இஸ்லாமியர்களின் கட்டுரைகளை வாசித்து வாசித்து குழம்பிப்போய் விசுவாசத்தில் ஊசலாடும் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும்படி இக் கட்டுரையை எழுதுகிறேன்
மாற்கு 16ம் அதிகாரம் 17ம், 18ம் வசனங்களில் இயேசு தன்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என சில விடயங்களை சொல்கிறார் அதில் 18ம் வசனத்தில் சொல்லப்படும் “சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது” என்ற வார்த்தையை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொண்டு “கிறிஸ்தவர்களே நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் விஷத்தைக் குடியுங்கள் பார்கலாம்” என்று கூறுகிறார்கள். அதை ஒரு சாதாரன இஸ்லாமியன் கூறினால் பரவாயில்லை அனேகரால் மதிக்கப்படும் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.
முதலில் கிறிஸ்தவர்களே ஒரு காரியத்தை புரிந்து கொள்ளுங்கள். விசுவாசம் என்பது கிறிஸ்தவ கட்டுரைகளையோ, இஸ்லாமிய கட்டுரைகளையோ படித்து இயேசுவா, அல்லது அல்லாவா என தெரிவு செய்வதன் மூலம் ஏற்படுவதில்லை.
சரி விடயத்துக்கு வருவோம். நான் தொடர்ந்து சொல்லப்போவதை முதலில் புரிந்து கொண்டால்தான் விஷத்தை குடிப்பதைப் பற்றிய இஸ்லாமியாகளின் கூற்றை புரிந்து கொள்வீர்கள். முதலில் இயேசுவை பிசாசு சோதித்த விடயத்தை கவனியுங்கள். லுக்கா– 04:09-11 வசனங்களில் பிசாசு இயேசுவை சோதிக்கும் வகையை பர்ப்போம்.
9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10. ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
பிசாசு சொன்ன வேத வசனம் சரியானதே. அவன் அந்த வசனங்களை சங்கீதம்– 91:11-12 இலிருந்து எடுத்துச் சொன்னான். ஆனால் தவறு எங்கே நடக்கிறதென்றால் அந்த வசனத்துக்கு பிசாசு தவறான அர்த்தம் கொடுப்பதில் தான்.
முதலாவதாக – சங் – 91:11,12 இன்படி உன் வழிகலெல்லாம் காக்கும்படி தான் தன் தூதர்களுக்கு கட்டளையிடுவார்.
மேலும்
உன் பாதம் கல்லில் இடறாதபடிதான் உன்னை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்துவர்கள்.
அதாவது “வழிகளில் எல்லாம்” என்பதை பார்த்தால் நம்முடைய நாளாந்த நடபடிகள், நம்முடைய போக்குவரத்து, நம்முடைய தொழில், நமது முடிவுகள், தீர்மானங்கள், தெரிவுகள், ஊழியங்கள் இவற்றிலெல்லாம் நம்மை அவர் காக்கும்படி தூதர்களுக்கு கட்டளையிடுவார். என்பதே
அடுத்ததாக “ இடறாதபடி” என்பதை பார்த்தால் இடறுதல் என்றால் என்ன? இடறுதல் என்று எதை நாம் கூறுவோம். நாம் நடந்து போகும் போது தவறுதலாக நமது கால் கல்லிலோ அல்லது ஏதோவொன்றிலோ அடிபடுவது தான் இடறுதல். மாறாக நாமாக போய் கல்லில் உதைப்பதை இடறுதல் என்று சொல்ல முடியுமா?
அதாவது நம்மையறியாமல் நமது வாழ்வில் இடறாதபடி நம்மை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்திக் கொணடு போவார்கள். நம்முடைய நாளாந்த வாழ்வில் நம்மையறியாமல் பிழையான தெரிவுகள், பிழையான முடிவுகள், பிழையான தீர்மானங்கள் ஆகியவற்றில் விழாதபடி நம்மை தேவனுடைய தூதர்கள் ஏந்துவார்கள்.
சாத்தான் சொன்ன வேத வசனம் உண்மைதான். ஆனால் அவன் சொன்னதைக் கேட்டு இயேசு குதிக்கவில்லை.
இதைக்கோலதான் இருக்கிறது இஸ்லாமிய அறிஞர்களின் வேடிக்கை. “சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது விசுவாசிக்கிறவர்களை சேதப்படுத்தாது” என்று இயேசு சொன்னது உண்மைதான்.
நமக்கு சதி செய்ய நினைப்பவர்கள் விஷத்தை கொடுக்கும் போது அதை நாம் தெரியாமல் குடித்து விட்டாலும் நமக்கு அது ஒன்றும் செய்யாது. “அப்படியானால் கிறிஸ்தவர்கள் விஷம் வைத்து கொல்லப்படுவதில்லையா?” என கேட்பார்கள். அதற்கு சாதாரண விசுவாசம் போதாது. அதீத விசுவாசம் வேண்டும். எல்லா கிறிஸ்தவர்களும் அதிகளவு விசுவாசிப்பதில்லை. ஆனால் பலர் அப்படி விசுவாசிக்கிறார்கள்.
அதற்காக இஸ்லாமிய அறிஞர்களின் கதையை கேட்டு விஷத்தை குடிக்க முடியுமா?
பிசாசின் கதையை கேட்டு இயேசு குதிக்க முயற்சித்தாலும், இஸ்லாமிய அறிஞர்களின் கதையை கேட்டு நாம் விஷத்தை குடிக்க முயற்சித்தாலும் இரண்டுமே தற்கொலை முயற்சியாகத்தான் கணக்கெடுக்கப்பட வேண்டும்.
இப்போது சொல்லுங்கள் இயேசுவை பிசாசு சோதித்ததற்கும், கிறிஸ்தவர்களை இவர்கள் சோதிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே ஒன்றுதான்.
இயேசு எப்படி அந்த சோதனையை ஜெயித்தார்? லூக்கா-04:12 பிசாசைப் பார்த்து “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லி யிருக்கிறதே” என்றார்.
அதே போல நாமும் சொல்லுவோம் “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லி யிருக்கிறதே” என..
இஸ்லாமிய அறிஞர்களைப் பார்த்தல்ல, அவர்களைக் கொண்டு நம்மை சோதிக்கும் பிசாசைப் பார்த்து...
-- Edited by t dinesh on Friday 11th of January 2013 02:49:46 PM
இஸ்லாம் என்பது முற்றிலுமாக மாம்ச கிரியைகளை சார்ந்து நிற்கும் ஒரு மார்க்கம். மாம்ச சிதைக்கும் ஆவிக்குரிய சிந்தைக்கும் என்றுமே ஒத்து போகமுடியாது.
ரோமர் 8:7 மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை;
மாம்சத்தின்படி சிந்திக்கிறவர்களுக்கு "விஷத்தை குடிக்கிறாயா?" என்பது போன்ற கேள்வியை தவிர அதற்ககுமேல்
உள்ள ஆவிக்குரிய விசுவாச நிலை பற்றி அறிந்துகொள்ள முடியாது.
நமது கிறிஸ்த்தவ சகோதரர்களில் கூட அநேகருக்கு ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய நிலைக்கு மேலே வரவோ அல்லது அதை குறித்து சிதிக்கவோகூட முடியாத அளவுக்கு இருதயம் அடைபட்டு இருக்கும்போது இஸ்லாமியர்கள் ஆவிக்குரிய விசுவாசத்தின் மேன்மையை எப்படி அறிந்துகொள்ள முடியும்?
அவரவர் தகுதிக்கு ஏற்றவைகளையே அறியும் ஞானத்தை இறைவன் கொடுப்பார்.