மத்தேயு மார்கு லூக்கா மூவரும் இந்த வார்த்தையை குறித்து
தவறாமல் எழுதிவைத்துள்ளனர், எனவே இவ்வார்த்தைகள் மிக முக்கியமான வார்த்தைகள் என்று நான் கருதுகிறேன்.
.
இந்த வசனத்தின் நேரடி பொருள் அல்லது உலகப்பிரகாரமான பொருள் என்னவென்று பார்த்தால்:
"பணம் பொருள் அல்லது சொத்து உள்ளவன் எவனோ அவனுக்கு மேலும் மேலும் அதிகமாக கொடுக்கப்படும் அவன் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு பரிபூரணம் அடைவான் ஆனால் இல்லாதவனிடம் இருந்தோ உள்ளதும் பிடுங்கிகொள்ளப்படும் அல்லது எடுத்துக் கொள்ளப்படும் அவன் ஒரேயடியாக ஓட்டாண்டியாகி ஒன்றுமில்லாமல் போவான்" என்பது போல் உள்ளது.
.
இதற்க்கு இசைந்தால் போல் இன்று பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் மேலும் மேலும் சொத்து சுகங்களை வாங்கி குவிப்பதை பார்க்க முடிகிறது. அதிக பணம் வைத்திருப்பவர்கள் அதை நல்ல இடங்களில் முதலீடு செய்து மேலும் மேலும் பணத்தையும் சொத்தையும் பெருக்குகிறார்கள் இல்லாத ஏழைகள் கையில் உள்ளதெல்லாம் பிடுங்கபட்டு உள்ளவர்கள் கையில் போய் சேர்வதை நாம் பார்க்கலாம்.
.
இது நடைமுறை உண்மையாக இருந்தாலும் ஆனடவரால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளின் ஆவிக்குரிய பொருள் வேறாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்
.
இந்த வசனத்த்துக்கு பல்வேறு விதமான வியாக்கீனங்களை நாம் கேட்டிருக்கலாம் அதில் நாம் அறிந்த புரிந்த விதத்தை இங்கு பதிவிட்டால் ஆண்டவர் சொன்னதன் உண்மையான பொருள் என்னவென்பதை அறியும் வாய்ப்பு ஏற்ப்படலாம் என்று கருதுகிறேன்.
.
சரியான விளக்கம் தெரிந்த சகோதரர்கள் தங்கள் விளக்கங்களை பதிவிடலாமே.
-- Edited by SUNDAR on Saturday 23rd of June 2012 11:02:57 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மாற்கு 4:25உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
மிகுந்த ஏழையாக இருந்து அதிக பணம் சம்பாதித்து பணக்காரன் ஆகியவனும் உண்டு அதேபோல் ஒரு காலத்தில் ஓஹோ என்று கொடிகட்டி வாழ்ந்தவர்கள் இன்று உலகத்தில் ஒன்றும் இல்லாமல் இருப்பதும் உண்டு. அப்படிபட்ட அநேகரை நான் என் வாழ்வில் பார்த்துவிட்டேன். எனவே பணம் பொருளை குறித்து ஆண்டவராகிய இயேசு இந்த வார்த்தையை சொல்லவில்லை என்றே நானும் கருதுகிறேன்.
இந்த வசனத்துக்கு ஆவிக்குரிய விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கலாமே.
சகோ. அன்பு அவர்கள் தொடுப்பு கொடுத்துள்ள தளத்தில் சென்று பார்த்தபோது மிக அருமையான விளக்கங்களை பார்க்க முடிந்தது.
ஆண்டவராகிய இயேசு சொன்ன இரண்டு உவமைகளாகிய வெளியூர் போகும் எஜமான் தன் ஊளியக்காரனிடம் கொடுத்த 10௦,5,1 தாலத்து மற்றும் ராத்தல், அந்த தாலந்தை கொண்டு இருவர் சம்பாதித்தது ஒருவன் சம்பாதிக்காமல் அப்படியே புதைத்து வைத்தது.
இதன் அடிப்படையில் முயற்சி செய்தவன் சம்பாதித்தான் முயற்சி இல்லாமல் புதைத்து வைத்தவன் உள்ளதையும் இழந்துபோனான் என்று விளக்கியதோடு, தன்னிடம் என்ன தாலந்து இருக்கிறதோ அதைகொண்டு மேலும் முயர்ச்சி செய்கிறவனுக்கு அதிகம் கொடுக்கப்படும். முயற்சி செய்யாதவனுக்கு உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்" என்ற விளக்கமும்.
அதை தொடர்ந்து ஆவியை பெற்ற கிறிஸ்த்தவர்கள் மேலும் மேலும் முயர்ச்சிக்கும்போது இன்னும் அதிகமாக ஆவியின் வல்லமையை பெறமுடியும் என்றும் ஆவியை பெற்ற கிறிஸ்த்தவர்கள் தேவனை தேடும் முயர்ச்சியில்லாமல் இருக்கும்போது அவர்கள் அருளப்பட்டதையும் இழந்து போவார்கள்" என்பது போன்ற விளக்கம் தந்துள்ளார்கள். நன்றி.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)