இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆசை ஓர் விளக்கம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
ஆசை ஓர் விளக்கம்
Permalink  
 


நம்முடைய மனதை எப்பொழுது நாம் ஆசையில்லாமல்  அமைதியாகவோ அல்லது காலியாகவோ (EMPTY ) வைக்கின்றோமோ அப்பொழுது தான் நாம் பயம் இல்லாமல்  தேவ சமாதானத்தை உணரமுடியும் தேவன் நடத்துதலை உணரமுடியும்

நம்முடைய மனது காலியாக அதாவது எந்த  ஒரு ஆசையோ அல்லது எதிர்பார்போ மற்றும் எந்த  நோக்கமோ நம் மனதில் இல்லாதிருந்தால் நம்மை சாத்தானால் கூட புரிந்துகொள்ள முடியாது நம்மை அவன் உபயோகிக்க முடியாதுஇப்பொழுது அவன் நம்மை உபயோகித்து நம்மை ஜெயம்கொல்வதர்க்கு  காரணமாய் இருப்பதற்கு காரணம் இந்த ஆசைகள் தான் 

 

இந்த ஆசைகள் தான் பெரும்பாலும் நம்மை சாத்தானிடத்தில் விழ வைக்க பெரிய ஆயுதமாய் இறுக்கின்றது 

 

(1) பணம்

(2) பொருள்

(3) பெண்ணாசை

       (4) மண்ணாசை


  மேலேகுரிப்பிட்டுள்ள எல்லாமே ஒரு மனிதனுடைய இதயத்தை சந்தோஷமாகும்  காரணிகள் ஆகும் 
அதினால் தான் மனிதன் தனக்கு இன்பம் தர கூடிய இவைகளை விட்டு  விட மனதில்லை அல்லது அவனால் அது முடியவில்லை ஏனென்றால் அது தான் அவன் சந்தோசம் அவன் இன்பம்

இப்படி பட்ட  ஆசைகளை எவன்  ஒருவன் வெருக்கின்ரானொ  அவன் தான் கடவுள்  காட்டும் பாதையில் சரியாய் நடக்கின்றான் என்று அர்த்தம்இந்த ஆசைகள் மனிதனின் மனதிற்குள் புகுந்து ஒரு பெரிய விக்கிரமாக ஆகின்றது அந்த விக்கிரகமான அந்த இடத்திலே துஷ்டன்  அமர்ந்ந்து தன்னுடைய தொழிலை செய்து கொண்டு வருகின்றான் அந்த ஆசைகள் மூலம் மனிதனை அவன் சுலபமாய் பிடித்துகொல்கின்றான் பின்பு மனிதனை அவன் இஷ்டம் போல ஆட்டுவிக்கின்றான் 

எப்பொழுது ஒரு மனிதன் தன்னுடைய மனதிலுள்ள ஆசை என்னும் கோட்டையை உடைக்கின்றானே அப்பொழுதே அந்த ஆசையில்லுள்ள தலைவனும் உடைக்கபடுகின்றான்இந்த ஆசை என்பது ஒரு மாயை இதற்க்கு ஒரு உதாரணம் என்னவெனில் நாம்
நம்முடைய முகத்தை கண்ணாடியில் பார்த்தால் எப்படி அந்த கண்ணாடியானது நம்முடைய முகத்தை அப்படியே பரதிபல்லிக்கும் ஆனால் நாம் உண்மை  அந்த கண்ணாடியில் காட்டும் அந்த உருவமே மாயை ஆம் அதே போல் தான் இந்த ஆசை என்னும் மாயபேய்  இந்த பூமியில் நாம் காண்கின்ற அனைத்தும் நம் கண்ணுக்கு தெரியும் ஆனால் இவைகள் எல்லாம் நீ கண்ணாடியில் உன் முகத்தை பார்த்தது போலவே மாயை என்பதை உணர்ந்துகொண்டால் போதும் 


இந்த ஆசையானது உன் மனதை முற்றிலும் ஆளுவதால் அந்த ஆசையால் தான் நீ ஒவ்வொரு நாளும் நீ நடத்த படுகின்றாய்


உன் ஆசைகளை நிறைவேற்ற பல தவறுகள் செய்கின்றாய் பெரும்பாலும் ஆசைகள் என்பது தவறுகளால் தான் கிடைக்கும் இப்படி இருக்கும் இந்த ஆசையானது பூமியில் பிறந்த ஒருவனையும் நல்லவனாய் இருக்க விடவில்லை

 

இந்த மனம் எப்பொழுது ஆமைதியாகின்றதோ அப்பொழுதே ஆசைகள் உன்னக்கு தூரமாய் இருக்கின்றது  என்பதை புரிந்துகொள்

இந்த ஆசைகள் உனக்குள் இருப்பதினால் தான் சண்டை , கோபம் , எரிச்சல், கொலை, இந்த ஆசை உனக்குள் இருந்தால் நீ  இந்த  பல்வேறு பொல்லாத

ஆவிகளுக்கு   அடிமையாவாய் இருப்பாய் என்பதை புரிந்துகொள்

ஆசைகள் உன்னை முழுவது திருப்பதி செய்யாது என்பதை  புரிந்து கொள்

இந்த  ஆசையானது முடிவில்லாத ஆழம் உடையது இதற்க்கு எல்லை இல்லை என்பதால்

நீ தான் அதற்க்கு எல்லையை போடவேண்டும்

 

 

எல்லையை எப்படி  போட வேண்டும் ?

இந்த ஆசையை அப்படியே  வேறோருப்பக்கம் திருப்பி விட வேண்டும் (1) நீதியாய் நீயாயமாய்  இருக்க ஆசை பட வேண்டும்

(2) மற்றவர்களுக்கு உதவ ஆசையாய் இருக்க வேண்டும்

(3) நம்மால் ஒருவரும் கண்ணீர் வடிக்க கூடாது வேதனை பட கூடாது என்ற ஆசை இருக்க வேண்டும்

(4)தேவனை பார்க்க ஆசை இருக்க வேண்டும்

 

(5) தேவன் சொன்ன அனைத்தையும் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும்

பாருங்கள் நண்பரே இவைகளும் ஆசைதான்

இந்த ஆசைகளை வெருத்தவனே அனைத்தையும் வென்றவன் ஆவான் 

ஆசைகள் இல்லாதவன் மனிதனில்லை என்று உலக சொல்லுண்டு

ஆம் அவன் மனிதனில்லை............

 -- Edited by EDWIN SUDHAKAR on Thursday 25th of April 2013 03:19:10 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

நம்முடைய மனதை எப்பொழுது நாம் ஆசையில்லாமல்  அமைதியாகவோ அல்லது காலியாகவோ (EMPTY ) வைக்கின்றோமோ அப்பொழுது தான் நாம் பயம் இல்லாமல்  தேவ சமாதானத்தை உணரமுடியும் தேவன் நடத்துதலை உணரமுடியும்

நம்முடைய மனது காலியாக அதாவது எந்த  ஒரு ஆசையோ அல்லது எதிர்பார்போ மற்றும் எந்த  நோக்கமோ நம் மனதில் இல்லாதிருந்தால் நம்மை சாத்தானால் கூட புரிந்துகொள்ள முடியாது நம்மை அவன் உபயோகிக்க முடியாது  


மிக அருமையான கருத்து சகோதரரே!

படித்து பார்ப்பதற்கு இந்துத்துவ கருத்து போல இருந்தாலும் "ஆசை" என்ற மாய வலையின் மூலமே  சத்துரு அனேக நேரங்களில் மனுஷர்களை பிடித்து  வைத்திருக்கிறான் என்பது உண்மை.

