இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 28-நாடுகளுக்கு சுனாமி ஆபத்து,இன்றே 4 முறை இந்தியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம்-ஒரு விண்ணப்பம்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
28-நாடுகளுக்கு சுனாமி ஆபத்து,இன்றே 4 முறை இந்தியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம்-ஒரு விண்ணப்பம்.
Permalink  
 


அப்பா பிதாவே!! அன்பு தேவனே!!

            எங்கள் மேல் இரக்கமாயிரும்..பயமுறுத்தும் காரியங்களை கேள்விபடுகிறோம்..உமக்குள் எங்களை திடபடுத்தி கொள்ள கிருபை தாரும்..

அன்பு தேவனே!!எங்கள் பிதாவே!!

            ஒருவர் முன்னிட்டு அநேகர் மேல் பொறுமையாய் இருக்கும் அன்பு தேவனே!! உம்முடைய நீதிக்காய் உமக்கு ஸ்தோத்திரம்.. நாங்கள் அனைவரும் பாவிகள்,நீசர்கள். நீர் படைத்த உமது ஆலயமான எங்கள் சரீரத்தை நாங்கள் பாவங்களால் பரிசுத்த குலைச்சலாக்கி,அசுத்த கிரியைகளினால் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எங்கள் பாவங்களால் கோபமூட்டினோம்.

             தேவரீர் எங்கள் மேல் இரக்கமாயிரும்.உமது நாமம் தரிக்கபட்ட எங்களை ரட்சியும். எங்களுக்காக மரித்த இயேசு கிறிஸ்துவின் முகத்தை பார்த்து எங்கள் புதிஈனதிர்ற்கு தக்கதாய் எங்களை நடத்தாதிரும்.அவரது பரிசுத்த ரத்தத்தினால் எங்களை கழுவும்.. தேவனே இப்போது புறஜாதிகளின் மத்தியில் வாழும் உம் அடியார்களாகிய நாங்கள் அனைவரும் நீசர்களே.. தேவனே இரங்கும்!! தேவனே கவனியும்!! தேவனே உம்மை நோக்கி கெஞ்சும் உம் பிள்ளைகளின் விண்ணபத்தை கேளும்.

            இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழும் எங்களுக்கு நம்பிக்கை நீர் மாத்திரமே.எங்களை உம் செட்டைகளுகுள்ளாக வைத்து காத்துக்கொள்ளும்.. நல்லோர் மேலும் தீயோர் மேலும் சூரியனை உதிக்கபண்ணும் தேவனே புறஜாதிகளுக்கும் இறங்கும்.

            கடல் தன் கரையை மீறாதபடி எல்லையை கட்டளையிட்டுள்ள தேவனே எங்களை முன்னிட்டு அவைகள் கரையை மீறாத படி அதட்டும்.. எங்கள் கன்மலையே உலரும்  பூக்களை போல் நிலையற்றவர்களாகிய எங்கள் மேல் இரக்கமாயிரும்,ரட்சியும்.. தொடர் நிலநடுக்கங்களில் இருந்தும் சுனாமிகளில் இருந்தும் தேசங்களை காத்தருளும்..உம் அநாதி இரக்கங்களை உம்மை நோக்கி விண்ணப்பிக்கும் எங்கள் நிமித்தம் நினைவுகூரும். 

            எங்கள் விண்ணபத்திற்கு உம் செவிகள் திறந்திருந்து எங்கள் காரியம் கர்த்தால் கவனிக்கபடியினால் உமக்கு நன்றி!!


           ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்துவின் நாமதிலும் பரிசுத்த ஆவியின் ஐக்கியதிலும் பிதாவே உம்மை நோக்கி  இந்த விண்ணப்பத்தைஏறேடுக்கிறோம் ..கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றும் உள்ளது..

தேவனுக்கு எப்போதும் மகிமை உண்டாகுக!!!-- Edited by JOHN12 on Wednesday 11th of April 2012 08:32:12 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: 28-நாடுகளுக்கு சுனாமி ஆபத்து,இன்றே 4 முறை இந்தியாவில் உணரப்பட்ட நிலநடுக்கம்-ஒரு விண்ணப்பம்.
Permalink  
 


இறைவா, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே, வானமும் பூமியும் பூமியிலுள்ள எல்லாமே உம்முடைய கரத்தின் கிரியைகள் ஆண்டவரே. 
உன்னுடைய கரத்தின் கிரியைகளாகிய எங்கள் மேல் இரக்கமாயிரும்.    
 
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக  எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்
 
ஆம்! இறைவா நீர் யாருக்கும் தீங்கு நினைக்கிற தேவன் அல்ல. நீர் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் அற்ப ஜனங்களாகிய எங்களின்  நன்மைக்காகதான் என்றே நாங்கள் எண்ணுகிறோம். சத்துருவின் கிரியைகளை எல்லாம் நிர்மூலமாக்கி  உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க பண்ணும்.  உம்முடைய சித்தம் மாத்திரம் இந்த உலகில் நிறைவேறுவதாக. இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமைமிக்க நாமத்தில் ஜெபிக்கிறோம்  எங்கள் ஜெபங்களை கேட்டருளும் பிதாவே. ஆமென்.  
 


__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard