இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவைவிட பிதாவாகிய தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இயேசுவைவிட பிதாவாகிய தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?
Permalink Closed


மிக தெளிவாக பல வசன ஆதாரங்களோடு எழுதப்பட்டுள்ள இந்த கருத்தை ஏற்பதற்கு மனமில்லாமல் இருப்போரை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆகினும் தேவனை பற்றிய என்னுடைய அறிதலை இங்கு பதிவிடவெண்டியது அவசியமாகிறது. இருதயம் திறக்கபட்டோர் நிச்சயம் ஏற்பார்கள். 
 
 
தேவனின் மகத்துவம் பயங்கரமானது! 
 
உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் 
பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்;
 
யோபு 37:22 ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமானமகத்துவமுண்டு.
 
 
அவருடைய மகத்துவத்தை  உத்தரிக்க கூடாது! 
யோபு 31:23 தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
 
தேவனின் மகத்துவம் ஆராய்ந்து முடியாதது!    


யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது;
 
சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
 
 
தேவனின் மகத்துவம் ஒன்றா இரண்டா? 
 
அவரின் பரிசுத்தத்தில் மகத்துவம்: 
யாத்திராகமம் 15:11 கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும்,
 
அவருடைய கிருபையில் மகத்துவம்: 
எண்ணாகமம் 14:19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும்,
 
 
அவரின் செயலில் மகத்துவம் 
 
சங்கீதம் 111:3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது
 
அவரது உடுப்பில் மகத்துவம் 
சாயா 63:1 ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும்
 
அவரின் அடையாளங்களில் மகத்துவம்: 
தானியேல் 4:3 அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும்,
 
அவருடைய புயத்தில் மகத்துவம்:  
யாத்திராகமம் 15:16 பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.
 
அவருடைய வேதத்தில் மகத்துவம்: 
ஓசியா 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; 
 
அவர் நாமமே மகத்துவமானது 
மல்கியா 1:11 சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; 
 
இப்படி அவருடைய அனேக மகத்துவங்களில் சிலவற்றை சிலருக்கு காண்பித்திருக்கலாம்! ஆகினும் "அவர் ஆராய்ந்து முடியாத மகத்துவம் உள்ளவர்" என்று வேதம் தெளிவாக சொல்லும் பட்சத்தில், அவரை ஆராய்ந்து கண்டுவிட்டதுவிட்டோம்  அவர் மூவர்தான் என்று வேதம் சொல்லாத திரித்துவ கருத்தை நாம்  நம்ப  வேண்டிய அவசியம் இல்லை.   
 
தேவனின் மூன்று ஆள்த்துவத்தை அறிந்துவிட்டால் அவர் மூவர்தான் என்று முடிவுக்கு வந்து அவரின் அளவில்லா ஆவியை மட்டுபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை. 
 
அவர் மகத்துவத்தை ஆராய முடியாது" என்ற ஒரே வசனமே என்னுடைய கருத்தாகிய "அவர் மூன்றுக்கு மேற்ப்பட்ட ஆள்தத்துவம்  உள்ளவராக இருக்க முடியும் என்பதற்கும்  நான் வசன ஆதாரம் இல்லாமல் இங்கு பேசவில்லை  என்பதற்கும்  அத்தாட்சி. 
 
 
கீழேயுள்ள ஒரே வசனத்தை சுட்டிகாட்டி தேவன் திரித்துவமானவர் என்று விவாதிக்கும் சகோதரர்களுக்கு 
 
I யோவான் 5:7 [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 
 
என்று அடைப்பக்குரியில் போட்டிருக்கும் இந்த வசனம் பின்னாளில் சேர்க்கபப்ட்டது என்று சொல்கிறார்கள். ஆகினும்ம் காரணமில்லாமல் ஆவியானவர் எந்த வசனத்தையும் வேதத்துடன் சேர்க்க அனுமதிக்க மாட்டார் என்று நான் கருதுவதாலும், தேவன் " பிதா குமாரன் பரிசுத்த ஆவி" என்னும் மூவராய்  இருப்பதை நானும் அறிவேன் என்பதாலும் அந்த வசனத்தை நான் ஏற்கிறேன். 
 
ஆனால் இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில், இந்த ஒருவராய் இருக்கும் மூவரும் பரலோகத்தில் யாருக்கு முன்பாக சாட்சியிடுகிறார்கள் என்பதே.
 
"சாட்சி" என்பது ஒரு நீதிபதிக்கு முன்னால் சொல்லபடுவது. நீதிபதி/நியாயாதிபதி  இல்லாத சாட்சியினால் பயனேதும் இல்லை. அதுபோல் இங்கு  "பிதா, வார்த்தையாகிய குமாரன்/ பரிசுத்த ஆவி" என்று ஒருவராய் இருக்கும் மூவரும் "சர்வலோக நியாயாதிபதியாகிய ஒருவரிடம் சாட்சியிடுகிறார்கள். அவரை பற்றி வேதம் இவ்வாறு சொல்கிறது     
 
I தீமோத்தேயு 6:16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
 
எனவே தேவத்துவத்தை மூவருக்குள் அடக்கவேண்டாம் அடக்க கூடாது என்பது என்னுடைய உறுதியான கருத்து. 
 


-- Edited by SUNDAR on Wednesday 15th of January 2014 03:05:09 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: இயேசுவைவிட பிதாவாகிய தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா?
Permalink Closed


 //தேவனின் 'மகத்துவம்' ஒன்றா இரண்டா?// 

ஆள் தத்துவங்களின் எண்ணிக்கையை கேட்டால், சகோதரர் அவர்கள் தண்ணீர்களை எண்ணுவது போல மகத்துவத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார் போலும்! தேவன் என வேதம் குறிப்பிடுவது மூன்று ஆட்களை மாத்திரமே என்பதே. 'மகத்துவம்' என்கிற பதம் 'great' 'glory' 'wonder' 'power ' என்ற பொருளில்  வருகிற பதம். இந்த பதத்தினைக் கொண்டு எப்படி ஆத்ததுவங்களை எண்ணிக்கைப்படுத்துவீர்கள்!?! ஒவ்வொரு ஆள்தத்துவங்களிலும் இத்தகைய ஆராய முடியாத மகதுவங்கள் நிறைந்திருக்கும் போது.. 

ஆள் தத்துவங்களின் எண்ணிக்கை என்பது மூன்று. (ஒரு சகோதரர் தேவனின் கண்களை எண்ணிக்கைபடுத்தி ஏழு ஆள்தத்துவமாக கூறினார் என்பதும்  நினைவில் வருகிறது !!!)இதை அடிப்படையாய் கொண்டதே வேதம் காட்டும் பொது விசுவாசம் மற்றும் அதன் முதுகேழும்பாகிய மூல உபதேசம்.

இந்த அனேக ஆள்தத்துவத்தினால் தான் அன்பு சகோ.சுந்தர் அவர்களுக்கு 'பிதாவிற்கும் மேலான ஒரு சோதிகளின் பிதா','மறுசுழற்சி தத்துவங்கள்' போன்றவை தேவைபடிருக்கின்றன.

'அனேக ஆள்ததுவம் என்கிற மன நிலை' ஒரு ஸ்திரதன்மையற்ற ஆவிக்குரிய நிலை. இதற்க்கு ஆணிவேரான 'தெளிவின்மை' ஏற்பட காரணம். வேதத்தை வெறுமனே ஜெபமின்றி படிக்கிறது தான்!!! 

மேலும், 

பிசாசு தேவன் போல தேவாலயத்தில் அமரபோகிறவன் என வேதம் கூறுகிறது.அவனும் தன்னை மூன்று ஆள்தத்துவமாகவே காண்பிப்பான் என தீர்க்கதரிசனங்கள்  உள்ளன(ஆதி பாம்பு,கள்ள தீர்க்கதரிசி,மிருகம் என்பதாக). காரியம் இவ்வளவு தெளிவாய் இருக்கும் போது இன்னும் அதிகமாய் நான் ஆள் தத்துவங்களை அறிந்திருக்கிறேன் என சகோதரர் கூறுகிற காரியம் ஒரு குழப்பத்தின் விளைவாகவே இருக்க இயலும்.

நாம் தேவசாயலை பெற்றிருக்கிரபடியால் (ஆவி,ஆதுமா,சரீரம்) வேதம் கூறும் ஆள் தத்துவங்கள் மூன்று என விக்கினம் இல்லாமல் கூறுகிறேன்.

பரலோகத்தில் தேவன் மூன்று முறை பரிசுதர் என துதிக்கபடும் காரியமும் இதனையே காட்டுகின்றது !! 

ஒரு லேகியோன் அளவிற்கு ஒருவன் பிசாசினால் பிடிக்கபட்டிருந்தபோது கூட தேவகுமாரனை சரியாய் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால்  இன்றைக்கு விசுவாசிகளிடத்திலும் கூட நிலைமை அவ்வாறு இல்லை என்பது வெட்கதிற்குரியது !!! 

 

தேவ நாமத்திற்கு மகிமை உண்டாகுக!!__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

JOHN12 wrote:

 //தேவனின் 'மகத்துவம்' ஒன்றா இரண்டா?// 

ஆள் தத்துவங்களின் எண்ணிக்கையை கேட்டால், சகோதரர் அவர்கள் தண்ணீர்களை எண்ணுவது போல மகத்துவத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார் போலும்! தேவன் என வேதம் குறிப்பிடுவது மூன்று ஆட்களை மாத்திரமே என்பதே. 'மகத்துவம்' என்கிற பதம் 'great' 'glory' 'wonder' 'power ' என்ற பொருளில்  வருகிற பதம். இந்த பதத்தினைக் கொண்டு எப்படி ஆத்ததுவங்களை எண்ணிக்கைப்படுத்துவீர்கள்!?! ஒவ்வொரு ஆள்தத்துவங்களிலும் இத்தகைய ஆராய முடியாத மகதுவங்கள் நிறைந்திருக்கும் போது..///// 

 


 அன்பான சகோதரர் அவர்களே தேவனின் மகத்துவங்கள் பற்றிதான் வேதத்தில் அதிகம் எழுதப்பட்டுள்ளது "தேவனின் ஆள்த்துவங்கள்" என்றோ "திரித்துவம்" என்றோ வார்த்தைகள் வேதத்தில் எங்கும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை  எனவே தேவனின் மகத்துவங்களில் அவரின்  ஆள்ததத்துவங்களும்  அடக்கம் என்பதே எனது கருத்து . நான் அறிந்தவரை "ஒரே தேவன்தான் நமக்கு உண்டு. 

I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,
 
இதை  வேதம் சொல்வதோடு அவரை ஒரே ஆள்தத்துவம்தான் வேதாகமம் கூறுகிறது. தாங்கள் அறிந்து கொண்டதுபோல் தேவனின் ஆள்தத்துவங்களை "தேவன் இருவரே" அல்லது "தேவன் மூவரே" என்று கவுண்ட் பண்ணும் வசனம் எதுவும் இருந்தால் தாருங்கள் பின்னர் அவரின் ஆள்தத்துவங்களை நானும் எண்ணுகிறேன்.
 
JOHN12 wrote:
//பரலோகத்தில் தேவன் மூன்று முறை பரிசுதர் என துதிக்கபடும் காரியமும் இதனையே காட்டுகின்றது !! ////
 
"பரிசுத்தர்" என்று  மூன்று முறை சொன்னால் தேவன் மூவராகி விடுவாரா?  ஏன், ஒரே தேவனின் ஒப்பற்ற பரிசுத்தத்தை சொல்லை அவ்வார்த்தையை மும்முறை உபயோகிக்க கூடாதா?  
 
ஆதியாகமம் 46:2 அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபேயாக்கோபே என்று கூப்பிட்டார்
 
இவ்வாறு இருண்டுமுறை தேவனே சொல்லிவிட்டால் அங்கு இரண்டு யாக்கோபு இருந்தான் என்று எடுத்து கொள்வீர்களா?  
 
ஒரு சொல்லை உறுதிபடுத்தி சொல்ல அதை இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ அடுக்காக சொல்வது வழக்கம். நீதி மன்றங்களில் HONOUR/HONOUR/HONOUR என்று சொல்வதை கேட்டிருக்கிறோமே. 
 
JOHN12 wrote:
//நாம் தேவசாயலை பெற்றிருக்கிரபடியால் (ஆவி,ஆதுமா,சரீரம்) வேதம் கூறும் ஆள் தத்துவங்கள் மூன்று என விக்கினம் இல்லாமல் கூறுகிறேன்.//
 
தேவனுக்கு ஆவி /ஆத்துமா / சாயல் மூன்றும் உண்டு என்று வேதம் சொல்கிறது அதேபோலவே மனுஷனையும் படைத்தார். இதில் மூன்று ஆள்தத்துவம் எங்கு வருகிறது என்பது எனக்கு புரியவில்லை. 
 
திரித்துவம் என்பது மூல உபதேசம் கிடையாது. பவுலோ அல்லது இயேசுவுடன் இருந்த சீஷர்களோ திருத்துவத்தை போதிக்கவில்லை 
 
வேத வசனத்தின்படிதானே விசுவாசிக்கிறீர்கள்?
 
தேவன் ஒருவராய் இருக்கிறார் என்பதற்கு கீழ்கண்ட வசனம் சாட்சி! 
 
I தீமோத்தேயு 2:5 தேவன் ஒருவரே
 
தேவ குமாரனும் ஒருவரே. 
 
I தீமோத்தேயு 2:5 தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.  
 
ஆக தேவன், பிதாவும் குமாரனுமாகிய இரண்டுபேராக இருக்கிறார் என்பதற்கு இந்த வசனம் சாட்சி!  
 
யோவான் 8:16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
 
தேவன் மூன்றாய் இருக்கிறார் என்பதற்கு எந்த வசனம் சாட்சி? அடைப்பகுறிக்குள் போடப்பட்டு பின்னாளில் சேர்க்கபட்ட வசனம் ஏற்க்க முடியாது.  அப்படி அதை சுட்டிகாட்டினால் அவர்கள் யாருக்கு முன்பாக சாட்சியிடுகிறார்கள் எனப்தைபற்றிய விளக்கம் தேவை.  அதுவும் அங்கு "தேவன் மூவர்" என்றோ "திரித்துவர்" என்றோ சொல்லப்படவில்லை.
 
அதற்காக நான் பரிசுத்த ஆவியானவை இல்லை என்று சொல்கிறேன் என்று கருதவேண்டாம். "ஆவியான தேவன்" யார்? என்ற கண்டுபிடிப்பில்தான் தங்களுக்கும் எனக்கும் இடையே வேறுபாடு இருக்கிறதேயன்றி, ஆவியானவர் ஆள்த்துவமுள்ளவர் என்று நான் அறிந்துள்ளேன்.  
 
தேவன் மூன்றுவிதமாக செயல்பட்டால் அவர் மூவரின் கூட்டுதான் என்றும் அதற்க்கு மேல் எதுவும் இல்லை என்று கணக்குபோட்டுவிட அற்ப மனுஷராகிய நமக்கு  எந்த அருகதையும் இல்லை!    
 
JOHN12 wrote:
///ஆள் தத்துவங்களின் எண்ணிக்கை என்பது மூன்று.///
 
தங்களின் இந்த கண்டுபிடிப்புக்குதான் சரியான வசன ஆதாரம் தாருங்கள் என்று கேட்கிறேன். மூன்று என்று சொல்லும் வேத வசனம் எங்கே இருக்கிறது.  இல்லையெனில் பரவாயில்லை  தரிசனமாக தேவ வெளிப்பாடு இருந்தால்கூட சொல்லுங்கள்.   
 
JOHN12 wrote: 
(ஒரு சகோதரர் தேவனின் கண்களை எண்ணிக்கைபடுத்தி ஏழு ஆள்தத்துவமாக கூறினார் என்பதும்  நினைவில் வருகிறது !!!///
 
வேத புத்தகத்தில் "மூன்று" என்ற வார்த்தையைவிட உலகத்தை படைத்த 7 நாட்களில் இருந்து  வெளிப்படுத்தின விசேஷம் வரை 7 என்ற வார்த்தை   KJV mentions the word 391 times, and the NIV 341 times எழுதப்பட்டுள்ளது. 
 
அத்தோடு தேவன் ஏழு ஆவியை உடையவர் என்றும் வசனம் தெளிவாக சொல்கிறது. ஓரு ஆவியை உடைய  மனுஷன் ஒரு ஆள்தத்துவம் என்றால் ஏழு ஆவிகளை உடைய தேவன் ஏன் ஏழாக இருக்க கூடாது?   
 
நீங்கள் யூகத்தின் அடிப்படையில் வாதங்களை வைக்கும்போது நான் ஏன் அவ்வாறு யூகிக்ககூடாது?  
 
JOHN12 wrote:
///ஒரு லேகியோன் அளவிற்கு ஒருவன் பிசாசினால் பிடிக்கபட்டிருந்தபோது கூட தேவகுமாரனை சரியாய் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால்  இன்றைக்கு விசுவாசிகளிடத்திலும் கூட நிலைமை அவ்வாறு இல்லை என்பது வெட்கதிற்குரியது !!!///  
 
ஆம்! அந்த லேகியோனுக்கு தேவ குமாரனை அவர் "தேவனின் குமாரன்தான்" என்று சரியாக கண்டுபிடிக்க தெரிந்தது. அனால் பலருக்கு  அந்த குமாரனே "என் பிதா என்னிலும் பெரியவர்" என்று சொல்லியும் தேவனின் தன்மையையும் அவர் குமாரனின் தன்மையையும் தனித்து அறியமுடியாமல், இயேசுவின் வாத்தைகளையே ஏற்காமல் அவமதிப்பது வேதனைக்குரியதல்லவா?   
 
 
வேதத்தில் இருப்பதை உள்ளபடி எழுதுங்கள். எதோ சம்பந்தமில்லாத ஒன்றை காரணம் காட்டி உங்கள் அனுமானங்களை எழுத வேண்டாம்! அப்படி தங்கள் அனுமானங்களை நாங்கள் ஏற்க்க வேண்டும் என்றால் நான் சில வசனங்களை காரணம் காட்டி எழுதும் நான் அறிந்த உண்மைகளை நீங்கள் ஏற்க்க வேண்டும். அதை மட்டும் ஏன் ஏற்க்க மறுக்கிறீர்கள்? 
 
 
 தங்கள்போல கொள்கையுடைய பல தளங்களில் எழுதி என் கருத்துக்களை பலர் எதிர்த்ததால், எனக்குள்ள வெளிபாடுகள் என்னோடு போய்விட கூடாது என்று  இங்கு வந்து தனியே எழுதி வைக்கிறேன்.  
 
யோவான் 14:28 என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக்காண்தில்லை   
 
போன்ற நான் சொல்லும் நேரடி வசனங்கள்கூட தங்கள் போன்றவர்களுக்கு வசனமாகவே தெரியாவில்லை  
 
ஆனால் நீங்கள் சொல்லும் மறைமுகமான  காரியங்களான "திரித்துவம்" "மெல்கிசேதேக்கு தான் பரிசுத்த ஆவியானவர்" போன்ற கருத்துக்களை  நான் ஏற்க்கவேண்டும் என்று எதிர்பாப்பது எவ்விதத்தில் நியாயம்? அல்லது தாங்கள் அனுமானிப்ப்துபொல் நானும் அறிந்தோ அனுமாநித்தோ சொல்லும் "ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுபவரை" "ஜோதிகளின் பிதா" என்று நான் சொல்வதில் என்ன தவறு? 
 
உண்மை கருத்துக்களுக்கு என்றும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் அதற்காக நான் அறிந்த உண்மைகளை எழுதாமல் இருக்க முடியாதே. எனவே அன்பான சகோதரரே "ஒத்த கருத்துடையவர்கள் இருப்பது கடினம்" என்பது உண்மைதான் காரணம் எனக்கும் தங்களுக்கும் பல கருத்துக்களில் நேர் எதிர் முரண்பாடு உள்ளது. இந்த நிலையில்  நாம் எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதி விவாதம் பண்ணிக்கொண்டு நமது நேரத்தை வீணடிப்பதைவிட தங்கள் கருத்துக்களை தனி கட்டுரையாக பதிவிடுதலே சிறந்தது என்று நான் கருதுகிறேன். படிப்பவர்களுக்கு  ஆண்டவர் எது உண்மை என்று உணர்த்துகிறாரோ அதை எடுத்துகொள்ளட்டும்.
 
 
திரித்துவத்தை நான் எதிர்க்கவில்லை! ஆனால்  ஒருவரும் காணமுடியாத தேவனை மூவர் என்ற ஒரு குறு வட்டத்துக்குள் அடைக்க நினைப்பதையே நான் எதிர்க்கிறேன் அதை நான் ஒருகாலமும் ஏற்க்கப்போவது இல்லை. 

 

 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink Closed

 

அன்பு  சகோதரரே,
 
மீண்டும் தேவ சமூகத்தில் வைக்கபடாத அனேக படைப்புகள் உலவுகிறதை எண்ணி வருந்துகிறேன், இது சரியானது என காண்பிக்க முனையும் காரிய்ம் ஆபத்தானது. நீங்கள் மனமுடையக் கூடாது என்கிற  எண்ணமே அல்லாமல் தங்கள் பதிவுகளில் இடைபட மாட்டேன் என்று சொன்னதின் நோக்கம் வேறல்ல என்பதை தாங்கள் அறிவீர்களாக!!
 
தங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தால் புரடுதளுக்கும்,குழப்ப மன நிலைக்கும் இனி சமயம் வைக்காமல் போகும். ஆம் கர்த்தர் அவ்வாறே செய்வாராக!!!
 
1)//தேவனின் மகத்துவங்கள் பற்றிதான் வேதத்தில் அதிகம் எழுதப்பட்டுள்ளது "தேவனின் ஆள்த்துவங்கள்" என்றோ "திரித்துவம்" என்றோ வார்த்தைகள் வேதத்தில் எங்கும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை// 
வேதம் வல்லமையையும்,மாட்சிமையையும்,பயங்கரத்தையும்,மகிமையையும் ,பராகிராமத்தையும் பற்றிக் கூட தான் சொல்லுகிறது.. 
உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
மேலும்,என்னுடைய விசுவாசமானது தங்களால் தவறாய் புரியபட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. எனது விசுவாசமானது தேவன் ஒருவரே, பிதா தேவன்,குமாரன் தேவன்,பரிசுத்த ஆவி தேவன் என்பதே. இவர்கள் சமம். என்னுடைய இந்த விசுவாசம் திரித்துவம் என்று அறியப்பட்டுள்ளது. மூன்று தேவ என்பது நான் ஒருபோதும் கூறாத அபத்தம்!! 
 
//இதை  வேதம் சொல்வதோடு அவரை ஒரே ஆள்தத்துவம்தான் வேதாகமம் கூறுகிறது. தாங்கள் அறிந்து கொண்டதுபோல் தேவனின் ஆள்தத்துவங்களை "தேவன் இருவரே" அல்லது "தேவன் மூவரே" என்று கவுண்ட் பண்ணும் வசனம் எதுவும் இருந்தால் தாருங்கள் பின்னர் அவரின் ஆள்தத்துவங்களை நானும் எண்ணுகிறேன்.//
 
இது என்ன கொடுமை!! ஆள்ததுவம் என்பதை வேதம் கூறவில்லை என கூறிவிட்டு தேவன் என்பவர் ஒரே ஆள்தத்துவம் என்கிறீர்கள்!!! தாங்கள் விசுவாசத்தில் ஒரு குழப்பநிலையில் இருபதாக  அறிகிறேன். தங்களை பொறுத்தவரை பிதா தேவன். சோதிகளின் பிதா தான் THE ULTIMATE GOD. ஏசுவும்,பரிசுத்த ஆவியும் அவதாரங்கள். இன்னும் பெயரறியாத  தங்களுக்கு உண்டு ! இந்த அணைத்து ஆள்ததுவங்களும் தங்களின் பனி முடிந்தவுடன் சோதியில் கலந்துவிடுவார்கள். 
 
தேவனை அறிந்திருக்கிறேன் ஆனால் எந்த தேவன் என்று தான் தெரியவில்லை என்பதே உங்களின் இன்றைய நிலை. நீங்கள் தங்களின் குழப்பமான நிலையை போதுவிசுவாசமாக, மூல  உபதேசதின் முலாமை பூசி காட்ட முயல்வதே தங்கள் மீதான என்னுடைய இந்த எதிர்ப்பிற்கு காரணம். //
 
2)//பரலோகத்தில் தேவன் மூன்று முறை பரிசுதர் என துதிக்கபடும் காரியமும் இதனையே காட்டுகின்றது !! //// "பரிசுத்தர்" என்று  மூன்று முறை சொன்னால் தேவன் மூவராகி விடுவாரா?  ஏன், ஒரே தேவனின் ஒப்பற்ற பரிசுத்தத்தை சொல்லை அவ்வார்த்தையை மும்முறை உபயோகிக்க கூடாதா?   ஆதியாகமம் 46:2 அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார் 
இவ்வாறு இருண்டுமுறை தேவனே சொல்லிவிட்டால் அங்கு இரண்டு யாக்கோபு இருந்தான் என்று எடுத்து கொள்வீர்களா?  
 ஒரு சொல்லை உறுதிபடுத்தி சொல்ல அதை இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ அடுக்காக சொல்வது வழக்கம். நீதி மன்றங்களில் HONOUR/HONOUR/HONOUR என்று சொல்வதை கேட்டிருக்கிறோமே. ///
 
நான் எப்போது மூன்று தேவன் என்று சொன்னேன்!!! தேவன் ஒருவரே!! இந்த ஒருவர் என்பதை நீங்கள் மனித கண்ணோட்டத்துடன் பார்ப்பது தான் புரிதலின் பிழைக்கு காரணம். மேலும் யாக்கோபே, யாக்கோபே இரண்டு முறை கூப்டாலும் அவன் ஒருவனே.. தாங்கள் கூறுவது போல அவன் உண்மையாலுமே யாக்கோபு என தேவன் என் மூன்று முறை அழைத்து உறுதிபடுத்தவில்லை இரண்டு முறையே போதும் என விட்டுவிட்டார் என சகோதரர் எப்படி கருத இயலும்?
 
நீதி மன்றங்களில் ஒருமுறை, இரண்டு முறை மற்றும் நான்கு முறை கூட கூறி இருக்கிற திரைப்படங்களை நானும் கூட கண்டிருக்கிறேன். மூன்று முறை தான் அப்படி கூறவேண்டும் என்று RITம் சொல்லவில்லை. தங்கள் சார்பில் சொல்ல வேடுமானால் மரபின் படி 'டவாலி' மூன்று முறை குற்றவாளியையும்,சாட்சியையும் அழைப்பார்,ஏலம் விடுபவர்கள் மூன்று முறை கூறி ஏலம் விடுவர். 
இந்து கடவுள்களை மணி அடித்து எழுப்பி வேண்டுதல்கள் செய்வது போல உறங்காத தேவனை மூன்று முறை எப்போதும் எழுப்பி துதிக்க வேண்டியதாய் சர்வ காலத்திலும்  இருக்கிறதில்லை. மனிதன் எண்ணிகையை அறியும்அறிவை பெரும் முன்னமே ஆனால் இரவும் பகலும் படைக்கபட்டதில் இருந்து நான்கு ஜீவன்களும் இவாறு ஓயாமல் துதிப்பதாக வேதம் சொல்லுகிறது. 
 
வெளி 4:8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
 
ஏசாயா 6:3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 
 
பிதா பரிசுத்தர் என்பது எவ்வளவு சத்தியமோ, பிதாவை வெளிபடுதினவரான குமாரனும் பரிசுத்தர். இவர் 'உம்முடைய பரிசுத்தர்' என வேதத்தில் குறிக்கபட்டுள்ளவர். 
 
யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
 
லூக்கா 4:34 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
 
அப்போஸ்தலர் 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
 
அதே போல வேதம் பரிசுத்தமுள்ளவராக  தேவ ஆவியானவரை கூறுகிறது. வேதத்தில் மற்ற யாரையாகிலும் பரிசுத்தர் என தங்களால் காண்பிக்க இயலுமா? அனேக ஆள்ததுவங்களை முன்னிருத்துபவர் அல்லவா நீங்கள்!!! 
 
3) //தேவனுக்கு ஆவி /ஆத்துமா / சாயல் மூன்றும் உண்டு என்று வேதம் சொல்கிறது அதேபோலவே மனுஷனையும் படைத்தார். இதில் மூன்று ஆள்தத்துவம் எங்கு வருகிறது என்பது எனக்கு புரியவில்லை.//
 
உங்களின் உலகதுவாமான கற்பனைகளே தங்களுக்கு இவைகளை தங்களுக்கு புரியவொட்டாமல் இருக்கின்றன. கவனியுங்கள்!!
நீங்கள் ஒருவருக்கு மணவாளனாய் இருக்க இயலும்,ஒருவருக்கு குமாரனாயும் இருப்பீர்கள், மடியில் அமரும் பிள்ளைக்கு பிதாவாகவும் தங்களால் இருக்க இயலும், இந்த உறவுகளை உணரும் ஆத்துமாவும்(தனித்துவம்-individuality) தங்களுக்கு உண்டு!!மேலும்  தங்களுக்கும் மகிமையும் உண்டு!! (அந்த மகிமையை யாருக்கு செலுத்தவேண்டும் எனவும் வேதம் கூறுகிறது !!) மேலும் ஆவியும் (சுவாசமும் ) தங்களுக்கு உண்டு .  வேதனைகளை/ மகிழ்ச்சியை உணரும் சிந்தை /மனம்/ஆத்துமா தங்களுக்கு உண்டு .மற்றபடி சரீரம்/ சாயல் என்கிற விஷயத்தில் தங்கள் புரிதல் மிக சரியாகவே உள்ளது!! ஆகவே தேவனை போல நீங்களும்  ஒரு ஆள்!! 
 
ஆனால் தேவனைபோலல்லாது நம்மால் ஆவி,ஆத்துமா,சரீரம் ஒன்றினைனைந்தால் தான் ஒரு கிரியை செய்ய இயலும்.ஒன்றிணையாமல் ஒன்றும் செய்ய இயலாது!! இம்மூன்றின் தொகுபயனாகிய வெளிப்பாடே பாவத்தையும்,புண்ணியத்தையும் தேவ கற்பனையின்படி தீர்மானிக்கும்!! ஆனால் ஒரே தேவனோ ஒரே சமயத்தில் பிதாவாகவும்,குமாரனாகவும்,பரிசுத்த ஆவியாகவும் வெவேறான கிரியையை நிகழ்த்த இயலும்!!(இயேசுவின் ஞானஸ்தானம் ஒரு உதாரணம்). இது அவரால் படைக்கப்பட்ட நம்மால் ஆகாது. 
 
மேலும் குமாரன் மனிதராய் பிறக்க வேண்டுவது ஆதி தீர்மானம்,அதற்காக இயேசு மனிதராய் தான் பிறப்பார் என்பது ஆதாமை படிபதற்கு முன்னமே தேவனுக்கு தெரிந்திருந்தது என்பதை சகோதரர் விசுவாசிகிரீர்களா!! பாருங்கள் .
 
அப்போஸ்தலர் 15 :18. உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது.
 
மைதான் பெற்றிந்த தேவசாயலை கொண்டே தேவனும் பிறந்தார். ஆகவே தான் இயேசு ஒரு அடைக்கலான் குருவியாகவோ,ஆட்டுகுட்டியாகவோ,காளையாகவோ பிறக்காமல் மனிதராய் தீர்கதரிசனத்தின் படி பிறந்தார்!!
 
4) //திரித்துவம் என்பது மூல உபதேசம் கிடையாது. பவுலோ அல்லது இயேசுவுடன் இருந்த சீஷர்களோ திருத்துவத்தை போதிக்கவில்லை//
 
பின் அளவில்லாத எண்ணிகையிலான ஆள்ததுவங்கள் தான் மூலபதேசமோ!! எந்த உபதேசமும் பிதாவில் தான் முடியவேண்டும்!! பிதாவிற்கு மேலான இன்னொரு பிதாவிற்கு மேலல்ல. கர்த்தர் சொல்லிகொடுத்த ஜெபமும் இதையே சொல்லுகிறது!! எந்த அப்போஸ்தலனும் கூட இந்த காரியத்தில் தங்களை போன்ற துணிகரம் கொள்ளவில்லை என்பதற்கு தாங்களே சாட்சி!! ஒரே தேவனாக வேதம் போதிப்பது பிதாவையும்,அவரது வார்த்தையையும்,அவரது ஆவியையும் தவற வேறல்ல என்பது தங்களுக்கு தெரிந்திருக்ககடவது!! இதை 
தெளிவாய் புரிந்து கொள்ளவிடாத ஆராய்ச்சியின் போர்த்திகொள்ளும் எந்த ஒருகுழப்பமும் சத்துருவின் புரட்டும்தந்திரமல்லாமல் வேறல்ல!!
 
//தேவன் மூன்றாய் இருக்கிறார் என்பதற்கு எந்த வசனம் சாட்சி? அடைப்பகுறிக்குள் போடப்பட்டு பின்னாளில் சேர்க்கபட்ட வசனம் ஏற்க்க முடியாது.  அப்படி அதை சுட்டிகாட்டினால் அவர்கள் யாருக்கு முன்பாக சாட்சியிடுகிறார்கள் எனப்தைபற்றிய விளக்கம் தேவை.  அதுவும் அங்கு "தேவன் மூவர்" என்றோ "திரித்துவர்" என்றோ சொல்லப்படவில்லை.//
 
தேவன் மூன்றாய் இருக்கிறார் என எப்போதும் நான் சொல்லாத ஒன்றை தாங்கள் எவ்வாறு நான் கூறுவதாக கூறுகிறீர்கள். தேவன் ஒருவரே!!!
 
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தின் பொது பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராய் தாங்கள் ஒரே நிகழ்வில் காணலாம். 
 
மத்தேயு 3 :16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
அதே போல நீங்கள் அனேக ஆள்ததுவத்தின் நாமங்களின் ஞானஸ்தானம் பெறாமல் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் (நாமங்கள் அல்ல!!) ஞானஸ்நானம் பெற்றிறுக்ககூடும்!!
 
 அவ்வாறிருக்க தங்களால் எப்படி மூல உபதேசம் என்பது பிதாவின் பிதா ,அனேக ஆள்தத்துவம் தான் எனவும், பிதா குமாரன்,பரிசுத்த ஆவியாகிய தேவன் அல்ல என்றும் அனுமானிக்க முடிகிறது என்பதை விளக்கவும்.
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
 
6)//தேவன் மூன்றுவிதமாக செயல்பட்டால் அவர் மூவரின் கூட்டுதான் என்றும் அதற்க்கு மேல் எதுவும் இல்லை என்று கணக்குபோட்டுவிட அற்ப மனுஷராகிய நமக்கு  எந்த அருகதையும் இல்லை!    ///
 
தேவன் மூன்று விதமாக செயல்படுகிறபடியினால் அவர் மூன்று விதமாக செயல்படுகிரதாய் தானே அர்த்தம், அவருக்கு அனேக ஆள்ததுவமாய் செயல்பட தேவை இல்லை. ஏனென்றால் வேதம் கூறுகிற பிதா, குமாரன் ,பரிசுத்த ஆவியானவர் பரிபூரணமானவர்கள். 
 
தேவன் அருளிய வேதத்தில் தெளிவாய் (பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி)உள்ளதை விட்டுவிட்டு தங்களின் தவறான புரிதல்களால் இன்னும் எத்தனை பிதாவை தங்களுக்கு ஏற்படுத்தி,ஒரே பிதா என இயேசுவின் காலத்தில் இஸ்ரவேலர்கள் கூறியதை போல பொய்யைக் கூற இயலும். 
 
யோவான் 8:41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதாஎங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.

7)//ஆம்! அந்த லேகியோனுக்கு தேவ குமாரனை அவர் "தேவனின் குமாரன்தான்" என்று சரியாக கண்டுபிடிக்க தெரிந்தது. அனால் பலருக்கு  அந்த குமாரனே "என் பிதா என்னிலும் பெரியவர்" என்று சொல்லியும் தேவனின் தன்மையையும் அவர் குமாரனின் தன்மையையும் தனித்து அறியமுடியாமல், இயேசுவின் வாத்தைகளையே ஏற்காமல் அவமதிப்பது வேதனைக்குரியதல்லவா?   //

பிலிப்பியர்2:6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

தேவனுடைய ரூபமான தேவகுமாரன் மாம்சத்தில் வந்தவர். வருவதற்கு முன்னம் அவர் பெற்றிருந்த மகிமை பிதாவிற்கு சமமானது என வேதம் சொல்லும்போது அதை மறைக்க/தள்ளுபடி செய்ய நீங்கள் யார்? 
யோவான் 17:5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
அந்த மகிமையை அறியவில்லை என்றால் அறிந்து கொள்ள காலமிருக்கிரது. அறிந்துகொள்ள மனமில்லை என்றால் அது தங்களுடைய பாடு!!


அவர் பூமியில் இருந்தவரை அவரை மாம்சத்தில் கண்டீர்கள். உயிர்த்த அவரை இனி மாம்சத்தின் படி அறியபோகிரதில்லை என வேதம் சொல்லுகிறதை தான் நானும் சொல்லுகிறேன். இதனிமித்தமே தங்கள் போன்ற  கொள்கையுள்ளவர்களுக்கு விளக்கமளிக்கிறேன்.

II கொரிந்தியர் 5:16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படிஅறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

தேவன் யாருடன் எதனை,எந்த காலகட்டத்தில் கூறுகிறார் என்பதை அறியும் எந்த  அடிப்படையும்  இல்லாமல், இது எனவே இப்படிதான் இருக்ககூடும் என்பதை ஒருவர் எவ்வாறு வேதத்தின் காரியத்தில் பேசிவிட முடியும். 

இயேசு ,என்னை நல்லவன் என்பானேன், என்று கூறினார் என்றால் அவர் கேட்டவர் அல்லது நல்லவர் என போரும் கற்ப்பிப்பவரா நீங்கள்.  அப்படி கற்ப்பிப்வரானால் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இயேசு தன்னை தொழும்படி கூறவில்லை ஆகவே அவர் தொழதக்கவரில்லையா!! அதே சமயம் தன்னை தொழாதிருக்க அவர் ஒருவரையும் அவர் கட்டுப்பாடு பண்ணவில்லையே!! 

பூமியில் வாழ்ந்திருக்கும்போது அவர் தேவதூதரிலும் சற்று சிறியவரானார். இதை தாங்கள் அறிக்கை பண்ணுகிறவரா ?

எபிரெயர் 2:9 என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

ஒன்றை தெளிவாய் அறிந்துகொள்ளுங்கள். இயேசுவானவர் தேவ தூதர்களிலும் சிறியவர் என்று காணப்படும்போது பிதாவிலும் சிறியவர் என்றறியப்படுகிறார்!! அவர் மாசத்தில் கானபடிருக்கும்போது அவர் கூறிய வார்த்தைகள் தான் பிதா என்னிலும் மேலானவர் என்பது!! 

எப்போது இயேசுவானவர் உயிர்த்து பரமேறினாரோ அப்போது அவர் பிதாவினால் உண்டாகும் குமாரனின் மகிமையை பெற்றார். பின்வரும் வாசனைகளை படியுங்கள். இன்னும் தங்களுக்கு தெளிவாய் விளங்கும்படிக்கு சொல்லபோனால்,
தேவதூதர்களுக்கு மேலாய் குமாரன் உயர்த்தப்பட்ட பின் பிதாவிற்கு ஆதியில் இருந்தது போல சமமானார்..

I பேதுரு 3:22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

மாற்கு 8:38 ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.


பிதாவின் மகிமையைபார்கிலும் எந்த மகிமை பெரியது.. குமாரன் பிதாவின் மகிமையை தரித்து வரபோகிறார் என்றால் யாருடைய மகிமை பெரியது. பிதா ,குமாரனின் மகிமை ஒரே மகிமை அல்லவா. ஏனென்றால் குமாரன் தரிக்கும் மகிமை பிதாவினுடையது!! 

இந்த மகிமையியே அவர் உலகம் உண்டாகும் முன்பும் பெற்றிருந்ததாக வேதம் சொல்லுகிறது .

யோவான் 17:5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

8)//வேதத்தில் இருப்பதை உள்ளபடி எழுதுங்கள். எதோ சம்பந்தமில்லாத ஒன்றை காரணம் காட்டி உங்கள் அனுமானங்களை எழுத வேண்டாம்! அப்படி தங்கள் அனுமானங்களை நாங்கள் ஏற்க்க வேண்டும் என்றால் நான் சில வசனங்களை காரணம் காட்டி எழுதும் நான் அறிந்த உண்மைகளை நீங்கள் ஏற்க்க வேண்டும். அதை மட்டும் ஏன் ஏற்க்க மறுக்கிறீர்கள்? //

நான் எதையும் அனுமானிக்கவில்லை!! வேதத்தை பொறுத்தவரை அனுமானிக்கிறகிறவர்கள் புரட்டளுக்கே சமீபமாய் பிரயாணிக்க கூடும் என்ற புரிதலை நான் பெற்றிருக்கிறேன். 

9)// தங்கள்போல கொள்கையுடைய பல தளங்களில் எழுதி என் கருத்துக்களை பலர் எதிர்த்ததால், எனக்குள்ள வெளிபாடுகள் என்னோடு போய்விட கூடாது என்று  இங்கு வந்து தனியே எழுதி வைக்கிறேன்.//

கபடில்லாதவர்களிடம் தேவன் சிநேகமாய் இருக்கிறார். தங்கள் விசுவாசம் எப்படியேனும் தங்களிடம் தேவன் அவ்வாறே இருக்கிறார். தங்களின் புரிதல்களை மறு ஆய்வு செய்து கொள்ளும் காலம் தங்களுக்கு வந்திருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  
 
10)//தங்கள்போல கொள்கையுடைய பல தளங்களில் எழுதி என் கருத்துக்களை பலர் எதிர்த்ததால், எனக்குள்ள வெளிபாடுகள் என்னோடு போய்விட கூடாது என்று  இங்கு வந்து தனியே எழுதி வைக்கிறேன்.//
எனக்கு கொள்கை எல்லாம் கிடையாது. அப்படி இருக்கவேண்டியது கட்டாயம் என்றால் வேதம் எனது கொள்கையாகிவிடவே ஆசிப்பேன்.  வெளிப்பாடுகளை பெற்றான் வண்ணமே பகிருகிரீர்களா? கற்பனைக்கும் வெளிப்பாடுகளுக்கும் எப்போதும் வித்தியாசம் உ ணருகிறீர்களா?  வெளிகாண்பிக்கும்படிக்கு தேவன் தங்களை அனுமதிதாரா ??  சொல்லுங்கள்.
 

11)//ஆனால் நீங்கள் சொல்லும் மறைமுகமான  காரியங்களான "திரித்துவம்" "மெல்கிசேதேக்கு தான் பரிசுத்த ஆவியானவர்" போன்ற கருத்துக்களை  நான் ஏற்க்கவேண்டும் என்று எதிர்பாப்பது எவ்விதத்தில் நியாயம்? அல்லது தாங்கள் அனுமானிப்ப்துபொல் நானும் அறிந்தோ அனுமாநித்தோ சொல்லும் "ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுபவரை" "ஜோதிகளின் பிதா" என்று நான் சொல்வதில் என்ன தவறு? //

நான் அந்த திரிகளில் எங்கு அனுமாநிதிருகிறேன் என தாங்கள் சுட்டலாம்.. தங்கள் என்னுடைய வெளிபாடுகளை தேவ வெளிச்சத்தில் அனுமானங்களாக கண்டிருப்பின் சுட்டுங்கள். எனது திரிகளில் தாரளமாக தங்களின் கேள்விகளை வரவேற்கிறேன். சகோ.நேசன் இந்த தளத்தை விவாதிக்க தானே ஆரம்பித்ததாக சொன்னார்!! ஆகவே பணியிடை வேளைகளில் விவாதிப்போம். நாமல்ல ?! கருத்துக்கள் மோதிகொள்ளட்டும்.


தங்கள் இயேசுவானவர் கூறுவதற்கு தனி முக்கியத்துவத்தையும், மற்ற வேத பாத்திரங்கள் கூறும் வசனங்களுக்கு தனி முக்கியத்துவத்தையும் உடையவராக காணுகிறேன். ஒரே மேய்பனால் வேதம் உண்டானது என்று வேதம் சொல்லுகிறபடி விசுவாசியுங்கள். அனைத்தும் நேரடி வசன ஆதாரம் தான். 
 
12)//உண்மை கருத்துக்களுக்கு என்றும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் அதற்காக நான் அறிந்த உண்மைகளை எழுதாமல் இருக்க முடியாதே. //
நம்முடைய உண்மையை விடுங்கள் அது மனிதத்துவமானது. அதிக உண்மையாகிய சத்தியத்தை எழுதுங்கள். படிப்போர் பயன்பெறுவர்.பக்திவைராக்கியத்தில் தேறுவர். 
 
13)//திரித்துவத்தை நான் எதிர்க்கவில்லை! ஆனால்  ஒருவரும் காணமுடியாத தேவனை மூவர் என்ற ஒரு குறு வட்டத்துக்குள் அடைக்க நினைப்பதையே நான் எதிர்க்கிறேன் அதை நான் ஒருகாலமும் ஏற்க்கப்போவது இல்லை.//

 குறுகிய வட்டம் அறியாமையின் மனதில் தான் உள்ளது. பூரணரான பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியானவரை ஒரு குறிப்பிட்ட காரியத்தின் முன்னிட்டு தோன்றிய அவதாரங்களை போல பார்க்கும் இந்துத்துவ (செத்த கிரியையின் ) கண்ணோட்டம் தான் அந்த குறுகிய வட்டத்தை தங்களுக்கு ஏற்படுத்துகிறது. 

14)//எனவே அன்பான சகோதரரே "ஒத்த கருத்துடையவர்கள் இருப்பது கடினம்" என்பது உண்மைதான் காரணம் எனக்கும் தங்களுக்கும் பல கருத்துக்களில் நேர் எதிர் முரண்பாடு உள்ளது. இந்த நிலையில்  நாம் எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதி விவாதம் பண்ணிக்கொண்டு நமது நேரத்தை வீணடிப்பதைவிட தங்கள் கருத்துக்களை தனி கட்டுரையாக பதிவிடுதலே சிறந்தது என்று நான் கருதுகிறேன். படிப்பவர்களுக்கு  ஆண்டவர் எது உண்மை என்று உணர்த்துகிறாரோ அதை எடுத்துகொள்ளட்டும்.//

அன்பு சகோதரரே, நான் வேத வாசனங்களை கொண்டு ஆழமான விளக்கங்களுடன் எழுதியுள்ளேன். உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா என நீங்களே தேவ சமூகத்தில் பாருங்கள்!! இன்னும் நீங்கள் நான் சொல்வதெல்லாம் கேட்கமுடியாது, அனேக ஆள்தத்துவம், பிதாவின் பிதா என்பீர்களானால் தேவன் தம் கிருபையை நீட்டித்து சத்தியத்தை அறியபண்ணும்படி வேண்டுகிறேன். தாங்களே சிந்தியுங்கள். நான் தேவனை பற்றி அறிந்துகொள்வதிலும்,பேசுகிறதிலும் சொர்வடைகிறவன் அல்ல. தங்கள் பதிவுகளுக்கு என்னால் விகற்பம் என்றால் நான் தங்கள் திரிகளில் பதிவுகளை நிறுத்துகிறேன்.  
 
கர்த்தரின் கிருபை நம் அனைவரின் மேலும் இருப்பதாக!!
 
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!
 
தொடரும் ...


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

JOHN12 wrote:

அன்பு சகோதரரே, நான் வேத வாசனங்களை கொண்டு ஆழமான விளக்கங்களுடன் எழுதியுள்ளேன். உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா என நீங்களே தேவ சமூகத்தில் பாருங்கள்!! இன்னும் நீங்கள் நான் சொல்வதெல்லாம் கேட்கமுடியாது, அனேக ஆள்தத்துவம், பிதாவின் பிதா என்பீர்களானால் தேவன் தம் கிருபையை நீட்டித்து சத்தியத்தை அறியபண்ணும்படி வேண்டுகிறேன். தாங்களே சிந்தியுங்கள். நான் தேவனை பற்றி அறிந்துகொள்வதிலும்,பேசுகிறதிலும் சொர்வடைகிறவன் அல்ல. தங்கள் பதிவுகளுக்கு என்னால் விகற்பம் என்றால் நான் தங்கள் திரிகளில் பதிவுகளை நிறுத்துகிறேன்.  

கர்த்தரின் கிருபை நம் அனைவரின் மேலும் இருப்பதாக!!
 
 

 

Dear Brother
 
தங்கள் கருத்துக்களுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. 
 
இவ்விளக்கங்கள் குறித்து நான் ஆண்டவரிடம் விடாபிடியாக ஜெபித்து உண்மை என்னவென்பதை அறிந்து பின்னர் பதில் தருகிறேன்.
 
எனக்காக ஜெபித்துகொள்ளுங்கள்.
 
மேலும் நான் அறியவிரும்பும் ஒரு காரியம் என்னவெனில் தாங்கள்  சொல்வதுபோலவே "திரித்துவத்தை" புரிந்து கொள்ளாதவனுக்கு "நித்திய ஜீவன் இல்லை" என்று சொல்லும் வசனம் எதுவும் இருக்கிறதா? இயேசுவை விட தேவன் பெரியவர் என்று  விசுவாசித்தால் அவனுக்கு நரகம்தானா?    
 
காரணம் நான் பல சாதாரண விசுவாசிகள் மற்றும் போதகர்களிடம்   கேட்டபோது அவர்களுக்கு இந்த திரித்துவ கருத்து பற்றி போதிய விளக்கம் தெரியவில்லை.
 
இயேசுவால் போதிக்கபபட்டு இவைகளை கைக்கொள்ளுங்கள் என்று சொல்லபட்ட  எத்தனையோ அருமையான காரியங்கள் வேதத்தில் இருக்க, எதற்காக இந்த திரித்துவ கருத்துக்கு மாத்திரம் இவ்வளவு முக்கியத்தும் கொடுக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?

  

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink Closed

அன்பு  சகோதரரே,


//காரணம் நான் பல சாதாரண விசுவாசிகள் மற்றும் போதகர்களிடம்   கேட்டபோது அவர்களுக்கு இந்த திரித்துவ கருத்து பற்றி போதிய விளக்கம் தெரியவில்லை.//

மிகவும் சரி.. காரணம் அவர்கள் குருட்டுதனாமாய் பின்பற்றுகிற விசுவாசிகளாய் மாத்திரம் இருக்கக்கூடும். சுயத்தில் வெளிபாட்டை பெற்றவர்கள், மற்ற சபைகளுடன் இணக்கம் பாராட்ட இதனை பற்றி பேசுவதில்லை. சிலர் இன்றைய காலகட்டத்தில் புதியதாய் ஏதாவது புகுத்தினால் தான் கூட்டம் உண்டாகும் என மக்களுக்காக போதனையையும்,போதிக்கவேண்டியவைகளைகூட மாற்றி இருக்கலாம். தேவனுக்காக cycle கூட மிதிக்காமல் ஒருவரை பற்றிய விமர்சனம் தவறு.. ஆகவே இவைகள் என்னுடைய அனுமானங்கள் தான்.
 
//இயேசுவால் போதிக்கபபட்டு இவைகளை கைக்கொள்ளுங்கள் என்று சொல்லபட்ட  எத்தனையோ அருமையான காரியங்கள் வேதத்தில் இருக்க, எதற்காக இந்த திரித்துவ கருத்துக்கு மாத்திரம் இவ்வளவு முக்கியத்தும் கொடுக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ளலாமா?//

இதற்க்கு காரணம் சொல்ல வேண்டுமானால் மிக சுலபமாய் சொல்லலாம். இன்னார் தான் எனது தகப்பன்/தேவன் என்று அறிந்திருக்கிறேன். அறியாதவன் தான் பார்பவனை எல்லாம் பிதா என எண்ணி யோசனை பன்னவேண்டியவனாய் இருக்கிறான். ஆகவே குழப்பம் அவனது சொத்தாகிவிடும். இல்லாவிட்டால் வேறொருவனை தேவன் என என்னவேண்டியதாகிவிடும் அபாயமுண்டு!!

யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

அறியாதவன் எப்படி தேவனுக்கு ஆராதனை செய்வது /விசுவாசிப்பது போன்றவைகளில் ஈடுபடமுடியும். ஆகவே கிறிஸ்துவத்தில் தேவனை அவர் வெளிபடுதினவரியிலாவது அறிவது அவசியம் ஆகவே தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன். அது ஒரு  விசுவாசத்தை தழுவினதாக இருக்க கட்டாயமில்லை என்பது எனது சொந்த கருத்து..

//மேலும் நான் அறியவிரும்பும் ஒரு காரியம் என்னவெனில் தாங்கள்  சொல்வதுபோலவே "திரித்துவத்தை" புரிந்து கொள்ளாதவனுக்கு "நித்திய ஜீவன் இல்லை" என்று சொல்லும் வசனம் எதுவும் இருக்கிறதா? இயேசுவை விட தேவன் பெரியவர் என்று  விசுவாசித்தால் அவனுக்கு நரகம்தானா?  //

சகோதரரே, வேதம் காடும் படி மெய்யான அன்புள்ளவராய் இருப்பீர்களானால் தேவன் அறிவீர்கள். நித்திய ஜீவன் எனது முடிவிலி காலம் வரை ஜீவனுள்ளவர்களாகவே இருப்பது என்று சொல்லலாம். தேவனி அறிகிற அறிவு நித்திய ஜீவன் என்றும் வசனம் சொல்லுகிறது. ஆகா இதிலிருந்து தேவனை முழுமையாய் அறிய கந்தழி அல்லது முடிவிலி அளவிலான காலம் தேவை. ஆனாலும் பூமியில்ருக்கிற பரலோக பிரஜைகளான நமக்கு வேத்தினால் உண்டாகும் வெளிச்சம் தேவநை இந்த பூமியில் ஆராய உதவுகிறது!!

//இயேசுவை விட தேவன் பெரியவர் என்று  விசுவாசித்தால் அவனுக்கு நரகம்தானா?  //
இயேசுவை தேவன் என விசுவசிப்போர் மரணத்தை காணமாட்டார்கள்.. பிதா தேவன் என கிறிஸ்துவர் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் குமாரன் அதிசயமானவராதால் அநேகரால் தேவன் என அறிக்கை செய்யபடுகிரதில்லை அறியபடாமல் போகிறார் பாருங்கள். குமாரனை கனம்பணாமல் வருகிற கனத்தை பிதா ஏற்றுகொல்லுகிரதில்லை. இதை பற்றி சமயம் வைத்தால் பேசுவோம். தற்போது தங்களுக்கான இன்னும் சிறு விளக்கத்தையும் பதிகிறேன்..

  
இயேசு கிறிஸ்து இப்பூமியில் வாழ்ந்திருந்த காலத்தில் பேசிய மொழியாக அராய்சியாளர்கள் சொல்லுவது தொன்மை வாய்ந்த அராமிய மொழி (அராபிய மொழி அல்ல ). ஆனால் நலிந்து போன அம்மொழி இயேசுவால் பேசப்ட்டிருக்கமுடியாது என கூறும் சாரார்  உண்டு. எப்படியேனும் வேதம் எழுதப்பட்டுள்ளது Hebrew, greek  பாஷைகளில் தான். 


தேவன் மோசேயுடன் பேசும்போது தனது நாமத்தை ha-yah என வெளிப்படுத்தியுள்ளதாக பழைய ஏற்பாட்டில் (தோரா ) உள்ளது.இந்த பதம் இஸ்ரவேலர்களால் பரிசுத்தபடுத்தபட்ட ஒரு பதம்.

யாத்திராகமம் 3:14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் (I am) என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார்என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

ஏசாயா 58:9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

ஏசாயா 52:6 இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கேஇருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 43:13 நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?

தேவன் இந்த வார்த்தையை தம்மை குறிப்பதற்கு பயன்படுத்தின படியினால், இஸ்ரவேலர் இந்த குறிப்பிட்ட வார்த்தையை பரிசுத்த படுத்தி பயன்படுத்துவதில்லை. ஆகவே நான் என்று குறிப்பதற்கு  அவர்கள் தேவன் பயன்படுத்தின பதமான ha-yah என்ற பதத்தை தவிர்த்து அதற்கிணையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். yah (தமிழில் கூட 'யாவே' என்றலைபோமே  அதில் வருகிற 'யா' தான் )என்கிற பதம் தேவனைக் குறிக்கிற பதமாக மாறியதும் இதனால் தான். தேவனுக்கு புகழ் கூறுகிற அல்லேலூ-'யா' என்கிற பதமும் ஒரு ஹீப்ரு பதம் தான். அதில் வருகிற 'யா' என்கிற பதம் தேவனை குறிப்பதாக உள்ளது!!
இதற்கு hebrew கற்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அனைத்து கிறிஸ்துவர்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் தெரிந்திருக்கவேண்டுமென்று பதிகிறேன்.


ஆனால் இயேசுவானவர் பேசும்போது நான் (i  am ) என பயன்படுத்தின பதங்களில் எல்லாம் ha-yah என பயன்படுத்தியுள்ளார். கவனியுங்கள் !!

 யோவான் 8:58,59 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் (I am) என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார். 


பொதுவாக தேவாலயத்தில் எந்த பாவம் செய்பவரையும், விசராணையில் குற்றவாளி என அறிவித்தவரைக்கூட தண்டிக்கும் மரபு அக்கால இஸ்ரவேலரிடத்தில் இல்லை.. தேவாலயத்தின் நியமங்கள் குறித்தும்,மோசேயின் ஆகமங்களை குறித்தும் பக்திவைராகியமுள்ள அந்த ஜனங்கள் தேவாலயத்திலே இயேசுவை கல்லெறியும்படி முனைந்ததன் காரணம் தேவாலயத்தில் இயேசு கூறிய ha-yah. என்கிற பதம் தான். பிதா தேவன் என அறிந்து வைத்துள்ள தேவன் பயன்படுத்தின அந்த பதத்தை இயேசு பயன்படுதினபோது அவர்கள் முன்னிலையில் அவர் தேவதூஷணம் செய்பவராகக் காணப்பட்டார். 

இந்த வார்த்தையை அவர் மீண்டும் சொன்னதிநிமித்தமே அவர் தன்னை தேவன் என மொழிபெயர்ப்பின்படி சொல்லாதிருந்தும்,  ha-yah என்கிற வார்த்தையின் நிமித்தமே இயேசு தன்னை  தேவன் என கூறியதாக சரியாய் அறிந்துகொண்டார்கள். ஆனாலும் அவர் மனுஷ குமாரன் என அறியாமல் தேவதூஷணம் சொன்னார் என எண்ணினார்கள்.  

யோவான்
10 :30. நானும் பிதாவும்(I and fathar ) ஒன்றாயிருக்கிறோம் என்றார்.31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் (I (ha-yah ))என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.


கிறிஸ்து இயேசு பிதாவின் நாமந்தரித்து வந்தது எத்துனை உண்மை. அவரது நாமத்தின் சரியான உச்சரிப்பு Yahushua என்பதாக. இது இயேசு என எப்படி மாற்றப்பட்டது என்பதற்கு தேவனே வெளிச்சம் தர வேண்டும்.
பிதாவை குறிக்க yahwah என்ற பதம் உபயோகிக்கபடுகிறது . இந்த நாமத்தில் 'yah' என்கிற பகுதி பிதாவை குறிபதாக உள்ளது . 

யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

யோவான் 10:25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது
.

இப்படி ஒன்றிணைந்து ஒன்றாய் இருபவரில் யார் பெரியவர் என ஆராயாமல் ஒரு கேள்வியை முன்வைத்து விவாதிப்பது சரியா? அடிப்படையில் ஒன்றாய் இருபவரில் யார் பெரியவர் என்கிற கேள்வியே சரியற்றது!!  ஆனாலும் கருத்துக்கள் ஆராயப்படவேண்டும் அதற்க்கு வேதம் இன்னும் புடமிடபடதானே வேண்டும்.

 
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

சகோதரரே தாங்கள் என்னை யகோவா சாட்சிகளின் கொள்கை உடைய  ஒருவனாக நினைத்து விளக்கங்களை தருவதுபோல் தெரிகிறது.
 
"ஆண்டவராகிய இயேசு" தேவனின் ஆள்தத்துவம் என்பதும் பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூவருமே தங்களை தேவத்துவத்தின் பரிபூரணங்கள் நிறைந்தவராக காட்ட முடியும் என்பதும் நான் அறிந்ததே.
 
அத்தோடு  அப் 20:28  தேவன் தன சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபை 
 
இயேசு இரத்தம் சிந்தி சம்பாதித்த சபையை "தேவன் தன் சுய ரத்தத்தினாலே சம்பாதித்த சபை" என்று வேதம் சொல்வதால், இயேசுவின் இரத்தம் தேவனின் இரத்தத்துக்கு சமமாக கூறப்படுவதையும் நாம் அறியமுடியும்.    
 
மேலும் புதிய ஏற்பாட்டில் நியாயதீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் முழுவதும் இயேசுவுக்கு கொடுக்கபட்டுள்ளதாக வேதம் சொல்கிறது ஆனால் பழைய ஏற்பாட்டில் "கர்த்தரின் நியாயதீர்ப்புகள்" என்று வசனம் சொல்வதுகூட இயேசுவை குறிப்பதாகவே இருக்கமுடியம்.  
 
எனவே இயேசு தன்னை "I AM"  என்று சொன்னது முற்றிலும் சரியே. 
 
மேலும் "பிதாவின் மகிமை பொருந்தியவராய் இயேசு வருவார்" என்பதர்க்கெல்லாம் விளக்கம் உண்டு. இதில் மாற்றுகருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. எனவே உடன்பாடான காரியங்களுக்கு விளக்கம் எதுவும் அவசியமில்லை. 
 
ஆனால் "மூவரும் சமம்" என்று ஒப்புமை பண்ணி சொல்லும் தங்கள் கருத்தைதான் வசனத்தின் அடிப்படையில் என்னால் ஏற்க்க முடியவில்லை.   
 
இயேசு பிதாவை "என்னிலும் பெரியவர்" என்று ஒப்புமை பண்ணி சொல்லியிராவிட்டால் நாமும் இந்த ஒப்புமை வாக்குவாதம் பண்ண வேண்டிய அவசியம் வந்திருக்காது. இயேசுவே ஒப்புமையை சொல்லும்போது அதன் உண்மையை ஆராய்வது அவசியமாகிறது. அவர் சொன்னதை நான் அப்படியே முழுமையாக நம்பியதை தவறு என்று தாங்கள் கருதினால் அதன் பொறுப்பு அவரைத்தானே சாரும். அதற்காக எனக்கு தண்டனை கிடைக்குமானால் அது தேவ நீதியாக இராதே! காரணம் நான் இக்கருத்தை எந்த மனுஷனிடம் கேட்டும் நம்பவில்லையே.
 
ஆனால் இயேசு மனுஷனாக வந்ததால்தான் அவ்வாறு சொன்னார் என்று தாங்கள் கூறுகிறீர்கள். அதை ஏற்றுக்கொண்டாலும் இந்த வசனத்தை சற்று கவனியுங்கள்.
 
யோவான் 10:29 என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்.
 
இங்கு "எல்லாரிலும்" என்பதில் "குமாரன்" "பரிசுத்த ஆவியானவர்" எல்லோரும் அடங்கிவிடுவார்களே.
 
இயேசு மாம்சமாக வந்ததால் பிதாவை பெரியவர் என்று சொல்கிறார் அனால் பரிசுத்த ஆவியானவரைவிடவும் அவர் பெரியவர் என்றும் இங்கு பொருள் உண்டாகிறதே. ஏன் இயேசு இவ்வாறு சொல்ல வேண்டும்?
 
இயேசுவை தேவனுக்கு சமம் என்று சொல்லும் வசனங்கள் சில இருப்பது நாம் அறிந்ததே, (அதற்க்கு நான் விளக்கமும் கொடுத்துள்ளேன்)  ஆனால் பரிசுத்த ஆவியானவரை "தேவனுக்கு சமமானவர்" என்று சொல்லும் வசனம் எங்கும் உண்டா?
 
ஒரே ஒரு இடத்தில் பேதுரு பரிசுத்த ஆவியானவரை குறித்து "தேவனிடத்தில் பொய் சொன்னாய்" என்று சொல்கிறார். அவர் தேவன்தான் எனபது நமக்கு தெரியும் ஆனால் அங்கும் அவர் தேவனுக்கு சமமானவர் என்ற ஒப்புமை வார்த்தை இல்லை.  
 
அப்படி இல்லாத பட்சத்தில் இயேசு சொல்லும் "என் பிதா எல்லாரிலும் பெரியவர்" என்ற வசனத்தை எப்படி நிராகரிக்க முடியும்?  "மூவரும் சமம்" என்ற உங்கள் கருத்து எப்படி உண்மையாக முடியும்?
 
சகோதரரே, கடந்த நாளில் நான் தியானித்த போது,  தங்கள் விசுவாச கருத்தில் தவறு இருக்கிறது என்று ஆண்டவர் சொல்லாமல் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைவரை உண்மையை அறிந்துள்ளீர்கள் என்பதை எனக்கு உணர்த்தினார்.  
 
நீங்கள் அறிந்துள்ளவரை அது தவறு என்று சொல்ல எனக்கு எதுவுமில்லை. ஆனால் நான் அறிந்துள்ளதை தவறு என்று சொல்லும் அளவுக்கு தங்களுக்கு அனுபவம்  இல்லை. உங்கள் நிலையில் இருந்து என்னை புரிந்துகொள்ள முடியவில்லை ஆனாலும்  நீங்கள் எதோ எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து கொண்டுவிட்டதாக எண்ணிக்கொண்டு என்னை திருத்த முயற்சி எடுப்பது எனக்கு புரிகிறது. அது தங்களின் அதிமேதாவிதனமா அல்லது நான் அறிந்ததைவிட மேலே எதுவும் இருக்கமுடியாது என்ற விசுவாசமா எனக்கு புரியவில்லை.  
 
ஆனால் நானும் நீங்கள் சொல்வதுபோல் என் தகப்பனாகிய தேவனை யார் என்று சரியாக அறிந்துதான் நான் ஆராதிக்கிறேன். வெறும் வசன அடிப்படையில் மட்டுமல்ல அனுபவ அடிப்படையிலும் அறிந்திருக்கிறேன்.  அப்படி ஒருவேளை நான் சரியாக அறியவில்லை என்று தாங்கள் கருதினாலும்  "தம்மை தேடுகிறவர்களுக்கு பதிலளிக்கும் தேவன்" தெரிவித்தால் மட்டுமே ஏற்க்க முடியுமேயன்றி என்போன்ற இன்னொரு மனுஷன் சொல்லி அல்ல. 
 
எபிரெயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
 
எனக்கு தன்னைப்பற்றி உணர்த்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் உண்டு. உண்மையை உணர்த்த முடியாத ஒரு தேவனை ஆராதிப்பதில் எந்த பயனும் இல்லை. ஆனால் நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர்! எனவே இன்னொரு நாசியில் சுவாசமுள்ள மனுஷன் சொல்லி  என் தகப்பனை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.         
 
நாளை நியாயதீர்ப்பு நேரம் இயேசுவானவர் என்னை பார்த்து "என் பிதா எல்லாரிலும் பெரியவர்" என்று நானே சொல்லியிருக்கிறேனே மடையா, பிறகு நீ ஏன் எல்லோரையும் சமம் என்று நம்பினாய்? என்று கேட்டால் "john12" சொன்னார் அதனால் நம்பினேன் என்று சொல்லி ஆதாமைபோல அடுத்தவர்மேல் பழிபோட விரும்பவில்லை.
 
பல நேரடி வசனங்களுக்கு புறம்பான கருத்தை கூறும், தேவனை பற்றிய தங்கள் கணிப்பு மட்டும் தவறாக இருக்க வாய்ப்பில்லை என்றும் நீங்கள் தேவனை சரியாகதான் ஆராதிர்க்கிரீர்கள் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் கிடையாது. ஒரு முழுமையில்லா கொள்கையை உறுதியாக பிடித்துகொண்டு தேவனை அறிந்து விட்டதாக நினைத்து மற்றவர்களை நியாயம்தீர்க்கிறீர்கள்.    
 
தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக நிற்ப்பதை விட்டுவிட்டு இயேசு சொல்லிய  வார்த்தைகளையும் கருத்தில் கொண்டு ஆவியானவர் உதவியுடன் சற்று மாற்றி தியானித்து பாருங்கள் நான் சொல்லும் விளக்கங்களின் உண்மைகள் புரியலாம்.
 
புரியவில்லை என்றாலும் பரவாயில்லை "இன்னும் நாள் இருக்கிறது" என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நான் எச்சரிக்க விரும்பவில்லை. உங்களை தேவன் தம்முடைய சித்தபடி நடத்துவாராக. 
 
தாங்கள் நினைப்பதுபோல் நான் எந்த கருத்தையும் அவசரப்பட்டு பதிவிடுவது இல்லை. அப்படி ஒரு பதிவிட்டாலும் தேவன் என்னை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை.    
 
ஏற்க்க மனதிருந்தால் நான் சொல்வதை நம்புங்கள் இல்லையெனில் விட்டுவிடுங்கள். நீங்கள் இதை ஏற்ப்பதாலோ அல்லது ஏற்க்க மறுப்பதலோ யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படபோவதில்லை. 
 
மோசேயின் ஊழியம் வேறு எசேக்கியேலின் ஊழியம் வேறு பவுலின் ஊழியம் வேறு. அவரவருக்கு நியமிக்கபட்டத்தை அவரவர் செய்ய கடவோம்.   
 
தேவன் தம்மை உண்மையாய் தேடுகிறவர்களை அறிந்திருக்கிறார் எனவே அதுகுறித்து தாங்கள் அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 
 
அதிக நேரம் விரையம் ஆவதால் இதற்குமேல் இந்த கருத்து குறித்து நான் விவாதிக்க நான் விரும்பவில்லை. ஆகினும் ஆதிமுதல் நடந்த காரியங்கள் குறித்த தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.   அடிப்படையில் திருத்தினால்தான் அத்தனையும் சரியாகும். அஸ்திபாரம் சரியில்லை என்றால் எல்லாமே கோணலாகவே இருக்கும்.
 
தேவன் தாமே தன் சித்தத்தை  சீக்கிரம் நிறைவேற்றுவாராக
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink Closed

சகோதரர் ஜான் 12 அவர்களே,

எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. அவை குறித்த உங்கள் பதிலை சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்,

1.//எனது விசுவாசமானது தேவன் ஒருவரே, பிதா தேவன்,குமாரன் தேவன்,பரிசுத்த ஆவி தேவன் என்பதே.//
நாம் தேவனிடத்தில் ஜெபம் செய்யலாம் என்பதால், மூவரிடத்திலும் ஜெபம் செய்யலாம் அல்லவா? பரிசுத்த ஆவியானவரிடத்தில் ஜெபம் செய்யலாமா? அவரும் பிதாவுக்கு சமமானவர்தானே.

2. ஊழியம் செய்பவர்கள் பிதாவுக்கு சமமாக தங்களை "ரெவரெண்ட்" என அழைத்துக் கொள்ளலாமா? அதை குறித்து உங்கள் கருத்து என்ன?

3. "நானே நல்ல மேய்ப்பன்" என இயேசு கிருஸ்து சொல்லியிருக்க (இங்கும் I AM வருவதை கவனிக்கவும்.) பரிசுத்த ஆவியானவர் மேய்ப்பரும் கண்காணியுமாய் இருக்க, மனிதர்கள் தங்களை பாஸ்டர் என அழைத்துக் கொள்ளலாமா?

4. இயேசு கிருஸ்து பிதாவுக்கு கீழ்ப்பட்டவர் என்பதற்கான வசனம் :

1. கொரி. 15.28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

இப்போது கூட இயேசு கிருஸ்து பிதாவுக்கு கீழ்ப்பட்டவர் என இந்த வசனம் சொல்கிறது. இந்த வசனத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink Closed

ஆண்டவராகிய இயேசுவுக்கு பிதாவாகிய தேவன் தன்னைவிட பெரியவர் என்பது நன்றாகவே தெரியும். 
 
தன்னை ஜெனிப்பித்தவர் அவர்தான் என்று தெரியும் (எபி 1:5)
சங்கீதம் 2:7  கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
 
தன்னை அனுப்பியவர் அவர்தான் என்பது தெரியும் 
யோவான் 8:42 நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
 
தான் செய்வது எல்லாம் பிதாவின் சித்தம்தாம்/கிரியைதான்  என்பது தெரியும் 
 
யோவான் 4:34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
 
தான் திரும்ப வரும் நாளை நிர்ணயிப்பவர் அவர்தான் என்று தெரியும். 
 
மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்,  
 
தன்னுடைய மகிமை எல்லாம் பிதாவுடையதுதான் என்று தெரியும்.
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்;
 
தன்னுடைய ஆவியை அவரிடம்தான் ஒப்புகொடுக்க போகிறோம் என்பது தெரியும்.  
 
லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்
 
இப்படி பிதா அனைத்திலும் அனைத்தாய்/ சகலத்திலும் சகலமாய்   இருப்பதால், சகலத்தையும் தமக்கு கீழ்படுத்தியவராகிய பிதாவுக்கு 
அவர் கீழ்பட்டிருக்கிறார். 
 
1. கொரி. 15.28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
 
இதனாலேயே "என் பிதா என்னிலும் / எல்லோரிலும் பெரியவர்" என்று  அவரே  அறிக்கை செய்கிறார். 
 
யோவான் 14:28 என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். 
 
யோவான் 10:29 என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்.
 
எனவே என்னை எத்தனைதான் திட்டினாலும், ஏராளமான குறை கூறினாலும்,  வானமும் பூமியும் ஒளிந்து போனாலும் இயேசுவின் இந்த வார்த்தைகளும் ஒளிந்து போகாது/ மாறாது!   
 
எனவே தெளிவான வசன அடிப்படையில் பிதாவாகிய தேவன் 
பெரியவரே! அதை எந்த மனுஷனாலும் மாற்ற முடியாது!  
 
 
சில திருத்துவ சகோதரர்களின் கருத்த்தில் திருத்தம் வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு எழுதுகிறேநேயன்றி, ஆண்டவராகிய இயேசுவையும் பிதாவாகிய தேவனையும் பிரித்து பார்ப்பது சரியான ஒரு நிலைப்பாடு அல்ல! 
 
காரணம் பிதாவும் இயேசுவும் ஒன்றாகவே இருக்கிறார்கள்! 
 
யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
 
எனவே இயேசு இல்லாத தேவத்துவமும் முழுமை அடையாது!  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard