இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விவிலியம் குறிப்பிடும் "பரதீசு" எங்கே இருக்கிறது?


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
விவிலியம் குறிப்பிடும் "பரதீசு" எங்கே இருக்கிறது?
Permalink  
 


இயேசுவானவர் சிலுவையில் தொங்கும்போது தனக்கு பக்கத்தில் தொங்கிய
மனம்திரும்பிய கள்வனை பார்த்து சொல்லும் விவிலிய வசனம்: 
    
லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்
 
இன்னொரு இடத்தில் இயேசுவானவர் இவ்வாறு சொல்கிறார்:
 
மத்தேயு 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
 
இந்த வசனத்தின்படி பார்த்தால் இயேசு மரித்தபின்னர் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருக்க வேண்டியது.   
 
ஆனால் கள்வனை பார்த்து   இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்" என்று சொல்கிறார்.
 
பரதீசு என்பது மூன்றாம் வானத்தில் இருக்கிறது என்பதுபோலவே இந்த வசனம் நமக்கு தெரிவிக்கிறது.
 
II கொரிந்தியர் 12:2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்
3. அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
 
இந்த "பரதீசு" எங்கே இருக்கிறது? பூமியின் இருதயத்தில அல்லது மூன்றாம் வானத்திலா?     


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1971
Date:
RE: விவிலியம் குறிப்பிடும் "பரதீசு" எங்கே இருக்கிறது?
Permalink  
 


Nesan wrote:
 இந்த "பரதீசு" எங்கே இருக்கிறது? பூமியின் இருதயத்தில அல்லது மூன்றாம் வானத்திலா?     

பரதீசு (Paradise) என்ற எபிரேய வார்த்தைக்கு "தோட்டம்" என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது மரம்  செடி கொடிகள் உள்ள  ஒரு இளைப்பாறும் இடம் என்று எடுத்துகொள்ளலாம்.  

இப்பொழுது இந்த  "பரதீசு" எங்கே இருக்கிறது என்று பார்த்தால்,  

லாசரு ஐஸ்வர்யாவான் உவமையில் மரித்த லாசரு ஆபிரஹாமின் மடி என்றொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக ஆண்டவராகிய இயேசு சொல்கிறார்.

லுக்:16 22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்;

அந்த இடத்தில் லாசரு தேற்றப்பட்டன் என்றும் வேதம் சொல்கிறது

25. அதற்கு ஆபிரகாம்: மகனே,.............. லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான்,

அனால் இந்த இடமானது  பாதாளத்தின் வேதனைப்படும் ஐஸ்வர்யவானால் பார்க்க முடிந்த ஒரு பகுதியாகவும், ஆனால் கடந்துபோக முடியாதபடி ஒரு "பெரும்பிளப்பு" மாத்திரமே இரண்டுக்கும் நடுவில் இருந்ததாகவும் இயேசு குறிப்பிடுகிறார்.

எனது கணிப்பு படி விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரஹாம் மரித்தபின்னர் தங்கியிருந்த மரித்த பரிசுத்தவான்கள்  தேற்றப்படும் இந்த இடமே பரதீசு என்று கருதுகிறேன்.

இந்த பரதீசும் பாதாளத்தின் ஒரு பகுதியாகவே பூமியின் இருதயத்தில் இருந்திருக்க வேண்டும் ஆண்டவராகிய இயேசு  மரித்த பின்னர் முதலில் பரிசுத்தவான்கள் இருந்த  இந்த இடத்துக்கு சென்றிருக்க வேண்டும். எனவேதான் கள்ளனிடம் இன்று என்னோடுகூட பரதீசில்  இருப்பாய் என்று சொல்லமுடிந்தது.  

ஆண்டவராகிய இயேசு சர்வலோக பாவத்துக்கும் மரித்தபின்னர் நடந்தது:  

சங்கீதம் 68:18 தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்;

எபேசியர் 4:9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

என்ற வசனங்களின் படி பூமியின் தாழ்விடங்களில் இறங்கிய இயேசு அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த  பரிசுத்தவான்களை மீட்டு உன்னதத்திற்கு கொண்டுசென்றார். அதன்பின்னர் கண்ட பவுலின் தரிசனப்படி, பவுல்  மூன்றாம் வானத்தில் பரதீசை பார்த்ததாக சொல்வதால், மரித்த 

பரிசுத்தவான்கள் இருந்த இடமும் அப்படியே மீட்கப்பட்டு மூன்றாம் வானமாக இருப்பதாக   கணிக்க முடிகிறது.
 
இது எப்படி சாத்தியம் என்று கேட்க வாய்ப்புண்டு:
 
அதற்க்கு நாம் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள இந்த வசனத்தை ஒரு உதாரணமாக எடுத்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்:
 
வெளி 21:10 பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
 
எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தில் இருந்து இறங்கி வர தேவன் செய்யும்போது இந்த பூமியின் இருதயத்தில் இருந்த இந்த பரதீசையும்  அங்கிருந்து  பரலோகத்துக்கு கொண்டு செல்ல தேவன் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார் என்று தீர்மானிக்கலாம்.   
 
(இதில் மாறுபட்ட கருத்துள்ளவர்கள் இருந்தால் மேலும் ஆழமாக தியானிக்கும்படி தங்கள் கருத்தை முன்வைக்கலாம்)
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 584
Date:
விவிலியம் குறிப்பிடும்
Permalink  
 


அதாவது பரதீசு மூன்றாம் வனத்தில் இருக்கின்றது என்று குறிப்பிடுகிறீர்களா?

மற்றும் பரிசுத்தவான்களை சிறைப்படுத்தி வைக்க காரணம் என்ன? அவர்களை சிறைப்படுத்தியது பிசாசா?

அதோடு தற்போது பரதீசு மூன்றாம் வானத்தில் இருக்கின்றதா? உன்னதத்திட்கு கொண்டு சென்றார் என்று நீங்கள்கு றிப்பிட்டது பரலோகமா?

தயவு செய்து சற்று விளக்கமாக விளக்கவும்


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 584
Date:
Permalink  
 

PLS EXPLAIN

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1971
Date:
RE: விவிலியம் குறிப்பிடும் "பரதீசு" எங்கே இருக்கிறது?
Permalink  
 


Debora wrote:

அதாவது பரதீசு மூன்றாம் வனத்தில் இருக்கின்றது என்று குறிப்பிடுகிறீர்களா?

மற்றும் பரிசுத்தவான்களை சிறைப்படுத்தி வைக்க காரணம் என்ன? அவர்களை சிறைப்படுத்தியது பிசாசா?

அதோடு தற்போது பரதீசு மூன்றாம் வானத்தில் இருக்கின்றதா? உன்னதத்திட்கு கொண்டு சென்றார் என்று நீங்கள்கு றிப்பிட்டது பரலோகமா?

தயவு செய்து சற்று விளக்கமாக விளக்கவும்


 

ஆண்டவராகிய இயேசு மனுஷர்கள் பாவத்துக்காக மரிக்கும் வரை யாருமே  பரலோகம் செல்ல முடியாத ஒரு நிலை இருந்தது எனவேதான் மரித்த பரிசுத்தவான்கள்  பூமியின் கீழ் ஒரு லோகத்தில் தூக்க நிலையில் சிறை வைக்கப்பட்டு இருந்தார்கள்.
 
 
ஏசாயா 57:2 நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
 
ஆண்டவராகிய இயேசு இவர்களையே மீட்டு கொண்டு சென்றார். 
 
 
அடுத்து பரதீசு பற்றிய முழு விபரம் எனக்கு தெரியாது சிஸ்ட்டர். வசன அடிப்படையில் சிலர் வெளிப்பாடு அடிப்படையில்  எனக்கு புரிந்ததை எழுதினேன். மேலும் விபரம் உங்களுக்கு தெரிந்தால் எழுதி தெரியப்படுத்துங்கள்.  

 

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 584
Date:
விவிலியம் குறிப்பிடும்
Permalink  
 


சரி அண்ணா ....

இந்த மூன்றாம் வானம் பூமியின் இதயமாக குறிப்பிடப்படுவதாக நாம் எடுக்க முடியுமா? மரித்த பரிசுத்தவான்கள் ஆரம்பத்தில் பரதீசில் இளைப்பாறினார்கள் அவர்களை இயேசு பரலோகத்திட்கு எடுத்து சென்றார். தற்போது மரிக்கும் பரிசுத்தவான்கள் பரலோகத்திட்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். இந்த புரிதல் சரியா?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 584
Date:
Permalink  
 

answer pls

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard