இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் ஊழியர்கள் பற்றிய கருத்து.
இந்த உலகில் இயேசுவை முகமுகமாக தரிசிப்பது குறித்து... [6 vote(s)]

முற்றிலும் உண்மை நிச்சயம் தரிசிக்க முடியும்
16.7%
இருக்கலாம் ஆனால் எனக்கு அந்த அனுபவம் இல்லை
66.7%
மகிமையடைந்த இயேசுவை சாதாரண மனுஷன் பார்க்க முடியாது
0.0%
இயேசுவை முமுகமாக தரிசித்தேன் என்று சொல்வதில் உண்மையில்லை
0.0%
இதுகுறித்து எனக்கு கருத்துசொல்ல முடியவில்லை
16.7%


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் ஊழியர்கள் பற்றிய கருத்து.
Permalink  
 


நான்  முழுமையாக நம்பவும் முடியாமலும்  அதே நேரத்தில் நிராகரிக்கவும் முடியாமலும் இருக்கும் காரியங்களில் ஓன்று பல இறை ஊழியர்கள் இயேசுவை முகமுகமாக கண்டேன் என்று சொல்லும் சாட்சிகளே.
 
நம் அருமை இரட்சகராகிய இயேசு மரித்து பரம் ஏறுவதற்கு முன்னர்  மரியாள், சீஷர்கள் மற்றும்  பலருக்கு தரிசனம் ஆனார் என்று வேதம் சொல்கிறது. இறுதியில் பவுலுக்கும் தரிசனம் ஆகியுள்ளார் என்றும் வேதம் நமக்கு தெரிவிக்கிறது.

 
I கொரி 15:கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, 5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

6. அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
7. பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
8. எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்

அதிலும் மரித்து உயிர்த்த பின்னர் பவுலுக்கு ஒளி வடிவத்தில் தரிசன்னமாகி குரலை மட்டும்தான் அறிய தந்தார் முகமுகமாக தரிசனம் ஆகவில்லை.    

பரம் ஏறியபிறகு, ஸ்தேவன் மரிக்கும் தருவாயில் பிதாவானவர் வலது  பாரிசத்தில் இயேசுவை காண்கிறார்.   

அப்போஸ்தலர் 7:55 அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு;
அப்போஸ்தலர் 7:56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

இறுதியாக யோவான் ஆவிக்குள்ளான நிலையில் மகிமையடைந்த நிலையில் இயேசுவை காண்கிறார்:

வெளி 13. அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

வேறு யாருக்கும் இயேசு முகமுகமாக தரிசனமானது போல் தெரியவில்லை.  இவ்வாறு இருக்க, இன்றைய பல ஊழியர்கள் இயேசுவை முகம் முகமாக காண்பதாகவும் அவர்களோடு கூட இந்த உலகில்  அமர்ந்து உலகத்தை பற்றிய சில திட்டங்களை தீட்டுவதாகவும் பிரசங்கிப்பதை கேட்கமுடிகிறது. 

இதை குறித்து தள சகோதர/சகோதரிகளின் கருத்து அல்லது அனுமானம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.  


 -- Edited by Nesan on Wednesday 25th of July 2012 03:17:55 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
RE: இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் ஊழியர்கள் பற்றிய கருத்து.
Permalink  
 


இயேசுவானவர் தரிசனமாக கூடியவர் தான்.. சகோ.நேசன் குறிபிட்டபடி இதற்கான சான்றுகள் வேதத்தில் உள்ளன..

ஆனால் யாருக்கு,எப்படியானவர்களுக்கு,எம்மாதிரியான சூழ்நிலையில் அவர் தரிசனமாகிறார் என்பதையும் வேதத்தின் சாட்சிகளை கொண்டு அறியமுடிகிறது..

பொதுவாக பரிசுத்தம் இல்லாமல் மகிமையின் ராஜாவாய் பரத்தில் இருக்கும் இயேசுவை தரிசிக்க இயலாது.(இவ்வுலகத்தில் நம்மில் ஒருவராய் வாழும்போது வேண்டுமானால் தரிசித்திருக்கலாம் ). சிலர் கற்பனைக்கும்,நிஜத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் பிதற்றவும் செய்கிறார்கள்.. சிலர் இதை கொண்டு வயிறு வளர்க்கிறார்கள்..(எப்படியோ சுவிஷேசம் வேடதாரிகளாலும் சொல்லபடுகிறதே!! அல்லேலூயா!!)

இயேசுவானவர் தரிசனமாககூடியவர் தான்.பிதா அதறிசனமானவர்.குமாரன் அவரை வெளிபடுதுகிறவர் தான் .ஆனால் தரிசித்தேன் என கூறும் நபர் எதற்காக,யாருடைய பக்தி விருதிக்காக இவைகளை பேசுகிறார் என நிறுத்தி பார்க்கவேண்டும். முகம் சுளிக்கவேய்க்கும் இடங்களில் இத்தகைய அனுபவங்களை பெசாதிருந்தாலே  இன்றைக்கு அனேகரது பக்தி விருத்திக்கு வழிகோலும்.. ஆகவே நம்பகரமாக: வேதத்தில் உள்ள சாட்சிகளை மாத்திரம் இடரலில்லாமல்  கை கொள்ளுவோம்.

நானும் சொந்த வாழ்கையில் தேவமுகத்தை தேடுகிறவன் தான்.. ஆனாலும் கர்த்தர் போல் தன்னை காண்பிக்க முனையும்  பிசாசின் மாய்மால தரிசனங்களில் இருந்து தேவன் என்னை காத்தார்..

கற்பனைகளை கைகொண்டு அவர் சாயலாய் மாறி அவரை தரிசிக்க ஆலோசனை கர்த்தர் எண்ண அலைகளில் பேசினார்..

கர்த்தருக்குள், சபைக்குள் இருக்கிற என்னால் எவ்வாறு தேவனுடைய முழு சபையாகிய அவர் சரீரத்தையும், அவரது கண்ணை என்மீது வைத்து விட்டதால் அவரது முகத்தையும் எவ்வாறு தரிசிக்க இயலும் என்கிற கேள்வி இப்போதும் அடியேனுக்கு உண்டு..

அன்பு தேவன் ...தாகமாய் தேடுகிரவர்களுக்கும் ,தம் வீட்டில்  உத்தமமாய்  நடக்கும் தம் தாசர்களுக்கும்  தம்மை மறைக்கிறவர் அல்ல.. கர்த்தர் நிச்சயம் வெளிபடுவார்..வெளிபடுத்துவார்..

கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1998
Date:
இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் ஊழியர்கள் பற்றிய கருத்து.
Permalink  
 


மனுஷ குமாரனாக பூமிக்கு வந்து மகிமையடைந்த நிலையில் இருக்கும் ஆண்டவராகிய  இயேசுவை ஆவிக்குள்ளான நிலையில்  தரிசிக்க முடியுமே யன்றி முக முகமாகதரிசிப்பது நடக்கிற காரியம்போல் எனக்கு  தோன்றவில்லை.
 
அதாவது கண்களை மூடி ஜெபிக்கும்போதோ அல்லது அவரை காணவேண்டி தொடர்ந்து தியானத்தில் இருக்கும்போதோ  ஆவிக்குரிய கண்களால்
அவரை தரிசிக்க முடியும் என்று நம்புகிறேன். யோவானும் அவ்வாறே தரிசித்தார்.
.
வெளி 1:10 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; 13 மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
 
மேலேயுள்ள வசன அடிப்படையோடும்  மிகுந்த நம்பத்தகுந்த சாட்சிகளின் அடிப்படையில் இந்த கருத்தை தெரிவிக்கிறேநேயன்றி எனக்கு அந்த அனுபவம் இல்லை.
.
பொதுவாக இந்த விஷயத்தில் ஆம் என்றோ இல்லை என்றோ என்னால் முடிவான கருத்து சொல்ல என்னால் முடியவில்லை.
.
போதிய அனுபவம் இல்லாமல் யாரையும் தவறானவர்கள் என்று தீர்க்கவும் நான் விரும்பவில்லை.
   


-- Edited by SUNDAR on Saturday 28th of July 2012 10:46:12 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் ஊழியர்கள் பற்றிய கருத்து.
Permalink  
 


இந்த தளத்துக்கு அன்றாடம் சுமார் 70-80௦ அன்பர்கள் வந்து செல்கிறார்கள் அனால் இந்த திரியில் பங்களிப்பு கொடுத்தவர்கள் வெறும் 4 பேர்கள்தான்.

கருத்துக்கணிப்பு நடத்தி அதன் மூலம் ஒரு சரியான முடிவுக்கு வரலாம் என்று நான் எண்ணியது ஒரு தவறான கணிப்பு போலும்.
எப்படியேனும் சகோதரர் ஜான்12  அவர்கள் மூலம் சில நல்ல தகவல்கள் கிடைத்துள்ளது நன்றி.
 
பங்கெடுத்தவர்கள் எடுக்காதவர்கள்  ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.
தளத்துக்கு வரும் சகோதர சகோதரிகள் தொடர்ந்து தங்கள கருத்துக்களை முன்வைக்கலாம்.  
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1998
Date:
இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் ஊழியர்கள் பற்றிய கருத்து.
Permalink  
 


/////இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் ஊழியர்கள் பற்றிய கருத்து///
 
தலைப்பு  பற்றிய இந்த விஷயத்தில் எனக்கு "ஜாமக்காரன் புஷ்பராஜ்" அவர்கள் மீது சற்று வருத்தம் உண்டு. 
 
சில பல காரியங்களையும் பல ஊழியர்களிடம் உள்ள குறைகளையும் சரியாக சுட்டிகாட்டி எழுதும் அவர்கள் "இயேசுவை  தரிசிப்பது" மற்றும் வெளிப்பாடு/ தரிசனம் போன்ற காரியங்களை முற்றிலும் தவறு/ கள்ளத்தனம் என்பதுபோல் எழுதி வருகிறார்கள்.
 
இயேசுவை தரிசிக்க முடியும் என்பதை ஸ்தேவானின் அனுபவம் மூலமும், பவுலின் அனுபவம் மூலமும்  வேதம் திட்ட வட்டமாக தெரிவிக்கிறது.  அதுபோல் மூன்றாம் வானம்வரை எடுத்து கொள்ளமுடியும் என்பதை பவுல் மூலமாகவும், நடக்கபோகும் அனைத்தையும் தரிசனமாக பார்க்கமுடியும் என்பதை யோவான் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 
 
அவர்களுக்கு வெளிப்படுத்திய தேவன் நமக்கு வெளிப்படுத்த மாட்டாரா என்ன? வாஞ்சையோடும் குழப்பத்தோடும் கேட்பவர்களுக்கு ஆவியானவர் நிச்சயம் வெளிப்படுத்துவார்.
 
சிலர் "நான் இயேசுவை அறியவில்லை எனவே இயேசு என்று யாரும் பூமியில் பிறக்கவில்லை" என்று சொல்வதுபோல், "நான் எந்த தரிசனமும் பார்க்கவில்லை, எனக்கு எந்த வெளிப்படும் இல்லை  எனவே தரிசனம் என்று எதுவும் இல்லை, வெளிப்பாடுகள் எல்லாம் பொய்" என்பதுபோல் எழுதி அனேக ஊழியர்களை குற்றம் சாட்டுவது முறையானது அல்ல.
 
ஆகினும்  தரிசனத்தையும், வெளிப்பாட்டையும் காரணம் காட்டி பணம் பிடுங்கும் ஊழியர்கள் விஷயத்தில், அவர்கள் சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்று அராய்ந்து பார்த்தால் அவசியம் என்பதையும்  மறுப்பதற்கில்லை.
 
நான் பரலோகத்தை பற்றி எந்த தரிசனமும் பார்க்கவில்லை, அதபோல் இயேசுவைகூட  இதுவரை நான் தரிசனத்தில் பார்க்கவில்லை! அனால் நான் பாதாளத்தையும் நரகத்தையும் ஆத்தும கண்களில் என் இருதயத்துக்குளாக போய் பார்த்து அங்குள்ள வேதனையை அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.
 
இந்த அனுபவம் எனக்கு இன்னும் பரிசுத்தமாக வேண்டும் என்ற உத்வேகத்தைதான் தந்ததேயன்றி அதை சொல்லி  யாரிடமும் பணம் கேட்கும் அவசியம் எழவில்லை. அங்கு போகாமல் யாரையும் தடுக்க பணம் உதவவும் செய்யாது. உண்மையை சொன்னால் அந்த தரிசனங்களால் இன்றுவரை நான் "யாரும் அந்த வேதனையான இடத்துக்கு போய்விட கூடாது" என்ற ஏக்கமும் மனபாரமும்தான் என்னை ஆட்டிக்கொண்டு இருக்கிறது .
 
எனவே அன்பானவர்களே!  நாம் காணும் எந்த தரிசனமோ அல்லது நமக்கு வெளிப்படுத்தபட்ட எந்த வெளிப்பாடோ  நம்மை பரிசுத்த வாழ்வுக்கு நேராக  தேவனுடைய வழிகளில் சரியாக நடக்க உதவுமானால் அது நிச்சயமாக தேவனால் உண்டானதுதான் என்பதை அறியவேண்டும். கண்மூடி தனமாக எல்லா வெளிப்பாட்டையும் தரிசனத்தையும் குறை கூறுதல் உகந்ததல்ல.    
 


-- Edited by SUNDAR on Thursday 27th of September 2012 09:20:50 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
RE: இயேசுவை முகமுகமாக தரிசிக்கும் ஊழியர்கள் பற்றிய கருத்து.
Permalink  
 


இந்த கடைசி காலங்களில் இயேசுவை தரிசித்ததோடு  மட்டுமல்ல நேசன் அண்ணா " (ஒருவரும் கண்டிராத) பிதாவை பார்த்தவர்களும், இயேசுவோடு/ மோசேயோடு சேர்ந்து மீட்டிங் போட்டு ஆலோசனை நடத்திய பெரிய பெரிய ஊழியர்களும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
 
இன்னும் ஒருபடி மேலே பொனானல் இயேசுவின் வருகையை கேமரா முலம் படம் எடுத்து டிவி யில்  காண்பிக்கபோகும் சாது ஐயா அவர்களின் ஊழியமும் அரியவகையை சேர்ந்ததுதான்.
 
ஒரு முறை ஆலன் பால் அவர்கள் காரில் போகும்போது "பிதா / குமாரன் / பரிசுத்த ஆவி மூவரையும் தரிசித்ததாக ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை 
படித்ததாக ஞாபகம். 
 
எனக்கு போதிய அனுபவம் இல்லாததால்  எந்த முடிவுக்கும் வர முடியவில்லை ஐயா.
==========================================================================================================================================   


__________________


இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

எல்லாவற்றையும் முடித்துவிட்டு பரமேரினார் சிறிய காரியங்களுக்கு வரவேண்டிய அவசியம் என்ன நாம் விசுவாசத்தினால் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும் போது
பொது கூட்டங்களிலே சில போதகர்கள் அடிக்கடி இயேசு இங்கிறுக்கிறார் / மேடையில் / உங்கள் அருகில் நிற்க்கிறார் /என்பது சந்தேகத்திற்குரியதே
நமது விசுவாசமே உலகத்தை ஜெய்க்கும் ஜெயம்
(மேலும் மறைவானவை கர்த்தரக்கே உரியவை )

ஆனால் தரிசனத்தில் பெரும்பாலும் வர வாய்ப்பிருக்கிறது

நான் ஓருமுறை கனவிலே கண்டிருக்கிறேன் முகத்தை சரியாக பார்கேமுடியவில்லை அவர் எதுவும் பேசவுமில்லை
அது சராசரி கனவில்லை

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard