சகோதரர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு "ஜெப விண்ணப்பங்கள் பகுதி" என்ற தனி பிரிவு ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. தளத்துக்கு வரும் அன்பர்கள்/நண்பர்கள் /சகோதரர்கள்/ சகோதரிகள் தங்கள ஜெப தேவைகள் எதுவாக இருந்தாலும் இங்கு பதிவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
இங்கு முன்வைக்கப்படும் ஜெப விண்ணப்பங்களை தள நண்பர்கள் அவர்களுடைய தங்கள் தனி ஜெபங்களில் நினைவு கூறும்படி வேண்டுகிறேன் மேலும் நமது தள சகோதரர்கள் கூடுகையின் போதும் அவர்களுக்காக ஊக்கமான ஜெபங்கள் எறேடுக்கப்படும்.
இங்கு பதிவிடப்படும் ஜெபவிண்ணப்பங்களை கவனிக்கும்படி இறைவனின் இருதயம் இங்கு எந்நாளும் இருக்கும்படி வேண்டுகிறோம்.
கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்!
வெளி 1:17அவர் (இயேசு) தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி:பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;என்றார்.