பரிசுத்தம்’ என்பது மானிடர்க்கு சோதனைகள் மூலமாகவே வரமுடியும். ஆதாம் முதலில் நன்மை தீமை அறியாதவனாகத்தான் உருவாக்கப்பட்டான். தேவனோ, அவன் பரிசுத்தனாய் இருக்க விரும்பினார்! எனவேதான் அவன் சோதிக்கப்படும்படி அனுமதித்தார்!!
நன்மை தீமை அறியத்தக்க மரமானது தேவனால் படைக்கப்பட்டதே ஆகும். அது தன்னில் தான் தீமையுடையது அல்ல! அது ‘மிகவும் நல்லது’ என்று தேவன் சொன்ன ஒரு உலகத்தில்தான் இருந்தது (ஆதி 1:31). ஆகிலும், அது தேவனால் விலக்கப்பட்டு, அதன்மூலம் ஆதாம் சோதிக்கப்பட்டு, அதற்கு அவன் எதிர்த்து நின்று... பரிசுத்தனாயிருக்க வாய்ப்பு அளிக்கிற ஒரு மரம்!
“நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்றே வேதம் சொல்லுகிறது (யாக்கோபு 1:2).ஏனென்றால், அந்த சோதனைகளே தேவனுடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்காளிகளாக நமக்கு சந்தர்ப்பம் அளிக்கின்றன! (எபி 12:10). நாம் ஒன்றிலும் குறைவுபடாமல் பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படியே சோதனைகள் நிகழ்கின்றன! (யாக் 1:4).
நாம் இயேசுகிறிஸ்துவின் பரிசுத்தத்தின் மகிமையை தியானிக்கிற வேளையில், அவர் தேவனாய் இருந்தபோது கொண்டிருந்த பரிசுத்தத்தைக் கவனிக்கப் போகிறதில்லை. ஏனெனில் அது நமக்கு மாதிரியாய் இருக்க முடியாது! நாம் அவரை “எல்லாவற்றிலும் தம் சகோதரருக்கு ஒப்பாக இருந்தவராயும்” “நம்மைப்போல் எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டு பாவமில்லாதிருந்தவராகவே” இப்போது பார்க்கிறோம் (எபி 2:17; எபி 4:15). இப்படித்தான் இயேசு நமக்கு முன்னோடியானார்! (எபி 6:20). நாம் ஓட வேண்டிய ஓட்டத்தை நமக்கு முன்னால் ஓடி, நாம் பின்பற்றக்கூடிய ஒரு வழியைத் திறந்துவைத்தார். ஆகையால்தான் அவர் நம்மைப் பார்த்து “என்னைப் பின்பற்றுங்கள்” என்று சொல்ல முடிந்தது! (யோவான் 12:26). இவ்வாறு நமக்கு முன் ஓடிய அவரை நோக்கி நாமும்கூட ஓட்டத்தை பொறுமையாய், சோர்ந்துபோகாமல் அதைரியமடையாமல் ஓடிடமுடியும்!(எபி 12:1-4).
எந்த ஒரு மனிதனுக்கும் நேரக்கூடிய ஒவ்வொரு சோதனையையும் நாம் எப்படி சந்திக்கிறோமோ அப்படியே அவரும் சந்தித்தார்! இவ்வாறாகவே அவர் நம்மைப்போல் எல்லாவிதத்திலும்சோதிக்கப்பட்டார். எபிரெயர் 4:15-ல் சொல்லப்பட்ட இந்த உண்மை, யாரேனும் ஒருவர்கூட தவறாகப் புரிந்து கொள்ளமுடியாத, மிக வெளிப்படையான தெளிவான உண்மை! இதுவே, நம் எல்லோரையும் உற்சாகமூட்டுவதாய் உள்ளது!!
இன்று தேவன் நமக்கு கொடுக்கக்கூடாத எந்த ஒரு பெலனையும் இயேசு விசேஷமாய் பிரயோகப்படுத்தவில்லை. தன்னுடைய பிதாவாகிய தேவனால் தனக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் ‘ஒரு மனிதன் என்ற முறையில்’ சோதனையைச் சந்தித்து வெற்றி பெற்றார்!
தேவன் நல்லது என்று கண்ட பூமியில் தான் நன்மை தீமை அறியத்தக்க மரத்தை வைத்தார் அனால் அந்த மரத்தை முளைக்க பண்ணிய பின்னர் தேவன் அதை நல்லது என்று கண்டார் என்று வேதம் சொல்லவில்லை.
"தீமை" என்ற வார்த்தை வந்த பின்னர் "நல்லது" என்று தேவனால் காண முடியாது.
மனிதனை சோதிக்க தீமையை தேவன் அனுமதிக்கிறார் என்பது உண்மைதான் ஆனால் தீமைக்கு தேவனுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வேண்டுமென்று அதை உருவாக்கவும் இல்லை.
சோதனை நல்லதுதான் ஆனால் அந்த சோதனை எப்படி வருகிறது என்பதை நாம் ஆராய்ந்தால்
யாக்கோபு 1:14அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்
அவனவனுடைய இச்சையினாலேயே சோதனை உண்டாகிறது.
மேலும் சோதனை என்பது பரிசுத்தத்திற்கு அவசியமானால் ஆண்டவாகிய இயேசு இவ்வாறு ஜெபம் செய்ய சொல்லியிருக்க மாட்டார்
சோதனைக்கு உட்படாமல் விலகியிருக்கவே இயேசு வழி கூறினாறேயன்றி இச்சைக்குள் இழுபட்டு சோதனைக்குள் விழ இயேசு வழி சொல்லவில்லை. ஆகினும் ஆண்டவராகிய இயேசுவே சாத்தானால் சோதிக்கப்பட்ட நிலையில் அற்ப மனுஷர்கலாகிய நாம் சோதனையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது.
எனவே தங்கள் கருத்தை தவறு என்று சொல்ல நான் வரவில்லை அதேநேரம் நமக்கு வரும் சோதனை எல்லாம் நம்மை பரிசுத்தபடுத்தவே வருகிறது என்றும் எண்ணிவிட முடியாது.
இக்கருத்தை சற்று மாற்றி யோசித்தால் நலம் என்று கருதுகிறேன்
அதாவது மாம்ச இச்சையை பயன்படுத்தி சாத்தான் மனுஷனை சோதனைக்குள் இழுக்கிறான் அல்லது "இவன் இந்த விஷயத்தில் இச்சையாக இருக்கிறான்" என்று தேவனிடம் பிராது பண்ணி அவரை சோதிக்க தூண்டுகிறான். நடக்கும் சோதனையில் நாம் ஜெயித்தால் நமது பரிசுத்தத்தை காத்துகொண்டு நாம் உத்தமன் என்று நிரூபிக்கலாம் தேவன்கூட யோபுவை உயர்த்தி கூறியதுபோல நம்மை குறித்தும் கூறுவார்.
தோன்றுபோனால் ஆவிக்குரிய நிலையில் பின்தள்ளபட்டுபோவதோடு அதற்க்கான தண்டனையையும் அடைய நேரிடலாம்.
ஆகினும் அது ஒரு முடிவு அல்ல!
நீதி 24:16நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;
சங் 37:24அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை;
-- Edited by SUNDAR on Friday 19th of July 2013 08:16:01 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஒரு மனுஷன் பரிசுத்தம் அடைவதில் பல கட்டங்கள் இருக்கின்றன.
அதில் தேவன் தன பரிசுத்த இரத்தத்தை சிந்தி ஒரு மனுஷனை பரிசுத்தம் ஆக்குவதில் முதன்மையான முக்கியமான பங்கு வகுப்பது உண்மை! ஆனால் இரண்டாம் கட்டத்துக்கு கடந்து செல்ல மனுஷனின் ஒத்துழைப்பும் அவசியம் ஆகிறது.
உதாரணமாக:
பாவம் என்னும் ஊளையான சேற்றில் மூழ்கி சாகும் தருவாயில் கிடக்கும் ஒருவனை இயேசு தூக்கி எடுத்து தன சொந்த ரத்தத்தால் கழுவி பரிசுத்தமாக்கி என்னை பின் பற்றிவா என்று கட்டளையிடுகிறார்.
இங்கு பரிசுத்தபடுத்தபட்ட அந்த மனுஷன் தானும் கூட கொஞ்சமேனும் ஒத்துழைத்து தேவனின் வார்த்தைகளின் படி நடந்து அவர் பின்னே செல்ல பிரயாசம் எடுக்கவேண்டும் அனால் அவனோ பரிசுத்தம் அடைய கொஞ்சமும் முயற்சி எடுக்காமல் திரும்பவும் அந்த பாவ சேற்றில் சென்று புரள்வதிலேயே குறியாக இருந்தால் இயேசு வாந்திபண்ணி போட்டுவிடுவார்.
பரிசுத்தம் என்பது பரிசுத்தராகிய இயேசுவிடம் இருந்து மட்டுமே வர முடியும் என்பது உண்மையே ஆனால் பரிசுத்தத்தின் மேல் வாஞ்சை இருந்தால் மட்டுமே இயேசுவால் அதை நமக்கு தர முடியும் என்பது எனது கருத்து! அவ்வாறு நமக்கு பரிசுத்தத்தின் மேல் வாஞ்சை இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய சோதனை ஒரு கருவியாக பயன்படுகிறது என்பதும் உண்மைதான்!
-- Edited by SUNDAR on Wednesday 24th of July 2013 07:58:28 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பரிசுத்தம் என்பது மானிடர்க்கு சோதனைகள் மூலமாகவே வரமுடியும் என்றால் இயேசுவானவருக்கு எப்படி வந்தது பரிசுத்தம்.. புடமிடபடுவதற்கு முன்பே அவரை வேதம் தேவனுடைய பரிசுத்தர் என்கிறதே!! பரிசுத்தத்தின் மூலம் தேவன் மாத்திரமே!! மனித கிரியை அல்ல.. நேரிடுகிற சோதனையினாலும் அல்ல!!
பரிசுத்தம் என்பது மனித கிரியைகளால் நேரிடுவது அல்ல.. அது தேவனால் ஏற்படுவது!!
'பரிசுத்தமுள்ளது' என தேவனால் பிறந்த இயேசுவானவர் அழைக்கப்பட்ட காரணமும் அதுதான்.இல்லை என்றால் இயேசு மானிடரே அல்ல என கூறவேண்டி வரும்.
தலைப்பு -பரிசுத்தம் சோதனைகளால் மாத்திரமே வர முடியும் என்பதாக உள்ளது. நான் தேவனால் மாத்திரமே பரிசுத்தம் வரும் என்கிறேன்..
சகோ. ஜான் அவர்களே திரியின் தலைப்பு பரிசுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதல்ல "பரிசுத்தம் எப்படி வரமுடியும்" என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.
தங்களின் பதில்படி "தேவனால் எல்லாம் கூடும்" என்பதுபோல "தேவனாலேயே பரிசுத்தம் வரும்" என்று பொத்தம் பொதுவாக கூறுகிறீர்கள். சூரியனில் இருந்து ஒளி வரும் என்பதுபோல் மகா பரிசுத்தரிடத்தில் இருந்துதான் பரிசுத்தம் வரும் என்று யாருக்குதான் தெரியாது?
பரிசுத்தரும் அவரே
வெளி 15:4தேவரீர் ஒருவரே பரிசுத்தர்,
பரிசுத்த படுத்துகிரவரும் அவரே
யாத் 31:13உங்களைப் பரிசுத்தப்படுத்துகிறகர்த்தர் நான்
என்று வேதம் சொல்வது நமக்கு தெரியாத என்ன? ஆனால் இவ்வாறு பரிசுத்தராக இருக்கும் தேவன் நம்மிடம் சொல்வது என்ன?
I பேதுரு 1:16நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
என்றல்லவா சொல்கிறார். அவரே எல்லாவற்றையும் செய்துவிட்டால் நம்மை பார்த்து இவ்வாறு சொல்லவேண்டிய அவசியம் இல்லையே!
எனவே மகா பரிசுத்தரிடம் இருந்து அந்த பரிசுத்தத்தை சிறிதேனும் பெற்றுக்கொள்ள அத்தோடு அவரிடம் இருந்து பெற்ற பரிசுத்தத்தை காத்துக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதானே முக்கியம்?
உதாரணமாக இருளில் இருக்கும் நமக்கு வெளிச்சம் வேண்டும் என்றால் வெளிச்சம் எங்கிருந்து வரும்? ஒளிரும் தன்மையுடைய ஒரு பொருளில் இருந்துதான் வரும்.
ஆனால் ஒருவன் என்ன செய்கிறான்? தானாகவும் ஒளியிடத்தில் வர விரும்பவில்லை அவனை வெளிச்சம் இருக்கும் இடத்தில் கொண்டு விட்டாலும் அங்கு இருக்க விரும்பாமல் இருளை தேடியே ஓடுகிறான் அல்லது அந்த ஒளி தன்மேல் பட்டுவிடாமல் எதையாவது வைத்து மறைத்துகொண்டால் எப்படி அவனால் வெளிச்சத்தை பெற முடியும்?
அதேபோல் பரிசுத்தம் என்பது தேவனிடம் மட்டுமே இருக்கும் ஓன்று! பரிசுத்தராம் இயேசுவின் மூலம் மட்டுமே நாம் அதை அடைய முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை அந்த பரிசுத்தத்தை அவர் எல்லோருக்கும் இலவசமாக கொடுக்க விரும்புகிறார் என்பதும் உண்மையே! ஆகினும் ஒருவர் அதை விரும்பாத பட்சத்தில் அவரிடம் போராடி தேவன் திணிப்பது இல்லை. தேவனின் ஆவி மனுஷ ஆவியோடு என்றும் போராடுவது இல்லை!
ஆண்டவராகிய இயேசு நாம் பாவிகளாக பரிசுத்தம் இல்லாதவர்களாக இருக்கும் நேரத்தில்தான் மரித்தார் ஆனால் அதன் மூலம் எல்லோரும் பரிசுத்தம் அடையவில்லையே! அவர் பரிசுத்த இரத்தத்தை பயன்படுத்தி அதன் மூலம் பரிசுத்தம் அடைய பலருக்கு தெரியவில்லையே!
தேவனின் செயல்பாடு என்பது எல்லோருக்கும் பொதுவான ஓன்று எனவே பரிசுத்தம் என்பது தேவனிடம் இருந்து இலவசமாகவே வருகிறது! ஆனால் அதை பயன்படுத்தி பரிசுத்தம் அடைவதும் அல்லது அதை நிராகரித்து அசுத்தத்துக்குள்ளேயே இருப்பதும் ஒரு மனுஷனின் செயல்பாட்டில் அல்லவா இருக்கிறது!
தாகம் உள்ளவனுக்கு ஜீவத்தண்ணீர் இலவசமாக கிடைப்பது போல் தேவனின் கட்டளையாகிய "நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" என்ற வார்த்தையை ஏற்று "நானும் பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்றெண்ணி பரிசுத்தத்தின் மேல் வாஞ்சை உள்ளவனுக்கு தேவன்மூலம் அது இலவசமாக கிடைக்கும் என்பதே என்னுடைய கருத்து!
அதாவது 99% தேவனின் செயல்பாடு 1% மனுஷனின் செயல்பாடு அந்த 1% கூட உடன்படுதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல் என்பதுதான். அதாவது அதை பெற்றுக்கொள்ள வாஞ்சையோடு தேவனிடம் ஜெபித்தல் அதைதான் இயேசு செய்ய சொன்னார்.
ஆனால் அந்த செயல்பாட்டையும் செய்ய விரும்பாமல் நிராகரிப்பவர்கள் எப்படி பரிசுத்தம் அடைய முடியும்? தேவன் அவர்கள் மேல் பரிசுத்தத்தை கொண்டு திணிப்பாரா? அப்படி திணிப்பார் என்று கருதினால், பட்சபாதமற்ற தேவன் உலகில் எல்லோரையுமே ஓர்நாளில் பரிசுத்தம் ஆக்கிவிடுவார் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் நானும் அதற்க்கு உடன்படுகிறேன்.
மற்றபடி சோதனை என்பது பரிசுத்தத்தை காத்துக்கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பமே என்பது முற்றிலும் உண்மை
-- Edited by SUNDAR on Thursday 25th of July 2013 07:33:18 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தலைப்பு -பரிசுத்தம் சோதனைகளால் மாத்திரமே வர முடியும் என்பதாக உள்ளது. நான் தேவனால் மாத்திரமே பரிசுத்தம் வரும் என்கிறேன்..
//பரிசுத்தம் என்பது பரிசுத்தராகிய இயேசுவிடம் இருந்து மட்டுமே வர முடியும் என்பது உண்மையே ஆனால் பரிசுத்தத்தின் மேல் வாஞ்சை இருந்தால் மட்டுமே இயேசுவால் அதை நமக்கு தர முடியும் என்பது எனது கருத்து!//
உண்மையில் சொல்லுங்கள்!! பரிசுத்தத்தில் வாஞ்சை உள்ளவர்களாய் கர்த்தரின் பார்வையில் நாம் இருக்கத்தான் இயலுமா?? நாம் வாஞ்சை உள்ளவர்களாய் இருக்கும்போது தானா அவர் நமக்காக மரித்தார் . எந்த மனிதனும் பரிசுத்தத்தில் வாஞ்சை கொண்டதின் பேரில் அவர் மரிக்கவில்லை.நாம் பரிசுத்தைப் பற்றி அறிவற்றவர்களாய் இருக்கும் பொது தான் நமக்காக மரித்தார்.. நம்மில் ஜீவன் உண்டாக நமக்காக மரித்தார். .வேதம் கூறும் இக்கருத்தே என் கருத்து..
நான் தெரிவிப்பது என்னவெனில்,சோதனையில் இருந்து பரிசுத்தத்தை பெற இயலாது!!! சோதனை என்பது பரிசுத்தத்தை காத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட வாய்ப்பு!! காத்துகொள்பவன் ஜெயம் பெறுபவான்!! ஆனால் பரிசுத்தம் தேவனால் மாத்திரமே உண்டாவது!!! திரியின் தலைப்பில் உள்ளது போல் சோதனையினால் உண்டாவதல்ல!!
பரிசுத்தம் தேவகிருபையினால் காத்துகொள்ளப்படுவது தான்!!! அதில் ஏற்படுகிற மனித கிருபையும் தேவ கிருபையினால் உண்டாவது !! இல்லையெனில் இயேசு சொல்லி கொடுத்த ஜெபத்தில் 'சோதனையில் இருந்து காத்தருளும்' என வேண்டிக்கொள்ள சொல்லிருக்கமாட்டார்!!