மனதில் எழும் ஆசையை அறவே ஒழித்தால் அதாவது சிலுவையில் அறைந்துவிட்டால் நம் மனதில்  இருக்கும் காரியங்களை சத்துருவால் அறிய முடியாது என்றே நானும் கருதுகிறேன்     

கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

 

EDWIN SUDHAKAR wrote:

////இந்த ஆசையை அப்படியே  வேறோருப்பக்கம் திருப்பி விட வேண்டும் 

(1) நீதியாய் நீயாயமாய்  இருக்க ஆசை பட வேண்டும்

(2) மற்றவர்களுக்கு உதவ ஆசையாய் இருக்க வேண்டும்
(3) நம்மால் ஒருவரும் கண்ணீர் வடிக்க கூடாது வேதனை பட கூடாது என்ற ஆசை இருக்க வேண்டும்

(4)தேவனை பார்க்க ஆசை இருக்க வேண்டும்

(5) தேவன் சொன்ன அனைத்தையும் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும்

 பாருங்கள் நண்பரே இவைகளும் ஆசைதான் ////

 

தேவனுடைய காரியங்களை நிறைவேற்ற /தேவன் நம்மை தெரிந்துகொண்ட நோக்கத்தை நிறைவேற்ற அதிக ஆசை கொள்ள வேண்டும் என்ற தங்கள் கருத்து மிகவும் மிகவும் பயனுள்ளது!  

பிலிப்பியர் 3:12  கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன.

   -- Edited by SUNDAR on Thursday 2nd of May 2013 10:01:22 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நல்ல கருத்துக்கள் நண்பர் சுதாகர் அவர்களே!!
 
அனைத்து தகவல்களும்,கருத்துகளும் பக்தி விருத்திக்கு ஏதுவானவையாய் இருக்கின்றன!!
 
//நம்முடைய மனது காலியாக அதாவது எந்த  ஒரு ஆசையோ அல்லது எதிர்பார்போ மற்றும் எந்த  நோக்கமோ நம் மனதில் இல்லாதிருந்தால் நம்மை சாத்தானால் கூட புரிந்துகொள்ள முடியாது நம்மை அவன் உபயோகிக்க முடியாது  //
 
There is a saying in ENGLISH!!  'Empty mind is Devil's Workshop' என்று . இது அனுவப அடிப்படையிலான கருத்து. இக்கருத்தை நண்பர்.எட்வின் எப்படி மேற்கூறியவாறு மறுக்க முடியும் என்று விளக்கினால் இன்னும் பிரயோஜனமாய் இருக்கும்!!
 
தேவனுக்கே மகிமை உண்டாகுக!!


-- Edited by JOHN12 on Friday 3rd of May 2013 05:58:09 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

_____________________________________________________________________________________________________
//நம்முடைய மனது காலியாக அதாவது எந்த  ஒரு ஆசையோ அல்லது எதிர்பார்போ மற்றும் எந்த  நோக்கமோ நம் மனதில் இல்லாதிருந்தால் நம்மை சாத்தானால் கூட புரிந்துகொள்ள முடியாது நம்மை அவன் உபயோகிக்க முடியாது  //
 
There is a saying in ENGLISH!!  'Empty mind is Devil's Workshop' என்று . இது அனுவப அடிப்படையிலான கருத்து. இக்கருத்தை நண்பர்.எட்வின் எப்படி மேற்கூறியவாறு மறுக்க முடியும் என்று விளக்கினால் இன்னும் பிரயோஜனமாய் இருக்கும்!!
__________________________________________________________________________________________________
 
தேவன் ஆதாமை ஏவாளை படைக்கும் பொழுது அவர்கள் இருவருடைய  மனமும் எந்த ஆசையும் எதிர்பார்ப்பும் இல்லாமல்  காலியாகத்தான் இருந்தது அதாவது சாத்தானுக்கு அவர்களிடத்தில் ஒன்றும் இல்லாமல் இருந்தது அதினால் தான் சாத்தான் அவர்களுக்குள் தன்னுடைய வஞ்சக வார்த்தையினால் ஆசை என்னும்  (இச்சையை) அவர்களுக்குள் நுழைத்தான்

அதியாகமம் 3:5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

ஆசையானது  ஏவாளை இருதயத்தை ஆட்கொண்டது 

அதியாகமம் 3:6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

சாத்தான் ஆசையை நுழைத்தான்  காரியத்தை முடித்தான் 


இயேசு கிறிஸ்து உபவாசம் இருந்து சோதிக்கப்படும் பொழுது இதே ஆசையை தான் நம் ஆண்டவராகிய இயேசு  கிருஷ்துவுக்கும் நுழைத்தான்
ஆனால் தேவ குமாரன் அவனை ஜெயித்தார்  காரணம் தெரியுமா ?

யோவான் 14:30  அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
 
இந்த உலக ஆசை தேவ குமாரனிடத்தில் இல்லை 

இவரை போலவே நாம் சொல்ல முடியுமா அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.என்று
 
John12 wrote
____________________________________________________________________ 
'Empty mind is Devil's Workshop' என்று . இது அனுவப அடிப்படையிலான கருத்து
______________________________________________________________________________
 
 
சில சமயங்களில் எல்லாருடைய அனுபவ கருத்துகளும் ஏற்றுகொள்ள முடியாது நண்பரே
 
உதாரணம்

மாதா
பிதா
குரு
தெய்வம்

அதாவது மாதா பிதா குரு இவர்களுக்கு பிறகு தான் தெய்வமாம் இது உலகத்தில் உள்ள
அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் கருத்து

சொல்லுங்கள் நண்பரே நீங்கள் இதை ஏற்றுகொள்வீர்களா ?
ஆனால் நமக்கு வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் 

மத்தேயு 10:37 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.-- Edited by EDWIN SUDHAKAR on Monday 6th of May 2013 01:43:20 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நண்பர் எட்வின் அவர்களே!!
 
மிக அருமையான பதில். கர்த்தர் தங்களோடு இருக்கிறபடியினால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
 
எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
 
நீங்கள் கூறுகிற 'வெறுமை', 'இல்லாத நிலை' எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிரப்புதளுக்காகவே காலியாய் காக்கபட்டிருக்க வேண்டும்.
 
அவ்வாறு, காக்கபடாவிடில் பிசாசு தீமையினால் நிரப்புகிறான் அல்லது கெடுத்துப்போடுகிறான். கர்த்தர் தாமே அவர் நம் வாழ்வில் பரிபூரணமாய் செயல்பட ஏற்ற வெறுமை நம்மில் காணப்படவும், அது சரியாய் காக்கப்பட்டு வேலியடைக்கப்படவும் அனைவருக்கும் உதவி செய்வாராக!!
 
GLORY TO GOD


-- Edited by JOHN12 on Monday 6th of May 2013 02:14:04 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

ஆசையானது மனிதனுக்கு இல்லாமல் இல்லை அதே போல ஆசையானது நல்லவைகளுக்காகவும் கட்டவைகளுக்காகவும்   என்று இரண்டு விதமாகவும் உள்ளது அப்படி இருக்க  இந்த ஆசையானதை தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிகின்ர   விதமாக நாம்  மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதே இந்த தலைப்பின் மெய்யான கருத்து.

 

ஒன்று இல்லாத (ஆசை இல்லாத ) காலியான மனதை தேவனால் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது.அனேகஆசைகள் நமக்குள்  உள்ளது அதினால் அந்த ஆசையானது தீமைக்காக இல்லாமல் தேவனுடைய வார்த்தையின் படி நடக்க வேண்டும் என்பதையே  இங்கு குறிப்பிட்டுள்ளேன் 

 
EDWIN SUDHAKAR wrote:

////இந்த ஆசையை அப்படியே  வேறோருப்பக்கம் திருப்பி விட வேண்டும் 

(1) நீதியாய் நீயாயமாய்  இருக்க ஆசை பட வேண்டும்

(2) மற்றவர்களுக்கு உதவ ஆசையாய் இருக்க வேண்டும்
(3) நம்மால் ஒருவரும் கண்ணீர் வடிக்க கூடாது வேதனை பட கூடாது என்ற ஆசை இருக்க வேண்டும்

(4)தேவனை பார்க்க ஆசை இருக்க வேண்டும்

(5) தேவன் சொன்ன அனைத்தையும் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும்

 பாருங்கள் நண்பரே இவைகளும் ஆசைதான் ////-- Edited by EDWIN SUDHAKAR on Monday 6th of May 2013 04:29:52 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard