இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்துவுக்குள்ளான சகோதரர் சுந்தர் அவர்களின் பார்வைக்கும், இத்தளத்தின் மற்ற அன்புக்குரிய ச


புதியவர்

Status: Offline
Posts: 6
Date:
கிறிஸ்துவுக்குள்ளான சகோதரர் சுந்தர் அவர்களின் பார்வைக்கும், இத்தளத்தின் மற்ற அன்புக்குரிய ச
Permalink  
 


என் நண்பர் ஒருவர் இந்த தளத்தின் URL ஐ ஏதோ ஒரு காரணத்திற்க்கு எனக்கு அனுப்பியிருந்தார். நானும் தற்சமயமாக அதில் சொடுக்கி இங்கே வந்து பார்த்தபிறகுதான் தெரிந்தது, ஒரு சில கிறிஸ்துவுக்குள்ளான சகோதரர்களின் அன்பும், ஐக்கியமும், விவாதமும், ஆவிக்குரிய சத்தியங்களும், போராட்டங்களும், அழுகைகளும், சாட்சிகளும், உத்தமங்களும், உண்மைகளும். சுந்தர் சகோதரர்களின் சாட்சியும், அவரது ஆவிக்குரிய அனுபவங்களும், வெளிப்பாடுகளும்,சாட்சியான வாழ்க்கையும் படித்தேன், படித்தேன் இரவுமுழுவதுமாக. இன்னும் படித்துக்கொண்டேயிருக்கின்றேன். 

நீங்களும் இந்த தளத்திலுள்ள சத்தியங்களை படித்துப்பாருங்களேன் ப்ளீஸ். 

வாழ்த்துக்கள் சகோ. சுந்தர் அவர்களுக்கும், மற்ற அனைத்து சகோதரர்களுக்கும். 

இயேசுகிறிஸ்துவை நம் வாழ்க்கையில் பிரதிபலிப்போம், பிறரையும் இயேசுகிறிஸ்துவைப்போல சுபாவத்தில் நிறுத்துவோம், அவரையே போதிப்போம். 

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.கொலோசெயர் 1:28-- Edited by Elango Gopal on Thursday 18th of February 2016 01:32:21 PM

__________________

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

 மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அன்பு சகோதரர் அவர்களே, தளத்தை பற்றிய தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
 
தேவன் என்னை தனது ஆவியால் இரண்டு முறையாக ஆறு நாட்கள் அபிஷேகித்து, அடைபட்டு கிடந்த எனது  இருதயம் கண் செவி மற்றும் மூக்கு இவற்றை திறந்து இந்த உலகத்தை பற்றிய அனேக காரியங்களை தெரியப்படுத்தியதோடு, தீமை எப்படி உருவானது அதை எப்படி  நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்பதற்கான வழியையும் வேத வசனங்கள் மூலம் தெரியபடுத்தி அவர் எழுதிவைக்கும்படி கட்டளையிட்டதால்  அதை அப்படியே எழுதி வைத்துள்ளேன். 
 
தங்களை இயேசு பாவத்தில் இருந்து விடுவித்து தம்மை உங்களுக்கு வெளிப்படுத்தியதால் அவரின் மேல் முழு பற்றுதலோடு இருக்கிறீர்கள். நிச்சயமாக ஏற்றுக்கொள்ளகூடியதுதான்.  அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமானர்! 
 
ஆகினும் தாங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புவது. கீழ்கண்ட வசனத்தை கொஞ்சம் ஆழமாக தியானியுங்கள்.  
 
யோவான் 5:17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார்.  நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.   
 
இங்கே இந்த பூமியில் இருவரின் கிரியைகள் நடக்கின்றன /என்னுடைய சாட்சியை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்     
 
I கொரிந்தியர் 12:6 கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

 -- Edited by SUNDAR on Friday 23rd of October 2015 04:32:01 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard