இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மிருககுணமுள்ள மனுஷன் (அவரை)அதை அறியான்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
மிருககுணமுள்ள மனுஷன் (அவரை)அதை அறியான்!
Permalink  
 


கடந்த  நாளில் பெய்த தொடர் மழையில் நனைத்த இரண்டு தெரு நாய்கள் எங்கள் வீட்டு பார்க்கிங் ஏரியாவில் வந்து படுத்து நடுங்கி கொண்டு இருந்தன. அதை பார்த்து பாவப்பட்ட நான், இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு பெரிய அட்டை பெட்டியை எடுத்து ஒரு நல்ல இடத்தில் விரித்து அந்த நாய்களை வந்து படுக்கும்படி எவ்வளவோ கூப்பிட்டும் அவைகள் வரவேயில்லை.
 
அது படுத்து கிடந்த இடத்தை விட்டு எழுந்து வர அதற்க்கு மனமேயில்லை.  கடைசியில் அதன் கழுத்தை பிடித்து இழுத்து வந்து அந்த அட்டை விரிப்பில் போட்டேன். ஆகினும் அது பயந்துபோய் திரும்பவும் அது படுத்து கிடந்த இடத்துக்கு ஓடவே  முற்ப்பட்டது. ஆனால் நான் விடாமல் இரண்டு அடிகள் கொடுத்து அதில் படுக்க வைத்தேன். பிறகு அதில் சொகுசாக படுத்தது.  காலை நான் எழுந்து வந்து பார்க்கும்வரை  அதே இடத்தில் கிடந்தது.
 
நாமும் கூட இந்த நாய்களைப்போல தேவனுக்கு முன்பாக அறிவில்லாத மிருகங்கள் போல இருக்கிறோம்.  
 
எரேமியா 10:14 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்
 
அவர் வழிகளை அறிய முடியாமல் எதிர்த்து நிற்கிறோம்!
 
சங்கீதம் 92:6 மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்;
 
நம் தேவனாகிய தகப்பன் நமக்கு காட்டிய வசனம் என்னும் வழியானது நம்முடைய நன்மைக்குதான் என்பதை அறிய முடியாமலும் அவர் என்ன செய்தாலும் நம்முடைய நன்மைக்குத்தான் செய்வார் என்பதை உணரும் அறிவில்லாமல் அந்த நாயை போல் இருக்கிறோம்.
 
எரேமியா 7:23 நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மை உண்டாகும்படிக்கு நடவுங்கள்
 
ஆம்! நமக்கு நண்மையுடாகும்படிக்குதான் தேவன் வழிகளை சொல்கிராறேயற்றை அவருடைய நன்மைக்காக அல்ல! நாம் கேட்காமல் அடம் பிடிக்கும்போது சில அடிகளை கொடுக்கிறார் அதுவும் நமது நன்மைக்குதான்!  
 
அந்த நாயானது அது படுத்து கிடக்கும் இடத்திலேயே கிடைத்தால் இரவின் குளிர் மற்றும் மழை அதிகமாக தாக்கும் என்று எண்ணியதாலேயே அதற்க்கு ஒரு நல்ல இடத்தை நான் ஏற்ப்பாடு செய்தேன். ஆனால் அதற்க்கு அதை அறிந்துகொள்ளும் அறிவு இல்லை! தான் இருக்கும் இடத்தைவிட்டு எழுந்து நான் வைத்திருக்கும் நல்ல இடத்தை ஏற்றுக்கொள்ள சொரணை இல்லாமல் இருந்தது!
 
அன்று எகிப்த்தை விட்டு நகர்ந்து  தேவன் காட்டிய செழிப்பான தேசத்துக்கு கடந்துசென்ற இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை முழுவதும் விசுவாசிக்காமல் அவருக்கு கீழ்படியாமல் அவரை எத்தனை முறை மனமடிவாக்கினார்கள் என்பது நமக்கு தெரியும். தேவனோ அவர்கள் நன்மையை நாடினார் ஆனால் அவர்களோ அவரையே பரீட்சை பார்த்து அழிந்தார்கள்! 
 
அதுபோல் இன்றோ!
 
ஒரு கூட்ட ஜனங்கள் தாங்கள் கிடக்கும் அந்த ஊளையான குழியை விட்டு எழுந்து வர மனமேயில்லாமல், தேவன் என்னதான் "எழுந்து வா"  என்று கூவி அழைத்தாலும், எத்தனை பேரை அனுப்பி எச்சரித்தாலும்  "எங்களுக்கு எதுவும் தேவையில்லை" என்று சொல்லிக்கொண்டு நிரிவாசரமாக வாழ்கின்றனர். ஜீவன் உண்டாக தேவனிடத்தில் வர அவர்களுக்கு மனமில்லை! 
 
யோவான் 5:40 உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
 
வரப்போகும் கொடிய அழிவை அறிந்தே தேவன் அவர்களை எச்சரிக்கிறார். தங்கள் ஜீவனை இழக்கபோகிறோம் என்ற சொரணை அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது எனவே கிடந்த ஜீவதிபதியை தேடிவர அவர்களுக்கு மனதில்லை!
  
இன்னும் ஒரு கூட்டத்தாரும் உண்டு!
 
இவர்கள் "நன்மை கிடைக்கும் எழுந்து வா" என்று சொன்ன உடன் எழுந்து வந்துவிடுவார்கள். ஆனால் இவர்கள்  எண்ணமெல்லாம்  நமக்கு என்ன கிடைக்கும் எவ்வளவு கிடைக்கும் என்பதே! அவர்கள் கிடைக்கும் நன்மையால் என்றுமே திருப்தியடைய மாட்டார்கள். சாப்பாடு இல்லாமல் அலைந்தவர்களுக்கு சாப்பாடு கொடுத்தால பிரியாணி வேண்டும் என்பார்கள், உடையில்லாமல் அலைந்தவர்களுக்கு சேலை கொடுத்தால் பட்டு சேலை வேண்டும் என்பார்கள், நடந்து சென்றவர்களுக்கு சைக்கிள் கொடுத்தால் வண்டி வேண்டும் என்பார்கள், வீடில்லாமல் அலைந்தவர்களுக்கு வாடகை விட்டு கொடுத்தால் சொந்த வீடு வேண்டும் என்பார்கள் 
 
ஆம்! இப்படிபட்டவர்கள் தேவன் அளந்து போஷிக்கும் நன்மையால் ஒருகாலும் திருப்தியடையா மாட்டார்கள்!  மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும் என்ற ஆசையால் நிறைந்து  உலக சொகுசு வாழ்க்கையை தேடும் இவர்களுக்கு  தேவன் தரப்போகும் நித்திய வாழ்க்கையை பற்றிய அக்கறை இருக்காது!
 
எனவே அன்பானவர்களே தேவன் நம் வாழ்வில் என்ன செய்தாலும் அது நம் நன்மைக்குதான் என்றும் எவ்வளவு குறைவாக கொடுத்தாலும் அது தேவனால் தீர்மானித்து கொடுக்கபடுகிறது என்ற மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொண்டு தேவனை கனம்பண்ணி அவருக்கு நன்றி செலுத்துவோம்! 
 
தீமைகள்கூட  ஓர்நாளில்  நன்மையாகவே  மாறிப்போவதை  காணலாம்!
        


-- Edited by SUNDAR on Wednesday 31st of December 2014 11:56:27 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard