சகோதரர் அவர்களே என்னுடைய புரிதலை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
I கொரிந்தியர் 15:22ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
என்ற வசனத்தின் அடிப்படையில் ஆதாம் செய்த பாவத்தினிமித்தம் இந்த பூமியிகுள் பிறக்கும் ஒவ்வொரு மனுஷர்களும் ஆவியில் மரித்த மனுஷர்களாகவே பிறக்கிறார்கள்.
வசனத்தின் தொடர்ச்சிபடி "கிறிஸ்த்துவால் ஆவி யில் உயிர்ப்பிக்க படாத நிலையில் இருக்கும் இந்த உலக மக்கள் ஒவ்வொருவரும் நமது மாம்ச கண்களுக்கு வேண்டுமென்றால் உயிருள்ளவர்கள் போல் தெரியலாம், ஆனால் தேவனின் பார்வையில் அவர்கள் எல்லோரும் மரித்த மனுஷர்களாகவே கருதப்படுவர். மரித்த பிணத்தினால் யாருக்கும் பயனில்லாதது போல இப்படிபட்டவர்களால் தேவனுக்கு எந்த பயனும் இல்லை.
.
அதாவது கிறிஸ்த்துவினுடைய ஜீவ ஆவி ஒருவருக்குள் பிரவேசிக்கவில்லை என்றால் அவன் உயிரிருந்தும் மரிதவனாகவே எண்ணப்படுவான். அதை கருத்தில் கொண்டே இயேசு "மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்" என்று சொன்னார். அதன் பொருள் ஆவியில் மரித்த நிலையில் உள்ளவர்கள் அவர்களுக்குள் அதே நிலையில் இருந்து மரித்துபோனவரக்ளை அடக்கம் பண்ணட்டும் என்பதுதான் என்பது என்னுடைய கணிப்பு.
.
யோவான் 11:25இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
மேலும் விளக்கம் அறிந்தவர்கள் பதிவிடலாம்.
-- Edited by SUNDAR on Monday 10th of December 2012 04:43:35 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)