இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்! ஏசாயா 56:11


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்! ஏசாயா 56:11
Permalink  
 


நான் ஒரு பாஸ்டரிடம் சொன்ன வார்த்தை என்னவெனில் "உனக்கு  பத்துரூபாய் காணிக்கைபோடும் ஒரு விசுவாசி நடந்து போகும்போது அவனுடைய பணத்தை வாங்கி  உண்டு வாழும் நீ பைக்கிலோ காரிலோ போகாதே அவனைப்போல் நடந்துபோ " என்பதுதான். 

ஆனால் இன்று நடப்பது என்ன? தொழிலதிபர்கள் கூட  சம்பாதிக்க முடியாத. கார் பங்களா சொத்துக்களை பாஸ்டர்கள் சுலபமாக சேர்த்து விடுகிறார்கள்.

கஷ்டபட்டு உழைத்து உண்பவன் தன வாழ்க்கயிநிமித்தம்  கொஞ்சம் முன்ன பின்ன செலவு செய்தாலும் யாரும் கேட்கமுடியாது. ஆனால் எந்த உழைப்பும் இல்லாமல் பிறரின் காணிக்கை பணத்தில் வாழும் ஒவ்வொரு பாஸ்டரிடமும், தான் பிறரிடம்  இருந்து தேவன் பெயரை சொல்லி பெற்று ஆடம்பரமாக செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும் கடினமான கணக்கு விசாரிப்பு உண்டு என்பதை கருத்தில் கொண்டு காணிக்கையை வாங்குகள்.

 
கஷ்டப்பட்டு உழைப்போரின் காணிக்கையை நீங்கள் வாங்கி அதை கணக்கில்லாமல் செலவழிப்பதை பார்க்கிலும் அதை வாங்காதிருப்பது நலம் என்று நான் தங்களுக்கு சொல்ல   விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் தேவன்  சொல்லி வாங்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் தேவனுக்கு கடன்பட்டிருக்கிரீர்கள்    
 
இல்லை இதை நான் நல மனசாட்சியோடு தேவனுக்காகத்தான் செய்கிறேன் அவருக்காகதான் சேர்த்து வைத்துள்ளேன் என்று சொல்வோர் தங்களை அடிக்கடி ஒரே ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ளவும்.
 
"நீங்கள் தேவன் பேரை சொல்லி சம்பாதித்த எல்லா சொத்தையும் இதே நிலையில் இன்னொருவருக்கு  விட்டுவிட்டு உங்கள் பிள்ளை மனைவி மருமகன்/ மருமகளோடு  "கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார்" என்று சொல்லிக்கொண்டு வெளியேறும்படி கர்த்தர் கட்டளையிட்டால் அந்த ஆடம்பர வாழ்வை விட்டுவிட்டு சந்தோஷமாக வெளியேறுவதை ஏற்க்க முடியுமா?    
 
நிச்சயமாகவே அது மிகவும் கடினம். முடியவே முடியாது என்றுகூட கூறலாம்.
 
காரணம் எத்தனை வருடங்கள் சைக்கிள் ஒட்டியிருந்தாலும் பைக்கில் போய் பழக்கப்பட பிறகு சைக்கிளில் போவதும், மெத்தையில் படுத்தவர் தரையில் படுப்பதும் கஷ்டம் என்று  எல்லோருக்குமே தெரியும். இன்பத்தை எதிர்பார்த்து எங்கும் சரீரமானது திரும்பவும் பழைய நிலையை திரும்ப விரும்புவது இல்லை.
 
இன்று சபைகளில் நடப்பது என்ன?
   
உலக சொத்தை கடத்துவதுபோல் உங்களுக்கு பின் உங்கள் பிள்ளைகள் பாஸ்டராகி எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். சபையில் கொஞ்சம் யாரவது நல்ல பெயர் எடுத்தால் எதிர்த்து பேசினால் அவரை உடனே கழுத்தை  பிடித்து தள்ளுவதுபோல் தள்ளிவிடுகிறீர்கள். உங்களுக்கு  ஜால்ரா போடும் கோஸ்டிகள் மட்டும் உங்களோடு வைத்துகொள்கிரீர்கள். காரணம் உங்கள் இடத்தை வேறொருவன் பிடித்துவிட கூடாது என்ற முன் ஏற்ப்பாடுதானே?  
 
உலகத்தாருக்கும் உங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?  உலக அரசியலிலும் அதுதானே நடக்கிறது! 
 
உங்களை குறித்து கர்த்தர் என்ன சொல்கிறார்? 
 
ஏசாயா 56:11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.
 
நீங்கள் வாங்குவதில் என்றாவது திருப்தியடைத்து இருக்கிறீர்களா? 
 
உங்களுக்கு பிறரிடம் வாங்க மட்டும்தானே தெரியும். கொடுத்தல் என்றால் என்னவென்றே உங்களுக்கு தெரியாதே!  பிறரிடம் பெற்ற காசை இன்னொருவருக்கு கொடுப்பதற்கே உங்களுக்கு மனமில்லை என்றால், நீங்கள் உழைத்து சம்பாதித்த சொந்த காசாக இருந்தால் நீங்கள் எப்படி வண்கண்ணனாக இருப்பீர்கள்? 
 
நீங்கள் ஊளியத்தினிமித்தம் போகும் வீடு மிக கஷ்டத்தில் இருந்தால் ஏன் உங்கள் கையில் இருந்து கொஞ்சம் பணத்தை கொடுத்து உதவ கூடாது? அவர்கள் கொடுக்கும் காணிக்கையை ஏன் அன்போடு நிராகரிக்க கூடாது? 
 
மாறாக நீங்கள் செய்வது என்ன?  ஒரு கஷ்டபட்ட வீட்டுக்கு போய் ஜெபித்து, காணிக்கை எதுவும் கிடைக்கவில்லை அங்கு எதுவும் தேறாது என்று தெரிந்தால் பிறகு அந்த வீட்டிற்கு விசிட் செய்வதை உடனே நிறுத்திவிடுகிறீர்களே. இந்நிலையில் உங்கள் பிரதான நோக்கம் என்ன?  கர்த்தரின் அன்பை சொல்வதா? அல்லவே,  பணம் சம்பாதிப்பதுதானே?
 
மந்தை மேய்ப்பவனை குறித்து கர்த்தர்  சொல்லும் வார்த்தைகள் மிகவும் கொடியவை! எனவே எச்சரிக்கை பாஸ்டர்களே எச்சரிக்கை!  
 
எரேமியா 23:1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்! ஏசாயா 56:11
Permalink  
 


தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது உலக வேலைகளை விட மிகவும் உயர்ந்ததும் கடினமான செயல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் ஒரு முதலாளிக்கு வேலை செய்யும்போது அவர் பெயரை கெடுக்காமல் கிரமமான முறையில் அவர் நியமித்த வழியில் வேலையை செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால்தான் அதற்க்கான பலனை பெற முடியும். எஜமானனுக்கு அவப்பெயரை கொண்டுவரும் எந்த ஊழியத்தையும் செய்வதைவிட செய்யாமல் இருப்பது நல்லதல்லவா?    

ஆனால் இங்கோ கடின வேலைகளை உலக வேலைகளைவிட மிகவும் இலகுவாக மாற்றி சுகபோகமான வாழ்க்கைக்காக பலர் தேவ ஊழியத்தை செய்வதால் தேவனை கிட்டி வருபவர்களும் தூர விலகி ஓடுகிறார்கள். இதுபோன்ற செயல்கள்  ஒருவரை தண்டனைக்கு நேராகத்தான் நடத்துமேயன்றி மற்றபடியல்ல.

லூக்கா 22:32 நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்
 
என்றுதானே தேவன் சொல்லுகிறார்.  
 
தேவன் தம்முடையவர்களை அறிந்திருக்கிறார்! எனவே தேவனுக்கு முன்னால் தங்களை நிறுத்தி ஊழியம் செய்யும் நல்ல நேர்மையான ஊழியர்களுக்கு பிறர்  எழுதும் எந்த வார்த்தைகளும் பாதிப்பை ஏற்ப்படுத்தாது. 
 
நாம் தேவனுக்கு முன்னாள் நீதியை இருக்கிறோமா என்று அவரவர் அவரவரை நிதானித்து கொண்டால் போதும். 
 
குற்றவாளிகளின் மனது குத்தப்பட வேண்டும் என்பதே இங்கு கண்டித்து எழுதுவதன் நோக்கமேயன்றி தேவ ஊழியர்களை குறை கூறி மனமடிவக்குவது எனது நோக்கமல்ல.

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard