இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவமும் பாலியல் மார்க்கங்களும்


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
கிறிஸ்தவமும் பாலியல் மார்க்கங்களும்
Permalink  
 


கிறிஸ்தவமும் பாலியல் மார்க்கங்களும்

 

                        இன்று நாம் காணும் மார்க்கங்களான இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம்,  பௌத்தம் ஆகிய மதங்களை மண்ணுக்குரியவை என்றும் கிறிஸ்தவத்தை விண்ணுக்குரிய மார்க்கம் என்றும் கூறலாம். ஏனெனில் இம் மதங்களின் தலைமைப்பீடங்களான கைலாசம், துவாரகை, மெக்கா, மெதீனா, ரோமாபுரி, பௌத்தகாயா ஆகிய நகரங்கள் யாவும் இப்பூமியிலேயே இருக்கின்றன. இவற்றின் அடிப்படைக் கொள்கைகளாக பக்திச்சடங்குகளும் பாலியலும் பலதாரமணங்களுமே காணப்படுகின்றன. இம் மதங்கள் போற்றும் வீரர்களான சிவன், முருகன். கிருஸ்ணர் போன்றோர் பூமியில் வாழ்ந்த சாதாரண மனிதர்களே. இவர்கள் மன்மத லீலையில் மகிழ்ந்திருக்க ஊரவனின் பெண்டாட்டியை கடத்திச்  சென்றனர். இரவில் புருஷனோடு பாயில் படுத்திருக்கும் பெண்கள் கூட, கிருஸ்ணனுடைய புல்லாங்குழல் இசையை கேட்டவுடன் புருஷனை ‘அம்போ’ என கைவிட்டுவிட்டு அவர் பின்னால் ஓடிச் சென்றனராம். இராமரின் தகப்பனான தசரதனோ அறுபதாயிரம் பெண்களோடு உல்லாசமாக வாழ்நதாராம். ஒட்டக வியாபாரியான விதவை கதிஜாவை மறுமணம் செய்த முகம்மதுநபியோ அவளுக்கு பயந்து நல்ல கணவன்போல் நடித்த போதிலும் அவள் இறந்தவுடனே பல பெண்களுடன் சல்லாபிக்க ஆரம்பித்தாராம். இரவில் அசர்  தொழுகை முடிந்தவுடன் விரும்பிய நாயகியிடம் செல்வது அவரின் வழக்கமாம். (அல் புகாரி 1:13, ஹதீஸ் 267, 268)

                                  இந்துக்கள், புல்லாகி பூண்டாகி வல்லமிருகமாகும்… என்னும் பல பிறப்புக்கள் இருப்பதாக ஏமாற்றுகின்றனர். ஒரு மனிதன் இறந்தவுடன் அவன் உயிர் குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுவிடும். ஆனால் அவனை நினைத்து அழும் உற்றார் உறவினர்களோ பூமியிலிருக்கும் பேய்களுக்கே உணவுப் பண்டங்களைப் படைத்து, அவற்றை வணங்குவதாக 100வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிவ பக்தரான வேதநாயகம் சாஸ்திரியார் கூறியுள்ளார்.

 

“அரி சிவன் பரமன் ஐங்கரன் ஆறு

முகன் சதாசிவன் மயேசுரன் னோடு

ஐயனார்வீர பத்திரன் இருளன்

அனுமந்தன் கால சங்காரன்

பொரு தடிமாடன் கருப்பணன் இடும்பன்

புத்தனார் காத்தவ ராயன்

பொம்மன் தொட்டியச் சின்னனுடன் சக்கதேவி

பொன்னி அங்காளி கங்காளி

பெரிய மாகாளி ரண பத்திரகாளி

பேச்சி சாமுண்டி உத்தண்டி

பில்லிவாய்க் குறளி ஏகரி வீரி

பிடாரி காட்டேரி தூத்தேரி

எரிதழல் மாரி வராகி வீரி

எமகண்டி சாமளை துற்கை

இன்னமும் அனந்த பேய்களைப் பணிந்த

ஏழை நான், யேசு நாயகனே”     என்றும் பின்பு,

 

 

“புல்லது தெய்வமானால் மாடு

புசிப்பதற் கியலுமோ, அல்லது

போற்றிய மாடு தெய்வமேயானால்

புலையன் எப்படி அதை புசிப்பான்?

அல்லது மாட்டின் சாணியும் தெய்வம்

ஆகினால் அடுப்பினில் எரிப்ப

தகுமலோ, அதை சாம்பலாக்க

அக்கினிக்குப் பெலனுள்ளதோ?

வல்ல அக்கினியும் பகவனேயானால்

மழையினால் அழிந்து போவாரோ!

வருணமும் பகவ னாகினால் அதிலே

வாய் கை கால் கழுவவும் படுமோ?

கல்வி கற்றறிந்த நல்லவர் இதனைக்

கண்டறியார்களோ, கண்டால்

கதி தரும் உனை விட்டு அநீத வீண் பொருளைக்

கை தொழார், யேசு நாயகனே”     என்றும் பின்பு,

 

 

“குஞ்சினைத் திருடும் பருந்து அதோ கருடன்,

குலைக்கும் நாய் வயிரவன் ஊர்தி,

குரங்கதோ அனுமார், பன்றியும் மீனும்

கூர்மமும் விஸ்ணு வடிவம்,

துஞ்சிடக் கடிக்கும் பாம்பதோ நாக

சுவாமி, விக்கிரேசுரன் யானை

தோகையும் அனமும் காகமுங் கிளியும்

தூக்கிய தேவர் வாகனங்கள்,

அஞ்சியே வளையிற் புகும் பெருச்சாளி

யானையைத் தூக்குமோ, ஐயோ!

ஆல்இலை பதினாறாயிரம் பெண்கள்

அணைந்தவன்தனை எடுப்பதுவோ!

வெஞ்சின மாடு நந்திகேசுரனோ

விபூதியும் அதினுடசாணி,

வீண் இழவு எனவே தோணினேன் இதெல்லாம்

வேதனே யேசு நாயகனே”       என்றும்

 

 

                        தான் இந்து வாயிருந்த காலத்தில் கொண்டிருந்த நம்பிக்கைகளை “இத்தனை இழவு” என்றும் இவை “கடவுள் என்றிருந்த மடையன் நான் ஐயா” என்றும் கழி பேரிரக்கங்கொண்டு வருந்துகிறார் கவிஞர்.

 

                       விண்ணுக்குரிய மார்க்கமாக கிறிஸ்தவமே திகழ்கின்றது. கிறிஸ்தவத்தின் தலைமைப்பீடம் பூமியல்ல. வட திசை விண்வெளியில் சப்தரிஸி மண்டலத்திற்கு அப்பால் பலகோடி ஒளியாண்டு துாரத்தில், “வடதிசை சீயோன்” என்று வர்ணிக்கப்படும் பரமண்டலத்தில் உள்ளது.

                        ஆதியிலே தேவன் இப்பிரபஞ்சம் முழுவதையும் சிருஷ்டித்தார். இறைவனாகிய தேவன் இப்பூமியில் மனித அவதாரம் எடுத்த போது அவரைப் போற்றும் முதற்பாடலை “விண்ணவர்களே” பாடினர். அவரின் பூலோக வருகையை விண்ணில் தோன்றிய “வால் நட்சத்திரமே” உணர்த்தியது. அவர் ஞானஸ்நானம் பெற்ற போது “விண்ணிலிருந்து” இவர் என்னுடைய நேசகுமாரன் என்று பரமபிதா கூறினார். அவர் சிலுவையில் அறையப்பட்டு  நாற்பது நாற்களின் பின்பு, அவர் ஓலிவ மலையிலிருந்து “விண்ணகம்” சென்ற போது “வானத்தின் வெண் மேகமே” அவரை மறைத்து கொண்டது. (லூக்கா 2:13, மத் 2:2, 3:17, 27:45, அப் 1:9)

 

                       “ வானம் எனக்கு சிங்காசனம். பூமி எனக்கு பாதபடி” என்று சொன்னவர். சுமத்திரா தீவின் கடல் படுக்கையை மெதுவாக தட்டிய, போது அங்கு ஏற்பட்ட புவி அதிர்வால் அங்கிருந்து புறப்பட்ட சுனாமி அலைகள், பல நாடுகளின் கடற்கரைகளைத் தாக்கி, அப்பகுதிகளில்… “எழுந்தருளி, ஆயாசமாக வீற்றிருந்த, கல்லாலான தெய்வ சிலைகளை தாக்க, அத்துடன் அவ் அலைகள் அள்ளிவந்த குப்பைகளையும், பிரேதங்களையும், சிலைகளையும் அத் தெய்வங்களின் மேல் மாலைகளாய் போட, அதிர்ச்சியடைந்த அத் தெய்வங்கள் ஓட்டமெடுத்தன.”

                             சுனாமி அலைகளுக்கு பயந்தோடி, கலங்கல் தண்ணீரில் கரைந்து போன தெய்வங்களை நீ விட்டுவிட்டு, உயிர்த்தெழுந்து இன்றும் உயிரோடிருக்கும் இயேசுவே உயிருள்ள தெய்வம் என்பதை நீ அறிந்து கொள்ள, இவ்மின்தள இந்நற்செய்தி உனக்கு உதவலாமே!

பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது …………….

“பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்தச் சொல்லுகிறது என்ன?

“What mean ye, that ye use this proverb concerning the land of Israel, saying, The fathers have eaten sour grapes, and the children’s teeth are set on edge?

இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 

As I live, saith the Lord GOD, ye shall not have  occasion any more to use this proverb in Israel.

இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள். தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்.   

Behold, all souls are mine; as the soul of the father, so also the soul of the son is mine: the soul that sinneth, it shall die.

ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,  

But if a man be just, and do that which is lawful and right,

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,  

And hath not eaten upon the mountains, neither hath lifted up his eyes to the idols of the house of Israel, neither hath defiled his neighbour’s wife, neither hath come near to a menstruous woman,

ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,

And hath not oppressed any,  but hath restored to the debtor his pledge, hath spoiled none by violence, hath given his bread to the hungry, and hath covered the naked with a garment;

வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து,

He  that hath not given forth upon usury, neither hath taken any increase,  that hath withdrawn his hand from iniquity, hath executed true judgment between man and man,

என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான். அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.   

Hath walked in my statutes, and hath kept my judgments, to deal truly; he  is just, he shall surely live, saith the Lord GOD.

ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல்,

If he beget a son  that is a robber, a shedder of blood, and  that doeth the like to  any one of these  things,

இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,  

And that doeth not any of those  duties, but even hath eaten upon the mountains, and defiled his neighbour’s wife,

 சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, 

Hath oppressed the poor and needy, hath spoiled by violence, hath not restored the pledge, and hath lifted up his eyes to the idols, hath committed abomination,

வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை. இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே. அவன் சாகவே சாவான். அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்

Hath given forth upon usury, and hath taken increase: shall he then live? he shall not live: he hath done all these abominations; he shall surely die; his blood shall be upon him.

பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

Now, lo,  if he beget a son, that seeth all his father’s sins which he hath done, and considereth, and doeth not such like,

மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,

That hath not eaten upon the mountains, neither hath lifted up his eyes to the idols of the house of Israel, hath not defiled his neighbour’s wife,

ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து,

Neither hath oppressed any, hath not withholden the pledge, neither hath spoiled by violence,  but hath given his bread to the hungry, and hath covered the naked with a garment,

சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்”. (எசேக்கியேல் 18:2-17)

That hath taken off his hand from the poor,  that hath not received usury nor increase, hath executed my judgments, hath walked in my statutes; he shall not die for the iniquity of his father, he shall surely live”. (Ezekiel 18:2-17)

 

      துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் பாவ வழிகளைவிட்டு திரும்பிப் பிழைப்பதல்லவோ எனக்குப் பிரியம் என்று ஜெகோவாவாகிய ஆண்டவர் சொல்வதால் நாம் மேற்கண்ட வசனத்தின்படி பரிசுத்தமாக வாழ முயற்சிப்போமாக.

 

 -- Edited by t dinesh on Thursday 8th of November 2012 12:24:10 AM-- Edited by t dinesh on Thursday 8th of November 2012 12:27:20 AM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESHபுதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

நம் அனைவரின் மீதும் ஏக கர்த்தரின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

t dinesh:-ஒட்டக வியாபாரியான விதவை கதிஜாவை மறுமணம் செய்த முகம்மதுநபியோ அவளுக்கு பயந்து நல்ல கணவன்போல் நடித்த போதிலும் அவள் இறந்தவுடனே பல பெண்களுடன் சல்லாபிக்க ஆரம்பித்தாராம். இரவில் அஸர் தொழுகை முடிந்தவுடன் விரும்பிய நாயகியிடம் செல்வது அவரின் வழக்கமாம். (அல் புகாரி 1:13, ஹதீஸ் 267, 268)

இந்த தளத்தின் moderator அவர்களுக்கு இங்கு t dinesh என்பர் விஷ செய்தியை  தூவி உள்ளார்.இதில் எந்த ஆதாரமும் இல்லை.இரவு தொழுகைக்கு அஷர்  என்ற பெயரே கிடையாது.இஸ்லாத்தின் அடிப்படையே தெரியாதவர் ,மேலும் அவர் தவறான செய்தியையே பதித்துள்ளார்.இதை நீங்கள் நீக்க வேண்டும்.உங்க தளத்திற்கு நிறைய வாசகர்கள் வந்து போவதுண்டு , உங்க தளத்தின் கண்ணியம் எங்களுக்கு தெரியும் .ஆதலால் இந்த திரியை நீக்கி விடுங்கள். இல்லை என்றால் அவர் இடும் செய்திகளை நான் மறுத்து பதில் இடுகிறேன் மேலும் பைபிள் லில் காட்டப்பட்டுள்ள ஏசுவுக்கும் நிஜத்தில் உள்ள ஏசுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் காட்டுகிறேன்.உங்க தளத்தில் உள்ள உறுப்பினர்கள் அதை மறுக்க இயலுமா? இயலும் எனில் இந்த திரியில் விவாதிப்போம்.இவ்வாறு அவதூறு செய்திக்கு தளம் மனிப்பு கேட்டால் அது உங்களின் பெருந்தன்மையை காட்டும்.__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

நேசன் அண்ணா நான் இந்த கட்டுரை இணைய தளத்திலிருந்து எடுத்து பதிந்தது . என்னால் இந்த தளத்துக்கு அவதூறு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. எனவே எனது தவறுக்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன் . ஆனால் இந்த கட்டுரையில் கூறப்பட்ட எல்லாமே பொய் அல்ல. தளத்தின் மற்ற உறுப்பினர்கள் ''தமிழன்'' என்பவருடன் விவாதிக்க விரும்பினால் விவாதிக்கலாம் . ஆனால் நீங்கள் இத்தளத்தின் நிர்வாகி என்ற வகையில் இக்கட்டுரையை நீக்க உங்களுக்கு உரிமை உண்டு .

நான் edit செய்து அந்த பந்தியை நீக்கிவிட நினைத்து ஆனால் அதை மீண்டும் சேர்த்து விட்டேன் . முடிவு உங்கள் கையில்.

மன்னிக்கவும்.

//பைபிள் லில் காட்டப்பட்டுள்ள ஏசுவுக்கும் நிஜத்தில் உள்ள ஏசுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் காட்டுகிறேன்.//
நண்பரே நிஜத்தில் நீர் இயேசுவை எங்கு கண்டீர் ? உளற வேண்டாம்.,

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESHபுதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

நேசன் அண்ணா நான் இந்த கட்டுரை இணைய தளத்திலிருந்து எடுத்து பதிந்தது .

 

இணைய தளத்தில் இருந்து எடுத்து பதிந்தீர்கள் அல்லவா? இந்த கட்டுரையை ஆராய்ச்சி செய்தீர்களா? அடுத்தவன் வாந்தி எடுத்ததை ஏன் அப்படியே பதிக்கின்றீர்கள்.நீங்கள் சுயமாக பதிக்க இயலாதோ? உங்கள் பெற்றோர்கள் இப்படிதான் உங்களை வளர்த்தார்களா? அவர்களும் கிறித்துவர்கள் தானே...எதையும் தீர்க்கமாக யோசித்து சிந்தித்து செய் என்று சொல்ல வில்லையா?

என்னால் இந்த தளத்துக்கு அவதூறு ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எனவே எனது தவறுக்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன் . இதே மாதிரி தீய செயலை விட்டு திருந்துங்கள். பிற மதங்களின் உரிமைகளில் தலை இடாதீர்கள். (இந்து-முஸ்லிம்)

 

ஆனால் இந்த கட்டுரையில் கூறப்பட்ட எல்லாமே பொய் அல்ல.

ஆமா..ரொம்ப அறிவு ஜீவி....சொந்தமா எழுத வாக்கு இல்ல..அடுத்தவன் எழுதியதை வாந்தி எடுத்து வந்து இருக்கின்றீர்கள்.அனைத்தும் இட்டு கட்டல். பொய் பிரசாரங்கள்.

தளத்தின் மற்ற உறுப்பினர்கள் ''தமிழன்'' என்பவருடன் விவாதிக்க விரும்பினால் விவாதிக்கலாம் .

 

இறைவன் நாடினால் விவாதிக்கலாம்....எது பாலியல் மார்க்கம் மற்றும் நீங்கள் விரும்பும் தலைப்புகளில்

 __________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

எல்லோரும் இரட்சிக்கபட்டு சத்தியத்தை அறியும் அறிவை பெறவேண்டும் என்பதே  எங்கள்  எதிபார்ப்பு. ஒருவரை ஒருவர் குறைகூறி பேசுவதால் அது நிச்சயம் சாத்தியமாகாது, மாறாக கசப்பும் வெறுப்பும்  கோபமுமே மிஞ்சும். எனவே நாம்  மற்றவர்களை எவ்விதத்திலும் குறைவுபடுத்தாமல்
எல்லோருக்கும் பயனுள்ள கருத்துக்களை மாத்திரம் பதிவிடுவதுதான் நல்லது.
.
மேலும் ஒரு கருத்தை விவரித்து சொல்வதைவிட  அந்த  கருத்தை குறைகூறுவதற்கு அதிக ஞானம் நமக்கு வேண்டும் அதாவது ஒரு கோட்பாட்டில் உள்ள நன்மை தீமை இரண்டையும் சரிவர ஆராயவில்லை என்றால் அந்த கருத்தில் உண்மை தன்மையை நாம் அறிய முடியாது. அதற்கென்று தனியாக அபிஷேகமுள்ள
ஞானவாங்களை தேவன் நிச்சயம் எழுப்புவார்.  மற்றபடி  நாம் திரு குர்ரானை முழுமையாக படித்து அதிலுள்ள உயர்வு தாழ்வுகளை சரிவர அறியாத பட்சத்தில் அதிலுள்ள குறைகளை மாத்திரம் சுட்டிகாட்ட முயல்வது சரியல்ல. அதுவும் முகமது நபி அவர்களின் ஒரு ஒரு நடவடிக்கையை மட்டும் சுட்டி காட்டி (அது உண்மையோ பொய்யோ) இஸ்லாத்தை தவறான மார்க்கம் என்று கூறிவிட முடியாது! காரணம் அனேக மனைவி/மறுமனையாட்டிகளை   கொண்டிருந்த சாலமோனின் வார்த்தைகள் நமது வேதத்தில் இணைக்கபட்டுள்ளது.   
 
ஆகினும் இந்நாட்களில் ஒரு கருத்தை பற்றி அறிந்துகொள்ள வலை தளங்களில் தேடுதல் என்பது பழகிபோயவிட்டது. அவ்வாறு தேடியதில் அகப்பட்ட கருத்தையே சகோதரர் தினேஷ் அவர்களை இங்கு பதிவிட்டுள்ளார்கள் என்று நான் கருதுகிறேன். மேலும் அந்த கருத்துக்கு ஹதீஸ் ஆதாரம் கொடுத்துள்ளதால் அவர் அதை அப்படியே ஏற்றுகொண்டிருக்கலாம் எனவே அதை உண்மை என்று நம்பியதில் தவறு எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
.
நண்பர் தமிழன் அவர்கள் இங்கு  பதிவிட்ட அந்த கருத்து மற்றும் ஹதீஸ்கூட தவறு என்று கருதும் பட்சத்தில்   தங்கள் விளக்கங்களை  இங்கு பதிவிடலாம் அது அவருக்கு மட்டுல்ல எனக்கும் இந்த தளத்துக்கு வரும் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.  மற்றபடி கோபம் வேண்டாம்.    
.
மற்ற மத கருத்துக்களை குறைகூறும் பதிவுகளையும்  பிற மத அன்பர்களை குற்றபடுத்தும் பதிவுகளையும் தவிர்ப்பது  நல்லது. ஒருவருக்கு  பிரமத  கருத்துகள் குறித்த  விளக்கம் வேண்டும் பட்சத்தில் அந்தந்த பிரிவுகளின் கீழ் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் வேண்டி கேள்விகளை கேட்டு வைக்கலாம். விளக்கம் தர விரும்புவோர் தருவார்கள்.    
ரோமர் 12:18 கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
.
மற்றபடி இந்த காரியத்துக்கான இறுதி முடிவை தள நிர்வாகி தெரிவிப்பார்.  
  


-- Edited by SUNDAR on Thursday 8th of November 2012 06:17:03 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

//மற்றபடி நாம் திரு குர்ரானை முழுமையாக படித்து அதிலுள்ள உயர்வு தாழ்வுகளை சரிவர அறியாத பட்சத்தில் அதிலுள்ள குறைகளை மாத்திரம் சுட்டிகாட்ட முயல்வது சரியல்ல. அதுவும் முகமது நபி அவர்களின் ஒரு ஒரு நடவடிக்கையை மட்டும் சுட்டி காட்டி (அது உண்மையோ பொய்யோ) இஸ்லாத்தை தவறான மார்க்கம் என்று கூறிவிட முடியாது! காரணம் அனேக மனைவி/மறுமனையாட்டிகளை கொண்டிருந்த சாலமோனின் வார்த்தைகள் நமது வேதத்தில் இணைக்கபட்டுள்ளது.//

புரிந்து கொண்டேன்

//அந்த கருத்துக்கு ஹதீஸ் ஆதாரம் கொடுத்துள்ளதால் அவர் அதை அப்படியே ஏற்றுகொண்டிருக்கலாம் எனவே அதை உண்மை என்று நம்பியதில் தவறு எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.//


நன்றி அண்ணா__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESHவெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு தமிழரே,

வணக்கம்..

//இணைய தளத்தில் இருந்து எடுத்து பதிந்தீர்கள் அல்லவா? இந்த கட்டுரையை ஆராய்ச்சி செய்தீர்களா? அடுத்தவன் வாந்தி
எடுத்ததை ஏன் அப்படியே பதிக்கின்றீர்கள்.நீங்கள் சுயமாக பதிக்க இயலாதோ? உங்கள் பெற்றோர்கள் இப்படிதான் உங்களை வளர்த்தார்களா? அவர்களும் கிறித்துவர்கள் தானே...எதையும் தீர்க்கமாக யோசித்து சிந்தித்து செய் என்று சொல்ல வில்லையா?//

மறுப்பு இருந்தால் ஆதாரத்தோடு பேசுங்கள், இணையத்தில் இருந்து பதிய கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. அவர் ஆராய்ந்தாலும்,ஆராயவிட்டாலும் பதிவை இத்தளத்தில் பதிந்தவரே பதிவிற்கு பொறுப்பாளி. Mr.தினேஷ் எங்கிருந்து இந்த கட்டுரையை எடுத்து பதிந்தார் என தங்களுக்கு தெரியாதலால், ஆதாரம் இருக்குமானால் அதை கொண்டு தங்கள் மத கருத்தை நாகரிகத்துடன் வெளிபடுத்த உண்மை இசுலாமிய நண்பர் எவருக்கும் உரிமை/கடமை  உண்டு.தங்களுக்கும் உண்டு.அது இசுலாத்தின் காரியங்களை தெளிவுபடுத்தும் முயற்சியாக நிச்சயம் அமையும்.அதை விடுத்து அவசியமில்லாமல் பொற்றோர் வளர்ப்பு பற்றி பேசுவதெல்லாம் பிரியோசனமற்றது.

 //இவ்வாறு அவதூறு செய்திக்கு தளம் மனிப்பு கேட்டால் அது உங்களின் பெருந்தன்மையை காட்டும்.///

 

இந்த பதிவை 'அவதூறு' என்றால் பொறுமையாய் நிருபியுங்கள் அதுவே பெருந்தன்மை. அப்புறம் சம்பந்த பட்டவர் மன்னிப்பு கேட்பார்.இதுவே விவாத ஒழுக்கம்.அதைவிடுத்து பொத்தம் பொதுவாக 'அவதூறு' என்பதெல்லாம் தளத்தில் படிப்பவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும். ஆகவே நிரூபியுங்கள்.

 ///மேலும் பைபிள் லில் காட்டப்பட்டுள்ள ஏசுவுக்கும் நிஜத்தில் உள்ள ஏசுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் காட்டுகிறேன்.உங்க தளத்தில் உள்ள உறுப்பினர்கள் அதை மறுக்க இயலுமா? இயலும் எனில் இந்த திரியில் விவாதிப்போம்.//


//இறைவன் நாடினால் விவாதிக்கலாம்....எது பாலியல் மார்க்கம் மற்றும் நீங்கள் விரும்பும் தலைப்புகளில்//

முடிவாக தங்களுக்கு நான் சொல்ல விரும்புவது., கற்பிக்க வந்தால் கற்பியுங்கள்,கற்றுக்கொள்ள வந்தால் காது கொடுங்கள். அதை விடுத்து, பதிலுக்கு பதிலாக காரிய தெளிவின்றி ஏசுவிற்கும்,உண்மை ஏசுவிற்கும் ஆறு வித்தியாசம் என்று 'என் கண்ணா குத்துனா ,உன் கண்ணா குத்துவேன்' என பேசுவதும் தேவையற்றது..

தங்கள் ஆதங்கம் நியாயமானதை போன்று தோன்றினாலும்,நீங்கள் தேவை இல்லாமல் காரியத்தை மிகைபடுத்தி இந்து-முசுலிம் உரிமை தலையீடு பற்றியெல்லாம் பேசி இந்து  சமயத்தினரை தேவையில்லாமல் உள்ளே இழுத்து, குழப்பம் விளைவிக்க முயலுகிறீர்கள் என அறிகிறேன். இதற்கு கிறிஸ்த்துவிற்குள்ளான  எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன்..

கிறிஸ்த்துவை பற்றி சரியான விவாதத்திற்கு தாங்கள் தயார் என்றால் பின் நோக்காத கிறிஸ்துவின் சேனை எப்போதும் ஆயத்தமே...


-- Edited by JOHN12 on Friday 9th of November 2012 06:25:48 PM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

நம் அனைவரின் மீதும் ஏக கர்த்தரின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

என்னால் வரிக்கு வரி திரு.ஜான் அவர்களுக்கும்,திரு.தினேஷ் அவர்களுக்கும் பதில் தர இயலும். இப்படி பேசுவது உங்களின் சத்தியத்தையும், துணிச்சலையும் ,உறுதிப்பாட்டையும்,உங்கள் நம்பிக்கையும் மேலும் சொல்ல இயலா செயல்களையும் அழகையும்  வெளிபடுத்துகிறது. இப்படி பட்டவர்களுடன் விவாதம் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கருதுகிறேன். நான் உங்களிடம் வாக்கு வாதம் செய்து தோற்றாலும் பெருமை படுவேன்.நான் அட்மின் அவர்களின் விவாத ஒப்பந்தத்திற்காக காத்து இருக்கின்றேன்.உங்களால் விவாத ஒப்பந்தம் பிடித்திருந்தால் உடனே சரி என்று சொல்லுகிறேன் திருத்தம் தேவை பட்டால் சில மாற்றங்களை செய்து கொண்டு விவாத்திப்போம்.....

(எது பாலியல் மார்க்கம் மற்றும் நீங்கள் விரும்பும் தலைப்புகளில்)__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர்களே இதில் நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை இது எல்லோருக்கும் பொதுவான இலவச தளம்தான். வாதி பிரதிவாதி இருவரும் தயார் ஏன்றால் இறைவனை பற்றிய எவ்வித கருத்துக்களையும் தாராளமாக விவாதிக்கலாம்.

 

எனினும் என்னுடய நிலைபாடு என்னவெனில் கிறிஸ்த்தவம் என்பது ஆவிக்குரிய ஒரு மார்க்கம் இஸ்லாம் அப்படிபட்டது அல்ல. எனவே இரண்டுக்கும் இடையில் அதிக வேருபாடு உண்டு. ஆவிக்குரிய காரியங்களை மாம்சத்துக்குறிய மனநிலயில் புரிந்துகொள்வது மிக மிக‌ கடினம். மேலும் கிறிஸ்த்தவத்துக்குள்ளேயே பதில் சரியாக சொல்ல முடியாத, முழுமையான பதிலை அறியமுடியாத நிறைய கேள்விகள் இருக்கும்போது இன்னொரு வேதத்தையுடயவர்களோடு விவாதம் தேவைதானா என்பது எனக்கு புரியவில்லை.

 

இஸ்லாம் / கிறிஸ்த்தவ விவாதம் என்பது புதியதல்ல பல ஆண்டு காலமாக உலகம் முழுவதும் நடைபெற்றும் முடிவை எட்ட முடியாத நிலையில் இருக்கிறது. அத்தோடு நவீன நாட்களில் நேரடி விவாதஙள்கூட நடைபெற்று இரு தரப்பினருமே நாஙகள்தான் ஜெயித்தோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். மேலும் நமது அருமை சகோ.உமர் அவர்கள் நீண்ட நாட்களாக இஸ்லாத்தின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுதிவருகிறார்கள். இவ்வளவு காரியஙள் நடந்தும் இந்த இஸ்லாம் / கிறிஸ்த்தவ விவாதம் ஒரு முடிவை எட்டியபாடில்லை.

 

இதை எல்லாம் கருத்தில்கொண்டு ஒருவரை ஒருவர் அனுசரித்து நாகரீகமற்ற வார்த்தயை பயன்படுத்தாமல் இஸ்லாம் விவாத பகுதியில் விவாதிக்கலாம்.

 

நமது தளத்தில் முடிந்தவரை யாருடைய பதிவுகளையும் நீக்க விரும்புவது இல்லை. எனவே தளத்தின் நன்மதிப்பை காத்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink  
 

நம் அனைவரின் மீதும் ஏக கர்த்தரின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

விவாத ஒப்பந்தங்களை நீங்கள் வெளியுடுங்கள் .(கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் )__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard