இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவுகின்றது எனவும் இலங்கை தமிழர் மிக சந்தோசமாக வாழ்கின்றனர் என கூறிவருகின்றனர் .ஆனால் அங்கோ ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் என கண்காணிக்க படுவதுடன் பல அடக்குமுறை இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை . அதானால் தான் அன்று ஜேசு கூறினார்
யோவான் 14:27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்;உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்