எழுதிவந்த நான் இந்த தளத்தை ஆரம்பித்த நோக்கம் என்பது மிகவும் தெளிவானது. அதாவது உலக சிந்தனைகளிலும் நாளையைபற்றிய கவலைகளிலும் மனதை போட்டு குழப்பாமல், தேவையற்ற காரியங்களில் மனதை அலையவிட்டு பாவ சிந்தனைகள் இருதயத்தில் ஒட்டிகொள்ளாமல் தவிர்க்கவும், நமக்கு கிடைக்கும் உபரி நேரங்களை வீணே செலவழிக்காமல் இறைவனை பற்றிய சிந்தனையிலும் அவர் அருளிய வேதத்திலும் தியானமாக இருக்க வேண்டும் என்ற ஒரே
நோக்கம்தான்.
சங் 1:1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
என்ற வசனத்தை அடிப்படையாக கொண்டதே நமது நோக்கம். இங்கு கருத்துக்களை சுதந்திரமாக எழுதலாம் மனுஷர்களை நல்வழி படுத்தக்கூடிய இறைவனை பற்றிய மற்றும் பொதுவான எல்லா வித கருத்துக்களும் அனுமதிக்கபட்டாலும் இடரலை உண்டாக்கும் செய்திகள் மனுஷர்களை
பாவம் செய்ய தூண்டும் பதிவுகள் மாத்திரம் அனுமதிக்கபட மாட்டாது.
தளத்தின் விசுவாசம்!
தளத்தின் விசுவாசம் என்று தனிப்பட்ட முறையில் சொல்வதற்கு எதுவும் இல்லை. வேதமே நமது விசுவாசம். "இறைவன் ஒருவரே அவர் ஈடு இணை இல்லாதவர்" என்பதை நாங்கள் உறுதியாக விசுவாசிக்கிறோம். தேவகுமாரனாகிய இயேசுவும் சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரையும் தேவனால் அனுப்பபட்ட தேவனின் ஆள்த்துவங்கள்
என்று விசுவாசிக்கிறோம்.
யோ 8:42இயேசு அவர்களை நோக்கி: ........... நான் சுயமாய் வரவில்லை, அவரே (தேவனே) என்னை அனுப்பினார். யோ 14:26என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
இவர்களை அனுப்பிய பிதா எல்லோரிலும் மிகப் பெரியவர் என்றும் விசுவாசிக்கிறோம்!
யோ 10:29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்;
யோ 14:28என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். யோ 13:16 ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
வசனத்தின் அடிப்படையில் எங்கள் விசுவாசம் இவ்வாறு இருந்தாலும் இங்கு எத்த விசுவாசத்தில் உள்ளவர்களும் கருத்துக்களை பதிவதற்கு தடை செய்வதில்லை. அவரவர் அவரவர் விசுவாசத்தை வசன அடிப்படையில் பதிவிட்டு வைக்கலாம். விளக்கம் வேண்டியவர்கள் கேள்விகளை கேட்டு உண்மையை அறிந்துகொள்ளலாம். நாங்களும் அனேக கேள்விகளுக்கு பின்னர், இது குறித்து பல்வேறு நிலைகளில் கலந்துஆலோசித்து ஆராய்ந்து
இறுதியில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம், இந்த கருத்தை விசுவாசிக்கிறோம். எனவே, எவரெவருக்கு வசனத்தின் அடிப்படையில் எது சரியாக தெரிகிறதோ அதை பின்பற்றலாம். மற்றபடி இதுதான் என்று திட்டமாக சொல்வதற்கு எதுவும் இல்லை.