இன்று கிறிஸ்தவத்தில்பெரிய பெரிய ஊழியர்கள் முதல் சகோதரர் சகோதரிகள் வரை மற்றவர்களை பார்த்து நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள் என்றும் வாய் கூசாமல்சொல்கின்றார்கள்
லூக்கா 6:37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்;மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள்,அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
ஒரு போதகர் இப்படியாக சொல்கின்றார் நாம் எல்லோரும் பாக்கியவான்கள் நாம் எல்லோரும் பரலோகம் செல்வோம்மற்றவர்கள் எல்லாம் நரகத்திற்கு செல்வார்கள் என்று
ரோமர் 2:1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
இதுதான் இறவன் உனக்கு கொடுத்த அன்பா இதற்காக தான் தேவனுடைய பரிசுத்த ஆவியை நீ பெற்றுகொண்டாயா
Romar 5: 5. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்,
நான் கிறிஸ்தவன் நான் கிறிஸ்தவன் என்றுசொல்லுகின்றவனே கிறிஸ்து யார் தெரியுமா ?
நம்முடைய பாவங்களுக்க மரித்தவர் நமக்கா ஜீவனை விட்டவர் நமக்காகஅடி உதய் வாங்குவதற்காகவே வந்தவர் நாம் நித்தியஜீவனை அடையவேண்டும் என்று அவர் ஜீவனை விட்டவர் தேவனாய்இருந்து மனிதர்களின் கால்களை கழுவியவர்
இவைகளில் என்ன இருக்கின்றது என்று நீ கண்டுபிடித்தாயானால் அவரை புரிந்துகொள்வாய்
இதில் அடங்கி இருப்பது ஒன்றே ஒன்று தான் அது தான் அன்புஅன்புஅன்பு இதை தவிர வேறு ஒன்றும் இல்லை
I யோவான் 3:23 நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர்நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.
இந்த அன்பு உன்னிடத்திலும் என்னிடத்திலும் இருக்க வேண்டும் என்றுஅவர் எதிர்பார்க்கின்றார்
உன்னையும் என்னையும் சுவிஷேசம் சொல்ல தான் சொல்லியிருக்கின்றாரே அன்றிமற்றவர்களை நரகத்தில் நியாயம்தீர்க்க சொல்லவில்லை
மாற்கு 16:15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
முதலாவது உன்னுடைய தேவனை அறிந்து கொள் அவருடைய குணங்களை புரிந்துகொள்
நீதிமொழிகள் 30:3 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
இயேசுஎன்ன சொல்லிகொடுத்தார அதை மாத்திரம் செய்
மாற்கு 12:31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
நீ எப்படி நரகத்திற்கு போக கூடாது என்று நினைக்கின்றாரையோ அதே போல மற்றவர்களும் நரகத்தில் போக கூடாது என்று நினை
இப்படி செய்கின்றவன் தான் ஒரு உண்மையான கிறிஸ்தவன்
அப்போஸ்தலர் 10:35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.