இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதத்தில் எல்லாமே எழுதிகொடுக்கபட்டு விட்டது! தேவ வெளிப்பாடு அவசியமா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
வேதத்தில் எல்லாமே எழுதிகொடுக்கபட்டு விட்டது! தேவ வெளிப்பாடு அவசியமா?
Permalink  
 


வேதத்தில் எல்லாமே எழுதிகொடுக்கபட்டு விட்டது உண்மைதான்! ஆனால் அதை உரிய விதத்தில் ஒருவர் புரிந்துகொள்ள தேவ வெளிப்பாடு நிச்சயம்  தேவை.  

உலக நடைமுறையில் ஒரு பத்தாவது வகுப்பு புத்தகத்தில் எல்லாம் எழுதி கொடுக்கபட்டிருந்தாலும் அதை புரிய வைப்பதற்கு ஒரு வாத்தியார் அவசியமோ அதேபோல் தேவனின் செய்திகளை மனுஷனுக்கு சொல்லும் வேதாகம வசனங்களை சரியாக புரியவைக்க ஒரு ஆசான் நிச்சயம் அவசியமே! 
 
அவரே தேவனின் ஆழங்களை அறிந்த பரிசுத்த ஆவியானவராவார்!  

ஒரே ஆவியானவரை கொண்டிருக்கு இரண்டு கிறிஸ்த்தவர்களுக்கு இடையேகூட  ஒருமித்த கருத்து இல்லை. இயேசுவையே தேவனாக வணங்கும்  ஒரு சபைக்கு செல்வோரை  அதே இயேசுவை தேவனாக வணங்கும் இன்னொருவர் காய்மகரமாக பார்க்கின்றனர்.  அத்தோடு ஒரே வசனத்தை ஒன்பது விதமாக மாற்றி மாற்றி பிரசங்கிக்கும் பாஸ்டர்கள் இங்கு   நிறைந்திருக்கும்போது,  ஒரு சாதாரண விசுவாசி எப்படி உண்மையை புரிந்துகொள்வான்? 

 
செழிப்பு உபதேசத்தை போதிபவர்களும், மேரி மாதாவை வணங்குவோரும், இயேசு தேவனே இல்லை என்று போதிப்பவர்களும், கிருபை போதும் வேத வார்த்தைகளை கைகொள்ள அவசியமில்லை சொல்பவர்களும், சனிக்கிழமையே ஓய்வுநாள் என்று போதிக்கும் பிரிவினரும், திரித்துவத்தை மறுப்பவர்களும் வேத வசனத்தை கொண்டுதானே தங்கள் கருத்தை நியாயப்படுத்துகின்றனர்? . 
 
ஒரே ஒரு வேத புத்தகத்தை வைத்துக்கொண்டுதான உலகில் 2000 சபை பிரிவுகள் இருக்கிறது?
 
இப்படி குழம்பி கிடக்கும் உலகில் நாசியில் சுவாசமுள்ள மனுஷர்களின் போதனையை எப்படி ஏற்க்க முடியும்?  
 
நீங்கள் சொல்வதுமட்டும்தான் உண்மை என்பதை எப்படி முற்றிலும் நம்பமுடியும்? 
 
இந்நிலையில் உண்மையை சரியாக அறிய அல்லது வேதத்தில் உள்ள அதிசயங்களை அறிந்துகொள்ள வசனத்தோடு தொடர்புடைய தேவனின் வெளிப்பாடு  அவசியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.    
 
அதனால்தான் பக்தன் இவ்வாறு ஜெபிப்பதை நாம் காண முடிகிறது 

சங்கீதம் 119:18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.

வசன உறுதி செய்யப்படாத  வெளிப்பாட்டை  மட்டுமே நாம் ஏற்க்க மறுக்கலாம் 

எல்லோருக்கும் எல்லாமே சமமாக ஒப்புவிக்கபடுவதில்லை! அப்படியிருக்குமாயின் அதிகம் ஒப்புவிக்கபட்டவனிடம் அதிகம் கேட்கப்படும் என்று ஆண்டவர் சொல்லியிருக்க மாட்டார்! 
 
லூக்கா 12:48 எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்
 
என்று நம் ஆண்டவர்  பொருள் என்ன? 
 
சிலரிடம் அதிகம் ஒப்புவிக்கபட்டுள்ளது என்றுதானே பொருள்படுகிறது!  

உதாரணமாக பேதுரு அறியமுடியாத காரியத்தை பவுல் எழுதியிருப்பதாக பேதுரு சொல்கிறார்.
 
II பேதுரு 3:16 அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; 

எனவே  ஒருவருக்கு சொல்லிகொடுத்த அதே கருத்தை அல்லது அதே விளக்கத்தை மட்டும்தான் இன்னொருவருக்கும் சொல்லவேண்டும் என்ற அவசியமும் ஆவியானவருக்கு இல்லை!  

எனவே இங்கு எவரும் தங்களுக்கு தெரிந்தது மட்டும்தான் உண்மை, எங்களுக்கு தெரியாத உண்மை எதுவுமில்லை என்று இறுமாப்பு அடையாமல் பிறரை நியாயம் தீர்க்க துணியாமல் தங்களை தேவன் முன்னால் தாழ்த்க்கடவர்கள். 

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Kattayam avasiyam...

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard