இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆச்சர்யமான இரக்கம்!!!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
ஆச்சர்யமான இரக்கம்!!!
Permalink  
 


சகோதரர்களே!!

 

எப்பிராஹிமின் பாவத்திற்காக அவனுக்கு தண்டனையை தேவன் முன் வைக்கிறார்..ஆனால்!!

ஓசியா 5:9 தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாய் வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.

ஓசியா 5:11 எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.

ஓசியா 5:14 நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமையால் எடுத்துக்கொண்டுபோவேன்.

 

ஓசியா 7:8 எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிபோடாத அப்பம்.

ஓசியா 11:3 நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள்.

 

பின் வரும் வாசனைகளை பாருங்கள் . தண்டித்து விடுவேன் என எச்சரிக்கை செய்ததில் இருந்து தேவனின் மனம் படும் வேதனையை!!! 
 
 
ஓசியா 11:8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது..
 
எரேமியா 31:20 எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
 


 எரேமியா 31:19நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்து வருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க்கேட்டேன்.

 எரேமியா 31:9 அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

 

எரேமியா 31:20 எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

   

அவனுடைய பாவங்கள் மேற்கூறியவாறு அநேகமாய் இருந்தாலும்..

அவன் மெதுவாய் வேதனை பட ஆரம்பிக்கும் போதே தேவஉருக்கங்கள் அவரை எவ்வளவாய் இரங்க செய்கின்றன..நம் தந்தையின் இருதயத்தை நாம் பல நேரங்களின் தகாத கற்பனைகளை கைகொண்டு தேவன் காட்டும் மார்க்கத்தை விட்டு விலகும் போது இவ்வாரல்லவா நம்

தேவன் நம்மை சிட்சை செய்யவும், கை விடவேண்டியும் வரும்.. நாம் மனம் திரும்பும் வேளையில் நம் தகப்பனின் இதயம் எப்படி இருக்கும் என இவ்வசனங்கள் தேவ இதய துடிப்பை அருமையை வெளிபடுத்துகின்றது..

 

 

சங்கீதம் 86:15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

சங்கீதம் 103:8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

 

யோனா தேவனை சரியாய் தன அடையாளம் கண்டிருக்கிறார்..

 

யோனா 4:2 கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்...
 
 
தேவனே நாங்கள் உம்மை எக்காரணத்தை கொண்டும் உம்மை மனமடிவாக்காத படி,வஞ்சிக்கத படி எங்களை உம்முடிய அன்பின் கையிருகளுக்குள்ளாக காத்துக்கொள்ளும்..
இப்படியான இரக்கத்தை நாம் பெற்றிருக்கவும், இரக்கத்தின் தேவனை பெற்றிருக்கவும் நாம் எம்மாத்திரம்..
 
----------------------------------------------------------------------

மத்தேயு 22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

சகோதரர்களே!!

 

எப்பிராஹிமின் பாவத்திற்காக அவனுக்கு தண்டனையை தேவன் முன் வைக்கிறார்..ஆனால்!!

பின் வரும் வாசனைகளை பாருங்கள் . தண்டித்து விடுவேன் என எச்சரிக்கை செய்ததில் இருந்து தேவனின் மனம் படும் வேதனையை!!!   

 

தேவனின்  இரக்கங்கள் பற்றி மிக அழகாக நிதானித்து எழுதியிருக்கிறீர்கள் சகோதரரே! ஒரு மனுஷனை தண்டிக்க வேண்டும் என்று தேவன் நினைத்தாலும் அதை செய்யும் முன் அவர் எவ்வளவு  வேதனைப்படுகிறார் என்பதை தேவன் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.     
 
தேவன் யாரையும் மனதார தண்டிப்பது இல்லை என்பதே நான் திரும்ப வலியுறுத்தும் கருத்து.
 
புலம்பல் 3:33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

இறைவனின் இரக்கங்கள் மஹா பெரியது  என்பதை  மேலேயுள்ள வசனங்கள் கருத்துக்கள் மற்றும் விவிலியத்தில் இருக்கும் பல வசனங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. அப்படிபட்ட மகா இரக்கம் உள்ள தேவன்  எப்படி  ஜனங்களை நித்திய நித்தியமாக நரகத்தில் வாதிக்கப்பட அனுமதிப்பார்?  
 
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். வெளி 20:15
 
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21:8
 
 
ஒரு சிறிய தண்டனை கொடுக்கும் முன்னரே மனம் வருந்தும்  இரக்கமுள்ள இறைவன் ஏன் நித்திய தண்டனைக்கு மனுஷனை அனுப்புகிறார்?        
 
இது குறித்து சகோதரர்கள் கருத்து என்ன?

பலர் கேட்கும் இந்த கேள்விக்கும் பதில் அறியும் பொருட்டே இங்கு பதிவிடுகிறேன்.


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

bro.nesan///ஒரு சிறிய தண்டனை கொடுக்கும் முன்னரே மனம் வருந்தும் இரக்கமுள்ள இறைவன் ஏன் நித்திய தண்டனைக்கு மனுஷனை அனுப்புகிறார்?
இது குறித்து சகோதரர்கள் கருத்து என்ன?

பலர் கேட்கும் இந்த கேள்விக்கும் பதில் அறியும் பொருட்டே இங்கு பதிவிடுகிறேன்.///
 
நல்ல கேள்வி சகோதரரே..
நம் கர்த்தர் இரக்கத்தின் தேவன் தான்..அதேவேளையில் அவர் பாவத்தை பார்க்காத சுத்த கண்ணன்.பட்சிக்கிற அக்கினியாகவும்,எரிச்சலின் தேவனாகவும் இருக்கிறார்.
அவர் நீதிஉள்ள நியாதிபதி...
இருளானது அவரிடம் எள்ளளவும் இல்லை.. இதுவே அவரின் மேற்கூறிய நியாய தீர்ப்பிற்கு காரணம்
 


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:
நல்ல கேள்வி சகோதரரே..
நம் கர்த்தர் இரக்கத்தின் தேவன் தான்..அதேவேளையில் அவர் பாவத்தை பார்க்காத சுத்த கண்ணன்.பட்சிக்கிற அக்கினியாகவும்,எரிச்சலின் தேவனாகவும் இருக்கிறார்.
அவர் நீதிஉள்ள நியாதிபதி...
 
இருளானது அவரிடம் எள்ளளவும் இல்லை.. இதுவே அவரின் மேற்கூறிய நியாய தீர்ப்பிற்கு காரணம்
 

சகோதரர் அவர்களே தாங்கள் சுலமபாமாக  பதில் சொல்லிவிட்டீர்கள் ஆனால் நான் என்னை பொறுத்தவரை இந்த பதிலில் முழுமை இல்லை  சற்று யதார்த்தமாக நாம் சிந்திக்கவேண்டும் என்று கருதுகிறேன்

எனக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும்  மகள்  ஒருவள் இருக்கிறாள். என் மனைவிக்கு முடியவில்லை என்றாலும்கூட வீட்டில்  எந்த ஒரு சிறு வேலையும் செய்வது கிடையாது. பலமுறை நான் கோபம் வந்து  கத்துவேன் அவள் சிம்பிளாக என்னால் எதுவும் செய்யமுடியாது என்ன செய்ய போகிறீர்கள்? என்று கேட்கிறாள். அடித்தாலும் வாங்கிகொள்கிறாள் சிறிது  நேரம் அழுவாள் ஆனால் அவள் செயலில் எநத மாற்றமும் வராது. 
 
இப்படிபட்ட பிள்ளையை என்ன செய்வது சொல்லுங்கள்? 
 
'நீ எனக்கு கீழ்ப்டியமாட்டேன் என்கிறாய் எனவே  நீ வேண்டாம் வீட்டைவிட்டு போ' என்று விரட்டவும் முடியவில்லை. என் மனைவிக்கு சற்று உடம்பு பலகீனமாக இருப்பதால், உன் இஸ்டப்படி நீ இரு  என்று சொல்லி  அவளை அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை என்ன செய்வது? என்ன இருந்தாலும் அவள் என்னுடய மகள். எனவே அவள் எதை செய்தாலும் செய்யாவிட்டலும் அவளை  வளர்த்து ஒரு நிலைக்கு கொண்டு வரவேண்டியது என்னுடய பொறுப்பாகிறதேயன்றி,  என் பேச்சை  கேட்டு  என் போல நடக்கவில்லை என்பதற்காக வீட்டை  விட்டு விரட்டுவதோ நித்தியத்துக்கு தண்டனையோ  யாரும் கொடுப்பதுஇல்லை. இவ்வாறு பொல்லாதவர்களாகிய நாமே நமது பிள்ளைகள் என்ன செய்தலும் அதை சகித்து  அவர்களுக்கு வேண்டிய  காரியங்களை செய்யும்போது  தேவன் அப்படி செய்யாதிருப்பது எப்படி?     
  
இறைவன்  நம்மைவிட மேலான இரக்கம் உள்ளவர். நாமெல்லோரும் அவருடய கரத்தின் கிரியைகள் எனவே இதே காரியத்தை அப்படியே இறைவன் மற்றும் மனுஷன் காரியங்களில் ஒப்பிட்டுபாருங்கள்.
 
சமீபத்தில் டிவியில் காட்டிய  எந்திரம் படம்  பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உணர்ச்சிகளும்,  இதயசிந்தனைகள் இல்லாது இருந்த ஒரு ரோபோட்டுக்கு உணர்ச்சிகளை  கொடத்துவிட்டு பின்னர்  அதுஒரு தவறான  நிலையில் போகும்போது அதை உருவாக்கியவர்  அதன் கை கால்களை தனித் தனியாக வெட்டி அதை அழிக்கிறார். அப்பொழுது  அந்த ரோபோ தன்னை உருவாக்கியவனை பார்த்து கேட்கிறது "நான் உங்களை என்னை படையுங்கள் என்று சொன்னேனா டாக்டர்?"  "நானா எனக்கு உணர்ச்சிகளை கொடுங்கள் என்று சொன்னேன் டாக்டர்? எல்லாவற்றையும்  நீங்களே செய்துவிட்டு இப்பொழுது என்னை தண்டிப்பதில் என்ன நியாயம்? என்று கேட்பது மிகவும் பரிதாபமாக இருக்கும்.
 
அதே நிலைதான் இன்று மனுஷனுக்கும் என்று நான் கருதுகிறேன்,   
 
எந்த மனுஷனும் இறைவனிடம் போய் என்னை படையுங்கள் என்று  கேட்டதாக வேதாகமத்தில் இல்லை.  இறைவன்  நமதுசாயலில் உருவாக்குவோம் என்று சொல்லி உருவாக்கி  உணர்ச்சிகளைகொடுத்து விட்டு  இறுதியில்  இப்பொழுது அவன் சொன்ன பேச்சை கேட்காமல் பாவத்தில் மூழ்கி  பிரச்சனை  வந்தபிறகு அவனை நித்திய அக்கினியில் போட்டு தண்டிப்பது சரியான  நியாயமா சகோதரரே?  நீதியுள்ள இறைவன் இவ்வாறு செய்ய என்ன காரணம்?
 
நாம் நினைப்பதுபோல் இந்த் பிரச்சனையானது சாதாரணமானது அல்ல என்றே கருதுகிறேன். இறைவன் தான் செய்யும் செய்கையில்  எல்லாமே  நீதியாக செயல்படுபவர் அல்லவா?  எனவே இதற்க்கு வேறு காரணம் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
 
இது குறித்து தங்கள் கருத்து என்ன?
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.நேசன் அவர்களே..

///சமீபத்தில் டிவியில் காட்டிய  எந்திரம் படம்  பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உணர்ச்சிகளும்,  இதயசிந்தனைகள் இல்லாது இருந்த ஒரு ரோபோட்டுக்கு உணர்ச்சிகளை  கொடத்துவிட்டு பின்னர்  அதுஒரு தவறான  நிலையில் போகும்போது அதை உருவாக்கியவர்  அதன் கை கால்களை தனித் தனியாக வெட்டி அதை அழிக்கிறார். அப்பொழுது  அந்த ரோபோ தன்னை உருவாக்கியவனை பார்த்து கேட்கிறது "நான் உங்களை என்னை படையுங்கள் என்று சொன்னேனா டாக்டர்?"  "நானா எனக்கு உணர்ச்சிகளை கொடுங்கள் என்று சொன்னேன் டாக்டர்? எல்லாவற்றையும்  நீங்களே செய்துவிட்டு இப்பொழுது என்னை தண்டிப்பதில் என்ன நியாயம்? என்று கேட்பது மிகவும் பரிதாபமாக இருக்கும்.
 
அதே நிலைதான் இன்று மனுஷனுக்கும் என்று நான் கருதுகிறேன்,   ////

தேவன் ஏன் நம்மை நல்லவர்களாகவும்,கேடானவர்களாகவும் படைக்கவேண்டும் என்பது தங்கள் கேள்வி..

பின்வரும் வசனங்களை படியுங்கள்.தேவ திட்டத்தை பற்றி தெளிவாய் உள்ளது..

ரோமர் 11 :32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்..

 நமக்கான தேவ இரக்கம்,நியாயதீர்பின் பொது தேவ சிம்மாசனத்தின் முன் பாராட்டப்பட  விரும்பி தேவன் முன்குறித்த திட்டம் தான் மேல் உள்ள வசனம்..(இரக்கம் நியாயாசனத்தின் முன் மேன்மை பாராட்டும் என வசனம் உள்ளதே!!!)

அநீதியானாலும்,நீதியானாலும் பரிபூரண நிலைக்கு வரவேண்டும்.அப்போது தான் முடிவு வரும்.(முழுமையான ஜீரணத்திற்கு பின் சத்துக்கள் தனியாகவும்,கழிவு தனியாகவும் பிரிவது போல) பின்வரும் வசனங்களை பாருங்கள்..


வெளி 22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்..


ந்திரன் திரைபடத்தை கூறி இருந்தீர்கள்,

அதை போல நாம் நம்மை உருவாகினவரை நோக்கியோ அல்லது பெற்றவரி நோக்கியோ கேட்க முடியாது.சுயபட்சதாபம் காரணமாக நாம் இவ்வாறு நினைக்ககூடும்.அவ்வாறு படைத்தவரை நோக்கி கேள்வி  கேட்பது ஒரு பாவம் என வேதம் கூறுகிறது..


ஏசாயா 45:10 தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!

தொடரும்..

தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!-- Edited by JOHN12 on Wednesday 1st of February 2012 06:16:39 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.சந்தோஷ் அவர்களே!!

நடைமுறை வாழ்க்கையில் பொல்லாத மனிதர்களாகிய நாமே நம்மை சார்ந்த நம்மவர்களிடத்து இவ்வளவு பொறுமையாய் இருக்கிறோமே,கர்த்தர் துன்மார்க்கரை நித்திய அக்கினியில் எவ்வாறு தள்ள முடியும்என்பது தங்களின் கேள்வி .எனக்கு தெரிந்ததை பகிர்கிறேன் சகோதரே..

சகோதரர்  ரோமர் 9ஆம் அதிகாரத்தை தியானித்து பாருங்கள்..அதில் பின்வருமாறு உள்ளது..

ரோமர்
9 அதிகாரம்..


15. அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

18. ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.

19. இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.

20. அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?

21. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?

22. தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,

23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?

இறுதி வசனத்தில் குறிபிட்டபடி பார்த்தால்., கர்த்தர் நம்மை உருவாகும் முன்பான தெரிந்தேடுபின் படியே,தேவன் நம்மை தமது மகிமையின் ஐஸ்வர்யத்தை தெரியப்படுத்தும்   பாத்திரங்களாகவும்,அழிவுக்கு எத்தனமான கோபாக்கினையின் பாத்திரங்களாகவும்  நம்மை படைத்துள்ளார் என்பது தெளிவாகிறது...

அவர் பார்வோனை படைத்த நோக்கமும் இந்த அதிகாரத்திலே பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது..

17. மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.

மேலும்.,
23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?

என வேதம் நாம்மை அன்னியராக்கி கேள்வி பாணியில் விளிப்பதால்.,கேள்வி கேட்க துணியாமல் கர்த்தர் தமது தெரிந்தேடுப்பின் படியேயும்,அவ்வாறு அல்லாமலும் கூட நம்மை குயவன் போல வணைய வல்லவர் என அறிந்து நாம் அமைதியாய் இருபதே நல்லது..

தேவன் மிகவும் நீடிய பொறுமையாய் அழிவின் பாத்திரங்களின் மேல் பொறுமையாய் இருக்கிறார்..(எப்படி தானியங்கள் முதிரும் வரை களைகளைஅனுமதிகிராரோ அவ்வாறு) ஆனால் ரத்த சாட்சிகளின் எண்ணிக்கை நிறைவேறின பின்பும்,அனுதினமும் தேவன் முன் ஏறடுக்கபடும் தூபவர்கமான பரிசுத்தவான்களின் ஜெபத்தை கேட்டும்,நிர்ணயித்த நாள் நெருங்குகிறதை கண்டும் நம் தேவன் நித்திரை தெளிந்தவரை போல் விழித்து உலகத்தை தாமுடைய ஆலயத்தின் நிமித்தமும்,பரிசுத்தவான்களின் நிமித்தமும்,நமது அக்கிரமங்களின் நிமித்தமும் பழி வாங்கி,சத்ருவை வானத்தில் இருந்து அனுப்பி பட்சித்து ஒரு காண நேரத்திலே அழித்து  நியாயதீர்பின் சிம்மாசனத்தில் அமர்ந்து  துன்மார்கர்களை(பதர்களை) தனியேவுன்,நீதிமான்களாகிய பரிசுதவாங்களையும் தனியே பிரித்து நித்திய நிந்தையும்,ஜீவ கிரீடத்தையும் அருளுவார்..

மற்றொரு உதாரணமாக.,

புடமிட்ட பின் சுத்த தங்கம் மீறும்,.தங்கமும்,பதரும் புடமிடுதல் முடியும் வரை புடமிடும் களத்தில் இருக்கும்.தங்கத்தை  கனத்துக்குரிய பாத்திரம்மாய் தேவன் தெரிந்தெடுத்த பரிசுத்தவான்களுக்கும்,பதரை நித்திய அழிவின் பாத்திரங்கலாக தேவன் முன்குறித்த துன்மார்கனையும் ஒப்புமை கொள்ளலாம்.பதரான துன்மார்கனால் பரலோகத்தை அலங்கரிக்க முடியாது..அவனிடத்தில் தேவமகிமை இல்லையே..

ஆக நான் வலியுறுத்தும் கருத்து என்னவெனில் அன்பு தணிந்த பின் முடிவு வரும்.,தெரிந்துகொள்ளபட்டவர்களின் நிமித்தமும்.,தெரிந்துகொள்ளபடாதவர் என நாம் கருதுபவரிடதும் கூட தேவன் நியாயதீர்பின் காலம் வரை தயவாய் இருக்க முடியும்,.

பாவம் பூரணபட்ட பின்.,துன்மார்க்கனை அக்கினி கடலில் தள்ளும் போது தேவன் வருதபடமாட்டார்.கழிவை நம் உடலின் ஒரு பாகம் என நாமும் கருதுகிரதில்லையே அதை போல..

(கிடைத்த நேரத்தில் முடிந்தவரை சுருக்கி பதில் தந்துள்ளேன் எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்)

 

-----------------------------------------------------------------------

 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.எபேசியர் 4:24-- Edited by JOHN12 on Wednesday 1st of February 2012 07:11:37 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

பிள்ளைகளை சிட்சிக்கும் காரியத்தில் தேவன் அனுமதிக்கும் நிலையை பின் வரும் வசனம் காட்டுகிறது.,

நீதிமொழிகள் 19:18 நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.

நம் சிட்சைகள் பலனளிக்காமல் தவறும்போது,
தேவகிருபையும்,வல்லகரத்தையும்,வழிநடத்துதலையும் விசுவாசத்தோடு தேவனிடத்தில் தொடர்ந்து பாரத்தோடு விண்ணபியுங்கள்.நிச்சயம் மாற்றம் வரும்.நானும் ஜெபிக்கிறேன்.

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

 பாவம் பூரணபட்ட பின்.,துன்மார்க்கனை அக்கினி கடலில் தள்ளும் போது தேவன் வருதபடமாட்டார்.கழிவை நம் உடலின் ஒரு பாகம் என நாமும் கருதுகிரதில்லையே அதை போல..

 


மனிதர்களுக்குள்ளேயே கழிவு என்றொரு  கூட்டம்  இருப்பது போலவும் அதை இறைவன் கழித்து  விடுவார்  என்பது போலவும் சொல்கிறீர்கள். ஆனால் ஒருவரும் கெட்டுபோகாமல் மீடபடைய வேண்டும் என்று காத்திருப்பதாக விவிலியம் சொல்கிறதே  இதன் பொருள் என்ன?

II பேதுரு 3:9   ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, 

தங்கள் கருத்தில் இன்னும் அனேக கேள்வி எழும்புகிறது. முதலில் இந்த கேள்விக்கு பதில் தாருங்கள் பின்னர் தொடரலாம்.

   


-- Edited by Nesan on Friday 10th of February 2012 03:36:32 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர் அவர்களே,

நீங்கள் முன் நிறுத்தி உள்ள வசனம் II பேதுருவில் உள்ள வசனம்.

II பேதுரு 3:9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

இவ்வசனத்தில் கர்த்தரின் நீடிய பொறுமையை பற்றி எழுதப்பட்டுள்ளது.

நியாய தீர்ப்பு இல்லை என்றோ, அனைவரும் பரலோகம் போய் விடுவார்கள் என்றோ கூறப்படவில்லை.

பட்சபாதமற்ற நம் நீதிபரரின் சிங்காசனத்தின் முன் இரக்கம் மேன்மை பாராட்டும்..துன்மார்கனுக்கு இவ்வாறான  இரக்கம் மேன்மை பாராட்டாது..அவன் சடுதியில் நாசமடைபவன்..

 __________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

இவ்வசனத்தில் கர்த்தரின் நீடிய பொறுமையை பற்றி எழுதப்பட்டுள்ளது. 


சகோதரரே இறைவனின் பொறுமையை குறித்து சொல்லபட்டுள்ள அதே வசனத்தில்"எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று  விரும்பி"  என்ற வார்த்தை இறைவனின் மன விருப்பத்தை நமக்கு தெரிவிக்கவில்லையா?  இரண்டு பாயண்டுகளையும் சேர்த்துதானே நாம் ஆராய வேண்டும்?

தேவனின் விருப்பம் நடக்காமல் போகுமா? அவ்வாறு தேவன்விரும்பியது நடக்காமல் போனால் அவர் அதைக்குறித்து கவலைப்பட மாட்டாரா?  

JOHN12 
 ///நியாய தீர்ப்பு இல்லை என்றோ, அனைவரும் பரலோகம் போய் விடுவார்கள் என்றோ கூறப்படவில்லை.///

அப்படி நானும் கூறவில்லையே நண்பரேஅவனவன் கிரியைக்கு தக்கபலன் நிச்சயம் உண்டு என்று  வசனம் திரும்ப திரும்ப சொல்கிறது. அதை யாரும் மாற்ற முடியாது.  இங்கு  என்னுடய கேள்வி சுமார்  ஐம்பது  அறுபது வருஷம்  ஒரு மனுஷன் செய்யும்  பாவத்துக்கு  நித்திய அக்கினி கடலில் போட்டு வாட்டுவது குறித்துதான்.  

தீமோ 2:4 எல்லாமனுஷரும் இரட்சிக்கப் படவும்சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவரா யிருக்கிறார். 

எல்லோரும்  இரட்சிப்படையவேண்டும்  என்பது இறைவனின் சித்தமாக   இருக்கும்போது, துன்மார்க்கனை  அக்கினி கடலில்  தள்ளப்படுவது அவருடைய சித்தம் என்றோ  விருப்பம் என்றோ சொல்ல முடியாது. காரணம் சாகிவனின் சாவை நான் விரும்பில்லை என்று இறைவன் சொல்கிறார்

சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.(எசே 18:32)

இறைவனின் சித்தமும் விருப்பமும் எல்லோரையும் மீட்டுவிடவேண்டும் என்று இருக்க , அவரது  சித்தத்தை மீறி எதுவும் இங்கு  நடக்க வாய்ப்பிருக்கிறதா?

 __________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

தேவன் முன்குறித்தபடி எல்லாம் நிச்சயம் நடக்கும் சகோதரரே..

தேவனும் தம்முடைய இம்மாதிரியான முன் குறிப்பில் பங்காற்றுகிறார்.

 ஆனால் ஒரு கடினமான புரிதலை நாம் விளங்கிகொள்ளவேண்டி இருக்கிறது.. தேவன் நம்மை ரோபோக்களை போல ஆத்மா இல்லாமல் படைக்கவில்லை.நமக்கு சிறப்பான சுதந்திரம் உண்டு. சுய சித்தத்தையோ அல்லது தேவசித்தத்தையோ நம் விருப்படி நம் வாழ்வில் தேவன் அனுமதிக்கிறார்..

நரசைதியை நம்மிடையே கேட்க விருப்பமில்லாதவர்கள் அநேகர் உண்டு..

ஆனாலும் தேவ திட்டத்தின் படி கேட்போருக்கும்,கேலாதவருக்கும் கூட சாட்சியாக சுவிசேஷம் அறிவிக்கப்படும்.பின்பு முடிவு வரும்.. நன்மை செய்தாலும்,தீமை செய்தாலும் அதன் பலனை நாம்

அனுபவிப்போம் என வேதமும் கூறுகிறது.. தேவன் தாங்கள் கூறியபடியே நீடியபொறுமை உள்ளவராக தாம் குறித்தநாள் வரைக்கும் இருக்க தேவன் நிர்ணயித்து தேவன் முன் குறித்தார்..

அந்த நாள் வெளியரங்கமாய் வேதத்தில் சொல்லபடவில்லை.. ஆனாலும் அந்த நாள் வரும்.அது நியாயத்தீர்ப்பின் நாள்..

அப்போது தான் தேவன் நல்லோர் மீதும்,தீயோர் மேலும் சூரியனை உதிக்க செய்தது முதல் அணைத்து காரியங்களும் விசாரிக்கப்படும்..

நம் தேவனாகிய இயேசு அப்போது நியாய தீர்ப்பின் சிம்மாசனத்தில் காணபடுகிரதினால். மஹா பிரதான ஆசாரியாரிடத்தில் (யேசுவிடதில்) நமக்காக பரிந்துபேசும் வேறொரு ஆசாரியர் நமக்கு காணபடுவதில்லை..

சாட்சிகளின் முன்நிலையில் நமது கிரியைகளே நமக்கு முன் செல்லவேண்டி இருக்கும்.. இரக்கம் அப்போதும் மேன்மை பாராட்டும்..இரக்கம் பெறுவோர் தேவனுடன் இளைபாறுதலில் பிரவேசிப்பர்.

 

தொடரும்...__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

உலகபிரகாரமான நீதிபதிகள்,. ஒருவனுக்கு மரணத்தை முன் குறிக்கும் போது சட்டத்தை ஆராய்ந்து அதன் படியான தீர்ப்பாக மரணத்தை எழுதக்கூடும்..ஆனால் எந்தநீதிபதியும் தீர்ப்பு எழுதும் முன் மரணத்தை ருசித்ததில்லை.


மரணவேதனையையும்,மரணத்தை பற்றியும் அறியாதவர்கள் தான் உலகபிரகாரமான நீதிபதிகள்..இவர்கள் குறைவுள்ள நீதிபதிகள்.தங்களின் தீர்ப்பு எவ்வாறானது என்று அறியாதவர்கள்..

சரீரமரணத்தை உறக்கத்துடன் ஒப்பிடும் நம் தேவன், சாகவே சாவாய் என ஆதாம்,ஏவாளை சபித்திருக்கும் போது அவர் மரணத்தில் பிரவேசிதிருக்கவில்லை..


அவ்வாறு தேவனின் சாபம் ஆதிபெற்றோருக்கு கொடுக்கப்படும்போது,தேவன் தம்மையும் மரணத்தை ருசிபார்கும்படி அப்போதே முன்குறித்தார்..ஆகவே நித்திய மரணத்தை நியமிக்கும் முன்  தேவன் தம் ஆள் தத்துவத்தையும் மரணத்திற்கு முன்குறித்தார்..அதனால் தான்  தேவதீர்ப்பு குறைவற்றது..அவர் நீதியின் சூரியன் என வேதமும் கூறுகிறது..


மரணத்தை ருசிபார்த்த பின்னாக நமக்கு நியாயத்தீர்ப்பு எழுத நியாயாசனத்தில் அமரும்படிக்கு பிதாவானவர் குமாரனுக்கு சகலதையும் கீழ்படுத்தினார்..

குமாரன் கூறபோகிற அவரது வசனத்தின் அடிப்படியிலான தீர்ப்பு அதனால் தான் குறைவற்றிருக்கும்..நாமை போன்ற பாடு நிறைந்த வாழ்க்கையையும் அவர் கடந்து சென்றாரே!!!

(இது என்னுடைய தியானத்தின் போது தேவன் மரித்த காரணங்களில் ஒன்றாக எனக்கு ரட்சிப்பின் திட்டத்தை குறித்து அறிகிற அறிவிற்காக வெளிபடுத்தப்பட்ட காரியம்..)

 __________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

உலகபிரகாரமான நீதிபதிகள்,. ஒருவனுக்கு மரணத்தை முன் குறிக்கும் போது சட்டத்தை ஆராய்ந்து அதன் படியான தீர்ப்பாக மரணத்தை எழுதக்கூடும்..ஆனால் எந்தநீதிபதியும் தீர்ப்பு எழுதும் முன் மரணத்தை ருசித்ததில்லை.

மரணவேதனையையும்,மரணத்தை பற்றியும் அறியாதவர்கள் தான் உலகபிரகாரமான நீதிபதிகள்..இவர்கள் குறைவுள்ள நீதிபதிகள்.தங்களின் தீர்ப்பு எவ்வாறானது என்று அறியாதவர்கள்..

சரீரமரணத்தை உறக்கத்துடன் ஒப்பிடும் நம் தேவன், சாகவே சாவாய் என ஆதாம்,ஏவாளை சபித்திருக்கும் போது அவர் மரணத்தில் பிரவேசிதிருக்கவில்லை..


அவ்வாறு தேவனின் சாபம் ஆதிபெற்றோருக்கு கொடுக்கப்படும்போது,தேவன் தம்மையும் மரணத்தை ருசிபார்கும்படி அப்போதே முன்குறித்தார்..ஆகவே நித்திய மரணத்தை நியமிக்கும் முன்  தேவன் தம் ஆள் தத்துவத்தையும் மரணத்திற்கு முன்குறித்தார்..அதனால் தான்  தேவதீர்ப்பு குறைவற்றது..அவர் நீதியின் சூரியன் என வேதமும் கூறுகிறது..


மரணத்தை ருசிபார்த்த பின்னாக நமக்கு நியாயத்தீர்ப்பு எழுத நியாயாசனத்தில் அமரும்படிக்கு பிதாவானவர் குமாரனுக்கு சகலதையும் கீழ்படுத்தினார்..

குமாரன் கூறபோகிற அவரது வசனத்தின் அடிப்படியிலான தீர்ப்பு அதனால் தான் குறைவற்றிருக்கும்..நாமை போன்ற பாடு நிறைந்த வாழ்க்கையையும் அவர் கடந்து சென்றாரே!!!

(இது என்னுடைய தியானத்தின் போது தேவன் மரித்த காரணங்களில் ஒன்றாக எனக்கு ரட்சிப்பின் திட்டத்தை குறித்து அறிகிற அறிவிற்காக வெளிபடுத்தப்பட்ட காரியம்..) 


நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.ஆதி 3:19
 

"பாவம் செய்த மானிடனுக்கு வேதனையையும் மரணத்தையும்  தீர்ப்பாக கொடுத்த இறைவன், மாம்ச மரணம் எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ள தானே மாம்சமாகி  மரணத்தை ருசிபார்த்தார்"  என்பது  உண்மையில் ஒரு அருமையான வெளிப்பாடு. சுவிசேஷம்  சொல்லும் நண்பர்களுக்கு  விளக்கம் கொடுக்க இக்கருத்து பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை ஐயா.
 
அனால் இந்த கருத்தை  தொடர்ந்து இன்னொரு  கேள்வியும் எழுகிறதே.
 
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்
 
மேலேயுள்ள  வசனத்தை இறுதி தீர்ப்பாக எழுதியவரும்  இறைவன் தானே. இந்த தீர்ப்புக்கும்  தங்களின் மேலேயுள்ள  கருத்து பொருந்துமா?  எதில் எதில் எவ்வளவு வேதனை உண்டு என்ற அறியாதவரா இறைவன்?   
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

தன்னை வணங்காதவர்களை,சித்தம் செய்யாதவர்களை சங்கரிக்க ஒரு மனிதனாகிய ராஜா சில வாய்ப்புகள் அளித்த பிறகு அக்கினி சூளையை ஏற்படுத்த முடியும் என்றால் தேவனால் ஏன் முடியாது.. தேவனின் சதுருக்களுகாக ஆயதப்படுதப்பட்டது தான் அக்கினி கடல்.
விளக்கத்தை விரைவில் தெளிவாய் தருகிறேன் சகோதரரே...-- Edited by JOHN12 on Monday 20th of February 2012 04:10:16 PM

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard