மத்தேயு 11:28வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
என்று சொன்ன அதே ஆண்டவர்
யோவான் 16:33உலகத்தில் உங்களுக்குஉபததிரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்
என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த இரண்டு வசனத்தையும் ஆராய்ந்தால் ஆண்டவராகிய இயேசு கொடுக்கும் இளைபாறுதல் இந்த உலகத்துக்குரியது அல்ல என்பதை நாம் அறியமுடியும்.
எபிரெயர் 4:9ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது.
அப்படியானால், உபத்திரவம் நிறைந்த இந்த உலகத்தில் ஆண்டவர் நமக்கு இளைப்பாறுதல்/ சமாதானம் /சந்தோசம் தரமுடியாதா? என்ற கேள்வி எழலாம்.
நிச்சயமாக தர முடியும். ஒரு வழியில் அல்ல இரண்டு வழியில் தேவனால் சமாதானம் தர முடியும்.
1. பாடுகள் மத்தியில் சமாதானம்.
பிலிப்பியர் 4:7 எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
எப்படி?
6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது.
அடுத்து,
2. கற்பனையை கைகொள்ளுதல் மூலம் சமாதானம்.
தேவனின் வார்த்தைகளை கருத்தாய் கைகொள்ளுவதன் மூலம் உலகில் வரும் சகல தீங்கிற்கும் நாம் தப்பித்துகொள்ள முடியும்.