இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது ஏன் ?!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இது ஏன் ?!
Permalink  
 


சகோ. ஜான்12 அவர்களே தங்களின் இந்த செய்தி பதிவை வாசிக்கும்போது கர்த்தரின் பெரிதான கிருபையால்  மறுஜன்மம் எடுத்ததுபோல் பிழைத்து வந்த என்னுடைய பழைய  வாழ்க்கை சம்பவங்கள்தான் நியாபகத்துக்கு வருகிறது.

நானும் கூட அதே ராஜவூரில் பயித்தியம் என்ற பட்டம் கட்டபட்டு கால்களில் விலங்குகளுடன் சுமார் 1 மாதம் கிடந்தவன்தான்.  எந்த முன்னேற்றமும் இல்லாமல் அங்கிருந்து மனோதத்துவ டாக்டரிடம் அழைத்து செல்லபட்டு அனேக நாட்கள் தூக்க மாத்திரையை உண்டு உண்டு தூங்க வைக்கப்பட்டவந்தான்.

நான் மீண்டும் சரியான நிலைக்கு திரும்புவேன் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான்.
  
ஆனால் இங்கு நான் சொல்லும் ஒரு விசேஷ செய்தி என்னவெனில் உலகத்தில் உள்ளவர்கள், சிலரை பயித்தியம் என்றும் மன நிலை சரியில்லதவர்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் என்னுடைய நிலையில் இருந்து பார்த்தபோது இந்த உலக மக்கள்தான் "உள்ளொன்றும் புறமொன்றும் பேசி, அடுத்தவன் மதிக்க வேண்டும் என்றும் அனேக காரியங்களை செய்து, எவனுக்காகவோ வாழ்ந்து, யாரையோ கண்டு பயந்து  வாழ்நாளெல்லாம் பணம் பணம் என்று ஓடிதிரியும் பயித்தியங்களாக தெரிந்தார்கள்" ஆனால் அவர்களோ எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் இருந்த என்னை பயித்தியம் என்று சொல்லி என் காலில் விலங்கை போட்டார்கள்.

I கொரிந்தியர் 3:19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.
நான் பின்னர் எப்படி சுகமானேன் என்பதை எழுதினால் அனேக  கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கு கோபம் வரும் அதனால் "தேவனின் பெரிதான கிருபையால் குணமானேன்" என்று  மாத்திரம் சொல்லி அப்படியே முடிக்கிறேன்!
 
தாங்கள் சுட்டியிருக்கும் அந்த சகோதருக்காக அதிகமாக அனுதாபபடுகிறேன். அவரை சரியாக நடத்த தெரிந்த ஆள் இல்லை போலும்.

இன்று தமிழகத்தில் பேய்களை விரட்டும், சூனியத்தை எடுக்கும் சாத்தானின் அதிகாரத்தை உடைக்கும் எத்தனையோ பெரிய ஊழியர்கள் இருக்கிறார்கள் அவர்களில் யாரவது  அந்த ராஜாவூர் RC சர்ச்சுக்கு போனால் இவர்போல் வேதனைப்படும் பலரை காப்பாற்ற முடியும் என்று கருதுகிறேன்.
என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்துக்கு பின்னும் தேவனால் தெரியப்படுத்தபட்ட ஒவ்வொரு சரியான
காரணம் உண்டு! தேவன் மூலம் அனேக காரியங்களை அறிந்ததால் என்னை எப்படியாவது கொன்றுவிட சாத்தான் பலமுறை முயன்றான். மூன்று முறை தற்கொலைக்கு முயன்று தேவனால் காப்பாற்றபட்டேன்.
  
தாங்கள் சுட்டியுள்ள அந்த சகோதரரும் அப்படியொரு நிலையில் இருந்திருக்கலாம்  என்று கருதுகிறேன். இறுதியில் பெற்ற தகப்பனே எதோ நல்லது செய்வதுபோல் நினைத்து மகனின் கதையை முடித்துவிட்டார்!
நடந்த உண்மைகள் அந்த சகோதருக்கும் தேவனுக்கும்தான் தெரியும்!

இன்று எப்படியோ தப்பி வந்த  நான், தேவனால்  அறிந்த உண்மைகளை அப்படியே எழுதும்போது அதை எல்லோரும் நம்பிவிடவா போகிறார்கள்? மீண்டும் பயித்தியம் என்றுதான் பெயர் சூட்டுவார்கள்! 

ஏற்ற காலம் வரும்போது எல்லாவற்றிக்கும் சரியான பதில் கிடைக்கும்!
I கொரிந்தியர் 4:5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்!
 


-- Edited by SUNDAR on Monday 15th of April 2013 09:03:28 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

noநாகர். அரசு ஆஸ்பத்திரியில் மனநலம் பாதித்த மகனை கொலை செய்த தந்தை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த அனியாபுரம் நல்லூரைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. சமையல் வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி ஜெபக்கனி. இவர்களின் ஒரே மகன் செல்வின் (வயது 27).
 
இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதோடு மனநலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக அய்யாத்துரை மகனை பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கும் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்.
 
என்றாலும் செல்வினுக்கு நோய் குறையவில்லை. அப்போது சிலர் குமரி மாவட்டம் ராஜாவூரில் உள்ள ஆலயத்திற்கு அழைத்துச் சென்று பிரார்த்தனை செய்வதோடு நாகர்கோவிலில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் இதற்காக சிகிச்சை பெறும்படி ஆலோசனை கூறினர்.
 
அதைக்கேட்டு அய்யாத்துரை குடும்பத்துடன் ராஜாவூர் சென்றார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அங்கிருந்தபடியே ஆலயத்திற்கும், நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்தார். இதில் செல்வினுக்கு பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இரவு நேரங்களில் செல்வினின் மனநலச் சேட்டைகள் அதிகமாக இருக்கும்.
 
அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை கண்டிப்பார்கள். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் செல்வின் சேட்டைகளில் ஈடுபட்டார். அவரது கூச்சலும், சேட்டைகளும் அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிலர் செல்வினை கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதை கண்ட அவரது தந்தை அய்யாத்துரை கதறி அழுதார்.
 
அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை கண்டிப்பார்கள். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் செல்வின் சேட்டைகளில் ஈடுபட்டார். அவரது கூச்சலும், சேட்டைகளும் அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிலர் செல்வினை கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதை கண்ட அவரது தந்தை அய்யாத்துரை கதறி அழுதார்.
 
ரத்தக்காயத்துடன் கிடந்த மகனை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதும் செல்வின் நர்சுகளை சிகிச்சை அளிக்க விடாமல் சத்தம் போட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த அய்யாத்துரைக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
 
மகனின் நிலை கண்டு ஒருபுறம் மனம் கண்ணீர் விட்டாலும், அவனது எதிர் காலம் அவருக்கு கேள்விக் குறியாக இருந்தது. தனக்கு பிறகு மகனை யார்? கவனிப்பார் என்ற எண்ணமும் அவர் மனதில் சோகத்தை ஏற்படுத்தியது.
 
இந்த நேரத்தில் செல்வின் கழிவறைக்கு செல்ல வேண்டுமென தந்தையிடம் கூறினார். அவரை அய்யாத்துரை ஆஸ்பத்திரி கழிவறைக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து செல்வினின் அலறல் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த சத்தம் நின்று போனது.
 
அதன் பிறகு அய்யாத்துரை மட்டும் கழிவறையில் இருந்து வெளியே வந்தார். செல்வினை காணவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த நர்சுகள், செல்வின் எங்கே? என்று கேட்டனர். அவர்களிடம், மகனை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக அய்யாத்துரை கூறினார். திடுக்கிட்ட நர்சுகள் இது பற்றி பணியில் இருந்த டாக்டர் செந்தில்குமாரிடம் கூறினார்.
 
உடனே அவர், ஆசாரி பள்ளம் போலீசுக்கும், நாகர்கோவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. உதயகுமார், இன்ஸ்பெக்டர் சுடலைமணி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் அய்யாத்துரை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் படும் வேதனையை பொறுக்க முடியாமல் அவனது கழுத்தை நெரித்து நானே கொன்று விட்டேன் என்று கூறினார்.அவரை கைது செய்த போலீசார், கழிவறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த செல்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் நாகர் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

அன்பு சகோதரரே..

 
தங்களுக்காக கர்த்தரை துதிக்கிறேன். கர்த்தர் தங்களை தப்புவித காரியம் சிலர் எண்ணுவதற்கு அறிதானபடியே அதிசயமானது!!
 
//இன்று எப்படியோ தப்பி வந்த  நான், தேவனால்  அறிந்த உண்மைகளை அப்படியே எழுதும்போது அதை எல்லோரும் நம்பிவிடவா போகிறார்கள்? மீண்டும் பயித்தியம் என்றுதான் பெயர் சூட்டுவார்கள்! //
 
கர்த்தருக்குள்ளான  தங்களின் ஓட்டத்தை அவர் தெரிந்தேடுப்பின்படியே ஓடுங்கள்..  
 
அநேகர் தீர்க்கதரிசனம் உரைதிருந்தாலும் 'நன்றாய் சொல்லியிருக்கிறான் ' என்று ஏசாயாவை தவிர வேறு யாரையும் ஏன் கிறிஸ்துவானவர் பாராட்டவில்லை !!  
 
அனைவரும் கேட்டதை,பார்பதை ,தரிசிப்பதை, கேள்விபடுவதை சொல்பவரானாலும் அங்கிகரிபிற்கு உரியர் வெகு சிலர் என்கிற உண்மை தங்களுக்கு தெரிந்திருபதாக!!!
 
தேவனுக்கே மகிமை உண்டாகுக !!!
 
 
 


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

JOHN12 wrote:

அன்பு சகோதரரே..

 
 அனைவரும் கேட்டதை,பார்பதை ,தரிசிப்பதை, கேள்விபடுவதை சொல்பவரானாலும் அங்கிகரிபிற்கு உரியர் வெகு சிலர் என்கிற உண்மை தங்களுக்கு தெரிந்திருபதாக!!!
 
தேவனுக்கே மகிமை உண்டாகுக !!!
  
 

 

தங்கள் கருத்து உண்மைதான் சகோதரரே! யாரும் யார் சொல்லும் வார்த்தைகள்/ தரிசனங்களை கட்டாயம்  நம்பவேண்டும் என்ற  அவசியம் நிச்சயமாக இல்லை என்பதை நான் உணர்ந்த பின்னரே  மற்றவர்களுடன் போராடுவதை நிறுத்திவிட்டேன்.
 
ஒரு தேவ  தரிசனத்தை காண்பதற்க்கோ அல்லது தேவ வார்த்தையை கேட்பதற்கோ எவ்வளவு தேவ கிருபை வேண்டுமோ அதைவிட மேலாக அந்த தரிசனங்களை 
அறிந்துகொள்ளும் அளவுக்கு தேவன் ஒருவரின் இருதயத்தை திறந்தாலேயன்றி யாராலும் உண்மையை சரிவர நிதானிக்க முடியாது. எனவே புரியாதவர்கள் மற்றும் புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் போராடி எந்த பயனும் இல்லை.
 
அத்தோடு, அன்றில் இருந்து இன்றுவரை உலகில் அநேகர்   தங்கள் இருதய ஏவலையே தரிசனமாக உரைப்பதால்          
நம்பாதவர்கள்மேல் பெரிய  குற்றம் சுமர ஏதுவில்லை என்றே நான் கருதுகிறேன்.
   
 
 எரேமியா 14:14 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி:  அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
 
எசேக்கியேல் 13:3 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு யோ!
இப்படி மதிகெட்ட தீர்க்கதரிசிகள் பலர் இருப்பதால் எல்லோரையும் நம்பாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே! 
 

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard