2. பலர் தங்கள் மனைவிக்கு /கணவனுக்கு/ காதலன் /காதலிக்கு முதலிடம் கொடுக்கிறார்கள் (நான் அவளுக்காகவே/ அவனுக்காகவே வாழ்கிறேன் என்ற பதத்தை பல இடங்களில் நாம் கேட்டிருக்கலாம்)
3. பலர் தங்கள் பிள்ளைகளுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள் (நான் வாழ்வதே என் பிள்ளைகளுக்காகத்தான் என்ற கூற்றை பலர் கேட்டிருக்கலாம்)
4. பலர் தங்கள் தொழிலுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள் (செய்யும் தொழிலே தெய்வமாம்)
5. சிலர் தங்கள் தாய் தகப்பனுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். ( என் தாய்தான் எனக்கு முதல் கடவுள் என்று சொல்வாருண்டு)
6. சிலர் தங்கள் வயிறுக்கு முதலிடம் கொடுத்து ருசியாக தின்பதர்க்காகவே வாழ்கிறார்கள் (அவர்கள் தேவன் வயிறு என்று வேதம் சொல்கிறதே)
முக்கியமான இந்த காரியங்கள் தவிற, படித்து படித்து உலக அறிவை பெருக்குவதற்கு / சினிமாவுக்கு/ குடித்து வெறிப்பதற்கு /சினிமா பாடல்களுக்கு/ பட்டம் பதவிக்கு / சேவை செய்வதற்கு/ ராசி பலன் பார்ப்பதற்கு போன்ற இன்னும் எத்தனையோ உள்ளது. தங்கள் வீட்டு நாய்க்கு முதலிடம் கொடுப்பவர்கள் கூட உலகில் உண்டு.
இதில் உலக பார்வையில் சில நல்ல காரியமும் இருக்கலாம் சில தீய காரியங்களும் இருக்கலாம்.
ஆனால் "நம்மை எலும்பொடும் சதையோடும் இவ்வுலகில் உருவாக்கி வைத்து இன்று வரை தற்காத்து, நமக்காக ஜீவனை கொடுத்து நம்மை கிரையத்துக்கு கொண்டுள்ள அந்த ஜீவனுள்ள தேவனுக்கு நம் இருதயத்தில் கொடுக்க வேண்டிய முதலிடத்தை
"நல்லதோ அல்லது கெட்டதோ" வேறு ஏதொன்றுக்கும் கொடுப்பது என்பது விக்கிரக ஆராதனையில் அடங்கிவிடும்.
(தேவனுக்கு முதலிடம் கொடுத்தால் அவர் நமக்கு நன்மையானது எது என்று போதித்து நடக்க வேண்டிய வழியில் நடத்துவார். மற்றபடி நான் நல்லதைத்தான் செய்கிறேன்/ சேவைதான் செய்கிறேன் என்று நாமாக ஒரு உலக காரியத்தை தெரிந்துகொண்டு அதற்க்கு முதலிடம் கொடுப்பதும் விக்கிரக ஆராதனைதான். ஏன் "ஒரு பெரிய சபையை கட்டவேண்டும்" என்றொரு எண்ணத்துக்கு முதலிடம் கொடுத்து செயல்பட்டால் அதுவும் விக்கிரகமே. )
"தேவன் முதலில்" எதுவுமே அதன் பிறகுதான் இருக்கவேண்டும். அது கணவனானாலும், மனைவியானாலும், பிள்ளையானாலும் சொந்த மானாலும், தாயானாலும் தகப்பனானாலும் தேவனுக்கு பின்னால்தான்.
எனவே அன்பானவர்களே இந்த் உலகில் நாம் எதன்மீது அதிக அன்பும் அதீத நம்பிக்கையும் வைக்கிறோமோ அது எல்லாமே நமக்கு விக்கிரகம்தான்.
எது இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று சொல்கிறோமோ அதுவே அவர்களுக்கு விக்கிரகம்.
எது என்னை இந்த உலகத்தில் பாதுகாக்கும் என்று நம்பிக்கை வைக்கிறோமோ அது அவர்களுக்கு விக்கிரகம்.
ராசிபலன் பார்ப்பது/ குறிகேட்பதுதான் என்னை பாதுகாக்கும் என்று எண்ணுகிறீர்களா அது உங்களுக்கு விக்கிரகம். உங்கள் டாக்டர் உங்களை பாதுகாத்துவிடுவார் என்று நம்புகிறீர்களா அந்த டாக்டரே உங்களுக்கு விக்கிரகம் என்பதை அறிய வேண்டும்.
அத்தோடு "நான் தேவனுக்குதான் முதலிடம் கொடுக்கிறேன்" என்று நாம் சுலபமாக நம் வாயால் சொல்லிவிட முடியும். ஆனால் தேவனுக்கு முதலிடம் கொடுத்தால் அவர் சொன்னபடி நடக்க வேண்டும் அல்லது முயற்ச்சிக்க வேண்டும் இல்லையேல் உங்கள் வார்த்தையை ஏற்க்க முடியாது.
எங்க அப்பாவுக்குதான் நான் முதலிடம் கொடுப்பேன் என்று சொல்லும் ஒரு மகன், அவருக்கு தெரியாமல் ஒரு பெண்ணை காதலிப்பதுகூட அவன் முதலிடத்தை மாறிவிட்டான் என்பதை உணர்த்திவிடும்.
அதேபோல் தேவனுக்கு முதலிடம் கொடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அவர் சொந்த பணத்தை அவரவர் இஸ்டத்துக்கு அள்ளி விளையாண்டால் அங்கு தேவனுக்கேது முதலிடம்.
தேவனுக்கு முதலிடம் என்று சொல்லிக்கொண்டு பிறன் மனைவியை மனதில் வைத்திருந்தால் அங்கு தேவனுக்கு எது முதலிடம்.
தேவனுக்கு முதலிடம் கொடுப்பவர்கள் தங்கள் வாழ்வில் அன்றாட பணிகளை தேவ சித்தத்துக்கு ஒப்புகொடுத்து / தேவ வார்த்தைகளின் அடிப்படையில் ஆராய்ந்து செய்வது அவசியம். (தேவ சித்தம் வேதத்தில் உள்ளது )
தேவ சித்தம் சரிவர தெரியாத காரியங்களை ஜெபத்துடன் தேவன் கையில் ஒப்புகொடுத்து காத்திருந்து பின்னர் செய்வதுதான் சிறந்தது. அவசரம் கூடாது.
எனவே அன்பானவர்களே தேவனை தவிர வேறு எதன் மீதும் உங்கள் நம்பிக்கையின் வேர் இருக்க வேண்டாம்! அப்படி இருந்தால் அதுவே விக்கிரகம்! அங்கே சாத்தான் வந்துவிடுவான்.
-- Edited by SUNDAR on Monday 28th of July 2014 02:03:35 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)