இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உங்கள் பக்கத்தில் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது தேவனுக்கு தெரியும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
உங்கள் பக்கத்தில் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது தேவனுக்கு தெரியும்!
Permalink  
 


நம் கண்களுக்கு அடிக்கடி தென்படும் ஒவ்வொரோரும் நம்மைவிட எதோ ஒரு விதத்தில் நல்லவரே என்ற உண்மையை நாம் அறிய வேண்டும்! கரணம் இன்றி யாரையும் தேவன் உங்கள் முன்னால் அனுமதிப்பது இல்லை! 
 
ஆம்!  தேவனை தவிர எவர் ஒருவரும் எல்லா செயல்பாடுகளிலும் நல்லவராக  இருந்துவிட முடியாது! அதற்காக "எவரும் இங்கு என்னைவிட நல்லவர் இல்லை" என்றும் நாம் சொல்லிவிடவும் முடியாது.
 
நாம் தேடும் நல்லவர் நமக்கு அருகிலேயே இருக்கிறார். நான் இப்படி சொல்லவரும் காரணம் என்னவெனில் நாம் அன்றாடம் சந்திக்கும் அல்லது சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் நம்மை விட ஏதோ ஒரு சிறந்த பண்பு இருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். 
 
நாம் அனுதினம் சந்திக்கும் அந்த நபர்  நம்மைவிட பல பண்புகளில் மோசமானவராக இருக்கலாம் ஆனால் அவரிடம் நம்மைவிட சிறந்த பண்பு எதோ ஓன்று இருப்பதால்தான் நாம் அவரை மீண்டும் மீண்டும் சந்திக்கவேண்டி தேவன் நம்முன் அனுமதிக்கிறார்.
 
இந்நிலையில் நாம் செய்யவேண்டியது என்னவெனில், நம்முன் அடிக்கடி வரும் அந்த நபரிடம் இருக்கும் நல்ல பண்பு என்னவென்பதை ஆராய்ந்து அறிந்து அதையும் நாம் கைகொண்டு நடக்க பிரயாசம் எடுக்கவேண்டும். அவ்வாறு நாம் கைகொண்டு அவரை ஜெயித்துவிட்டால் பின்னர் அவர் அந்த இடத்தைவிட்டு ஆட்டமேட்டிக்காக காணாமல் போய்விடுவார் அலல்து நாம் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிடுவோம்.
 
இதுதான் இந்த உலகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது.
 
நல்லவன் நல்லவனோடு சேருவான் தீயவன் தீயவனோடு சேருவான். நல்லவனோடு தீயவனும் தீயவனோடு நல்லவனும் நீண்டநாள் சேர்ந்து இருக்கவே முடியாது! அதை தேவன் ஒருநாளும் அனுமதிக்கவே மாட்டார்.
 
யோபுவின் சிநேகிதர்கள் என்று சொல்லி அவனை பார்க்க வந்த அவன் நண்பர்களின் செயல்பாடுகளை பாருங்கள் 
  
யோபு 2:13  அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்.
 
தன நண்பன் துன்பத்தை தாங்கமுடியாமல் ஒருநாள் இரண்டு நாள் இல்லை ஏழு நாட்கள் இரவும் பகலும் ஒரு வார்த்தைகூட பேசாமல் அவனோடு தரையில் அமர்ந்து அவனின் வேதனையில் தாங்களும் பங்கு எடுத்து கொண்டார்கள்.
 
காரணம் யோபு நல்லவன் ஆகவே அவனின் நண்பர்களும் அவ்வளவு நல்லவர்களாக இருந்தார்கள்.
 
எனவே அன்பானவர்களே!
 
ஐயோ ! என்னோடு இருப்பவர்கள் எல்லாம் தீயவர்களாக இருக்கிறார்களே! நான் மட்டும் நல்லவனாக இருக்கிறேனே என்ன செய்வேன்? என்று புலம்பாமல் உங்கள் முன்னாள் உங்களை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரிடமும் எதோ ஒரு மேன்மையான குணம் இருக்கிறது உணர்ந்து, அக்குணத்தை அறிந்து அதை நீங்களும் பற்றிக்கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் கண் முன் நிற்க முடியாதவாறு கயவனை உங்கள் முன்னால் இருந்து கர்த்தர் விலக்குவார்.
 
அத்தோடு நமக்கு இன்னொரு கடமையும் இருக்கிறது. நம்முனால் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் நல்லவரோ தீயவரோ அவருக்கு நாம் ஏதாவது ஒரு விதத்தில் கிறிஸ்த்துவை அறிவித்தாக வேண்டும். உங்களுக்கு சொல்வதற்கு கஷ்டமாக இருந்தால் ஏதாவது ஒரு கைப்பிரதியாக எழுதியாவது கொடுத்துவிடுவது நல்லது என்பது என்னுடைய வேண்டுகோள்! 
 
துன்மார்க்கனுக்கு நல்லவனை பிடிப்பதில்லை காரணம் நல்லவன் முன்னாள் அவனால் நிற்கவே முடியாது எனவேதான் பாவியாகிய மனுஷர்கள் நல்லவராகிய இயேசுவை எங்களை விட்டு அகற்றும் அகற்றும் என்று கோஷமிட்டார்கள். 
 
யோவான் 19:15 அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள்.
 
அதுபோல் இயேசுவுக்காக உத்தமாமாய் நின்ற பவுலையும் அவர்கள் கண்களை விட்டு அகற்றும்படி சத்தமிட்டார்கள்.  
 
அப்போஸ்தலர் 21:36 இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
 
அதே நேரத்தில், தங்களைபோன்ற ஒத்த திருட்டு குணமுடைய பாரபாசை விடுவித்து தங்களோடு சேர்த்துக்கொள்ள அவர்கள் தயங்கவில்லை.        
 
எனவே அன்பானவர்களே! திருடன் திருடனோடுதான் கூட்டு சேர்வான். நல்லவன் நல்லவனைதான் தேடி நட்பாய் இருப்பான்.
 
தேவன் நடத்தும் இந்த நடத்துதலில் எவருடைய பிரிவுக்கும் நாம் வருந்தவேண்டிய அவசிமும் இல்லை இவர் நமக்கு நண்பனார கிடைக்கவில்லையே என்று ஏங்க வேண்டிய  அவசியமும் இல்லை.
 
யாரை உங்கள் பக்கத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தேவனுக்கு தெரியும். எனவே உங்கள் அருகில் உங்களை சுற்றி இருப்பவர்களை வெறுக்காமல் மனமார நேசியுங்கள் அன்பு செலுத்துங்கள் அதுவே உங்களை அடுத்த மென்மையான நிலைக்கு அழைத்துசெல்லும். 
 
இதை எழுதும் எனக்கே அதுபோல் நடப்பது கடினமாகத்தான் இருக்கிறது! ஆகினும் ஆவியானவரின் துணையோடு அனுதினம் முயற்ச்சிப்போம். கர்த்தரை பற்றிக்கொண்டால் அவர்  நமக்கு கைகொடுப்பார்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard