இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?
Permalink  
 


உண்மைக்கிறிஸ்தவர்கள் ஈசா/இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஆவர். குரானில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற படியால், உண்மையான முஸ்லீம்கள் ஈசாவின் போதனைகளைக் கற்று அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும் (சூரா3:48- 49; 5:46). ஈசாவைக் குறித்து குரான் சொல்வது என்ன?

# அல்லா ஈசாவை அனுப்பி, பரிசுத்த ஆவியினால் அவருக்கு உதவி செய்தார்(சூரா.2:87)

# ஈசாவை அல்லா உயர்த்தினார் (சூரா 2:253)

# ஈசா நீதிமானாகவும் மற்றும் பாவமில்லாதவராகவும் இருந்தார்(சூரா 3:46; 6:85; 19:19)

# ஈசா மரித்ததிலிருந்து உயிரோடு எழுந்தார் (சூரா 19:33௩4)

# ஒரு மதத்தை ஸ்தாபிக்கும்படி ஈசாவுக்கு அல்லா கட்டளையிட்டார் (சூரா 42:13)

# ஈசா பரலோகத்திற்கு (சொர்க்கத்திற்கு) ஏறிச் சென்றார்( சூரா 4:157௧58)

 

வேதாகமம் - இயேசுவின் வார்த்தை 

 

ஈசாவின் சீடர்களால் இஞ்சிலில்( நற்செய்தி நூல்) அவருடைய போதனைகள் எழுதிவைக்கப் பட்டுள்ளது.ஈசா மற்றும் அவருடைய செய்தியில் நம்பிக்கை வைக்கும்படிக்கு அல்லாவினால் சீடர்கள் ஏவப்பட்டனர் என்று சூரா 5:111 குறிப்பிடுகிறது. அல்லாவின் உதவியாளர்களாக (சூரா 61:6,14), ஈசாவின் சீடர்கள் அவருடைய போதனைகளை துல்லியமாக பதிவுசெய்திருப்பர்.

 

தோரா(Torah) மற்றும் இன்ஜிலையும் (Gospels) நிலைநிறுத்தி அவ்விரண்டிற்கும் கீழ்படிய வேண்டுமென்றும் குர்ஆன் முஸ்லீம்களுக்கு போதிக்கிறகிறது (சூரா 5:44௪8). நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்குமானால், முகமதுவுக்கு இந்தப் போதனை வழங்கப்பட்டிருக்காது. ஆகவே, முகமதுவின் காலத்தில் இருந்த நற்செய்தி நூல்களின் பிரதிகள் நம்பத்தக்கவையாகவும் துல்லியமானவையாகவும் இருந்தன. முகமது வாழ்ந்த காலத்துக்கும் 450 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் உள்ள நற்செய்தி நூல் பிரதிகள் உள்ளன. மிகவும் பழமையான பிரதிகள், முகமதுவின் காலத்தில் உள்ள பிரதிகள் மற்றும் முகமதுவின் காலத்துக்கு பிந்தினவையாக குறிக்கப்பட்டிருக்கும் கைப்பிரதிகள் இவற்றை ஒப்பிட்டுப்பார்க்கும் போது , நற்செய்தி நூல்களின் அனைத்துப் பிரதிகளும் இயேசு மற்றும் அவருடைய போதனை குறித்த தங்கள் சாட்சியில் முரñபாடற்றவையாக இருக்கின்றன. நற்செய்தி நூல்கள் திருத்தப்பட்டிருக்கின்றன என்று எந்தச் சான்றும் நிரூபிக்க முடியாது. ஆகவே, இயேசுவின் எல்லா போதனைகளும் வேதாகமத்தில் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.

இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்

 

நற்செய்தி நூல்கள் உண்மை என்று அறிந்து கொள்ளுதல் போன்ற காரியங்கள் இயேசுவைக் குறித்து என்ன போதிக்கின்றன? இயேசு தான் கொலை செய்யப்பட்டு, மரித்து பின்பு மரித்தோரிலிருந்து எழும்புவேன் என்று கூறி தனது வாழ்வு நிகழ்வுகளை முன் அறிவித்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கிறது (மத்தேயு 20:19). இயேசு முன் அறிவித்ததைப் போலவே அவை நடந்ததை நற்செய்தி நூல்கள் பதிவுசெய்திருக்கின்றன (மத்தேயு 27- 28; மாற்கு 15,16; லூக்கா 23,24; யோவான் 19- 21)

 

பாவமில்லாத இயேசு கொல்லப்படுவதற்காக தன்னைத்தான் ஒப்புக்கொள்ள வேண்டும்? நீங்கள் உங்கள் நண்பனுக்காக உயிரைக்கொடுக்கும் அன்பைவிட பெரிய அன்பு வேறு இல்லை என்று இயேசு சொன்னார் (யோவான் 15:13). தனது தீர்க்கதரிசி தவறாக நடத்தப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் தேவன் ஏன் அனுமதித்தார்? நமக்காக தியாக பலியாக இயேசுவை அனுப்புமளவுக்கு அவர் நம்மை அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 சொல்கிறது.

 

இயேசு நமது பாவங்களுக்காக பலியானார்

 

இயேசு நமக்காக தன்னுடைய உயிரை ஏன் தியாகம் செய்யவேண்டும்? இது தான் இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் ஆகும். நம்முடைய தீயச் செயல்களை விட நல்ல செயல்கள் அதிகமாக உள்ளனவா இல்லையா என்பதைப்பார்த்து அல்லா நியாயம் தீர்ப்பார் என்று இஸ்லாம் போதிக்கிறது. தீய செயல்களை விட நற்செயல்களைச் அதிகமாக செய்ய வாய்ப்பு உண்டு என்றாலும் கூட, ஒரே ஒரு பாவத்தை செய்தவனைக் கூட பரலோகத்தில் அனுமதிக்க தேவனால் முடியாது. அவர் அவ்வளவு பரிசுத்தமானவராக இருக்கிறார் (யாக்கோபு2:10)பூரணமற்ற எதையும் பரிசுத்த தேவனால் பரலோகத்தில் அனுமதிக்கமுடியாது. நாமெல்லாரும் பாவம் செய்திருக்கிறோம் என்றும் அதனால் நாம் பரலோகத்திற்குள் நுழையமுடியாது என்பதை தேவன் அறிந்திருந்தார். நாம் மன்னிக்கப்படுவதற்கான ஒரே வழி பூரணமான ஒருவர் நமக்குப் பதிலாக மரித்து நமது பாவக்கடன்களை செலுத்தி தீர்ப்பதே என்பதை தேவன் அறிந்த்திருந்தார். தன்னால் மாத்திரமே அப்படிப்பட்ட மாபெரும் கிரயத்தை செலுத்த முடியும் என்பதை தேவன் அறிந்திருந்தார்.

 

நம்மை மீட்பதற்கான தேவனின் திட்டம்

 

ஆகவே, தேவன் ஒரு கன்னியிடம் பிறக்கும்படி தமது மகனை அனுப்பினார். தேவனுடனான அவருடைய உறவு மற்றும் அவருடைய தெய்வீகத்தின் அடிப்படையில், இயேசு தேவகுமாரன் ஆவார்(யோவான் 1:1,14). தனது பாவமற்ற வாழ்க்கை, பரிபூரண செய்தி, பாவத்துக்காக மரணம் மற்றும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் போன்றவற்றால் இயேசு தன்னை தேவகுமாரன் என்று நிரூபித்தார்.

 

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மரணம் ஆகியவை உங்களுக்கு தரும் செய்தி என்ன? பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி இயேசுவை தங்கள் இரட்சகராக நம்புபவர்களுக்கு பாவத்திலிருந்த்து மீட்பை தேவன் அருளுகிறார். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் (தேவன்) பிதாவினிடத்தில் வரான்". என்று இயேசு சொன்னார். 

 

தேவனிடம் செல்லும் ஒரே வழி நானே என்பதை இயேசு தெளிவாக போதித்தார். இயேசுவின் மூலமாக மட்டுமே நாம் பரலோகம் சென்றடைய முடியும். தேவன் நம் பாவங்களை மன்னித்து, அவருக்காக வாழ உதவி செய்வார். அத்துடன் நித்திய வாழ்வையும் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விலையேறப்பெற்ற பரிசை நாம் எப்படி வேண்டாமென தள்ளிவிட முடியும்? தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுக்குமளவுக்கு நம்மை அன்பு செய்த தேவனை எப்படி ஏற்றுக் கொள்ளாதிருக்க முடியும்?

 

ஒரு கிறிஸ்தவனாக மாறுதல்

 

சத்தியத்தைக் குறித்த உறுதி இல்லாதவர்களாக நீங்கள் இருந்தால், பின்வரும் ஜெபத்தை தேவனிடம் கூறுங்கள்: "தேவனே, தயவுசெய்து எனக்கு சத்தியத்தை வெளிப்படுத்தும். தவறாக இருப்பதை கண்டுகொண்டு அதை தள்ளிவிட உதவும். இரட்சிப்புக்கான சரியான வழிக்கு நேராக என்னை நடத்தும்." இப்படிப்பட்ட ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுப்பார்.

 

இயேசுவை உங்கள் இரட்சகராக நம்பும்படிக்கும், அவரைப் பின்பற்றவும் தேவன் உங்களை நடத்துவாரெனில், இயேசுவின் மூலமாக வரும் இரட்சிப்பை தேவனிடம் கேளுங்கள்.. இங்கே ஒரு மாதிரி ஜெபம் தரப்பட்டிருக்கிறது.

" தேவனே, நான் எனது பாவத்தை நேசிப்பதையும், எனது சொந்தக் கிரியைகளின் மூலம் சொர்க்கத்திற்கு சென்றடைய முயற்சிப்பதையும் விட்டுவிடுகிறேன். எனது பாவங்களுக்காக மரிக்கும்படி இயேசுகிறிஸ்துவை அனுப்பினதற்காகவும், அவரை மரித்தோரிலிருந்த்து உயிரோடெழுப்பினதற்காகவும் நன்றி. இயேசுவை நான் எனது சொந்த இரட்சகராக நம்புகிறேன். ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன், என்னை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்!"

thanks-Gotquestion.org
GLORY TO GOD


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard