இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆச்சர்யமான இரக்கம்!!!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
ஆச்சர்யமான இரக்கம்!!!
Permalink  
 


சகோதரரே!!!

நம் தேவன் அக்கினி கடலை துன்மார்கனுக்கு ஏற்படுதினபடியினால் நிச்சயமாக அதின் வேதனைகள் அவருக்கு தெரியும்.

அக்கினிகடல் தேவமகிமை அற்ற இடம்.அங்கு யாரும் தானாக போக விரும்புகிறதில்லை.ஆகவே தான் இறுதி நாளில் 'தள்ளபடுகிறார்கள்' என்ற பத்தோடு வேதத்தில் உள்ளது..

தேவன் துன்மார்கருக்கு அக்கினி கடலை எவ்வாறு அதின் வாதிப்புகள் தெரியாமல் முன்க்ரிக்ககூடும் என கேட்பீர்களானால்..

தேவன் சாகவே சாகும் நிலையில் பிரவேசிக்காமல்,சாவு என குறிப்பிடும் ஒரே நிலைக்கு மாத்திரம் பிரவேசித்தார். நமக்காக மரணவேதனைகளின் உச்சத்தை அனுபவித்தார்,கொலையுண்டார்.

அவர் ஒரே தரம் மரித்தார் என வேதமும் சாட்சி தருகிறது.

ஆகவே இரண்டாம் தரம் மரிக்கவில்லை.நித்திய நிந்தையும் அனுபவிக்கவில்லை.

மரணம் அனைத்து மனிதர்களுக்கும் முன்குரிக்கபட்டது.ஆகவே கர்த்தரும் மனிதனானபோது அதன் வழியே பிரவேசித்தார்.பூமின் இதயத்தில் மூன்று நாள் இருந்தார்..

ஆனால் அக்கினிகடல் பிசாசிற்கும்,அவன் தூதர்களுக்குமே முன்குறிக்கபட்டது..

அவனை பின்பற்றுகிற மனிதர்கள் அவனது தூதர்களுக்கான பங்கை அடைகிறார்கள்.அக்கின கடலில் தள்ளபடுகிறார்கள்..

வேதத்தில் பிசாசிற்கு தேவன் மீட்பை முன்குறிக்கவில்லை என அறிய முடிகிறது.அவ்வாறு முன்குறிதிருந்தால் துன்மார்கரான மனிதர்கள் பிசாசிற்கு ஏற்படுத்தின அக்கினி கடலில் பங்கடைய அவசியமில்லையே..

அதுவுமில்லாமல் தேவன் தமக்கே நித்திய நிந்தை முன்குரிபார் என்றால் நம்மை நித்திய ஜீவனுக்கு தெரிந்து கொள்ள அவசியம் இல்லையே..நித்திய ஜீவன் தேவனை அறிகிற அறிவு என்று சொல்ல பட்டுள்ளதே. தேவன் இல்லாத நிலையில் தேவனை அறிகிற அறிவினால் என்ன பிரயோஜனம் இருக்க முடியும்.

தேவன் தம்மை நித்திய நிந்தைக்குள் பிரவேசிக்க செய்வார் என்றால் நம்மை நியாயம் தீர்ப்பது வீணாய் இருக்குமே..

தேவன் நீதயுள்ள நியாதிபதி.

ஆகவே தேவன் நித்திய நின்தையாகிய அக்கினி கடலுக்குள் பிரவேசிததில்லை,பிரவேசிக்க போகிரதுமில்லை என நம் சுதந்திரத்தில் இருந்து கூறலாம்.

ஆனால் பரம குயவனான தேவனுக்கு அழிவிற்கு முன் குறிக்க பட்ட பாத்திரங்களின் வேதனை தெரிந்திருக்கிரபடியினால் தான் நாம் வேதனைகளை வேதத்தில் படிக்கபடுகிறது..

அக்கினி கடல் என்பது நித்திய வாதிப்பு..ஆகவே அதனை நித்திய நிந்தை என வேதமும் கூறுகிறது.அது தேவ மகிமையட்ற முறுமுறுப்பின் இடம்.ஆகவே தேவன் அங்கே வேதனை அனுபவித்ததில்லை என்பது திண்ணம்.

சரி சகோதரரே இப்போது நான் அறிந்த இன்னொரு அக்கினி கடலை குறித்த காரியத்தையும் தருகிறேன்..-- Edited by JOHN12 on Wednesday 22nd of February 2012 11:18:25 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரரே!!!

ராஜாதி ராஜன் என தேவானால் சொல்லப்பட்ட நேபுகாத்நேச்சார் காலத்தில் அவனை தொழுகிரவர்களை உயிரோடு வைத்து மற்றவர்களை கொல்லும்படி கட்டளை பிறபிக்கபட்டது.

எசேக்கியேல் 26:7 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார்என்னும் பாபிலோன் ராஜாவை ...

அப்போது சாத்ராக்,மேஷாக்,அபெத்நேகோ என்கிறவர்கள் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலியவை வாசிக்கப்படும்போது நேபுகாத் நேசரை தொழவில்லை என்பது நேபுகாத் நேசாருக்கு அறிவிக்கப்பட்டது.

அவன் கோபமூண்டு அந்த மூன்று ஞானிகளையும் அலைதுவரசொல்லி விசாரித்து மீண்டும் பணியுமாறு அவகாசம் கொடுத்தான் பின்வருமாறு!!

தானியேல் 3:15 இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.


இம்மூன்று நபர்களும் கொன்று போட்டாலும் தோழமாடோம் என தெளிவாய் கூறி விட்டார்கள்!!

இவ்வாறாய் ராஜாவிற்கு பிரதியுதிரம் தந்ததினால் தண்டனைக்கு குறிக்கப்பட்ட வெப்பத்தை காட்டிலும் 7 மடங்கு  ராஜ கட்டளையின் படிசூளைசூடாக்கபட்டது..

 

நெபுகத்நேசாருக்கு தம்முடையவர்களை தப்புவிக்கும் தேவன் அந்த மூன்று ஞானிகளை தப்புவித்தார்..

இவர்களும் கட்டுண்டவர்களாய் சூளையின் நடுவில் போடபட்டவர்களை தேவகுமாரனின் சயாளுல்லவர

விடுவித்தார்.

சரி..

இறுதி காலத்தில் வேதம் இன்னொரு ராஜாதி ராஜனை கூறுகிறது..யார் இவர்..நம் தேவனாகிய இயேசு தான்..

I தீமோத்தேயு 6:15 அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

வெளி 17:14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும்ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

வெளி 19:16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

இவருக்கு முந்தின ஒரு உலக பிரகாரமான ராஜ தம்மை வணங்காதவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்து அக்கினி சூளையை ஏற்படுத்த முடியும் என்றால் நம் தேவனாகிய கர்த்தரால் துன்மார்கனுக்கு நீடிய பொறுமை பாராட்டி,அக்கினி கடலை நியமிக்க முடியும் அல்லவா?!

நேபுகாத்நேச்சர் கைக்கு தப்புவிக்க அன்று அவனை விட பெரிய தேவன் இருந்தார்..
ஆனால் பிசாசுடன் வாழும் நாட்களில் கைகோர்த்து திரிந்த துன்மார்க்கரை நம் இயேசு ராஜாதி ராஜனின் கைக்கு விடுவிக்க அவரை விட பெரிவர் யாரும் இல்லை.துன்மார்கரின் பிதாவாகிய பிசாசு முதலாவதாக அல்லவா அக்கினி கடலில் தள்ளப்பட போகிறான்!!

வாழ்நாளை துன்மார்க்கத்தில் களித்துபோட்டு,இரட்சிபடையாமல் மரிக்கும் எந்த மனிதனும் பிசாசின் தூதர்களுக்கும்,அவனை சேர்ந்த துன்மார்கராகிய தேவனுடைய சத்ருக்கள் யாவரும் அக்கினி கடலில் பங்கடைவார்கள்.

தேவனுக்கு மகிமை உண்டாகுக !!!-- Edited by JOHN12 on Wednesday 22nd of February 2012 11:18:52 AM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

வாழ்நாளை துன்மார்க்கத்தில் களித்துபோட்டு,இரட்சிபடையாமல் மரிக்கும் எந்த மனிதனும் பிசாசின் தூதர்களுக்கும்,அவனை சேர்ந்த துன்மார்கராகிய தேவனுடைய சத்ருக்கள் யாவரும் அக்கினி கடலில் பங்கடைவார்கள்.


 தங்கள் விளக்கங்களுக்கு மிக்க  நன்றி சகோதரரே,

இறைவனின் ஆச்சர்யமான இரக்கத்தை பற்றி பேச ஆரம்பிக்கபட்ட இதை திரி, இறுதியில்  அக்கினிக் கடலில் நித்திய வேதனைக்கு நேராக வந்து முடிவடைந்து இருப்பது வருத்தமாக இருக்கிறது.

 
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
.
பயப்படுகிவர்களும் பொய்யர்களும் கூட இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலில் பங்கடைவார்கள் என்று வசனம் சொல்கிறது. ஆனால் எத்தனை பேர்,  இறைவனைதவிர வேறு யாருக்கும் /எதற்கும் பயப்படாமல், பொய் சொல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.    
  
 


-- Edited by Nesan on Wednesday 22nd of February 2012 03:05:10 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

==================================================

வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

===================================================

 

சகோ : இறைநேசன் சொல்வதை தான் நானும் சொல்கின்றேன்

மேலே சொல்ல பட்ட வசனத்தின் படி பார்த்தால் தேவன் மட்டும் தான் பரலோகத்தில் இருப்பார் மனிதர்கள் எல்லாம் நரகத்திற்கு தான் போவார்கள் என்று எண்ணுகின்றேன்

 

அப்படி இல்லை என்றால் சகோ : JOHN12  போல ஒரு சிலரே போவார்கள் என்று எண்ணுகின்றேன்..

 

தேவனுடைய வார்த்தையின் பாடி நானும் முழுமையாக வாழ தான் நினைக்கின்றேன் ஆனால் என்னால் நான் நல்லவன் என்று சொல்ல முடியவில்லை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷயத்தில் விழுந்து விழுந்து எழுந்திர்க்கின்றேன்..........-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 22nd of February 2012 08:11:59 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

பந்தய பொருளை நோக்கி நானும் பெற்றுக்கொள்ளும் நிச்சயதோடே
ஓடுகிறேன் சகோதரரே!! நீங்கள் கூறுவதை கிண்டலை போல் நான் எடுத்துகொள்வதில்லை..பதைய பொருள் அல்லவா!!

பிலிப்பியர் 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
அதை எக்காரனதிர்க்காகவும்  விட்டுவிட்ட மனம் இல்லை.

தான் ஓடுகிறது என்னதிற்காக என்பதை அறிந்தவன் மட்டுமே,அதின் மேன்மையை அறிவான்..உலக கோப்பை கால்பந்து போல..

I கொரிந்தியர் 9:25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

மேன்மையை அறிந்தவன் எளிதாக விட்டுகொடுபானா என்ன...

எனக்கும் தினமும் சோதனைகள் வரும் தான்.ஆனால் நமக்கெல்லாம் இயேசுவின் ரத்தம் தான் ஜெயம்..

பெற்றுக்கொள்ளும் நிச்சயத்தோடு சோர்ந்து போகாமல் தேவனுக்குள் திடன் கொண்டு ஓடுங்கள்..


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

தேவனுடைய வார்த்தையின் பாடி நானும் முழுமையாக வாழ தான் நினைக்கின்றேன் ஆனால் என்னால் நான் நல்லவன் என்று சொல்ல முடியவில்லை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷயத்தில் விழுந்து விழுந்து எழுந்திர்க்கின்றேன்.......... 


தேவனுக்குரிய காரியங்களை நிறைவேற்றுகையில் நாம் எந்தனை முறை விழுந்தாலும் நமது தேவன் நம்மை தூக்கிவிட்டு பெலன்  கொடுத்து நடத்த வல்லவராயிருக்கிறார். 

II நாளாகமம் 15:7 நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.
எரேமியா 31:16  உன் கிரியைக்குப் பலன் உண்டென்று; கர்த்தர் சொல்லுகிறார்

மேலும் இரண்டாம் மரணத்தை குறித்த சொல்லபட்டுள்ள வசனங்களை  நாம் ஆராய்ந்து பார்க்கையில் ஒன்றே  ஒன்றை  மாத்திரம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இரட்சிப்பும் மீட்பும் எந்த ஒரு  மனுஷனாலோ அல்லது சுய கிரியைகலாலோ கூடுவது அல்ல! அது தேவனால் மட்டுமே கூடும்!

மாற்கு 10:26 அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்.

27. இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
 
இதன் இணை வசனம்தான்  
 
சகரியா 4:6  செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
 
எனவே இங்கு எதுவும் மனுஷனால் கூடுவது அல்ல! அவரவர் ரட்சிப்பே அவரவருக்கு கேள்விக்குறியாகவும் கர்த்தரின் இறுதி நியாயத்தீர்ப்புக்கு
எதுவாகவும் இருக்கும்பட்சத்தில்.  "நான் பெரியவன், நீ சிறியவன்" "நான் நல்லவன் அவன் கெட்டவன்"  என்று ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டு
பிறரை நியாயம் தீர்த்துக்கொண்டு  இருக்காமல், கலப்பையில் கை  வைத்திட்ட நாம் பின்னால் திரும்பி பார்க்காமல் அக்கம் பக்கம் பார்த்து நேரத்தை வீணடிக்காமல்  சகோ. ஜான்12 சொல்வதுபோல் கர்த்தர் காட்டிய வழியில் பந்தயபொருளை நோக்கி ஓடுவோம். மற்றதை தேவன் கையில் விட்டுவிடுவோம்!
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard