(இந்த கட்டுரை முற்றிலும் கற்பனையே! பொதுவாக எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல! ஒருவேளை தங்கள் மனதை இக்கட்டுரை புண்படுத்துமானால், தாங்கள் திருந்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதே எனது கருத்தேஅன்றி மற்ற நல்லவர்கள் இது குறித்து கவலைப்படவேண்டிய அவசியமில்லை)
திருநேல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த RC கிறிஸ்த்தவர்ஒருவர் எதிர்பாராத விதமாக ஒரு லாரியில் அடிபட்டு குற்றுயிரும் குலை உயிருமாக உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
அப்பொழுது அந்த பக்கமாக வாகனத்தில்வந்த மிகப்பெரிய ஆவிக்குரிய சபையின் பாஸ்டர் ஒருவர் தனது A/C காரின கண்ணாடியை இறக்கி அவரை பார்த்தார். குற்றுயிராய் கிடந்த அவருக்காக மிகவும் அனுதாபபட்டு அந்த இடத்திலேயே ஒரு உருக்கமான ஜெபத்தை எறேடுத்தார்
"அன்பு நிறைத்த எங்கள் பரம பிதாவே விபத்தில் மாட்டிய இந்த மஷனுக்காக உம்மிடம் ஜெபிக்கிறேன். உடைந்துபோன இவர் கால் எலும்புகளை நீர் உயிர்ப்பிக்கும்படி வேண்டுகிறேன். இவர் தானே எழுந்து அவரது வீட்டுக்கு செல்லும் அளவுக்கு இவருக்கு பெலன் கொடுக்கும்படி உம்மிடம் மன்றாடுகிறேன். ஒருவேளை இவர் மரித்து போனால் இவர் குடும்பத்துக்கு சமாதானத்தை கட்டளையிடும் இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்" என்று ஜெபித்துவிட்டு, தான பங்குபெற போகும் கண்வெண்ஷன் கூட்டத்துக்கு நேரமாகிவிட்டதால் கடந்து சென்றுவிட்டார்.
அடுத்து அந்த வழியாக ஒரு ஆத்தும ஆதாய வீரர் ஒருவர் கடந்து வந்தார். அனேக ஆத்துமாக்களை ஆண்டவருக்குள் வழி நடத்தியிருக்கும் அந்த வீரர், விபத்தில் மாட்டிய அந்த மனுஷரை பார்த்து இரக்கபட்டு அவர் பக்கத்தில் வந்து "நீங்கள் மரிக்கும் முன்னர் இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டும். இயேசு நம்முடய பாவங்களுக்காக மரித்தார். அவரை ஏற்றுக்கொண்டு நீங்கள் மரித்தால்
உங்களுக்கு பரலோகம் போக வாய்ப்புண்டு இல்லையெனில் நீங்கள் வேதனை உள்ள நரகம் செல்லலாம், எனவே இப்பொழுதே ஏற்றுக் கொள்வீர்களா?" என்று திரும்ப திரும்ப கேட்டார். விபத்தில் மாட்டியவர் பதில் எதுவும் சொல்லாமல் முணங்கவே, அவர் கழுத்தில் அணிந்திருந்த மாதாவின் சுரூபத்தை பார்த்து அவர் ஒரு RC கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொண்ட அந்த ஆத்துமா ஆதாய வீரர், பாபிலோன் சபையை சேர்ந்த இவர் போன்றவர்களை திருத்த முடியாது என்றெண்ணி கடந்து சென்று விட்டார்.
அடுத்து சிறிது நேரத்தில் அந்த வழியாக ஒரு வேத வசனங்களை முழுவதும் அறிந்த பண்டிதர் ஒருவர் வந்தார். உயிருக்கு போராடும் அந்த மனுஷனின் நிலையை பார்த்து பரிதாபபட்ட அவர், வேதம் இதை குறித்து என்ன சொல்லுகிறது என்பதை தீவிரமாக யோசிக்கலானார். கையில் இருக்கும் வேத புத்தகத்தை மீண்டும் மீண்டும் புரட்டி பார்த்த அவர் "கள்ளனிடம் அகப்பட்ட மனுஷனை காக்கும்படி இயேசு கட்டளை யிட்டிருக்கிறார்" அனால் லாரியில் அடிபட்டவனுக்கு இரக்கம் காட்டும்படி வேதம் எங்கும் சொல்லாத காரணத்தாலும் வேத வசனத்துக்கு மிஞ்சி எதுவும் செய்யகூடாது என்ற காரணத்தாலும், எதுவும் உதவி செய்யாமல் கடந்து சென்றுவிட்டார்.
அடுத்து சிறிது நேரத்தில் அந்த வழியாக, தாங்கள் சபைதான் பரலோகத்துக்கு போக தகுதியுள்ளது என்றும் மற்ற எல்லா சபைகளும் தவறான உபதேசத்தில் இருக்கிறார்கள் என்றும் திட்டமாக நம்பும் ஒரு கிறிஸ்த்தவர் அந்த வழியாக கடந்து வந்தார். விபத்தில் மாட்டியவரின் பக்கத்தில் சென்று தங்கள் சபையின் அருமை பெருமைகளை எடுத்து
சொல்ல ஆரம்பித்தார். அவர் பங்குபெறும் சபையின் ஆராதனை முறைகள் பற்றியும் அதன் மேன்மைகள் பற்றியும், மற்ற சபைகள் எவ்வாறு வழிதப்பி செல்கின்றன என்பது குறித்தும் தெளிவாக விளக்கிய அவர், தங்கள் சபை இருக்கும் இடத்தை சொல்லி வாரம் தோறும் வருவதாகவும் தசமபாகம் காணிக்கைகளை அங்கு தருவதாகவும் வாக்களித்தால் காப்பாற்றுவதாக கூறினார். ஆனால விபத்தில் மாட்டியவரின் கண்கள் மூடிகொள்ளவே இவரிடம் ஒன்றும் தேராது என்று கடந்து சென்றுவிட்டார்
அடுத்து அந்த பக்கமாக சுயநீதி கிறிஸ்த்தவர் ஒருவர் கடந்து வந்தார். விபத்தில் மாட்டிய அவரை பார்த்தவுடன் "இந்த மனுஷன் ஏதோ மிகப்பெரிய பாவம் செய்திருக்கிறார் அதனால தான் இப்படி அடிபட்டு கிடக்கிறார்" என்று தீர்மானித்த அவர். உயிருக்கு போராடும் அவரிடம் சென்று "இவ்வளவுபெரிய தீங்குவர நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள் அதை இப்பொழுதே அறிக்கையிட்டு விட்டுவிடுங்கள் நீங்கள் இரக்கம் பெறுவீர்கள்" என்றார். மேலும் "என்ன சகோதரரே? நான் உங்களை காப்பாற்றினால் பாவத்தில் இருந்து மனம் திரும்புவீர்களா?" என்று திரும்ப திரும்ப கேட்டார். அடிபட்டவரிடம் இருந்து பதில் எதுவும் வராததால், பாவம் செய்திருக்கிறார் ஆனால் மனம் திரும்ப மனதில்லை இவர் சாகட்டும் இவர் இருந்து என்ன பிரயோஜனம் என்றெண்ணி கடந்து சென்றுவிட்டார்.
அடுத்து அந்த பக்கமாக "இறைவன் மிகப்பெரியவர், இந்த உலகில் நடக்கும் எல்லாமே இறைவனின் சித்தப்படிதான் நடக்கிறது" என்று கருதும் ஆன்மீகவாதி ஒருவர் வந்தார். விபத்தில் மாட்டிய மனுஷனை பார்த்த அவர் "இவர் இப்படி ஒரு விபத்தில் மாட்டுவதும் வேதனை பட்டு மரிப்பதும் இறைவனின் சித்தம். இதில் நாம் தலையிட ஒன்றும் இல்லை! நடப்பது நடந்தே தீரும் அதை யாரும் தடுக்கவே முடியாது. அவர் சித்தம் என்னவோ அது அப்படியே நிறைவேறட்டும் என்று எண்ணிக்கொண்டு விலகி போனார்.
அந்த நேரத்தில் அந்த வழியாக எதிலும் சரியான முறைமையை கடைபிடித்து நேர்மையாக நடக்கும் ஒரு இஸ்லாமியர் வந்தார். விபத்தில் அடிபட்டு கிடந்த அவரையும் அவரை சுற்றியிருக்கும்
இடங்களையும் சற்று உன்னிப்பாக கவனித்த அவர். இந்த மனுஷர் சரியான பாதையில் ஓரமாக வந்திருந்தால் நிச்சயம் அடிபட்டிருக்க மாட்டார். தன்னிடம் வண்டி இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் ஓட்டிவிடவேண்டியது தானா? தவறான முறையில் வண்டியை ஓட்டிவந்து லாரியில் மாட்டிக்கொண்டுள்ளார். தவறு செய்தவர்கள் தண்டனை அடையட்டும்! இவர் போன்றவர்களுக்கு
உதவி செய்வதில் எந்தபயனும் இல்லை என்று கடந்து சென்றுவிட்டார்.
அடுத்து அந்த பக்கமாக ஆச்சாரமான குடும்பத்தை சார்ந்த கோவில் பணி செய்யும் இந்து பரம்பரையை சார்ந்த ஒருவர் கடந்து வந்தார். இரத்தத்தை பார்த்தாலே அவருக்கு அலர்ஜி ஆகிவிடும்! எனவே கொஞ்ச தொலைவில் இருந்து இரத்தம் சிந்தி கிடப்பதை எட்டி பார்த்த அவர் "ஐயோ பாவம்" என்று சொல்லி "உச்" கொட்டிவிட்டு சற்று தூரமாக விலகி போய்விட்டார்
அடுத்து அந்த பக்கமாக ஒரு மனுஷ தன்மையுள்ள மனுஷர் வந்தார் அவர் விபத்தில் மாட்டியவருக்கு உதவிசெய்ய நினைத்தும் அவரால் முடியவில்லை. உடனே வேகமாக ஓடி பக்கத்து ஊருக்கு சென்ற அவர் சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்து அந்த விபத்து நடந்த இடத்தை குறித்து புகார் செய்தார்.
ஆம்புலன்ஸ் வந்து அந்த மனுஷனை ஏற்றும்போது விபத்தில் மாட்டியவர் மரித்திருந்தார், காரணம் நல்ல சமாரியன் ஒருவனும் அந்த பக்கம் வரவேயில்லை!
மேலேயுள்ள அனைவருமே எதாவது சாக்கு சொல்லி தங்கள் கடமையை செய்ய தவறியவர்கள். மதம்/ ஆன்மிகம் என்னும்
போர்வையில் ஒளிந்துகொண்டு, மனிதாபிமானத்தை தொலைத்து விடகூடாது என்பதை வலியுறுத்தவும், "வேதனையில் வாடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடி உதவியை எந்த பாகுபாடும் பார்க்காது செய்வது அவசியம்" என்ற கருத்தை வலியுறுத்தவுமே இந்த கட்டுரைஎழுதப்படுகிறது!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நல்ல கதை. இறுதியில் கம்யூனிஸ கட்சியைச் சேர்ந்த கடவுளை நம்பாத நாத்திகர் வந்து காயப்பட்டவனுக்கு உதவி செய்தார் என்று முடித்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்!