"இயேசு கிருஸ்துவை அடித்தது யார்?", "இயேசு கிருஸ்து நம் சாபத்தை நீக்கினார் என்றால் ஏன் இன்னமும் சிலருக்கு துன்பம் வருகிறது?" போன்ற கேள்விகள் இந்த தளத்தில் சகோதரர்களால் கேட்கப்பட்டன.
சில கேள்விகள் ஏடாகூடமாக இருப்பது போல தோன்றினாலும் அவற்றின் மூலமாக சில உண்மைகளை அறிந்து கொள்ள இயலும். அந்த வ்கையில் இந்த கேள்விக்கான பதிலை பார்ப்போம்.
இந்த கேள்விக்கு சரியான பதிலை அறிந்து கொள்ள சில அடிப்படையான விஷயங்களை பார்க்க வேண்டும். இந்த கேள்விக்கான பதில் மிகவும் நீண்டதாக அமைய கூடும்.
இந்த உலகத்தை படைத்த தேவன் அதை தன் நீதியால் இயக்குகிறார். வினை-விளைவு என்ற காரண-காரியத்தின் மூலம் இந்த உலகம் இயங்குகிறது. இந்த தேவ நீதியை மீறி யாரும் எந்த காரியத்தையும் செய்ய முடியாது. தேவன் மட்டுமே இதை மீற முடியும் என்றாலும், அவரும் இதை மீற மாட்டார்.
இந்த பூமியில் பிறக்கும் அனைத்து மனிதர்களும் சில கர்ம வினைகளை, அதாவது முந்தின கடன்களை அனுபவிக்க வேண்டியே இந்த பூமியில் வந்து பிறக்கின்றனர். இவை நன்மையான பலன்களாகவும் இருக்கலாம் அல்லது தீமையான பலன்களாகவும் இருக்கலாம். எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான பிறப்பும், அனுபவமும், வாய்ப்பும் கிடைப்பதில்லை என்பதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
(இந்த முந்தின கடன் எப்படி வந்தது என்பது ஒரு தனி ஆராய்ச்சியாகும். அது இப்போது தேவையில்லாதது. பிறகு பார்ப்போம்.)
இந்த கர்ம வினையை மெழுகுவர்த்திக்கு ஒப்பாக கொள்ளலாம். மெழுகுவர்த்தி உள்ள வரை நெருப்பு எரியும். மெழுகு தீர்ந்தால் நெருப்பு எரிய முடியாது. அது போல கர்ம வினை இல்லாத மனிதன் இந்த பூமியில் பிறக்க முடியாது.
கர்ம வினையை அனுபவிக்க பூமியில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் (அதாவது எல்லா மனிதர்களும்) "வீழ்ந்து போன" மனிதர்களாக இருக்கின்றனர். ஏனெனில் கர்ம வினை தீர்ந்தவன் மட்டுமே பிறப்பு-இறப்பு என்னும் சுழற்ச்சியில் இருந்து விடுபட்டு தேவனை அடைய முடியும். இதன் படி மானிட சரீரம் வீழ்ந்து போன சரீரமாக, மண்ணுக்கு திரும்ப வேண்டிய சரீரமாக இருக்கிறது.
கர்ம வினையின் மூலமாக சிலர் நன்மை அடைகிறார்கள். சிலர் தீமையை அடைகிறார்கள். இதிலிருந்து நாம் இன்னொன்றையும் அறிந்து கொள்ள முடியும். அது என்னவெனில், எல்லா மனிதர்களும் வீழ்ந்து போனவர்கள் என்றாலும் எல்லாருடைய வீழ்கையும் சமமானது அல்ல.
இந்துக்களின் "கர்ம வினை" என்னும் பதமே கிருஸ்துவர்களால் "ஜென்ம பாவம் அல்லது ஆதாமின் பாவம்" என்ற பெயரில் சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் நல்லவனாக இருந்தாலும் கூட, அவன் ஜென்ம பாவம் உடையவன் என்றே கிருஸ்துவம் கூறுகிறது. கர்ம வினை பாக்கி உள்ள அனைவரும் இறைவனை அடைய முடியாது என இந்து மதம் கூறுகிறது.. கர்ம வினை எதுவும் இல்லாதவனே அல்லது தீர்ந்தவனே பரிசுத்தம் அடைந்தவனாவான். இதிலிருந்து நாம் அறிவது,
1. பூமியில் பிறக்கும் எல்லா மனிதர்களும் வீழ்ந்து போனவர்கள் அல்லது ஜென்ம பாவம் உடையவர்கள் அல்லது கர்ம வினை பாக்கி உள்ளவர்கள். 2. எல்லா மனிதர்களின் வீழ்கையும் சமமானது அல்ல - அதாவது எல்லாரும் இன்ப / துன்பத்தை ஒரே அளவில் அனுபவிக்க பிறந்தவர்கள் அல்ல. 3. கர்ம வினை தீர்ந்தவன் மட்டுமே அல்லது பரிசுத்தம் அடைந்த ஒருவனே தேவனை அடைய முடியும்.
பழைய கர்ம வினையை அனுபவிக்க மனிதன் இந்த பூமியில் பிறந்தாலும், அவன் இந்த உலகில் இயங்கும் போது புதிய கர்ம வினைகளையும் சேர்த்து கொள்கிறான்.
சில மனிதர்களின் கர்ம வினையானது அவனது வாழ்னாளுக்குள் அனுபவித்து தீர்க்கும்படி மிகவும் குறைவானதாக இருப்பதில்லை. அதனால் அவன் அதை பகுதி, பகுதியாக அனுபவிக்கும்படி அவன் வைக்கப்படுகிறான்.
கர்ம வினையை அனுபவித்து தீர்க்க மனிதனுக்கு அனேக காலங்கள் கொடுக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் -அதாவது வாழ்னாளுக்குள், குறிப்பிட்ட அளவு வினையை அவன் அனுபவித்து தீர்க்க வேண்டும்.
ஆக ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையான கர்ம வினையின் அளவு இருப்பதை பார்க்க முடியும்.
உதாரணமாக ஒருவன் அனுபவிக்க வேண்டிய வினையின் அளவு பத்து என கொள்வோம். அவன் ஏழு அளவை தன் வாழ்னாளில் அனுபவிக்க வேண்டும். மீதி மூன்றை அடுத்த பகுதியில் அனுபவிக்க வேண்டும் என கொள்வோம். இப்போது அவனது வினைகள்
4.ஒருவன் தன் வாழ்னாளில் அனுபவித்து தீர்க்க வேண்டிய வினைகள் ( அதாவது 7) 5.ஒருவன் வாழ்னாளுக்கு பிறகு அனுபவிக்க வேண்டிய வினைகள் (அதாவது 3) 6. ஒருவன் தன் வாழ்னாளில் சேர்த்து கொள்ளும் புதிய வினைகள்
ஒருவன் மேலிருக்கும் மொத்த வினைகளின் அளவு பழைய வினை 10 (7+3) + புதிய வினை (இதை "எக்ஸ்" என கொள்வோம்) மொத்த வினை = 10+எக்ஸ் வாழ்னாளுக்கு பிறகு அனுபவிக்க வேண்டிய வினை 3+எக்ஸ், வாழ்னாளீல் அனுபவிக்க வேண்டிய வினை (7 மட்டும்)
கர்ம வினையிலிருந்து விடுபட்டு ஒருவன் தேவனை அடைய வேண்டுமெனில் அதற்கான நிபந்தனைகளை இப்போது பார்ப்போம்.
அ. அவனது பழைய கர்ம வினையின் அளவு பூச்சியமாகும் வகையில் எல்லா கர்ம வினையையும் அவன் தன் வாழ்னாளிலேயே அனுபவித்து தீர்க்க வேண்டும். (ஆனால் தன்னுடைய வினையின் அளவு எவ்வளவு என்பதும், என்ன, என்ன வினை என்பதும் மனிதனுக்கு தெரியாது.) ஆ. புதிய கர்ம வினைகள் எதையும் அவன் சேர்ந்து கொள்ள கூடாது. இ. புதிய கர்ம வினைகளை உண்டாக்கும் சாத்தியம் அற்றவனாக அவன் இருக்க வேண்டும்.
கர்ம வினைகளே நன்மை - தீமையின் கனியாகும். அதை உண்டாக்கும் சாத்தியகூறு வேர் ஆகும். கனி மற்றும் வேர் இரண்டும் இல்லாதவனாக அவன் இருக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேறின ஒருவன் மட்டுமே தேவனை அடைய முடியும்.
பழைய வினைகள் கழிந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் மனிதர்கள் புதிய வினைகளை மேலும் உருவாக்கி கொள்கின்றனர். இது எதற்கு ஒப்பாக இருக்கிறது என்றால் புதை குழிக்குள் மாட்டிக் கொண்ட மனிதனின் நிலைக்கு ஒப்பாக இருக்கிறது. புதை குழியில் இருந்து தப்பிக்க நினைத்து, தத்தளிக்கும் ஒருவன் மேலும், மேலும் சேற்றில் அழிந்து போவது போல மனிதர்கள் மேலும், வினைகளில் மாட்டி கொள்கின்றனர். அதனால் அவனது விடுதலை அவனுக்கு தூரமாகிறது.
அதனால் மனிதன் பாவம் / வினை-விளைவு என்னும் புதை குழி சேற்றில் சிக்கி தவித்து இறைவனை அடைய முடியாதவனாய் இருக்கிறான்.
வினை-விளைவு சங்கிலியினால் மனிதன் தேவனுக்கு தூரமாக ஆகி விடுகிறான். அனேகர் நினைப்பது போல பாவம் என்றால் தவறான செயல்கள், நினைவுகள் மட்டுமே அல்ல. அவனது வினை-விளைவு சங்கிலியே, நன்மை-தீமை வினைகளே பாவமாகும். அதிலிருந்து விடுதலையாவதே பரிசுத்தமாகும்.
இயேசு கிருஸ்து இந்த பூமியில் பிறக்கும் போது பரிசுத்தமுள்ளவர் என அழைக்கப்பட்டார். இதற்கு காரணம் என்ன எனில் அவருக்கு பழைய கர்ம வினைகள் எதுவும் பாக்கி இல்லை. அவரது கர்ம வினையின் அளவு பூச்சியமாகும். பூமியில் பிறந்து எந்த நன்மை-தீமை விளைவுகளையும் அனுபவிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவர் பரலோகத்துக்கு ஏறி, அதில் வாசமாய் இருக்கிறவர். பிதாவின் அன்பையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பவராய் அவரது இடது பாரிசத்தில் இருந்தவர். கர்ம வினை இல்லாதவர் மட்டுமே பரலோகத்தில் வாசம் செய்ய முடியும்.
இந்துக்களின் "கர்ம வினை" என்னும் பதமே கிருஸ்துவர்களால் "ஜென்ம பாவம் அல்லது ஆதாமின் பாவம்" என்ற பெயரில் சொல்லப்படுகிறது. ஒரு மனிதன் நல்லவனாக இருந்தாலும் கூட, அவன் ஜென்ம பாவம் உடையவன் என்றே கிருஸ்துவம் கூறுகிறது. கர்ம வினை பாக்கி உள்ள அனைவரும் இறைவனை அடைய முடியாது என இந்து மதம் கூறுகிறது..
சகோ. சந்தோஷ் அவர்களின் விளக்கங்கள் மூலம் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கும் கிறிஸ்த்தவ கொள்கைகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிபதாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள் கருத்தை சொல்லுங்கள் சரியான உண்மை எதுவென்று ஆராயலாம்.
முக்கியமாக பாவம் என்பது எப்படி உருவானது அல்லது சாதாரணமாக செய்யும் கர்மம் என்பது வினையாக எப்படி மாறியது? அதை மாற்றியது யார்? என்பதை குறித்து தங்கள் கருத்து என்னவென்பதை தெரிவித்தால் நலம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இயேசு கிருஸ்து தன் ஊழியத்தின் போது, குருடர், செவிடர், கூனர் என அனேகரை சுகமாக்கினார். பிரச்சனை உள்ளவர்களின் பாவங்களை மன்னித்ததன் மூலம், இயேசு கிருஸ்து, அவர்களை சுகமாக்கினார். இதிலிருந்து நமக்கு தெரிய வருவது என்ன என்றால், அந்த, அந்த மனிதர்களின் குறைபாடுகளுக்கு காரணம் "அவரவர்களின் பாவமே" என்பதுதான். அப்படியானால் இந்த மனிதர்கள், அந்த அந்த குறைபாடு வரும்படிக்கு தேவையான பாவத்தை அவர்கள் தங்கள் வாழ்னாளிலேயே செய்திருந்தார்களா? என்று பார்த்தால் அவ்வாறு இல்லை என்று தெரிய வருகிறது (ஒரு சிலரை தவிர).
துன்பத்துக்கு காரணம் அந்த, அந்த மனிதர்களின் முன் சந்ததியினர் செய்த பாவமே என சிலர் சொல்கின்றனர். இது சரி என வைத்து கொண்டால் ஒருவர் செய்த பாவத்திற்க்கு இன்னொருவரை தண்டிப்பது எப்படி முறையாகும்?. இயேசு கிருஸ்து சுகமாக்கும் போது அவரவர்கள் பாவங்களையே மன்னித்தாரே தவிர அவர்களின் முன் சந்ததியினர் செய்த பாவங்களை மன்னிக்கவில்லை என்பது கீழ்கண்ட வசனங்களில் இருந்து தெளிவாகும்.
மத்தேயு 9:2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
மத்தேயு 9:5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ எது எளிது?
மாற்கு 2:5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
மாற்கு 2:9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
லூக்கா 5:20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
லூக்கா 5:23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
லூக்கா 5:24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 7:48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
அப்போஸ்தலர் 22:16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
(தீய கர்ம வினை உள்ளவர் ஒரு குடும்பத்தில் பிறக்கும் போது, அவரின் முன் சந்ததியினர் சில பாவங்களை செய்திருக்க வாய்ப்புண்டு. அதாவது இந்த கணக்கும், அந்த கணக்கும் சரியாக பொருந்தும்படியாக அவர், அந்த சந்ததியில் பிறப்பார்.ஆக இரண்டு காரணங்களும் ஒன்று சேர்ந்து அவர் அனுபவிக்கும் தீமைக்கு காரணமாக அமையும்)
அப்படியானால் துன்பத்திற்க்கு எந்த பாவம் காரணம் என கேட்டால், ஜென்ம பாவம் அல்லது ஆதாமின் பாவம் காரணமாக இருக்கலாம் என சிலர் சொல்லக் கூடும். இந்த ஆதாமின் பாவம் அல்லது ஜென்ம பாவம் எல்லாருக்கும் ஒரே விதமான விளைவையே அளித்தது என சிலர் சொல்கின்றனர்.
அது சரி என வைத்து கொண்டால் ஆதாமின் பாவமானது எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான விளைவையே அளிக்க வேண்டும். ஆனால் உலகில் பல வித்தியாசமான குறைபாடுள்ளவர்கள், துன்பங்கள் உள்ளவர்கள் இருக்கின்றனர். சில மனிதர்கள் எந்த குறையுமில்லாமலும் இருக்கின்றனர். இதிலிருந்து ஆதாமின் பாவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பலனளிக்க கூடியது என்பதை புரிந்து கொள்ள முடியும். அதாவது இது அந்த, அந்த மனிதர்களின் கர்ம வினை ஆகும்.
ஐஸ்வரியவான்-லாசரு பற்றின செய்தியில் வரும், பிச்சைக்காரனான லாசரு இளைபாறுதலையும், ஐஸ்வரியவான் துன்பத்தையும் அடைந்தான் என பார்க்கிறோம். இது பிச்சைக்காரர்கள் நல்ல நிலையை அடைவார்கள் எனவும், ஐஸ்வரியவான்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள் என்றும் காட்டுவதை போல் இருக்கிறது.
லாசரு தன்னுடைய தீமையான கர்ம வினையை, பிச்சைகாரனாக பிறந்ததின் மூலம் அனுபவித்து தீர்த்தான். அவனுடைய இழிவான நிலையால் அவன் புதிய கர்மா எதையும் சேர்த்து கொள்ளவில்லை. ஆனால் தன்னுடைய நல்ல கர்மத்தின் விளைவாக ஐஸ்வரியவனாய் இருந்தவன், பல தீமையான கர்மாக்களை சேர்த்து கொண்டதால் அவன் துக்கப்பட வேண்டி இருந்தது. இந்த உதாரணம் கர்ம வினையின் விளைவை காண்பிப்பதாய் இருக்கிறது. ஆபிரகாம் ஐஸ்வரியவானை நோக்கி சொன்னதாவது.
லூக்கா.16.25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
ஒரு மனிதனின் தீமைக்கு காரணம் அவனது முன் வினை பாவமே என்பதையும், அந்த பாவத்திலும் பல்வேறு அளவுகள் உண்டு என்பதையும் யூதர்களும் நம்பினார்கள். இயேசு கிருஸ்துவால் குணமாக்கப்பட்ட பிறவி குருடன் இயேசுவை பற்றி அவர்களுக்கு சொன்ன போது,
யோவான்9.34. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.
(தொடரும்)
-- Edited by SANDOSH on Friday 18th of October 2013 08:45:24 PM
தேவனிடமிருந்து வந்த மனிதர்கள் மீண்டும் தேவனையே சேர வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. ஆனால் மனிதர்களோ னன்மை-தீமை கனியின் பலனாகிய, வினை-விளைவு என்னும் வட்டத்தில் மாட்டி கொண்டு அதை விட்டு வெளி வர முடியாமல் இருக்கின்றனர்.
தன்னுடைய நல்ல கர்ம வினையின் மூலமாக, நன்மை அனுபவிப்பவன் தான் பிரச்சனையில்லாமல் வாழ்வதால் தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுக்க முன் வருவதில்லை. ஆனால் எதிர்பாராத திருப்பமாக, தீய கர்மாவினால் துன்பத்தை அனுபவிப்பவன் தனக்கு ஒரு விடுதலை வேண்டும் என்ற காரணத்தால் தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுக்க முன் வருகிறான்.
அதே போல பாவம் செய்து மனம் வாதிக்கப்படுபவன் தனக்கு ஒரு விடுதலை வேண்டும் என அவருக்கு தன்னை ஒப்புக் கொடுக்க முன் வருகிறான். நல்லவைகளை அல்லது பெரிய பாவம் எதுவும் செய்யாதவன் தன் மனசாட்சி சுத்தமாய் இருப்பதாய் உணர்வதால் தேவனிடத்தில் தன்னை ஒப்பு கொடுக்க முன் வருவதில்லை. (எனக்கு தெரிந்த நாத்திகர்கள், நல்லவர்களாக இருப்பதை கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன்.)
கர்ம வினையின் இந்த முரண்பாட்டை சுட்டி காட்டும் வசனங்கள் இதோ.
லூக்கா.18.9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். 10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். 11. பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். 13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். 14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
லுக்கா.7.37. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, 38. அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். 39. அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். 40. இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான். 41. அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. 42. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். 43. சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி, 44. ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப்பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். 45. நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். 46. நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். 47. ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி; 48. அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
மத்தேயு.21.28. ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். 29. அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். 30. இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. 31. இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 32. ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.
யூதர்களால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட ஆயக்காரர்களும், பாவ உண்ர்வினால் துக்கப்பட்ட பாவிகளும் இயேசுவை நேசித்தனர், ஆனால் தங்களை னல்லவர்களாக கருதி கொண்டவர்கள் அல்லது உலகத்தின் பார்வையில் நல்லவர்களாக இருந்தவர்கள், பிரச்சனை இல்லாதவர்கள் அவரை பார்க்க முன் வரவில்லை.
மத்தேயு 9:10 பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். மத்தேயு 9:11 பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
மத்தேயு 11:19 மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
மேற்கண்ட நிகழ்வுகளில் இருந்து நன்மையும் (அனேக நேரங்களில்) நன்மைக்கு வழி காட்டுவதில்லை. என்பதையும், தீமையும் (அனேக நேரங்களில்) தீமைக்கு வழி காட்டுவதில்லை என்பதையும் அறிய முடியும்.