இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியை விரட்ட ஆலோசனை தேவை!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
ஆவியை விரட்ட ஆலோசனை தேவை!
Permalink  
 


நான் அறிந்த ஒரு கிறிஸ்த்தவ ஸ்திரிக்கு அவர்கள் 
வீட்டில் உள்ள வேலைகளை  சரியாக வேலை செய்ய முடியவில்லை. எப்பொழுதும் சோர்வு பெலகீனம் 
அதனால் அடிக்கடி அவர்கள் வீட்டில்  சண்டை சச்சரவு உண்டானது. எனவே அந்த ஸ்திரி  "நான் சாக வேண்டும், யார் யாருக்கெல்லாமோ சாவு வருகிறது எனக்கு சாவு வரவில்லையே"  என்று அடிக்கடி புலம்புவதை நான் கேட்டதுண்டு. 

நான் என்னால் முடிந்தவரை அவர்களுக்காக பலமுறை இறைவனிடம் மன்றாடி ஜெபித்தும் முழுமையான விடுதலை  எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அந்த ஸ்திரி ஒரு தரிசனம் கண்டதாக கூறினார். அதாவது ஏதோ ஒரு பெண் தன் கணவனுடன் சண்டைபோட்டு கொண்டே ஓடிவந்து பக்கத்தில் இருந்த ரயில்வே டிராக்கில் வந்து, அங்கு வந்த ரயிலில் வேண்டுமென்றே  விழுந்ததாக பார்த்ததே அந்த தரிசனம்.

சாவை விரும்பும் இந்த பெண்ணும் அந்த ரயில்வே டிராக்கை அடிக்கடி கடந்து போவது வழக்கமாம்! எனவே அந்த மரித்து போன பெண்ணின் ஆவிதான் இந்த பெண்ணை பிடித்திருக்கிறது  என்பதை அறிந்து நானும் இயேசுவின் நாமத்தில் கடுமையாக போராடி இறைவனிடம் பிரார்த்தித்தேன். ஜெபித்த உடன் அவர்களுக்கு நல்ல விடுதலை கிடைக்கிறது, நன்றாக பேசி சகஜ  நிலைக்கு வந்துவிடுகிறார்கள், ஆனால் ஓரிரு நாளில் மீண்டும் அதே பழைய நிலைக்கு திரும்பிவிடுகிறது. 

"உன்னை கொல்லாமல் நான் போகமாட்டேன்" என்றுவேறு சொல்கிறதாம் அந்த ஆவி.

அந்த ஆவியை அந்த ஸ்திரியினுள் வரவே முடியாமல் விரட்டுவதற்கு எதாவது வழி இருக்கிறாதா?
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.நேசன் அவர்களே!!!

சரியாக அடையாளம் காணாமல் எந்த பிசாசையும் விரட்டவே முடியாது..

மரித்தவர்களின் கிரியை பூமியில் இல்லை வேதம் தெளிவாய் சாட்சி தரும்போது  சினிமாடிசாக நாம் செத்தவர்களின் ஆவி என அசுத்த ஆவியை  எண்ணிகொள்ளுகிற  
காரியம்  பிசாசு உருவாக்கும் மாயை தான் ..


பிரசங்கி 9:6 சூரியனுக்குக் கீழேசெய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு
இனி என்றைக்கும் பங்கில்லை.

ஆவி சரீரத்தில் இருந்து மரித்து பிரிந்து, உயருடன் உள்ள மற்றவரை சேர்ந்து கொள்ள முடியும் என்றால் ஏன் மரித்த உடலிலேயே சேர்ந்து கொள்ள கூடாது..
சிந்தியுங்கள்..

இறந்தவர்களை போல மாய்மாலம் செய்யும் அசுத்த ஆவிகள் இவை..இவைகளை பகுத்தறியாமல் நாம் தவறாய் எண்ணம் கொள்ளும்போது அவைகளை விரட்டும் காரியம் பலன் தராது தான்..

செத்தவர்களின் ஆவிகளை போல இத்தகைய ஆவிகள் பாசாங்கு செய்து நடிக்க காரணங்கள் பின்வருவன...

  1. மேற்கூறியவாறு பாசாங்கு செய்து குழப்பத்தை உண்டாக்கி  இருக்கிற இடத்தில் தொல்லைல்லாமல் இருக்க
  2. தவறான , தகாத விசுவாசத்தில் குடும்பத்தினரை இட்டு செல்ல
  3. கிரியைகள் அற்ற விசுவாசங்களை தகர்த்து போட
  4. பயத்தை ஏற்படுத்தி புது புது பிரச்சனைகளை உண்டாக்க வேறென்ன...


சகோதரர் நேசன் அவர்களே..

தங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டு உபவாசத்தோடு அவர்களின் தலையில் கை வெய்து நம் எஜமானான இயேசுவின் நாமத்தில் விரட்டுங்கள்.
பிசாசுடையவைகள் அப்பெண்மணியிடத்தில் இனி திரும்பாதபடி உபதேசியுங்கள்.

 
சாட்சியை தலத்தில் பதியுங்கள்..நானும் இக்காரியதிர்க்காக ஜெபிக்கிறேன்..


யோவான் 14:30 இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

பிசாசுக்கு கொடுக்க நம் நாதருக்கும் ஒன்றும் இல்லை..ஆகவே தான் சரீரத்தில் இருக்கும் போதே பிசாசுகளை ஓடவிட்டார்!!!

பிசாசுக்கு நம் வாழ்வில் கொடுக்க ஒன்றும் இல்லாமல் இருந்தால் தான் நாமும் கூட பிசாசுகளை ஓட்ட முடியும்... 

தேவாதி தேவனுக்கு என்றைக்கும் மகிமை உண்டாகுக!!!
-----------------------------------------------------------------------------
I யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.-- Edited by JOHN12 on Monday 25th of June 2012 03:40:12 PM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

பலீவினமான ஒருவரிடத்தில் உள்ள ஆவியினை விரட்டுவது கடினம். காரணம் அந்த அம்மையாரின் துன்பத்திற்கு ஆவிகள் மட்டும் காரணம் அல்ல அவர்களின் மன குழப்பமும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தகைய ஆவிகளை விரட்ட வேண்டும் என்றால் அந்த அம்மையரை பிடித்துள்ள அந்த ஆவி ஆன்மா சாந்தி அடைய வேண்டும். அதற்கு அந்த அம்மையாரை பிடித்துள்ள அந்த ஆவி எத்தகைய சூழ்னிலையில் இந்த உலகை விட்டு நீங்கியது என்பதை நாம் என்னி பார்க்க வேணடும். அவர் கணவரிடத்திலே அவர் (இறந்தவரின் ஆவி) அன்பை எதிர் பார்த்துள்ளார் அது கிடைக்காத போது அவர் தற்கொலை செய்து கொண்டார். இப்பொழுதும் அந்த ஆவி அதைதான் எதிர் பார்கிறது. அந்த ஆவியால் பாதிக்கப்பட்ட அந்த பெண்னின் கணவர் அவரிடத்திலே அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர் கணவரிடத்திலே அந்த அன்புகிடைக்காவிட்டால். அவர் சிறிது காலம் அவரின் தாய், தந்தையாருடனாவது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஆவியை விரட்ட முடியும்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard