இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காதல் திருமணம்


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
காதல் திருமணம்
Permalink  
 


பெற்றோர்களால் தீர்மானிக்கப்படும் திருமணம் நல்லதா அல்லது காதல் திருமணம் நல்லதா ? இதற்கு வேதாகமம் தரும் பதில் என்ன ?



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரி..


          கர்த்தர் நம் தகபபனாய் இருப்பதால் அவர் சித்தபடியான திருமணமே சிறந்தது.. அவர் சித்தம் பெற்றோர்களால் வெளிப்படுமானால் பெற்றோற்றால் நிச்சயிக்கப்படும் திருமணம் நல்லது.. அவ்வாறில்லாவிடில் தேவ திட்டபடியான காதல் திருமணமே நல்லது.. ஆனால் இவைகள் தேவனால் தான் நிர்ணயிக்கபடுகிறது என்கிற அறிவு இல்லாவிடில் சரியான தேவ ஊழியரின் ஆலோசனையை கேட்டு பெற்றோருக்கு இக்காரியத்தில்  கீழ்படிவதே நல்லது..  
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!


-- Edited by JOHN12 on Wednesday 1st of August 2012 01:55:47 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

பெரியோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமே சிறந்தது என்பது எல்லோரும் ஏற்கும் ஒரு கருத்து. ஆகினும் காதல் திருமணத்தை வேதாகமம் தடை செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன்.
.
ஈசாக்கு / ரெபாக்காள்  திருமணம் பற்றிய செய்தியை வேதத்தில் சற்று நிதானமாக படித்தால் அதில் அனேக காரியங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். ஈசாக்கின் தகப்பனாகிய ஆபிரஹாமின் திட்டப்படி திருமணம் நடைபெற்று  அவர்களால் ஒரு சிறப்பான வாழ்கை வாழ முடிந்தது.  
 
ஆதியாகமம் 24:67 ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். 
.
அதாவது ஈசாக்கு திருமணத்துக்கு பின்னர் தான் மனைவியை நேசித்துள்ளார்.  இந்த திருமணமானது மனுஷர்களால் தீர்மாநிக்கபட்டு நடந்தது போல தெரிந்தாலும் அது உண்மையில் கர்த்தாராலேயே நடந்தது.
இந்த திருமணம்  மூலம் நான் அறிந்துகொண்ட மூன்று  முக்கியமான உண்மைகள்:

1. தேவன் தன் பிள்ளைகளுக்கான துணையை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

ஆதியாகமம் 24:7 தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒருபெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
 
என்ற வார்த்தைகளின்படியே தேவன்தாமே நேர்வழியாக ரேபக்காளின் வீட்டுக்கு வேலைக்காரனை கொண்டு சென்றதோடு அவன் மன விருப்பபடியே சரியான பெண்ணை அவர் ஏற்கெனவே ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.

2. சரியான துணை கிடைத்துவிட்டால் வேறொரு பெண்ணின்மேல் நாட்டம் வராது!   

தேவ வழி நடத்துதலின்படி தேவன் ஒருவர்னுக்கு நியமித்த  சரியான பெண்ணை அவன் திருமணம் செய்துவிட்டால் அதன் பின்னர் அவனுக்கு வேறொரு பெண்ணின் மேல் நாட்டம் வர வாய்ப்பில்லை. 
பொறுமையாக தேவனின் நடத்துதலுக்கு தங்களை விட்டு கொடுத்த எவருக்கும் தேவன் குறைவானதை தருவதேயில்லை!  

ஆதி 24:16. அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்;
அவள் ரூபவதி மட்டுமல்ல "மகா ரூபவதி"!  மேலும் இதில் உள்ள சிறப்பு என்னவெனில் "தனது தகப்பன் மற்று கர்த்தர்" இணைத்து பார்த்து கொடுத்த அந்த பெண்ணை திருமணம் செய்தபின்னர் அவன் தகப்பனாகிய ஆபிரஹாம் போலோ அல்லது அவனது மகனாகிய யாக்கோபு போலோ அல்லது அவன் பேரனாகிய யூதாபோலோ வேறு ஸ்திரிகளை தொட்டதாககூட  வேதத்தில் எங்கும் பதிவில்லை. 
  
3. ஒருவர் தந்தை தாய்க்கு கீழ்படிந்து செயல்படுவதன் மூலமே தேவன் அங்கு செயல்பட முடியும்!

ஆம்! சரியான வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே தேவன் உதவிசெய்வார். மாறுபாடானவனுக்கு அவர் உதவி செய்வதில்லை.   

நீதி 17:20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை;
 
ஈசாக்கு / ஏசா  என்ற இரு சகோதரர்களை எடுத்துகொண்டால் ஏசா தன் தந்தை தாய்க்கு பிடிக்காத ஒரு திருமணத்தை செய்திருந்தான் என்பதை 
வசனங்கள் மூலம் அறிய முடிகிறது.  
  
ஆதியாகமம் 26:34 ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.

இந்த வசனத்தை பார்த்தால் எடுத்த எடுப்பில் அவன்  இரண்டு மனைவிகளை விவாகம் பண்ணியதுபோலவும் அவனே தன் காரியங்களை முடிவு செய்தது போலவும் தெரிகிறது. எனவே அவன் தேவனிடம் மேன்மையடையாமல் போனான் என்றே கருதமுடிகிறது.

எனவே நமது  கண்ணுக்கு பிரியமான  பெண்ணை நாமே தேர்வு செய்வதைவிட  தந்தை தாய் மற்றும் பெரியவர்கள் பார்த்து அமைத்து கொடுக்கும் திருமணமே சிறந்தது என்பது என்னுடைய கருத்து. 

ஆகினும்  யாக்கோபு/ ராகேல்  மற்றும் தாவீது/ மீகாள் போன்றவர்களின்  காதல் திருமணத்தையும் வேதம் அங்கீகரிக்காமல் இல்லை.அதைப்பற்றிய செய்திகளை கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து பார்க்கலாம்..... 


-- Edited by SUNDAR on Wednesday 1st of August 2012 09:44:20 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

சுந்தர் அண்ணா இந்த பதிவின் தொடர்ச்சியை எழுதுங்கள். அறிய விரும்புகிறேன்.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.

பெற்றோர்களால் தீர்மானிக்க பட்டதோ அல்லாதோ தாங்களோ முடிவு செய்ததோ என்பது முக்கியமல்ல.அது தேவனுடைய சித்தத்தின்படி இருப்பதே மேன்மையானது.

ஏனென்றால் நம்முடைய இருதயம் வேத வசனத்தின்படி மனுஷனுடைய இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது. எனவே அது எப்போதும் நம்மை தேவனை விட்டு பாவத்திற்கே இழுத்து கொண்டு போகிறது.

அதைக்காட்டிலும் நம்முடைய் கண்கள் எல்லாவற்றையும் இச்சிக்கிறது. அதினால் ஒருநாளும் நாம் எந்த ஒன்றையுமே இசையோடு பார்க்கிறது.

உன் கண் தெளிவாய் இருந்தால் உன் சரிரம் முழுவதும் வெளிச்சமாய் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது .
எனவே நம்முடைய கண்களுக்கு பிரியமாய் காணபடுகிறது பின் நாட்களில் பிரியம் இல்லாமல் போகலாம்.

எனவே காதல் அன்பு என்று எண்ணி ஏமாந்து போகாமல் என் தேவானால் எனக்கு நியமிக்கப்பட்டது எதுவோ அதுவே எந்நாளும் மேன்மையானது... சிறந்தது என்பது என்னுடைய கருத்து.



-- Edited by Stephen on Thursday 29th of November 2012 10:42:04 PM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

பதிவின் தொடர்ச்சியை எழுதுங்கள்

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 


பதிவின் தொடர்ச்சியை எழுதுங்கள்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதரர்  ஸ்டீபன்  மிக அருமையாக 
பெற்றோர்களால் தீர்மானிக்க பட்டதோ அல்லாதோ தாங்களோ முடிவு செய்ததோ என்பது முக்கியமல்ல.அது தேவனுடைய சித்தத்தின்படி இருப்பதே மேன்மையானது. 
என்று தெளிவாக சொல்லிவிடடார். அதுவே மேன்மையானது.
 
அதாவது நாம் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் தேவனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்து ஜெபித்தால் மட்டும் போதும் காரியங்கள் ஏற்ற வேளையில் தானாக கைகூடி வரும்  நம்மை சூழ்ந்துள்ளவர்களே நம்மை தானாக தேவ சித்ததத்துக்கு ஏற்ற வழியில் கொண்டு செல்வார்கள்.
 
.என் வாழ்வில் அப்படித்தான் நடந்தது எல்லோரும் சேர்ந்து ஒரு பெண்ணை என் தலையில் கட்டி வைத்தார்கள். திருமணத்துக்கு முன் அவளை நேரில் கூட பார்த்தது கிடையாது.  கர்த்தர் காரியங்களை யார் மூலமோ நடத்தினார். 

அவளை போன்ற ஒரு பெண்ணை நான் எங்கு தேடினாலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Super anna.. God bless you

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard