ஆண்டவருக்கு உழியம் செய்யும் 99% பேர் தாங்கள் வேண்டுமென்று ஜனங்களை வஞ்சிக்கும் நோக்கில் ஊழியம் செய்கிறார்கள் என்று நான் எண்ண வில்லை.
மாறாக, ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் ஆண்டவருக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் ஊழியத்தில் இறங்கி எதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வது தேவனுக்கு பிரியமா இல்லையா என்பது குறித்து போதிய விசாரிப்பு இல்லாமல் செய்வதால் அவர்கள் செய்யும் பல காரியங்கள் நம் போன்றவர்களுக்கு தவறாக தெரிகிறது.
வேறொரு வழியில் பார்த்தால்
தேவனுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு நிலையில் ஒரு ஊழியர் செய்துகொண்டிருக்கும் காரியங்களை தவறு என்று தீர்ப்பதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் எடுத்துகொள்ளலாம்
எனக்கு தவறாக தெரிவது தேவனுக்கு சரியாக தெரியலாம்!தேவனின் வழிகள் அதிசயமானவை! அதை விமர்சிப்பதற்கு நாம் எம்மாத்திரம்
ஆனால் கர்த்தரின் வார்த்தைகள் அடிப்படையில் பொதுவான எச்சரிப்புகளை கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டுக்கும் ஒவ்வொரு மாதமும் சரியாக 2ம் தேதி காலை ஒரு பாஸ்டர் வருவார். கொஞ்சம் ஜெபிப்பார் பணம் வாங்குவார் கிளம்பி விடுவார். அதற்க்கு பின்னர் அடுத்த மாதம்தான் அவரை பார்க்க முடியும். இதுபோல் அனேக வீடுகளை அவர் பிடித்து வைத்திருக்கிறார். மாதம் தவறாத கலெக்சன் உண்டு!
என் மனைவிக்கு அவர்மேல் கடும் கோபம். ஆனால் எனக்கு அவர் மேல் எந்த கோபமும் இல்லை.
காரணம்!
தேவனின் ஊழியத்தை செய்ய முடியாமல் உலக மனுஷனுக்கு அடிமையாக வேலை பார்த்துகொண்டிருக்கும் என்னைவிட அவர் பெரியவர் என்றே நான் கருதுகிறேன்.
அடுத்தது, அவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உண்டு. அவர்களை அவர் காப்பாற்ற வேண்டும். அதனால் அவர் அவ்வாறு செய்யும்படி நிர்பந்தம் உண்டாகிறது. நம் போன்றவர்கள் உதவி மூலமே அவர் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது.
இன்றுகூட ஆண்டவரிடம் நான் "ஆண்டவரே இன்னும் எத்தனை நாளைக்கு நான் இந்த பிழைப்பு பிழைக்க வேண்டும்" என்று கேட்டுவிட்டுதான் வருகிறேன் ஆனால் சரியான பதில் இல்லை. என்று சொல்லி ஒருநாள் காலை எங்கள் வீட்டுக்கு வந்தவுடன் அது குறித்து அவர் என்னிடம் வருத்தபட்டார்.
இவ்வாறு வருத்தபட்ட அவருக்கு, என்னிடம் ஒரு செல்போன் கூட இல்லாத அந்த நாளில் இரண்டு செல்போன் உண்டு. நான் சைக்கிள் வைத்திருந்த அந்த நாளில் அவரிடம் பெரிய பைக் உண்டு மாருதி வேன் உண்டு. நான் கார்பரேசன் பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைத்திருந்தேன் ஆனால் அவரோ ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்திருந்தார்.
ஆண்டவருக்காக எதையோ செய்கிறார்கள் அத்தோடு தாங்களும் சொகுசாக வாழ விரும்புகிறார்கள் அதில் பெரிய தவறு எதுவும் இல்லையே என்று எண்ணிய என்று எண்ணிய நான் கொடுப்பதை மனதார கொடுத்தேன். ஆனால கொஞ்ச காலத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வரமுடியாத ஒரு நிலையை தேவன் ஏற்ப்படுத்திவிட்டார்!
இங்கு நான் சுலபமாக மிக தெளிவாக புரியும்படி சொல்ல விரும்பும் காரியம் என்னவெனில்;
தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு காசும் கர்த்தர் கொடுத்தது! அதை அவர் எப்படி செலவு செய்ய
வைத்தாலும் சரியாகத்தான் செய்வார். தேவையற்ற செலவுகளை / பிடுங்கல்களை கர்த்தர் அனுமதிக்கமாட்டார் என்று விசுவாசியுங்கள். கர்த்தர் பொறுப்பேற்று செய்வார்.
அதற்க்கு மேலும் தேவன் அனுமதித்து ஒருவர் வந்து உங்களிடம் காசை பிடுங்கி கொண்டு செல்வாரானால் அதுவும் தேவனின் சித்தமே!
சரியானவர்களை பார்த்துதான் உதவிகளை செய்யவேண்டும் என்று நினைத்தால் இந்த் உலகில் ஒருவரும் பூரணமானவர் இல்லை என்றே சொல்லலாம் அல்லது நல்லவர்கள் நமது கண்ணில் சிக்காமல் போகலாம்.
ஆனால் யார் நல்லவர் யாருக்கு உங்கள் பணம் அவசியம் தேவை என்பது ஆண்டவருக்கு நிச்சயம் தெரியும். எனவே செய்யும் உதவிகளை ஜெபத்தோடு ஆண்டவர் கரத்தில் ஒப்புகொடுத்து செய்யுங்கள் அதன் பின்விளைவுகள் கர்த்தருடையது!
மத்தேயு 10:42சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)