இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சோர்ந்துப்போகாமல் நமக்கு தேவன் கொடுத்த பாதையில் ஓடுவோம்


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
சோர்ந்துப்போகாமல் நமக்கு தேவன் கொடுத்த பாதையில் ஓடுவோம்
Permalink  
 


பிள்ளை தவறு செய்யும்போது நாம் சிட்சிக்கிறோம்.அப்படியே அப்பிள்ளை தன் தவறை ஒத்துக்கொள்ளும் போது நாம் புத்திசொல்லுகிறோம் அதுவும் பணிவோடு செவிக்கொடுக்கிறது அந்த நெரம் நம் இருதயத்தில் நான் சிட்சித்ததால் பிள்ளைக்கு வலித்திருக்குமே என்ற பாச உணர்வு நம்மை உணரச்செய்யும் அவ்வேளையில் நாம் பிள்ளையை அரவனைத்து அன்போடும் ஏற்றுக்கொள்கிறோம். மாயையான இந்த அழிந்துப்போகும் உலகத்தில் நிரந்திரம் இல்லாத தகப்பன்,தாயிடம் இப்பண்பு இருக்குமானால் நிரந்திர தந்தையாகிய நம்முடை அப்பாவாகிய தேவனுக்குள்ளே எத்தனையாக பாச உணர்வு இருக்கும் இவ்வுலகத்தில் நம்மை பெற்றெடுத்த தாயை விட அதிகமாக நேசிப்பவர் நம்முடைய தேவனாகிய தந்தைதான் . ஆனால் நாம்தாம் அவருடைய அன்பை உணராமல் கெட்ட குமாரனைப்போல அலைந்துதிரிகிறோம்.

 

இதை வாசிக்கிற என் சகோதரனே சகோதரியே உன்னை அவர் நேசிக்கிறார் இவ்வுலகமும் அதன் செயல்பாடும் மாயையே இவ்வுலக துன்பத்தைக் கண்டு சோர்ந்து நித்தியதேவனைவிட்டு பின்வாங்கிப்போகாதே! ஒரு பரிசைப் பெற அதற்கு எத்தனை பயிற்சிகள் முதலில் உடல்தகுதி,இரண்டாவது பயிற்சி களம் ,மூன்றாவது போட்டி இந்த போட்டிக்கு முன்பதாக நம்முடைய பிரயாசம் எவ்விதமாக இருக்கவேண்டும் .

 

எல்லோருக்கும் பரிசு பெற ஆசை ஆனால் பயிற்சிகளத்திலேயே தோற்றுப்போகிறார்கள் அப்படியானால் போட்டிக்கு எப்படி எப்படி தேர்வாகுவது ? இன்றும் பரமபிதாவின் பரலோக வீட்டிற்கு நாம் செல்வதே நம்முடைய ஆசை அந்த பரலோகமே நம்முடைய பரிசு ,இதைப் பெற எல்லோருக்கும் ஆசை . உலகமாகிய இந்த மாயையான வாழ்கை ஒரு போட்டி நடக்கும் மைதானம் . நம்முடைய உடல் தகுதி தேவனுடைய அச்சு அடையாளமாகிய அவருடைய சுபாவங்கள் . இதைப்பெற நமகுள்ளே அனுதினமும் பயிற்சி அவசியம் அதுதான் அனுதினமும் உலகத்துக்கு மரிப்பது.

 

இந்த பயிற்சியிணைப் தான் செய்துக்கொண்டே போட்டியான இடுக்கமான வாசலும் நெருக்கமான பாதையில் செல்லும்போது நம்முடை விசுவாசம் சோதிக்கப்பட அநேக சோதனைகள் வருகிறது இதை நாம் உணர்ந்து அதை சந்தோமக ஏற்றுக்கொண்டு பொறுமையோடு ஓடும்போது நம்முடைய இருதயதில் தேவன் நம்மோடு இனைந்து சந்தோசப்படுவார் . அப்படியே கடைசிவரையும் நாம் சோதனை நேரத்தில் எல்லாம் அப்பாவின் சுபாவத்தை வெளிப்படுத்தி அவர் நடந்தப்படியே நாம் நடக்கும்போதுதான் கடைசியில் நித்தியம்,நித்திய ஜீவன் நமக்கு பரிசாக கிடைக்கிறது . இவ்வளவு பெரிய பரிசை பெற வேண்டுமானால் எவ்வளவு சோதனை நமக்கு அவசியம் உணர்ந்து தேவனிடத்தில் திரும்புவோம் !__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Useful msg

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard