இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரிஜினல் (அசல்) எது? டூப்ளிகேட் (நகல்) எது?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஒரிஜினல் (அசல்) எது? டூப்ளிகேட் (நகல்) எது?
Permalink  
 


டூப்ப்ளிகேட் பொருட்களை "டூப்ளிகேட்தான்" என்று அறிந்தும் வாங்கி உபயோகிக்கும் ஒரு கூட்டம் உலகில் இருக்கத்தான் செய்கிறது. அதுபோல் தேவன்தான் இந்த உலகத்தை படைத்தார் என்ற உண்மையை நன்றாகவே அறிந்திருந்தும் குறுக்கு வழியில் வந்து உலகத்தின் அதிபதியாக இருக்கும்  "சாத்தானை"யே   தெய்வமாக வழிபடும் கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. சாத்தானே இவர்களுக்குள் இருந்து கிரியை செய்வதால் இவர்களை திருத்துவது என்பது மிக   கடினமும், சாத்தானை திருப்புவதற்க்கு ஒப்பான காரியமும் ஆகும்.

ஆனால்  சரியான உண்மை அறியாமல் "டூப்ளிகேட்டை" "ஒரிஜினல்" என்று அதாவது நகலை அசல் என்று எண்ணி அறியாமையால் தஙகள் மேன்மையை இழந்து நிற்க்கும் கூட்டத்துக்காக நான் மிகவும் பரிதபிக்கிறேன்.
      

உண்மை கடவுள் யார்? என்று அறியவேண்டும் என்ற வாஞ்சையில் 1992ம் வருடம் பலமணிநேரம் அழுது மன்றாடி கேட்ட பொழுது என்னை ஆண்டவர் தமது ஆவியின் வல்லமையால் 7 நாட்கள் நிரப்பி இந்த உலகத்தைப்பற்றி அனேக ரகசியங்களை தெரியப்படுத்தினார். நரகத்தில் வேதனைப்படும் மனுஷர்களையும் எனக்கு அறியதந்தார்.  அந்த சம்பவத்தால் மிகவும் பதிக்கப்பட்ட நான் அந்த கொடூர வேதனையான இடத்துக்கு யாரும் போகவே கூடாது என்று பலநாட்கள் ஆண்டவரிடம் கண்ணீருடன் கெஞ்சியபோது,மனுஷன் நரகம் போவதிலிருந்து தப்பிக்க இயேசுவே ஒரே வழி என்றும் தெரியப்படுத்தினார்.  

யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

நான் யாரையும் குற்றம் கண்டுபிடக்க குறைசொல்ல‌ வரவில்லை! உண்மையில் நானும் ஒரு இத்து குடும்பத்த்தை சார்ந்தவன். தஙகளிடம் என்னுடைய வேண்டுதல் எல்லாம் நமது அற்ப அறிவைக்கொண்டு இறை வார்த்தைகளை ஆராயாமல் நீங்களே கடவுளிடம் கேட்டு அறியவேண்டும் என்பது தான்."தேவன் ஜீவனுள்ளவர்" அவர் தான் படைத்த‌ மனுஷனுடன் பேச விரும்பதவர் அல்ல! எப்பொழுது யார் முழு வாஞ்சையோடு கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளார். எனவே உண்மை எதுவென்று எல்லோரும் அறிய வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்.

என்னை ஆட்கொண்டு என்னுள் 7 நாட்கள் இருந்து பேசிய அந்த கடவுளின் பெயர் அந்நேரம் எனது கையில் இருந்த பைபிளில் உள்ள கடவுளின் பெயராகிய "கர்த்தர்"தான் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பின்னர் இஸ்லாம்மேல் அதிக ஈடுபாடு உள்ள ஒரு சகோதரனை சந்திக்க நேர்ந்தது! அவரிடம் அந்த செய்தியை சொன்னபோது, அவர் நீங்கள் பைபிளில் இருக்கிறது என்று சொல்லும் அனேக காரியங்கள் திரு குரானிலும் இருக்கிறது. அது மிக நீதி நேர்மையான வாழ்க்கையை போதிக்கிறது, அதிலும் இயேசுவை பற்றி சொல்லியிருக்கிறது என்று சொன்னார். 

அந்த செய்தி எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. உடனே அவரிடம் இருந்த தமிழ் குரானை வாங்கி படித்தேன். அதில் உள்ள வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன ஆனாலும் இரண்டுக்கும் இடையே சில முக்கியமா வேற்றுமைகள் இருந்தன அதாவது:

இயேசுவின் சிலுவை மரணம்
சாத்தான் தோன்றிய வரலாறு
இறை வார்த்தைகள் கொடுக்கப்பட்ட விதம்
பலியிடுதல் போன்றவை.

இதனால் எனக்கு பெரிய சந்தேகம் வந்துவிட்டது! எது உண்மையான வேதம்? குரானா? பைபிளா? உன்மை க‌டவுள் யார்? கர்த்தரா அல்லது அல்லாஹா? அல்லது இருவரும் ஒருவரா? என்பதுதான் அது.  ஒரு இறைவன் இரண்டு விதமாக சொல்ல மாட்டாரே!  பின்னர் எது உண்மை? ஒருவேளை என்னை சந்தித்த கடவுள் ஒருவேளை அல்லாவாக இருக்குமோ? என்றெல்லாம் எண்ணம் வந்து விட்டது.

உடனடியாக எனது வழக்கப்படி ஒருநாள் இரவு நெடுநேரம் வரை ஆண்டவர் பாதத்தில் சென்று அமர்ந்து "எது உம்முடைய உண்மையான வார்த்தைகள் என எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டு மிகவும் பிடிவாதமாக அம்ர்ந்து "நீர் எனக்கு உண்மையை சொல்லும்வரை நான் தூங்க போவதில்லை" என சொல்லி கடவுளிடம் மன்றாடினேன். சுமார் 12மணிக்கு மேல் இறைவன் என்னுள் கீழ்க்கண்டவாறு பேசி உணர்த்தினார். 

(நான் எங்கள் வீட்டில் பவர் சோப் உபயோகிப்பது வழக்கம்)

"நீ உபயோகிக்கும் பவர் சோப்பில் ஒரிஜினலுக்கும் டூப்ளிகேட்டுக்கும் உன்னால் பார்த்தவுடன் வித்யாசம் கண்டு பிடிக்க முடியுமா" என்றார்.

நான் "முடியாது" என்றேன்

"ஆம் ஒரிஜினலுக்கும் டூப்ளிகேட்டுக்கும் இடையே வித்யாசம் கண்டுபிடிப்பது மிக மிக கடினம். இரண்டும் ஒன்று போலத்தான் இருக்கும் சொல்லப்போனால் டூப்ளிகேட் ஒரிஜினலை விட மிக மிக நேர்த்தியாவும்  நம்பக்கூடியதாக இருக்கும். எனேன்றால் அது முதலில் தயாரிக்கப்பட்ட ஒரிஜினலை பார்த்து அதே மாடலில் அது போலவே தயாரிக்கப்படும். அத்தோடு இரண்டு சோப்பையும் வைத்து துணி துவைக்கலாம்! ஆனால் நாம் எதற்காக துணி துவைக்கிறோம்? அழுக்கு போகத்தானே? அந்த முக்கியமான நொக்கம்தான் நிறைவேருவது இல்லை" என்றார். அதுபோலத்தான் இந்த இரண்டும் இதில் ஒன்று "ஒரிஜினல்" மற்றொன்று "டூப்ளிகேட்". ஒன்று மனிதனுக்கு சரியான வழி காட்டும் பாவஅழுக்கை போக்கும்.இன்னொன்று சரியான வழி போல தெரிந்தாலும் எந்த பாவ அழுக்கும் நீங்காது  "அது தவறான வழி" என்று முடிவில்தான் உணர முடியும் என சொல்லிவிட்டார்.
.
அன்பு இஸ்லாமிய நண்பர்களே நான் சொல்வதை வைத்து நீங்கள் எதையும் நம்ப வேண்டாம். ஏனென்றால் நானும் ஒரு மனிதனே! ஆனால் நான் உங்களுக்கு சொல்லும் மிக முக்கியமான செய்தி என்னவென்றல் "தேவன் ஜீவனுள்ளவர்", அவர் எந்த நேரத்தில் யார் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளார். அவர் பெரியவர் மற்றும்  எல்லாம் செய்ய வல்லவர் என்று திருக்குர்ரானும் கூறுகிறது. அவர் மனிதனிடம் நேரடியாக நான் பேசமாட்டேன் என்றோ, தூதர் மூலமாக மட்டும்தான் பேசுவேன் என்றோ திரு குர்ரானில் எங்கும் சொன்னது போல் எனக்கு தெரியவில்லை. இப்படி இருக்கும்போது, யாரோ ஒரே ஒருவர் சொன்னதை வேதம் என்று எண்ணி அப்படியெ உண்மை என்று நம்பும் நீங்கள், ஏன் அமர்த்து ஆண்டவரிடம் விசாரிக்ககூடாது? அதன் உண்மை தன்மை குறித்து தெரிந்து கொள்ள கூடாது?

ஓன்று கடவுளை சரியான முறையில் அறிந்த நாங்கள் சொல்லும் வார்த்தையை நம்புஙகள், அல்லது முழு வாஞ்சையோடு விடாப்பிடியாக அமர்ந்து ஜெபித்து ஆண்டவரை தேடினால், சரியான பாதையை அடையாளம் கண்டுகொள்ள் அவர்  கட்டாயம் உதவி செய்வார். 
.
சங்கீதம் 91:15 வன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்
எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
.
மற்றபடி, வாழும் காலம்வரை  "நான் பிடித்ததுதான் சரி" என்று பிடிவாதம் பிடித்துவிட்டு, இறுதியில் நின்று புலம்புவதில் எந்த லாபமும் இருக்காது!
 

 -- Edited by SUNDAR on Saturday 15th of December 2012 03:14:51 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard