் என்ன என்று விளக்கவும் ////
கண்களை படைத்த கர்த்தரின் கண்களை இவ்வாறு எண்ண முடிவது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது...
நீங்கள் நிச்சயம் சாலமோனின் ஆலய பிரதிஷ்டை ஜெபத்தையும்,கர்த்தர் அருளின பதிலையும் படித்திருக்க கூடும்...
பலி செலுத்தின பின் கர்த்தரின் மகிமை ஆலயத்தை சூழ்ந்தது.. அவர் என் கண்களையும் இதயத்தையும் இந்த ஆலயத்தில் வைக்கிறேன் என்றார்..(வசனத்தை நீங்களே கண்டு பிடிக்க கூடும் என நம்புகிறேன் )
வேதம் காட்டும் ஆவிக்குரிய சபைகள் ஏழு..
இந்த ஆவிக்குரிய சபைகளில் தேவனுடைய கண்கள் மற்றும் இதயம் வைக்கப்பட்டுள்ளது.. பதில் இப்போது தெளிவாய் புரிந்திருக்கும்..
ஏழு சபைகளில் உள்ள கர்த்தரின் ஏழு இதயங்களே ஏழு ஆவிகள்..
கர்த்தரின் சமூகத்தை தரிசிக்கும் ஏழு சபைகளின் தூதர்களே ஏழு நட்சத்திரங்கள்..
இப்போது உங்களிடம் ஒரு கேள்வி..
மேல்கிசதேக்கு யார்? அவர் வம்சாவளி என்ன?
(கள்ள போதகர்களை சபித்தேன்.. இதில் மாற்று கருத்து இல்லை)
-- Edited by JOHN12 on Wednesday 14th of December 2011 12:33:46 PM
உண்மையாகவே எனக்கு இதை குறித்து தெரியாது ஒரு வேலை நீங்கள் மேல்கிசதேக்கு யார்? என்று எனக்கு விளக்கினால் நான்
தெரிந்து கொள்வேன் அதாவது உதாரனத்திற்க்கு நீங்கள் இயேசு தான் மேல்க்கிசதேக்காக வந்தார் என்று நீங்கள் சொன்னால் அதை கூட நான் ஏற்றுகொள்வேன் இல்லை என்றால் மௌனமாய் இருப்பேன் ஏனென்றால் எனக்கு தான் மேல்கிசதேக்கு என்பர் யார் என்று தெரியாதே தெரியாத பட்சத்தில் நான் எப்படி உங்கள் கருத்து தவறு என்று கூற முடியும் எனக்கு
தெரிந்தால் நான் விடாபிடியாக நீங்கள் சொல்வது தவறு நீங்கள் ஒரு கள்ள போதனைக்காரர் என்று சொல்வேன் ஆனால் எனக்கு தெரியாத பட்ச்சத்தில் நான் எப்படி உங்கள் கருத்தை புறக்கணிக்க கூடும்
இதை உங்களுக்கு தெரியபடுத்த தான் சகோதரரே வேதத்தில் தேவனுக்கு 7 ஆவிகள் உண்டு 7 கண்கள் உண்டு என்ற உதாரணத்தை காட்டி நாம் நமக்கு முழுமையாக அல்லது உண்மையாக ஒரு கருத்து தெரியாமல் கள்ளதீர்க்கதரிசி கள்ளபோதனை என்று சொல்லகூடாது என்பதை உங்களுக்கு தெரியபடுத்தவே இந்த காரியத்தை எழுதினேன் மற்றபடி
நீங்கள் அறிந்து கொண்டே கேள்வியை என்னிடம் கேட்டதினால் நான் அவ்வாறு எழுதினேன் சகோதரரே..முதலில் நான் தங்களின் மனம் புண்படும் படி எதாகிலும் எழுதி இருந்தால் மன்னயுங்கள் ...
நான் கூற விழைவது என்னவென்றால் விசுவாசக்க கடினமாக உள்ள ஆனால் ரட்சிப்புக்கு வழிவகுக்கும் வேத கருத்துகளை கூடி விவாதித்து விசுவசிப்பது நல்லது(விக்ரகத்திற்கு படைத்தவைகளை உண்பதை குறித்து அப்போஸ்தலேர்களும் அவ்வாறே செய்தார்கள்.)
கர்த்தரை தேடி அறிந்தவர்கள்..சகலத்தையும் அறிவார்கள் என்று வேதம் சொல்கிறது..
அப்படியே நாம் நமது விசுவாச அளவையின் படி சகலத்தையும் அறிந்து விசுவாசிப்பது தேவனுக்கு சித்தமாக இருக்கிறது...
நாம் எல்லோரும் கர்த்தால் போதிக்கப்பட்டு இருப்பதனால் வேதத்தை நம் இதயத்தில் அவர் எழுதி உள்ள படியினால்.. வேதத்தை முழுமையாய் கற்றுக்கொள்ள நம்மால் ஆகும் என விசுவசிக்கின்றேன்.. நீங்களும் விசுவாசிக்களாமே!!
சரி மேல்கிசதேக்கை பற்றி உங்களுக்கு தெரிந்தால்.. நீங்கள், என்னை கருத்து கூறும் முன் எவ்வாறு எதிர்க்க இயலும்... கருத்து ஒத்து போக வாய்பே இல்லையா என்ன?
கருத்து ஒதுபோனால் போதகர்.. ஒவ்வாமல் போனால் கள்ளபோதகர்..இப்படியான நிலை நமிடையே மாறட்டும்..அனலோடு வேதம் கற்போம் விவாதிப்போம் ...
நான் முன்பே கூறியபடி கற்றுகொள்ளவே இத்தலத்திற்கு வந்தேன்.. எனக்கு இடறல் இல்லாமல் தெரிந்த கருத்துகளை வெளிபடுதுகிறேன்..அவ்வளவே...
-- Edited by JOHN12 on Wednesday 14th of December 2011 01:53:31 PM
நான் முன்பே கூறியபடி கற்றுகொள்ளவே இத்தலத்திற்கு வந்தேன்.. எனக்கு இடறல் இல்லாமல் தெரிந்த கருத்துகளை வெளிபடுதுகிறேன்..அவ்வளவே...
அன்பு சகோ. ஜான்12 அவர்களே, தங்களின் கருத்துக்களுக்கு நன்றி!
திரித்துவம் என்ற ஒரு வார்த்தை வேதத்தில் இல்லை. ஆகினும் இறைவனின் செயல்பாடுகள் அடிப்படையில் நாம் அதை நம்புகிறோம். இந்த தளத்திலும் திரித்துவத்தை எதிர்ப்பவர் எவரும் இல்லை. "தேவன் ஒருவரே" என்று வேதம் சொல்லும் நிலையில் திரித்துவம் பற்றிய புரிதல்கள் சகோதரர்களிடையே வேவேராக இருக்கிறது. வசனத்தின் அடிப்படையிலேயே இங்கும் சில விளக்கங்கள் கொடுக்கபட்டுள்ளது. அதில் எது தவறு என்று தாங்கள் கருதுகிறீர்களோ அதை சம்பந்தபட்ட திரியில் சுட்டி காட்டுங்கள். நாம் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வரலாம்.
மற்றபடி திரித்துவம் பற்றிய தங்களின் புரிதலை குறித்து எதுவும் எதிர் கருத்து சொல்ல எதுவுமில்லை.
ஆண்டவரை அறிந்த நாம் எப்பொழுதும் வேத தியானத்தில் இருக்கவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே இந்த தளம் செயல்படுகிறது. எனவே தங்கள் கருத்துக்களை தயங்காமல் பதிவிடலாம். மேலும் எழுதப்பட்ட கருத்துக்கு எதிர்கருத்து இருக்கும் பட்சத்தில் தாராளமாக வசனத்தோடு விளக்கலாம். அனால், ஒருசில வசனத்தின் அடிப்படையில் இங்கு ஒரு கருத்து எழுதப்பட்டிருக்க, இன்னொரு வசனத்தை வைத்து அந்த கருத்தை தவறு என்று சொல்லி மறுக்கும் முன் நன்றாக ஜெபித்து விட்டு பின்னர் பதிவிடுங்கள்.
மேலும் உன்னதமான தேவனின் ஆசாரியனாகிய
மெல்கிசேதேக்குபற்றிய சில விளக்கங்கள் தங்களுக்கு அறியவிருக்குமானால் அதை தனியாக ஒரு திரியில் தாராளமாக பதிவிடலாம். நாங்களும் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம்.
நாம் எல்லோரும் கர்த்தால் போதிக்கப்பட்டு இருப்பதனால் வேதத்தை நம் இதயத்தில் அவர் எழுதி உள்ள படியினால்.. வேதத்தை முழுமையாய் கற்றுக்கொள்ள நம்மால் ஆகும் என விசுவசிக்கின்றேன்.. நீங்களும் விசுவாசிக்களாமே!! ____________________________________________________________________________
உங்கள் விளக்கத்திற்கு கருத்துக்கும் நன்றி சகோ : ஜான் அவர்களே
உங்களை போலவே நானும் கற்றுகொள்ளவே இத்தளத்திற்கு வந்தேன் ஆனால் நீங்கள் எழுதியது போல அநேகர் பதிவுகளை தரவில்லை
2 , 3 நபர்கள் மட்டும் தான் பதிவிடுகின்றார்கள்
இத்தளத்தை பார்வையிடுகின்ர அநேகர் தங்களுக்கு தெரிந்த கருத்துகளையும் மற்றும் தங்கள் அனுபவங்களையும் பதிவிட்டால் ஆவிக்குரிய வாழ்கையில் என்னை போன்ற ஆட்கள் வளர்வதற்கு ப்ரோஜினமாய் இருக்கும்
சிலருக்கு தமிழ் எழுதுவது மிக கடினமாய் இருக்கும் என்பது எனக்கு தெரியும் எனவே நான் பார்வையாளரை தாழ்மையோடு கேட்டு கொள்வது என்னவென்றால் நீங்கள்
KARTHTHAR NALLAVAR AVAR KIRUBAI ENDRUM ULLATHU
DEVANAL YELLAM KOODUM
உங்களால் தமிழ் எழுத முடியவில்லை என்றாலும் பரவாயில்லை நான் மேலே குறிப்பிட்ட படி எழுதியாவது
உங்கள் கருத்துகளை தெரியபடுத்துமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்...................................
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
மூவரும் ஒன்றயிருகிறார்கள் என வேதத்தில் சொல்லி இருக்க.. மூவரும் சிம்மாசனத்தில் காணப்பட.. பரிசுத்தர் என துதிக்க பட..நமக்கு ஏன் மூவரும் சம மகிமை உள்ளவர்களா என கேள்வி எழுப்ப எவ்வாறு தோன்றுகிறது..
குமாரன் பிதாவிற்கு பின் தோன்றினவர் என்பர்களுக்கான என் கேள்வி?
குமாரன் இல்லாத நிலையில் பிதா என கர்த்தர் எவ்வாறு அழைக்க பட கூடும்?
குமாரன் உள்ளவரே பிதா அல்லவா ?..
புத்தக சுருளில் என்னை பற்றி எழுதி இருக்கிறது என்று சொல்லி கர்த்தருக்கு கீழ்ப்பட்டு "வார்த்தை" குமாரன் என வெளிப்பட்டார்..அப்போது தேவன் திரிதுவமானார்.. பிதாவின் சாயல் உள்ளவரே பரிபூரண குமாரன்..அவர் தம் பிதாவிற்கு மகிமையை தேடினார்..
பின்வரும் கேள்விகள் நம் விவாதத்திற்கு உதவும் என விசுவாசித்து வினவுகிறேன்.. பதில் தெரிந்தவர்கள் கூறவும்..
1 )சங்கீதம் 24ல் சொல்லப்பட்ட மகிமையின் ராஜா யார்??
2 )உயர்த்த கிறிஸ்துவின் மகிமை,பூமியில் அவர் வாழ்ந்த சமயத்தின் மகிமைக்கு சமமானதா? 3 )பிதா தான் உயர்த்த இயேசு,தூய ஆவியானவர் எல்லாருக்கும் மேற்பட்டவரா?
4 ) தேவனுக்கு எழு ஆவி தான் உள்ளதா? ஒவ்வொரு ஆவியும் ஆள்தத்துவம் என பொருள் கொள்வது சரியா?
//பொய்யின் ஆவியின் செயல் பாடுகளை கர்த்தரின் ஆவியினை கொண்டு இயேசுவின் நாமத்தினால் சபிக்கின்றேன்.. கள்ள போதகர்களின் வினோத போதனைகளையும் இயேசுவின் நாமத்தினால் சங்கரித்து போடுகிறேன்...
திரித்துவத்திற்கு ஆதரவான வேத வசனம்
I யோவான் 5:7 பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; //
மேற்கண்ட வசனமானது மூலத்தில் இல்லை என்பதும், இது ஒரு இடைசெருகல் என்றும் தெரிய வருகிறது. இந்த வசனம் உண்மையா, பொய்யா என்பது மற்றொரு விஷயம். இதை உண்மை என்றே கொண்டாலும், இவ்வாறு வேத வசனங்களை சேர்ப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன? ஏன் அந்த வாக்கியம் அடைப்புகுறிக்குள் இருக்கிறது? நானும் எனக்கு பக்தி விருத்திக்கேதுவான இது போல அனேக வசனங்களை என் வேத புத்தகத்தில் சேர்த்து கொள்ளலாமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
இந்த வசனம் இடை செருகல் என்றால் நீங்கள் அதை செய்தவரையே சபித்திருக்கிறீர்கள் என்பதையும் அறியுங்கள்.
கீழ்கண்ட கட்டுரையை படித்து உங்கள் கருத்து என்னவென்பதை சொல்லுங்கள்.
மூவரும் ஒன்றயிருகிறார்கள் என வேதத்தில் சொல்லி இருக்க..
அந்த வசனமானது இடை செருகல் என்றும் அதனால்தான் அது பிராக்கெட்டுக்குள் போடப்பட்டுள்ளது என்றும் சில வேற்றுமொழி வேதாகமத்தில் அந்த வசனம் இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. அதாவது தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதர்க்காக அல்லது புரிய வைப்பதற்காக பின்னாளில் பிராக்கெட்டுக்குள் ஒரு விளக்கம் கொடுக்கபட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன்.
JOHN12 wrote:///மூவரும் சிம்மாசனத்தில் காணப்பட.. பரிசுத்தர் என துதிக்க பட//
மூவரும் சிம்மாசனத்தில் காணப்பட்டார்கள் என்பதற்கு எந்த வசன ஆதாரமும் இல்லை! தாங்கள் குறிப்பிட்டுள்ள வெளி 4:8 ஐ சுட்டியுள்ளீர்கள் அங்கு வீற்றிருந்த தேவனை பற்றி வேதம் சொல்லும் போது "ஒருவர்" என்றே வேதம் சொல்கிறது" மூன்றுமுறை பரிசுத்தர் என்று சொல்லிவிட்டார் மூவர் என்று சொல்லிவிட முடியாது. வேதம் தெளிவாக "ஒருவர்" என்று சொன்ன பிறகு நாம் எந்த காரணத்தை காட்டியும் மூவர் என்று சொல்வது சரியான நிலை போல் தெரியவில்லை.
வெளி 4:2. உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல்ஒருவர் வீற்றிருந்தார்.
அங்கு வீற்றிருப்பவர் தேவன் ஒருவரே! ஏனெனில் தொடர்ந்து அடுத்த அதிகாரத்தில் வரும் வசனத்தை கவனித்தால்,
வெளி 5: 6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்;
7. அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.
இங்கு வரும் ஆட்டுக்குட்டியானவரே இயேசு என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை! தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்க தேவ ஆட்டுக்குட்டியான இயேசு அவர் கையில் இருந்து புத்தகத்தை வாங்குகிறார்.
மேலும் ஸ்தேவன் கல்லெறியபடுகையில் கீழ்கண்ட காட்சியாய் காண்கிறார்
தேவனின் வலது பாரிசத்தில் இயேசு இருப்பதை தான் காங்கிறாரே தவிர ஒன்றாக தேவனோடு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. தேவனுக்கு தனி சிங்காசனம் அவருக்கு வலது பாரிசத்தில் ஆட்டு குட்டியானவரான இயேசுவுக்கு தனி சிங்காசனம்
சகோ.சந்தோஷ் அவர்களே.. நம் இயேசுவின் பெயரும் மூல பாஷையில் Yahushua என்று இருக்க.. நாம் இயேசு என்றும் கூப்பிடுகிறோம்.. அடிபடையே தவறு தான்..அனால் தேவகுமாரனின் மகிமைமையான நாமத்தை உள்ளபடி அழைக்க முடியாத வருத்தம் தங்களுக்கு இல்லையா...
மொழிபெயர்ப்பு பிழைகள் பற்றி தனியே திரி அமைத்து விவாதிப்பது நல்லது..
சகோ.சுந்தர் அவர்களே..
நீங்கள் சொன்னது ///தேவனின் வலது பாரிசத்தில் இயேசு இருப்பதை தான் காங்கிறாரே தவிர ஒன்றாக தேவனோடு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. தேவனுக்கு தனி சிங்காசனம் அவருக்கு வலது பாரிசத்தில் ஆட்டு குட்டியானவரான இயேசுவுக்கு தனி சிங்காசனம்///
மத்தேயு 22:44 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
சங்கீதம் 110:1கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
பிதாவின் வலது பாரிசத்தில் உட்காரும் இயேசுவை பற்றி இங்கே சொல்லப்பட்டுள்ளது..
இயேசு (குமாரன்) சத்ருக்களை பிதாவின் பாதபடியாக்கி போடும் வரை இயேசுவானவர் பிதாவின் வலதுபாரிசத்தில் அமரவேண்டி உள்ளது.. இயேசு மனிதனாக பிறந்த பட்சத்தில் அவர் தேவ தூதர்களை விட மகிமை குறைந்தவராக காணப்பட்டார்.
அதே சமயத்தில் பிதாவின் பரிபூரண சுவாபங்கள் அவரை நியாயபிரமாணத்தை முழுவதுமாக நிறைவேற்றும் படி செய்கின்றன..
அவரை கண்டவன் பிதாவை கண்டவன் என அவர் சொல்லியிருப்பதை நீங்களே அறிவீர்கள்..
யோவான் 14:8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
யோவான் 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
அதற்கு நிச்சயம்,.. இயேசுவை கண்டவன் பிதாவை ஓரளவு கண்டவன் என்று பொருள் இல்லை...
நடுநிலையாக தியானித்து பாருங்கள்..
பிதாவை முழுமையாக அவரால் வெளிபடுத்த அல்லது அதற்கு சமமான மகிமையை வெளிபடுதமுடியும்.. அவர் எல்லாவற்றில்லும் கீழ் படிந்திருக்க நாம் தவறான எண்ணம் கொள்ளகூடாது..
பிதாவை போல குமாரனும் எல்லாவற்றிலும் சரிசம நிகராக இருந்தாலும் தன்னை பிதாவின் சத்ருக்களை பாதபடியாக்கும் வரை இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் அமரவேண்டி உள்ளது..
எபிரேயு,கிரேக்கு பாஷை எத்தனை பேருக்கு தெரியும்..இருபினும் நாம் அநேகர் வியாக்கியானம் இல்லாமலும்,வியக்கியானதொடும் அன்னியபாஷை பேசுகிறோம்...ஆனால் வேதத்தை வரையறுக்க மூலபாஷை தேடி ஓடுகிறோம்..
நிறைய வேத புத்தகங்கள் காலபோக்கில் அழிந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. அனால் கர்த்தர் தம் வேதத்தை நம் இருதயத்தில் எழுதி உள்ளதாய் வசனம் கூறுகிறது.. அது மூல பாஷையில் உள்ளதா என்ன?
புத்தகம் நமக்கு மிகுந்த அவசியமாக இருக்கிறது.. தேவனுக்கு புத்திரராய் இருக்காமல் இன்னும் குந்தி குந்தி பிள்ளையாகவே இருகின்றோம் போலும்..
கர்த்தருடைய வேதம் எல்லா அங்கீகரிப்பிற்கும் பாத்திரமாய் உள்ளது.. எழுமுறை புடமிடப்பட்ட சுத்த தங்கத்திற்கு ஒப்பாய் இருப்பதை நான் விசுவாசிக்கிறேன்..
தற்போதைய விவாதம் திசை திரும்பாமல் திக்கை எட்ட,. நம் கையில் உள்ள வேதத்தில் கொண்டு முதலில் பேசுவோம் என்கிறேன்..தங்கள் மேலான கருத்தையும் அறிய வாஞ்சிக்கிறேன்..................