இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் நம்மை பயன்படுத்த நாம் எடுக்க வேண்டிய சில முக்கிய பிரயாசங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தேவன் நம்மை பயன்படுத்த நாம் எடுக்க வேண்டிய சில முக்கிய பிரயாசங்கள்!
Permalink  
 


1. சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்குதல் அவசியம். 
 
தேவனுக்கு பிடிக்காத பாவத்தை செய்வதை தவிர, எனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது/ இவரை பிடிக்கும் இவரை பிடிக்காது என்பது போன்ற எண்ணம் இருக்குமானால் அதை முடிந்தவரை ஒதுக்க வேண்டியது அவசியம். நமது விருப்பு வெறுப்பானது அநேகர் பார்வைக்கு நல்லதான ஒரு காரியமாக கூட  இருக்கலாம்! ஆனால் தேவன் எதை எப்படி சொன்னாலும் அதை அப்படியே செய்து முடிக்க விருப்பு வெறுப்பற்ற ஒரு நிலை மிகவும் அவசியமாகிறது. இல்லையெனில் விரும்பும் பொருள் மீதோ/மனுஷர்கள் மீதோ ஒரு மறைவான ஆசையும் விரும்பாத போருள்மீதோ/மனுஷன் மீதோ ஒரு வெறுப்பும் தானாக தானாக உண்டாகிறது. அது தேவனுக்கு ஏற்றதல்ல. சில நேரங்களில் தேவனே சில காரியங்கள் மீது/மனுஷர்கள் மீது  நமக்கு வெறுப்பை அனுமதிப்பார் அப்படிபட்ட சூழ்நிலையிலும்கூட அதை நம் சுய நினைவின் அடிப்படையில் எதையும் செய்யாமல் தேவ நடத்துதலின் அடிப்படையில் செயல்படுவது  ஒரு இனிய அனுபவமே.     
 
தேவ செயலை நிறைவேற பிறந்த சிம்சோன் சொந்த விருப்ப வெறுப்பால் மாண்டு போனானே! 
 
 
2. என்னால் இப்படித்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் ஒழிக்கப்பட வேண்டும்.
நான் இப்படிபட்ட வேலைகளை மட்டும்தான் பார்ப்பேன் / இப்படி தூய்மையாக இருப்பதுதான் எனக்கு வழக்கம் / இப்படி பட்ட இடத்தில் படுப்பதுதான் என்னால் முடியும் / இப்படிபட்ட உணவுகள் சாப்பிடுவதுதான் எனக்கு விருப்பமானது  போன்ற எந்த ஒரு எண்ணமோ செயல்பட்டோ இருக்குமாயின் தேவன் உங்களை பயன்படுத்துவது முடியாத காரியம்.  தேவன் "நட" என்றால் நடக்க வேண்டும் "ஓடு" என்றால் ஓடவேண்டும் இங்கே "படு" என்றால் அது குப்பை மேடாக இருந்தாலும் படுக்க வேண்டும் பட்டினியாய் இரு என்றால் இருக்க வேண்டும் பணத்தை கீழே போடு என்றால் போட வேண்டும். "எப்படி செய்வேன்" இதன்பிறகு என்ன நடக்கும் என்று யோசித்தால் தேவனின் திட்டம் எல்லாம் பாழாகிவிடும்.
 
படித்த/ பணக்காரனான பவுல் பரம தரிசனத்துக்கு உடனே கீழ்படிந்தானே! 
 
3. இச்சையை இல்லாமல் ஆக்க இறந்தபோன நிர்மூடமான ஒரு நிலையில் இருக்க வேண்டும்.
 
"இச்சை "நம்மை குழிக்குள் இழுத்துபோட  சத்துருவால் பயன்படுத்த படும்  ஒரு பெரிய ஆயுதம். தேவனின் திட்டம் இன்னும் பூரணமாக நிறைவேறாமல் தடுப்பதில் இந்த "இச்சை" பெரும் பங்கு வகிக்கிறது. அதை மேற்கொள்ள உயிரோடு இருந்தும் செத்த ஒரு நிலையில் இருப்பது அவசியம். எனக்கு உயிர் இருக்கிறது நான் எல்லாவற்றையும் பார்ப்பேன், ஏனெனில் கண் என்ற அவயத்தை செயல்படுத்த நான் எந்த பிரயாசமும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தானாகவே பார்க்கும்  ஆனால் மற்ற அவயங்கள் நாம் பயன்படுத்தினால் மட்டுமே நகரும். எனவே மற்ற  அவயங்கள் பாவத்துக்கு செத்துபோய் இருப்பதால் அதை என்னால் இயக்க முடியாது என்றொரு நிலைக்கு நாம் கடந்து வர வேண்டும். அதற்க்கு  கண்ணால் காணும் இச்சையான காரியம் எதுவும் மனதை சென்றடைய முடியாத ஒரு தடையை கண்ணுக்கும் இருதயத்துக்கும் இடையே உண்டாக்க வேண்டும். அதுவே சேனைகளின் கர்த்தரை எப்பொழுதும் இருதயத்தில் பரிசுத்தம் பண்ணி கொண்டிருப்பது.அவ்வாறு செய்வதன் மூலம் நம் இருதயத்தை சுலபமாக பரிசுத்தமாக பாதுகாக்க முடியும். சிறிது காலம் பயிற்சி மட்டுமே தேவை.
 
இறைவனின் இருதயத்துக்கு ஏற்ற தாவீதைகூட இழுத்து கீழே தள்ளியதே இந்த இச்சை  
 
4. எல்லா உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவது
"அன்பு" என்ற வார்த்தையை பற்றி எத்தனை முறை எப்படித்தான் விளக்கினாலும் அதன் உண்மை பொருளை நம்மால் கூறிவிட  முடியாது. ஆம்! அது அளவில்லா பொருளுடையது எல்லையில்லா தன்மையுடையது. அப்படிபட்ட பேரன்பை சுருக்கி "இப்படி அன்பு செலுத்தினால் போதும்" அதற்க்கு மேலான அன்பு  தேவையில்லை
"இவர்கள் மீது மட்டும் அன்பு செலுத்தினால் போதும்" மற்றவர்கள் பாவிகள் அவர்கள் மேல் அன்பு தேவையில்லை, "இழிவான உயிர்களின் மேல் அன்பு தேவையில்லை அவைகள் இறப்பதற்கே பிறந்தவைகள்"  என்று எண்ணாமல் எல்லா மனுஷர்கள் உயிர்கள் மேலும் இயன்ற அளவு அன்பை அள்ளி அள்ளி போடுவோம்.  தேவனும் அதையே நமக்கு செய்கிறார். அவரின் அளவில்லா அன்பால் மட்டுமே நாம் இன்னும் உயிர்பிழைத்து இருக்கிறோம். எனவே பிறருக்காக  தன்னையே தர துணியும் "தேவ அன்பு" நம்மில் உற்றப்ட்டால் மட்டுமே நாம் தேவனின் திட்டங்களை செய்ய தகுதிபெற முடியும்.         
 
பாவியான நம்மேல் வைத்த ஆனால் அல்லவோ பரமன் இயேசு பூமிக்கு வந்தார்  
 
5. எல்லாவற்றையும் விட்டுகொடுபோம்  
தனக்கென  சில கொள்கை கோட்பாடுகள் இருந்தாலும் அது நல்லதாகவும் சிறந்ததாகும் இருந்தாலும் தேவையான  நேரத்தில் அதை ஒதுக்கிவிட்டு தேவன் நம்மில் செயல்ப அனுமதிப்பது ஒன்றே தேவன் நம்மை பயன்படுத்த ஏற்றது. "இது அப்படிதானே இருக்க வேண்டும் ஏன் இப்படி இருக்கிறது"  "இது போன்ற  வார்த்தைதானே  பேசவேண்டும் ஆனால் இப்படி பெசபடுகிறதே"  "இதுதானே தேவனின் திட்டம் என நினைத்தோம் ஆனால் இது வேற மாதிரி தெரிகிறதே" இவர்கள் மட்டும்தானே நல்லவர்கள் என்று நினைத்தோம் ஆனால் இந்த பாவிகளும் நல்லதை சொல்கிறார்களே" "இப்படிதானே போகவேண்டும் என்று புறப்பட்டோம் ஆனால் இங்கே நம்மை அனுப்புகிறார்களே" இதுபோன்ற எத்தனையோ கேள்விகள் நமக்கு உண்டாகலாம் ஆனால தேவன் நம்மை பயன்படுத்த எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு நம்மை அடித்து நொறுக்கி வளைக்க நம்மை நாமே தேவன் கையில் ஒப்புகொடுப்பது ஒன்றே தேவன் நம்மை பயன்படுத்த தகுதியுள்ளவர்களாக மாற்றும்.      
 
இன்று "சீலோ"வில் போய் கும்பிடு  என்று சொல்லும் தேவன் நாளை அந்த பக்கமே போகாதே என்பார்.
 
இப்பதிவு மற்றவர்களுக்காக அல்ல எனக்காகவே தியானித்து எழுதுகிறேன். பயன்படும் என்று கருதுவோர் மாத்திரம் படித்து காத்துகொள்ளலாம்.
    
 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard