இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம்-மீண்டும் ஒரு விவாதம்


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
RE: திரித்துவம்-மீண்டும் ஒரு விவாதம்
Permalink  
 


//தேவனின் வலது பாரிசத்தில் இயேசு இருப்பதை தான் காங்கிறாரே தவிர ஒன்றாக தேவனோடு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. தேவனுக்கு தனி சிங்காசனம் அவருக்கு வலது பாரிசத்தில் ஆட்டு குட்டியானவரான இயேசுவுக்கு தனி சிங்காசனம் //

ரொம்ப தவறு!! இயேசு கிறிஸ்து பிதாவின் மடியில் இருந்தார் என்றும் வேதம் சொல்லுகிறது.

யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

ரெண்டு சிம்மாசனம் இல்லை! வலது பாரிசம் என்பது தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் மூலமாக செய்கிறார் என்பதை குறிக்க உபயோகப்படுத்தப்பட்ட சொல்.

வெளி 22:1 பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

வெளி 22:3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

கிறிஸ்து சிங்காசனத்தின் மத்தியில் இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது

வெளி 7:17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

எவ்வளவு வசனம் கொடுத்தாலும் சகோ.சுந்தருக்கு பொருந்தாது ஏனென்றால் அவர் தேவனுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்.


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோ : ஜான் அவர்களே இயேசு கிறிஸ்துவின் மேல் நீங்கள் அதிக பக்கதி வைராக்கியம் கொண்டு இருப்பதினால் நான் மிகவும் சதோஷபடுகின்றேன் அதே நேரத்தில் அவர் சொன்ன வார்த்தைகளை நீங்கள் நம்பாமல் இருப்பதினால் நான் வருத்தமும் படுகின்றேன்

 

கிறிஸ்துவை விட தேவன் பெரியவரா அல்லது இல்லையா என்பதை முதலில் நீங்க அறிந்து கொள்ளுங்கள் ஏற்கனவே இப்படி பட்ட கருத்துக்கள் இங்கு  எழுதப்பட்டுவிட்டது  

 

நீங்கள் இயேசு கிறிஸ்துவின்   வார்த்தைகளை நம்புவீர்கள் என்று நினைக்கின்றேன் கிழே  கொடுக்க பட்டு உள்ள தொடுப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளுங்கள்

 

கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்!

 

இந்த தலைப்பை வாசித்து விட்டு பின்பு  சொல்லுங்கள்

 
JOHN WROTE :
 
__________________________________________________
எவ்வளவு வசனம் கொடுத்தாலும் சகோ.சுந்தருக்கு பொருந்தாது ஏனென்றால் அவர் தேவனுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்.

____________________________________________________
 
 
நீங்கள் சொன்ன படி இந்த  தலைப்பில் சுந்தர் வசனத்தை மட்டும் தான் 
எழுதி இருக்கின்றார் சரி நீங்கள் என்ன சொல்ல போகின்றீர்கள்; என்று பார்க்கின்றேன்  

 

JOHN12  WROTE :

____________________________________________

பிதாவை முழுமையாக அவரால் வெளிபடுத்த அல்லது அதற்கு சமமான மகிமையை வெளிபடுதமுடியும்.. அவர் எல்லாவற்றில்லும் கீழ் படிந்திருக்க நாம் தவறான எண்ணம் கொள்ளகூடாது..

பிதாவை போல குமாரனும் எல்லாவற்றிலும் சரிசம நிகராக இருந்தாலும் தன்னை பிதாவின்  சத்ருக்களை பாதபடியாக்கும் வரை இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் அமரவேண்டி உள்ளது

__________________________________________

JOHN12 அவர்களுக்கும்  புரிந்து  இருக்கும்  என்று  நினைக்கின்றேன்....... -- Edited by EDWIN SUDHAKAR on Thursday 15th of December 2011 04:37:34 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1998
Date:
Permalink  
 

John wrote:

//தேவனின் வலது பாரிசத்தில் இயேசு இருப்பதை தான் காங்கிறாரே தவிர ஒன்றாக தேவனோடு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. தேவனுக்கு தனி சிங்காசனம் அவருக்கு வலது பாரிசத்தில் ஆட்டு குட்டியானவரான இயேசுவுக்கு தனி சிங்காசனம் //

ரொம்ப தவறு!! இயேசு கிறிஸ்து பிதாவின் மடியில் இருந்தார் என்றும் வேதம் சொல்லுகிறது.

யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

ரெண்டு சிம்மாசனம் இல்லை! வலது பாரிசம் என்பது தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் மூலமாக செய்கிறார் என்பதை குறிக்க உபயோகப்படுத்தப்பட்ட சொல்.

வெளி 22:1 பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

வெளி 22:3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

கிறிஸ்து சிங்காசனத்தின் மத்தியில் இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது

வெளி 7:17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

 


ஐயா! ஜான் அவர்களே,   நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்த வசனத்தையும் நான் மறுக்கவில்லை. வலது பாரிசம் என்பது தேவனின் மடி என்று சொல்கிறீர்களா அல்லது தேவனுக்குள் இருக்கிறார் என்று சொல்கிறீர்களா அல்லது என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.

யோபு 30:12 வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
மாற்கு 10:35. அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.
37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றார்கள்
.
 
மேலேயுள்ள வசனங்களின் அடிப்படையில் வலதுபாரிசம் என்பது வலது புறத்தில் ஒரு இடம் என்று பொருள் கொண்டுவிட்டேன். தவறாக இருந்தால் வலதுபாரிசம் என்றால் என்னவென்பதை சற்று விளக்கவும் நான் புரிந்துகொள்கிறேன். தேவனின் மடியில் இயேசு இருக்கிறார் என்றாலும் நான் எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
 
"தேவன் ஒருவரே!  இதை யாரும் மாற்ற முடியாது! பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீட்கும் திட்டத்தில், ஒரே தேவன் தன்னை மூன்று விதமாக வெளிப்படுத்தி செயல்படுகிறார். அதற்காக அவர் வெறும் மூன்று ஆள்த்துவத்தில் தொகுப்பு மட்டும்தான் என்று நான் தீர்மானிக்க விரும்பவில்லை. மனுஷனின் மீட்பின் அந்த திட்டம்  நிறைவேறிய பிறகு, தேவனும் ஆட்டுகுட்டியானவரும்  எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் அதையே தாங்கள் சுட்டியுள்ள வெளிப்படுத்தின விசேஷ வசனங்கள் தெரிவிக்கின்றன.    
 
அவர் மூன்று ஆவிகளின் தொகுப்பு என்றோ அல்லது அவர் மூன்று ஆள்தத்துவம் மட்டுமே உள்ளவர் என்றோ வேதம் தெளிவாக சொல்லாத பட்சத்தில் அவரின் மகிமையை மட்டுபடுத்தி அவர் மூன்று ஆள்தத்துவம் மட்டுமே உள்ளவர் என்று அறுதியிட்டு கூற எனக்கு மனமில்லை. தங்களுக்கு தெளிவாக தெரியும் என்றால் சொல்லி கொள்ளுங்கள் தங்கள் கருத்தில் நான் தலையிட விரும்பவில்லை.   
  
நான் மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லும் கருத்து தங்கள் போன்றவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பது எனக்கு பெரிய குழப்பமாக இருக்கிறது.
   
John wrote:   
////எவ்வளவு வசனம் கொடுத்தாலும் சகோ.சுந்தருக்கு பொருந்தாது ஏனென்றால் அவர் தேவனுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்.///
 
தாங்கள் சுட்டும் வசனம் எல்லாவற்றிக்குமே என்னிடத்தில் விளக்கம் இருக்கிறது. ஆனால் இயேசு தன்  வாயாலேயே "பிதா என்னைவிட பெரியவர்" என்று சொல்லியிருக்க இருவரும் சமம் என்று எத்தன அடிப்படையில் சொல்கிறீர்கள்? என்பதை சற்று விளக்குங்கள்.   
ஆவியானதேவனின் அபிஷேகத்தைபெற்றும் தேவனுடன் அனுதினமும் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வை கொஞ்சம் ஆராய்ந்து திரும்பி பார்ப்பது நல்லது! வேறு எதுவும் நான் தங்களுக்கு சொல்ல விரும்பவில்லை.
 
இயேசுவை தேவனாகவும்/தேவ குமாரனாகவும் /ரட்ச்சக்ராவும் பாவத்தை போக்கும் பலியாகவும் ஏற்றுக்கொள்கிறோமா என்பதே முக்கியமே தவிர, வேதத்தில் இல்லாத இந்த திரித்துவம் பற்றி விவாதம் வேண்டாம் என்று எத்தனைமுறை விலக்கினாலும்  ஏனோ  அது மீண்டும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது!  
 
 
 


-- Edited by SUNDAR on Thursday 15th of December 2011 04:10:31 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

 

சகோ.சுந்தர் ///வேதத்தில் இல்லாத இந்த திரித்துவம் பற்றி விவாதம் வேண்டாம் என்று எத்தனைமுறை விலக்கினாலும்  ஏனோ  அது மீண்டும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது!///

போதக சமர்த்தராய் விடை காண முனைவோம் சகோதரரே..

//bro.sundar wroteஅவர் மூன்று ஆவிகளின் தொகுப்பு என்றோ அல்லது அவர் மூன்று ஆள்தத்துவம் மட்டுமே உள்ளவர் என்றோ வேதம் தெளிவாக சொல்லாத பட்சத்தில் அவரின் மகிமையை மட்டுபடுத்தி அவர் மூன்று ஆள்தத்துவம் மட்டுமே உள்ளவர் என்று அறுதியிட்டு கூற எனக்கு மனமில்லை. தங்களுக்கு தெளிவாக தெரியும் என்றால் சொல்லி கொள்ளுங்கள் தங்கள் கருத்தில் நான் தலையிட விரும்பவில்லை.///

 திரித்துவம் என்கிற வேதத்தில் இல்லை தான் .. ஆனால்

ரட்சிப்பின் திட்டத்தில் திரித்துவம் இருக்கிறது என தாங்கள் ஒப்புகொள்கிறீர்கள்.. நீங்கள் சொன்னது சரியே..

சகோதரரே !! இங்கு எண்ணற்ற ஆள்தத்துவத்தின் பெயரில் நாம் ஞானஸ்தானம் பெறாமல் மேற்கூறிய 3  நாமகளால் பெறுகிறோம்...


மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

bro.edwin wrote//JOHN12 அவர்களுக்கும் புரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்....... ///பிதாவும் குமாரனும் சமம் என்பதை பின் வரும் வசங்களை கொண்டு அறயுங்கள்..

பிதா குமாரனை மகிமைபடுத்துகிறார்..

யோவான் 17:2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

குமாரனுடயவைகளில் இருந்து அறிவிப்பார்.. 

யோவான் 16:15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

யோவான் 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

பிதா,குமாரன் சமம் என்பதை அக்கால இஸ்ரவேலரே அறிந்து இருந்தனர்..நமக்குள் தான் எவ்வளவு சர்ச்சை!!!

 

பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

குமாரன் பிதாவிற்கு கீழ்படிய சில காரணங்கள்:

 

கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

இவ்வசனத்தில் இருந்து,முடிவிற்கு பிறகு ராஜ்யத்தை பிதாவிற்கு ஒப்புகொடுக்கும் குமாரனை பார்க்கலாம்..

குமாரன் திருமணமாகும் வரை பிதாவிற்கு கீழ் பட்டவன் என்பதை அறியீர்களா???..

தம்முடைய மணவாட்டி சபையை குமாரன் பரிபூரணமாய் பெரும் வரை பிதாவிற்கு கீழ்பட்டிருப்பர்..
கீழ்பட்டார் என்பதற்காக பிதாவை விட மகிமை குறைந்தவர் என பொருள் இல்லை..

உதாரணதிற்கு ..

நம்மை விட வலிமை குறைந்தவர் நமக்கு கீழ்பட்டிருப்பதில் காரியம் இல்லையே...

எல்லாவிதத்திலும்   மேற்கூறியவாறு சமமாய் இருந்தாலும் பரிபூரண கீழ்படிதலுக்கு மாதிரியாக தம்மை பாதாளம் வரை தேவ மகிமையில் இருந்து தாழ்த்தினார்...

//bro.sundar wrote:நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்த வசனத்தையும் நான் மறுக்கவில்லை. வலது பாரிசம் என்பது தேவனின் மடி என்று சொல்கிறீர்களா அல்லது தேவனுக்குள் இருக்கிறார் என்று சொல்கிறீர்களா அல்லது என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை//

குமாரன் பிதாவின் மடியில் இருந்தால் ஒப்புகொள்ளமட்டீர்களா??

அல்லது பரலோகத்தில் அனைவரும் உட்கார்ந்த நிலையில் தான் இருப்பார்களா?

குமாரனுக்கு ஒரே ஒரு தனி சிம்மாசனம் என்று வேதத்தில் எங்கு உள்ளது சகோதரரே ..
அவருக்கு சிம்மாசனமும் உண்டு நியயாசனமும் உண்டு!!

பிதாவின் மடியும் உண்டு..

அவர் ஆட்டுகுட்டியானவராய் (பிரதான ஆசாரியாய் ) அலங்கரிக்கப்பட்டு மஹா பரிசுத்த பர்வதத்திற்கு கொண்டுபோகப்பட்டார் என்றால் வலது பாரிசத்தில் உட்காரவில்லை,நிற்கவில்லை என்றாகிவிடுமா?

மன்னிக்கவும்..நம் தேவன் விக்கிரகம் இல்லை...ஒரே pose தர..

 

கிறிஸ்து மனிதராகவே வந்தார்..அனால் பிதாவின் நாமத்தில் வந்தார்..தம்முடைய நாமத்தில் வரவில்லை..(அறியவும்)

அவர் மனிதராக பிதாவின் மகிமையை தேடி வந்த பட்சத்தில் அவர் தேவ தூதர்களிலும் சற்று மகிமை குறைந்தவராகவே இருந்தார்..

சங்கீதம் 8:5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

யோவான் 7:39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.

அவர் பூமியில் பாடுள்ள மனிதராக வாழும்போது பிதா எல்லாரிலும் பெரியவர் என்ற..தம்மை நல்லவர் என்று கூறுவதை கூட பொருட்படுத்தாமல் பிதா ஒருவரை தவிர நல்லவர் இல்லை என்கிறார்..ஆகவே நீங்கள் குமாரன் கேட்டவர் என்பீர்களா??

ஆனால் பரமேறிய பலமாய் ரூபிக்கப்பட்ட குமாரனின் மகிமையானது பிதாவின் மகிமைக்கு சமமானது..
நாம் காணபோகும் மகிமைக்கு முன் கண்ட மகிமை ஒன்றும் இல்லை என பவுலும் சொல்லி உள்ளாரே!!

சங்கீதம் 24:

யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?......

 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.

யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.

 

மகிமையின் ராஜாவை மகிமை குறைந்தவர் என்கிறீர்களே..சகோதர்களே!!!!

சங்கீதம் 24  ஐ தியானியுங்கள்.. மகிமையின் ராஜா யார் என புரியும்.. பரத்தில் உள்ள பிதாவிற்கு(பரத்தில் உள்ளவர் ) அநாதி கதவுகள் உயர்ந்து பரத்திற்கு செல்ல வழிவிட வேண்டியது இல்லை..உயர்த்த கிறிஸ்துவானவர் தாம் எழுப்பினவர்களோடு பரமேரும்போது உள்ள நிகழ்ச்சி எங்கு சொல்லப்பட்டு உள்ளது..

இயேசு--மகிமையின் ராஜா..பிதாவின் நாமம் தரித்தவர்-- நித்திய பிதா...

அல்லேலுயா!!! ஆமென்!!   

  -- Edited by JOHN12 on Thursday 15th of December 2011 07:18:46 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சகோதரர் ஜான்12 அவர்களே,

//இயேசு--மகிமையின் ராஜா..பிதாவின் நாமம் தரித்தவர்-- நித்திய பிதா...//

நித்திய பிதா என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதன் உண்மையான அர்த்தம் "எதிர்கால பிதா" என்பதே.

கிருஸ்துவை போல‌ தேவ‌ குமார‌ர்க‌ளை உருவாக்குவ‌தே தேவ‌னின் திட்ட‌ம். அத‌ற்காக‌வே இயேசு கிருஸ்து பிதாவிட‌மிருன்து பிரின்து வ‌ன்தார்.

அன்த‌ நோக்க‌ம் நிறைவேறிய‌ பின் பிதாவோடு அவ‌ர் ஐக்கிய‌மாகி விடுவார். அதைதான் "எதிர்கால‌ பிதா" என்ற‌ வார்த்தை குறிக்கிற‌து. நாமும் "எதிர்கால கிருஸ்து"வாக மாற வேண்டும்.

//கிறிஸ்து மனிதராகவே வந்தார்..அனால் பிதாவின் நாமத்தில் வந்தார்..தம்முடைய நாமத்தில் வரவில்லை..(அறியவும்)//

இயேசு கிருஸ்து பிதா அல்ல‌. பிதாவின் நாம‌மே என்ற உங்க‌ள் க‌ருத்து ச‌ரியான‌தே.

பிதா, குமார‌ன், ப‌ரிசுத்த‌ ஆவி மூவ‌ருக்கும் நாம‌ம் ஒன்றே. ஆனால் ம‌கிமையில் வேறான‌வ‌ர்க‌ள். குமார‌ன், ப‌ரிசுத்த‌ ஆவி  இவ‌ர்க‌ள் இருவ‌ரும் பிதாவோடு இருன்திருன்து ஒரே மகிமையில் இருன்திருன்தால் தேவ‌ன் த‌ன் திட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்த‌ முடியாது.

மூவ‌ருக்கும் ஒரே நாம‌ம் என்ப‌தை விசுவாசியாத‌வ‌ர்க‌ள் திரித்துவ‌ போத‌க‌ம் செய்ப‌வ‌ர்க‌ளே. ஏனெனில் இயேசு கிருஸ்து என்னும் நாம‌த்தினால் நான‌ ஸ்னான‌ம் எடுக்காம‌ல் வெறும் பிதா, குமார‌ன், ப‌ரிசுத்த‌ ஆவி யின் நாம‌ம் என்று சொல்லி நான‌ஸ்னான‌ம் எடுக்கிறார்க‌ள். இத‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ள் சொல்வ‌தை இவ‌ர்க‌ளே ந‌ம்புவ‌தில்லை என்று அறிய‌ முடியும்.

 __________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

//வலது பாரிசம் என்பது தேவனின் மடி என்று சொல்கிறீர்களா அல்லது தேவனுக்குள் இருக்கிறார் என்று சொல்கிறீர்களா அல்லது என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.//\
நான் எதுவும் சொல்ல வரவில்லை. வலது பாரிசம் என்றால் இயேசு கிறிஸ்து வலது புறம் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து இருப்பார் என்று நீங்கள் சொல்லுவதை மறுக்கிறேன்.

கிழே உள்ள வசனத்தின் படி கிறிஸ்து தாவிதின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து இருக்கிறாரா?

அப்போஸ்தலர் 2:25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;

//பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீட்கும் திட்டத்தில், ஒரே தேவன் தன்னை மூன்று விதமாக வெளிப்படுத்தி செயல்படுகிறார்.//

சரி முன்று ஆள்தத்துவம் என்பதை இப்போதைக்கு ஒதுக்கிவிடுவோம். பாவத்தில் விழுந்த பின்புதான் "மூன்று விதமாக" வெளிப்படுத்தினாரா? அல்லது முன்னமே மூன்று விதமாக இருந்தாரா? . முன்று விதத்தில் ஒரு விதமான "இயேசு கிறிஸ்து" இன்னொரு விதமான "பிதாவை" விட எப்படி கீழானவரான இருக்க முடியும்?

//அவர் மூன்று ஆவிகளின் தொகுப்பு என்றோ அல்லது அவர் மூன்று ஆள்தத்துவம் மட்டுமே உள்ளவர் என்றோ வேதம் தெளிவாக சொல்லாத பட்சத்தில் அவரின் மகிமையை மட்டுபடுத்தி அவர் மூன்று ஆள்தத்துவம் மட்டுமே உள்ளவர் என்று அறுதியிட்டு கூற எனக்கு மனமில்லை.//

நல்ல நகைச்சுவை பிரதர்! சோதிகளின் பிதா என்னும் 'புதிய' பிதாவை பற்றி தங்களால் அறுதியிட்டு கூறமுடிகிறது! மறுசுழற்ச்சி கொள்கை பற்றி தங்களால் அறுதியிட்டு கூறமுடிகிறது! . இன்னும் எத்தனையோ காரியங்களை தேவனிடம் "நேரடியாக" கேட்டு அறிந்துகொண்ட தங்களுக்கு தெரியாததா??

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1998
Date:
Permalink  
 

John wrote:

//வலது பாரிசம் என்பது தேவனின் மடி என்று சொல்கிறீர்களா அல்லது தேவனுக்குள் இருக்கிறார் என்று சொல்கிறீர்களா அல்லது என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.//

நான் எதுவும் சொல்ல வரவில்லை. வலது பாரிசம் என்றால் இயேசு கிறிஸ்து வலது புறம் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து இருப்பார் என்று நீங்கள் சொல்லுவதை மறுக்கிறேன்.

கிழே உள்ள வசனத்தின் படி கிறிஸ்து தாவிதின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து இருக்கிறாரா?
அப்போஸ்தலர் 2:25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி க்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;////
 


தாவீது எதற்கு சகோதரரே? என்னுடய வலது பக்கத்தில்கூட கர்த்தர் எப்பொழுதும் உட்கார்ந்திருக்க முடியாது என்று தாங்கள் கருதுகிறீர்களா? விசுவாசித்தால் கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று வேதம் சொல்கிறது அந்த விசுவாசத்தின் அடிப்படையிலேயே தாவீது அங்கு சொல்கிறார் என்பது எனது கருத்து.   

வலது பாரிசத்தல் உட்காருதல்" என்பதற்கு சில வசனங்களின் அடிப்படையில் வலது  பக்கத்தில் அமர்ந்திருத்தல் எனறு நான் பொருள் கொண்டு விட்டேன். இதில் எந்த தவறும் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை. அவர் தனி  சிங்காசனத்தில் அமர்ந்திருக்கலாம் என்ற என்னுடய அனுமானம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் ஆனாலும் அப்படியில்லை என்றும்  அறுதியிட்டு சொல்லிவிட முடியாது.   
    
யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
 
மேலேயுள்ள வசனத்தில் அடிப்படையில் பிதாவின்மடியில் இருக்கிறார் என்று சொல்வதால் அவர் மடியில்  மட்டுமே  எப்பொழுதும் அமர்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம்மும்  இல்லையே. பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீதும் திட்டத்தில் அவர் பூமிக்கு வந்தாரே!  
 
லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார் 
 
இங்கு தேவன்  தாவீதின் சிங்காசனத்தை கொடுப்பார் என்று எழுதப்பட்டுள்ளதால் அது தனி சிங்காசனம் என்று நான் தீர்மானிக்கிறேன்.  
 
வலதுபாரிசம் என்றால் எனக்கு சரியான பொருள் தெரியவில்லை ஒருவேளை எனது அனுமானம் தவறாக  இருக்குமானால் தாங்கள் கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள். அத்தோடு யாக்கோபும் யோவானும் 
"எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும்" என்று கேட்டதன் பொருளையும் கூறிவிடுங்கள்.        
 
Sundar Wrote: 
//பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீட்கும் திட்டத்தில், ஒரே தேவன் தன்னை மூன்று விதமாக வெளிப்படுத்தி செயல்படுகிறார்.//
John Wrote:
பாவத்தில் விழுந்த பின்புதான் "மூன்று விதமாக" வெளிப்படுத்தினாரா? அல்லது முன்னமே மூன்று விதமாக இருந்தாரா?//// 
 
மனுஷன் பாவத்தில் வீழ்வதற்கு முன்னர் அவர் எத்தனை விதமாக இருந்தார், இப்பொழுது அவர் எத்தனை விதமாக எத்தனை  ஆளத்துவமாக இருக்கிறார் என்பதை வேதமும் சொல்லவில்லை யாரும் அறியவும் இல்லை. ஆனால் "அவர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆள்தத்துவம் உடையவராக இருந்தார்" என்பதை மாத்திரம், அவர் "நாம்" "நமது" என்று பண்மையில்  தன்னை குறிப்பிடுவதன் அறிய முடிகிறது. மனுஷன் பாவத்தில் வீழ்ந்த பிறகுதான் அவரின் மூன்று விதமான செயல்பாடுகள் நமக்கு தெரியவருகிறது. அதற்க்காக் அவர் மொத்தமே மூன்று ஆள்த்துவம்தான்  என்று தீர்மானிப்பது தங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் எனக்கு அது சரியாக தெரிய வில்லை. குமாரனாகிய இயேசு ஒருவரே  பிதாவை வெளிப்படுத்தியவர் என்று வேதம் சொல்கிறது.  அவர் எங்காவது" பிதா இத்தனை ஆள்தத்துவம் உள்ளவர்" என்று சொல்லியிருக்கிறாரா? அவ்வாறு இல்லாதிருக்கையில் அறியமுடியாத மகத்துவமுள்ள தேவனின்  வல்லமையை திரித்துவம் என்றொரு வட்டத்துக்குள் கொண்டுவர விளையும்  இதுபோன்றதொரு பொய்யை திரும்ப திரும்ப யார் சொல்ல சொல்வது?   தாங்களும் சொல்வதோடு அல்லாமல் என்னையும் அவ்வாறு நம்பும்படி  கட்டாயப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?    
  
John Wrote:
///முன்று விதத்தில் ஒரு விதமான "இயேசு கிறிஸ்து" இன்னொரு விதமான "பிதாவை" விட எப்படி கீழானவரான இருக்க முடியும்?////
 
சகோதரரே நான் இயேசுவை பிதாவுக்கு கீழானவராக எண்ணவில்லை காரணம் அவர்தான் இவர் இவர்தான் அவர் என்றே கருதுகிறேன். அனால் இயேசு பூமியில் இருக்கையில்"என்பிதா என்னிலும் பெரியவர்" என்று சொன்ன வார்த்தையின் அடிப்படையிலேயே அதை ஏற்கிறேன்.
பிதா இயேசுவைவிட எவ்விதத்தில் எவ்வளவு பெரியவர்  என்பதெல்லாம் எனக்கு சரிவர தெரியாது. ஆனால்  நான் இயேசுவின் வார்த்தையை மதித்து அதனை ஏற்று அதற்க்கு கீழ்படிந்து நடக்க விரும்புவதால்  அதை கேள்விஎதுவும் கேட்காமல் ஏற்றுக்கொள்கிறேன். அனால் தாங்கள் போன்றவர்கள் பலர்  சேர்ந்து இயேசுவின் அந்த வார்த்தையின் மேலுள்ள என்னுடைய நம்பிக்கையை குலைக்க முயல்கிறீர்கள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது.  ஏற்கெனவே "மரணத்தை காண்பதில்லை" என்று இயேசு சொன்ன வார்த்தையின் மேலுள்ள எனது விசுவாசத்தை குலைக்க முயன்று முடியாமல்போய் இப்பொழுது
புதிதாக இன்னொரு முயற்சி நடக்கிறது.        
 
Sundar Wrote:
அவர் மூன்று ஆவிகளின் தொகுப்பு என்றோ அல்லது அவர் மூன்று ஆள்தத்துவம் மட்டுமே உள்ளவர் என்றோ வேதம் தெளிவாக சொல்லாத பட்சத்தில் அவரின் மகிமையை மட்டுபடுத்தி அவர் மூன்று ஆள்தத்துவம் மட்டுமே உள்ளவர் என்று அறுதியிட்டு கூற எனக்கு மனமில்லை.//
John Wrote:
நல்ல நகைச்சுவை பிரதர்! சோதிகளின் பிதா என்னும் 'புதிய' பிதாவை பற்றி தங்களால் அறுதியிட்டு கூறமுடிகிறது! மறுசுழற்ச்சி கொள்கை பற்றி தங்களால் அறுதியிட்டு கூறமுடிகிறது! . இன்னும் எத்தனையோ காரியங்களை தேவனிடம் "நேரடியாக" கேட்டு அறிந்துகொண்ட தங்களுக்கு தெரியாததா?? ////
 
 
சோதிகளின் பிதா ஒரு  பேரொளி அவரிடம் யாரும் நெருங்கவே முடியாது அவரை ஒருவரும் ஒருகாலும் கண்டதும் இல்லை என்று வேதம் சொல்கிறது. அதன் அடிப்படையில் அவரை பற்றிய ஒரு சிறு விளக்கத்தையே  கொடுத்துள்ளேன் மற்றபடி அவரின் வல்லமை ஆள்தத்துவம் பற்றி யாரும் இங்கு அறுதியிட்டுசொல்லவில்லை சொல்லவும் முடியாது.  முதலில் இயேசுவின் வார்த்தைகளுக்கு முழு மனதோடு முழுமையாக  கீழ்பட்டு வாழ முயலுங்கள் அப்பொழுது இயேசுவானவர்  பிதாவை பற்றி தங்களுக்கு தெரிவிப்பார். தெரிவிக்காத வரை அவர் தங்களுக்கு ஏதோ புதிய பிதாவாகவும் புரியாத  புதிராகவும்தான் இருப்பார்.     
 
John Wrote:
 ////இன்னும் எத்தனையோ காரியங்களை தேவனிடம் "நேரடியாக" கேட்டு அறிந்துகொண்ட தங்களுக்கு தெரியாததா?? ////
 
ஒருவர் தேவனிடம் நேரடியாக கேட்டவுடன் தேவன் எல்லாவற்றையும் சொல்லிவிடமாட்டார். எனக்கு பதில்தெரியாமல் இருக்கும் வசனைகள் சில உலக உலக நடப்புகளுக்கான காரணங்கள் பற்றி மட்டுமே கேடடு பதில் அறிந்து கொண்டுள்ளேனேயன்றி, அற்ப்பனாகிய நான் என்னை படைத்த தேவனையே துருவி துருவி ஆராயும் கேள்விகளை கேட்க துணிவதில்லை.   
 
யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
 
சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
என்று வசனம் சொல்வதால் அவராக தெரிவித்த சில காரியங்கள் மற்றும் வசனங்கள் அடிப்படையிலேயே அவரைப்பற்றி அறிந்துள்ள
சில காரியங்களை  எழுதுகிறேன். மற்றபடி தங்களை போல தேவன் மூவரின் தொகுப்பா நால்வரின் தொகுப்பா. இவர் அவருக்கு சமாமா அவர் இவருக்குசமமா என்பது பற்றியெல்லாம் நான் கேட்கவிரும்புவது இல்லை. யார் யாருக்கு சமமாய்இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன? தேவன் ஒரே ஒருவர்தான்! அவருக்கு சமமாக யாரும் இல்லை அப்படிபட்ட தேவனை ஆராய்ந்து அறிந்து அவர் இத்தனை ஆள்தத்துவம்தான் உள்ளவர்  என்று தீர்மானிக்க விரும்பாமல்  வேதம் சொல்லும் நிலையிலேயே நான் நிற்கிறேன்.
 
ஏசாயா 46:9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.
 
ஓன்று, பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீட்கும் பணியில் தேவனின் இன்னொரு நிலைதான் இயேசு என்று நான் சொல்லும் கருத்தை  நம்புங்கள்,  அப்பொழுது இவரே அவர் அவரே இவர் என்று சமமாகி விடுவார். மற்றபடி மனுஷ கண்டுபிடிப்பாகிய  மூன்று தேவன் அவர் இவருக்கு சமம் இவர் அவருக்கு சமம் என்று சொல்வதை என்னால் ஏற்க்க முடியாது சகோதரரே. இயேசுவை பற்றிய தங்கள் புரிதலும் சரிபோல் எனக்கு தெரியவில்லை அதுபோல் ஆவியானவர்  பற்றிய தங்கள்  புரிதலும் வசனத்துக்கு  ஏற்றாற்போல் இல்லை! 
 
தங்களின் தவறான புரிதல்கள்  தங்களோடு இருக்கட்டும் என்னையும் அதை ஏற்கும்படி நிரபந்தம் பண்ண வேண்டாம்!  
 
தாங்கள் போன்றவர்களுக்கு பதில் எழுதி எழுதியே நான் கஷ்டப்பட்டு ஒதுக்கும் என்னுடய  நேரம் சிந்தனை  எல்லாம் வீணாகிறது. அறிவு ஜீவிகளாகிய நீங்கள் என்னுடய எழுத்தை நம்பினால் நம்புங்கள் நம்ப வில்லை என்றால்  விட்டுவிடுகளேன்!  மற்றபடி இயேசுவின் வாய் வார்த்தையுடன் தெளிவான வசன ஆதாரத்துடன் இருக்கும் ஒரு கருத்தை நம்பாமல் அதை  பற்றியே திரும்ப திரும்ப விவாதித்து குழப்பம் விளைவிப்பதில் யாருக்கும் பயனில்லை!
 
இயேசுவை தேவனுக்கு சமமானவர் என்றுசொல்லிக்கொண்டு அவர் சொன்ன வார்த்தைகளை விசுவாசிக்காமல் அதை காலில் போட்டுமிதிப்பதே பலருக்கு பழக்கமாகி போய்விட்டது. 
 
சரி சகோதரரே! நான் தாங்கள் சொல்வதை ஏற்று "இயேசு  பிதாவுக்கு சமமானவர்" என்று ஏற்றுக்கொண்டு நம்புகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். நாளை தேவன் முன்னால் நியாயதீர்ப்புக்கு போய் நிற்கும்போது "நானே தேவன் எனக்குச் சமானமில்லை" என்று நான் சொல்லியிருக்க "இயேசுவே தன் வாயால் இரண்டு முறை "பிதா பெரியவர்" என்று சொல்லியிருக்க நீ எப்படி சிலரின் கருத்தை  ஏற்று அவரை தேவனுக்கு சமமானவர் என்று நம்பலாம்? நீ உன்னுடைய நிலையில்  தவறி விட்டாய்! என்று சொன்னால் நான் என்ன செய்ய சகோதரரே? 
 
அனால் ஒருவளை என்னுடய நம்பிக்கையிலேயே நான்இருந்து நாளை நியாய தீர்ப்பின்போது  ஒருவேளை தேவன் என்னிடம் "இயேசு தேவனுக்கு சமமானவர்" என்பதை பல சகோதரர்கள் சொல்லியும் நீ ஏன் ஏற்க்கவில்லை என்று கேட்டால் "ஆண்டவரே நீங்கள் "நானே தேவன் எனக்குச் சமானமில்லை' என்று சொல்லியிருக்கிறீர்கள்  அத்தோடு இயேசுவே தன் வாயால் "பிதா என்னிலும்,  எல்லோரிலும் பெரியவர்" என்று சொல்லியிருக்கிறார் மேலும் தாங்கள் நாசியில் சுவாசமுள்ள  மனுஷர்களை  நம்பவேண்டாம் என்று வேறு சொல்லி யிருக்கிறீர்கள் எனவே  அதை நான் ஏற்க்கவில்லை. என்று சொன்னால் ஒருவேளை மன்னிப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறதல்லவா?  
 
நான் தேவனுக்கும் அவர் நியாயதீர்ப்புக்கும் மிகவும் பயந்தவன்!  எனவே உங்கள் நம்பிக்கை உங்களோடு இருக்கட்டும் என்னை  விட்டுவிடுங்கள்!
 


-- Edited by SUNDAR on Saturday 17th of December 2011 11:14:49 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

Bro.sundar

//யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.

சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
என்று வசனம் சொல்வதால் அவராக தெரிவித்த சில காரியங்கள் மற்றும் வசனங்கள் அடிப்படையிலேயே அவரைப்பற்றி அறிந்துள்ள
சில காரியங்களை  எழுதுகிறேன். மற்றபடி தங்களை போல தேவன் மூவரின் தொகுப்பா நால்வரின் தொகுப்பா. இவர் அவருக்கு சமாமா அவர் இவருக்குசமமா என்பது பற்றியெல்லாம் நான் கேட்கவிரும்புவது இல்லை. யார் யாருக்கு சமமாய்இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன? தேவன் ஒரே ஒருவர்தான்! அவருக்கு சமமாக யாரும் இல்லை அப்படிபட்ட தேவனை ஆராய்ந்து அறிந்து அவர் இத்தனை ஆள்தத்துவம்தான் உள்ளவர்  என்று தீர்மானிக்க விரும்பாமல்  வேதம் சொல்லும் நிலையிலேயே நான் நிற்கிறேன்.
ஏசாயா 46:9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.
 
... மனுஷ கண்டுபிடிப்பாகிய  மூன்று தேவன் அவர் இவருக்கு சமம் இவர் அவருக்கு சமம் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது சகோதரரே. இயேசுவை பற்றிய தங்கள் புரிதலும் சரிபோல் எனக்கு தெரியவில்லை, அதுபோல் ஆவியானவர்  பற்றிய தங்கள்  புரிதலும் வசனத்துக்கு  ஏற்றாற்போல் இல்லை! //

Well said Brother

//இயேசுவை தேவனுக்கு சமமானவர் என்றுசொல்லிக்கொண்டு அவர் சொன்ன வார்த்தைகளை விசுவாசிக்காமல் அதை காலில் போட்டுமிதிப்பதே பலருக்கு பழக்கமாகி போய்விட்டது.//

நூற்றுக்கு நூறு மெய்யான வார்த்தை சகோதரரே!

தீத்து 1:16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

மத்தேயு 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து: 8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; 9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.

//சரி சகோதரரே! நான் தாங்கள் சொல்வதை ஏற்று "இயேசு  பிதாவுக்கு சமமானவர்" என்று ஏற்றுக்கொண்டு நம்புகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். நாளை தேவன் முன்னால் நியாயதீர்ப்புக்கு போய் நிற்கும்போது "நானே தேவன் எனக்குச் சமானமில்லை" என்று நான் சொல்லியிருக்க "இயேசுவே தன் வாயால் இரண்டு முறை "பிதா பெரியவர்" என்று சொல்லியிருக்க நீ எப்படி சிலரின் கருத்தை  ஏற்று அவரை தேவனுக்கு சமமானவர் என்று நம்பலாம்? நீ உன்னுடைய நிலையில்  தவறி விட்டாய்! என்று சொன்னால் நான் என்ன செய்ய சகோதரரே? //

நல்ல கேள்வி.

//ஆனால் ஒருவேளை என்னுடய நம்பிக்கையிலேயே நான்இருந்து நாளை நியாய தீர்ப்பின்போது  ஒருவேளை தேவன் என்னிடம் "இயேசு தேவனுக்கு சமமானவர்" என்பதை பல சகோதரர்கள் சொல்லியும் நீ ஏன் ஏற்கவில்லை என்று கேட்டால் "ஆண்டவரே நீங்கள் "நானே தேவன் எனக்குச் சமானமில்லை' என்று சொல்லியிருக்கிறீர்கள்  அத்தோடு இயேசுவே தன் வாயால் "பிதா என்னிலும்,  எல்லோரிலும் பெரியவர்" என்று சொல்லியிருக்கிறார், மேலும் தாங்கள் நாசியில் சுவாசமுள்ள  மனுஷர்களை  நம்பவேண்டாம் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள், எனவே  அதை நான் ஏற்க்கவில்லை. என்று சொன்னால் ஒருவேளை மன்னிப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறதல்லவா? //

மற்றுமொரு நல்ல கேள்வி.

மாற்கு 12:32 அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. 33 முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
34 அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார்.__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

//மேலேயுள்ள வசனத்தில் அடிப்படையில் பிதாவின்மடியில் இருக்கிறார் என்று சொல்வதால் அவர் மடியில் மட்டுமே எப்பொழுதும் அமர்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம்மும் இல்லையே. பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீதும் திட்டத்தில் அவர் பூமிக்கு வந்தாரே! //

When Jesus came out from heaven to earth, Does He cease to exist from being God or lost His presence in heaven??


//இங்கு தேவன் தாவீதின் சிங்காசனத்தை கொடுப்பார் என்று எழுதப்பட்டுள்ளதால் அது தனி சிங்காசனம் என்று நான் தீர்மானிக்கிறேன். //
So there is a throne in heaven at the right side of the Father that David owned before. Now God is going to give it to Jesus?

//மனுஷன் பாவத்தில் வீழ்வதற்கு முன்னர் அவர் எத்தனை விதமாக இருந்தார், இப்பொழுது அவர் எத்தனை விதமாக எத்தனை ஆளத்துவமாக இருக்கிறார் என்பதை வேதமும் சொல்லவில்லை யாரும் அறியவும் இல்லை.//
John 1:1 in the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
What is the meaning of this verse? Is it before fall or After Fall? Who created the universe?

//சகோதரரே நான் இயேசுவை பிதாவுக்கு கீழானவராக எண்ணவில்லை காரணம் அவர்தான் இவர் இவர்தான் அவர் என்றே கருதுகிறேன்..//

Now you are saying more than what i am claiming. I am saying Jesus is equal with Father but you are saying Jesus is the Father. And He also below Father...I am confused!!!

//சோதிகளின் பிதா ஒரு பேரொளி அவரிடம் யாரும் நெருங்கவே முடியாது அவரை ஒருவரும் ஒருகாலும் கண்டதும் இல்லை என்று வேதம் சொல்கிறது.//
Does bible say the "Father of Light" is different from 'Father"???

//ஓன்று, பாவத்தில் வீழ்ந்த மனுஷனை மீட்கும் பணியில் தேவனின் இன்னொரு நிலைதான் இயேசு என்று நான் சொல்லும் கருத்தை நம்புங்கள், அப்பொழுது இவரே அவர் அவரே இவர் என்று சமமாகி விடுவார்//

What you mean by 'இன்னொரு நிலைதான் '? God has how many நிலை’s?

//சரி சகோதரரே! நான் தாங்கள் சொல்வதை ஏற்று "இயேசு பிதாவுக்கு சமமானவர்" என்று ஏற்றுக்கொண்டு நம்புகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். நாளை தேவன் முன்னால் நியாயதீர்ப்புக்கு போய் நிற்கும்போது "நானே தேவன் எனக்குச் சமானமில்லை" என்று நான் சொல்லியிருக்க "இயேசுவே தன் வாயால் இரண்டு முறை "பிதா பெரியவர்" என்று சொல்லியிருக்க நீ எப்படி சிலரின் கருத்தை ஏற்று அவரை தேவனுக்கு சமமானவர் என்று நம்பலாம்? நீ உன்னுடைய நிலையில் தவறி விட்டாய்! என்று சொன்னால் நான் என்ன செய்ய சகோதரரே? //

Jesus even said Do not called me "Good"

Mark 10.18: 'Why do you call me good? No one is good but God alone'

What is your conclusion from this verse?


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.சுந்தர் ////நான் தேவனுக்கும் அவர் நியாயதீர்ப்புக்கும் மிகவும் பயந்தவன்!  எனவே உங்கள் நம்பிக்கை உங்களோடு இருக்கட்டும் என்னை  விட்டுவிடுங்கள்! ///

சகோ சுந்தர் அவர்களே!!

நாம் ஒருகாரியத்தை விவாதிக்கிறோம்.. ஒரு முடிவை எட்டும் வரை விவாதிக்கலாமே...

மற்றுமல்லாது.. உங்களை மறுத்து பேசுதல் என்பது உங்கள் விசுவாசத்தை குலைத்து போடுதல் என்றாகிவிடுமா.. அருமையான விசுவாசத்தை பெற்றுள்ளீர்கள்..

விசுவாசத்தை துவக்குவது தேவனுடைய காரியம்..இரட்சிப்பும் அவருடையது..

எனவே விவாதிக்கலாமே!! 

நீங்கள் பிதா,குமரன்,பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறீர்கள்..
நானும் முழுமையாக விசுவாசிக்கிறேன்..

நீங்கள் ரட்சிப்பின் திடத்திற்காக தேவன் திரிதுவமானார் என்கிறீர்கள்..அதை பற்றி வசன ஆதாரம் தந்தால் நம் அனைவருக்கும் பிரயோஜனமாய் இருக்கும்..

வேதத்தில் மூன்று விதமான ஆட்களை பற்றி தெளிவாய் சொல்லி இருக்க.. ரட்சிப்பின் திட்டம்,அனேக ஆள் தத்துவம் என நீங்கள் குழம்புவதன் காரணம் என்ன??வேதத்தில் இல்லாதவைகளை பற்றி உங்களுக்கு கவலை வேண்டியதில்லை சகோதரரே..

பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி இவர்களுக்கு சம மகிமை உண்டு என்ற வாதத்தை நீங்கள் ஒப்புகொள்வதில்லை.. வேதத்தில் பிதா யேசுவிலும் பெரியவர் என்று உள்ளது என்கிறீர்கள்..

நிச்சயம் நானும் மறுக்கவில்லை..

பிதாவிற்கு கீழ்படிய தம்மை ஒப்புகொடுத்தார்.. அவர் கீழ் பட்டிருக்கும் வரை நிச்சயம் பிதா ஒருவர் மாத்திரம் பெரியவர்..

அனால் கிறிஸ்துவின் மகிமையை தாங்கள் குறைத்து பார்த்துவிட்டீர்கள் என தோன்றியதால் பின் வரும் வசன ஆதாரங்களை தருகிறேன்..

கொலோசெயர் 2:9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது..

மத்தேயு 12:6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அனுப்பப்பட்டவர் அனுபினவரின் பெயரால் வந்தார்.. அவ்வளவே.. குமாரனின் மகிமை இன்னும் வெளிப்படவில்லை..

மத்தேயு 24:30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.

உலக முடிவில் அவர் மகிமை அனைவருக்கும் விளங்கும்.. நியாயசனதிலும் அவர் மகிமை அதிகமாக விளங்கும்..

 

bro.sundhar wrote //சரி சகோதரரே! நான் தாங்கள் சொல்வதை ஏற்று "இயேசு  பிதாவுக்கு சமமானவர்" என்று ஏற்றுக்கொண்டு நம்புகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். நாளை தேவன் முன்னால் நியாயதீர்ப்புக்கு போய் நிற்கும்போது "நானே தேவன் எனக்குச் சமானமில்லை" என்று நான் சொல்லியிருக்க "இயேசுவே தன் வாயால் இரண்டு முறை "பிதா பெரியவர்" என்று சொல்லியிருக்க நீ எப்படி சிலரின் கருத்தை  ஏற்று அவரை தேவனுக்கு சமமானவர் என்று நம்பலாம்? நீ உன்னுடைய நிலையில்  தவறி விட்டாய்! என்று சொன்னால் நான் என்ன செய்ய சகோதரரே? //

நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள் போலும்.. நியாயாசனத்தில் நீங்கள் தேவன் என எதிர்பார்ப்பவர் யார் நண்பரே?? இயேசு தானே நம் கிரியைக்கு தாக்கத்தை நம்மை நியாயம் தீர்பார்..

மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

ரோமர் 14:10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

 

எனக்கு சில கேள்விகள் உண்டு..

I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.


வேதத்தில் தேவன் என குறிப்பிட படுபவர் யார்?
கர்த்தர் என குரிபிடபடுபவர் யார்?
தேவனாகிய கர்த்தர் என்றால் யார்?
கர்த்தர் என் தேவனாகவேண்டும் என்ற மறை பொருளை அறிந்துள்ளீர்களா???

 

என்னுடைய விசுவாசத்தையும் அறிக்கை பண்ணுகிறேன்...


என் அடிப்படை விசுவாசம் என்னவேனில்..

தேவன் திரித்துவமாய் இருக்கிறார்.. இயேசுவானவர் பிதாவிற்கு சமமாக இருந்தும் கீழ்பட்டார்.இவ்வாறாக கீழ்படியாத நம் முன் கீழ்படிதலின் மாதிரியானர்...

மூவருக்கும் தனி தனி சம மகிமை உண்டு..
தனி தனி ஜீவன் உண்டு..
வேதத்தில் உள்ள ஆள் தத்துவங்கள் மூன்று மட்டுமே...
மூவரும் ஒன்றாக இருகிறார்கள்... தேவாதி தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக.. ஓசன்னா!!!!
===========================================

சகோதரர்களே.. பிசாசும் திரித்துவ மகிமையை அறிந்திருந்ததாலே தன்னை தேவன் போல காண்பிக்க திரிதுவமாய் வெளிபடுகிறான்...

பிசாசின் திரித்துவம்

1. ஆதி பாம்பு

2.அந்திகிறிஸ்து

3.கள்ள தீர்கதரிசி ...

பவுலும் இதை பற்றி கூறி உள்ளாரே..

(II தெசலோனிக்கேயர்2 :4) அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

அவன் தேவன் என தன்னை காண்பிப்பான் என சொல்லும் வசனத்தை விசுவாசிக்கும் பட்சத்தில் அவனது போலி திரித்துவத்தை விளக்கும் பின் வரும் வசனத்தை காண்க..

வெளி 16:13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன். சாத்தான் விழுவதற்கு முன் கேருபாக இருந்தவன்... தேவ மகிமையின் அருகில் இருந்தவன்..

தேவ பிள்ளைகளுக்கு அவனிடத்தில் இருந்தும் சாட்சிகளை கொண்டுவர தேவன் பெரியவராய் இருக்கிறார்..

சகோதேரர்களே தெளிவு கொள்ளுங்கள்...

 

கர்த்தராகிய தேவனுக்கு இன்றும் என்றும் எப்போதும் மகிமை உண்டாகுக!!

--------------------------------------------------------------------------------

I கொரிந்தியர் 15:34. நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

 

 __________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ ஜான் அவர்களே!!

பிதாவும் குமாரனும் தனி தனியே கிரியை செய்ய இயலும்...

பிதாவிற்கும் குமாரனுக்கும் தனி தனி ஜீவன் உண்டு.. அவ்வாறு இல்லை என்பீர்கள் ஆகில் இயேசு தானே மரித்து தம்மிடதிலேயே ஆவியை ஒப்புகொடுத்தார் என பொருள் வரும்... கர்த்தர் நம்மை வஞ்சித்தார் என சொல்ல துணிகிறீர்களா??? அவர் தமது ஆவியை பிதா விடத்தில் ஒப்புகொடுத்து மெய்யாகவே மரித்தார்... ஆக பிதாவின் நாமத்தை தரித்து இயேசு வந்தாலும் நம் மீது உள்ள அன்பால், நாம் கழுவப்பட தம்முடிய ஜீவனையே கொடுத்தார்.. பிதா தம்முடிய ஒரே பேரான குமாரனை முதற்பேராக,நாம் இரட்சிக்கப்பட கையளித்தார்..
பிதாவும் குமாரனும் ஒன்றை இருகிறார்கள்...


ஆவியானவரின் வழிநடத்துதல் இல்லாமல் கர்த்தருக்கு பிரியமாய் ஒருவனால் நடக்க இயலாது..

ஆசாரியர்களே (பரிசுதமானவ்ர்களே) ஆலயத்தில் நிற்க இயலாத வண்ணம் தேவ வல்லமையினால் தேவாலயத்தை நிரபினவர்..

bro.john told:Jesus even said Do not called me "Good"

Mark 10.18: 'Why do you call me good? No one is good but God alone'

What is your conclusion from this verse?

எசுவானவர் பரிசுத்த ஆவியினால் ஒருவன் தன்னை அறிக்கை பண்ணினால் அவனை கணம் பண்ணுகிறதை நீங்கள் படித்ததில்லையா?

அவ்வாறல்லாமல் "நல்லவர்" என முகஸ்துதி செய்து கற்பனியை கைகொள்ள மனமில்லாதவர் செலுத்தும் மகிமையை அவர் அங்கிகரிகிறவர் அல்ல...

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சகோதரர் ஜான் மற்றும் ஜான்12 அவர்களே,

திரித்துவம் என்றும் திரியேகம் என்றும் இரு வார்த்தைகள் உள்ளன. திரித்துவம் என்றால் மூன்று சம வல்லமையுள்ள கடவுள்கள் உண்டு. திரியேகம் என்றால் ஒரே கடவுள் மட்டுமே உண்டு. அவர் மூன்று ஆள் தத்துவமானவர். இவற்றில் நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்பதை தெளிவுபடித்தினால் நன்றாக இருக்கும்.

திரித்துவம் என்று சொல்லிவிட்டு திரியேகத்தின் விளக்கத்தை சொல்வதும், இரண்டும் ஒன்று என்று சொல்வதும் திரித்துவ ஆதரவு தளங்களின் / போதகர்களின் வழக்கமாகும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்கள் தங்கள் இஸ்டப்படி போதிக்க முடியும். இது தங்கள் இஸ்டப்படி வசனங்களை திரிக்க போதகர்கள் பயன்படுத்தும் ஒரு வார்த்தையாகும்.

ஆகவே குழப்பம் வராமல் இருக்க நீங்கள் திரியேகத்தை விசுவாசிப்பவரா அல்லது திரித்துவத்தை விசுவாசிப்பவரா என இரண்டில் ஒன்றை முதலில் சரியாக‌ சொல்லுங்கள்.__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரரே நான் போதகர்களிடத்தோ, புத்தகங்களில்    இருந்தோ,தளங்களில் இருந்தோ பொது விசுவாசத்தை பெறவில்லை.

தேவ ஆவியும்,மனதில் வேதமும் உண்டு..நான் அனுதினமும் கர்த்தரால் போதிக்கபடுகிறேன். நான் கூறிய திரித்துவத்தை தெளிவுபடுத்தியுள்ளேன்..நீங்கள் கண்ட போதகர்கள் மற்றும் வசனத்தை வளைப்பவர்கள் கூறிய திரித்துவதையும்,திரியேகத்தயும் நீங்களே அன்றி நான் அறியவில்லை.. எனது இச்சையின் படி நான் தேவனை வழிபடுபவதில்லை.. அவ்வாறு இருந்தால் இச்சசையின் படி போதிப்பேன்..

மூன்று தேவர்கள் என நான் ஒருபோதும் கூறாத நிலையில் தங்கள் சந்தேகம் எவ்வளவு அவசியம் என எனக்கு புரியவில்லை.


நீங்கள் பதில் அளிக்கமுனையும் பட்சத்தில் கர்த்தர் உணர்த்தும் விதத்தில் பதில் அளிக்க முயற்சயுங்கள்.. மற்றபடி மீண்டும் என்னுடைய விசுவாசத்தை தெளிவுபடுத்துகிறேன்..

 

பிதா தேவன் ,குமாரன் தேவன் ,பரிசுத்த ஆவியானவர் தேவன்
மூவரும் ஒன்றாக இருகிறார்கள்..
தேவன் திரித்துவமாய் இருக்கிறார்.. இயேசுவானவர் பிதாவிற்கு சமமாக இருந்தும் கீழ்பட்டார்.இவ்வாறாக கீழ்படியாத நம் முன் கீழ்படிதலின் மாதிரியானர்...


மூவருக்கும் தனி தனி சம மகிமை உண்டு..
தனி தனி ஜீவன் உண்டு..
வேதத்தில் உள்ள ஆள் தத்துவங்கள் மூன்று மட்டுமே...
மூவரும் ஒன்றாக இருகிறார்கள்...

 

நீங்களும் உங்கள் விசுவாசத்தை இங்கு பதிந்தால் பிரயோஜனமாய் இருக்கும்..

தேவாதி தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக.. ஓசன்னா!!!

 

-- Edited by JOHN12 on Thursday 22nd of December 2011 08:12:49 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//தேவாதி தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக..//

இவ்வரியில் “தேவாதி தேவன்” என யாரைச் சொல்கிறீர்கள்?__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

தேவாதி தேவன் என யாரை துதிக்க முடியும் சகோதரரே!!!

நான் அடிகடி முணுமுணுக்கும் பாடல் வரிகளில் வருகின்ற துதி அது.
தேவாதிதேவன் கார்த்தி கர்த்தர் வாழ்க வாழ்கவே என்று வருகிற ஜெப தோட்ட பாடல் அது..

தேவன் யார் என்ற நிலையில் கிறிஸ்துவம் இருக்கிறதா என்ன?

தேவன் என்பவர் நம்மால் அனுதினமும் ஆராதிக்கபடுபவர்...உங்களுக்கு பிரியமான பதிலையே தருகிறேன்..ஏற்புடைய பதில் தான் அது. பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் இயேசுவின் வழியே பிதாவை துதிக்கும் பாடல் அது...

இதற்கு வசன விளக்கம் நீங்கள் கேட்கும் பட்சத்தில்..

Iகொரிந்தியர் 8 : 5 ,6. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

வெளி 19:16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

சங்கீதம் 82:6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.


Iகொரிந்தியர் 8 : 5 ,6. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

நாம் விவாதிக்கும் திரித்துவத்தை பற்றி உங்கள் தனிப்பட்ட கருது என்ன?
தேவனை குறித்த உங்கள் விசுவாசத்தை உங்கள் விருப்பம் இருந்தால் பகிரலாம்..

 

 -- Edited by JOHN12 on Friday 23rd of December 2011 12:32:42 AM

__________________
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard