பயம் கவலை என்று பார்த்தால் இந்த உலகத்தில் காலையில் வீட்டில் இருந்து புறபட்டு திரும்ப இரவு வீடு வந்து சேரும் வரை நடக்கும் எல்லாக காரியங்களிலும் பயப்பட கவலைப்பட ஏதாவது ஒரு காரியம் இருக்கத்தான் செய்கிறது
இன்று உலகத்தில் பலர் என்ன நடக்குமோ எது நடக்குமோ என்று பயந்து பயந்தே காலத்தை தள்ளுவதை காண முடிகிறது. நாம் என்னதான் உருண்டு பெரண்டாலும் இந்த உலக பயத்தை எல்லாம் நாம் சுயமாக போக்கிவிட முடியாது. தேவன் மேலுள்ள பற்றுதல் மற்றும் அவர் மேலுள்ள மாறாத விசுவாசம் இவைகளே நாம் எதிர்காலத்தை பற்றிய பயமில்லாமல் சமாதானமாக இருக்க வைக்கிறது.
பயத்தை மேற்கொண்டு சமாதானமாக இருக்க பலம் தருவது சமாதான கர்த்தர் ஒருவரே. அவர் பயத்தை நீக்குவதோடு ஏற்ற காலத்தில் சரியான உதவியையும் செய்ய வல்லவர்.
எப்படி வேலை கிடைக்குமோ என்ற கவலை இருந்தாலும் வேறு வழியின்றி சென்னைக்கு குடும்பத்தோடு புறப்பட்டு வந்தபோது வந்த மறுநாளே ஒரு நல்ல கம்பெனிக்கு வேலைக்கு போக கிருபை செய்தவர்.
அந்த கம்பனி எதிர்பாராத விதமாக மூடிய பொது எவரோ ஒருவர் மூலம் இன்னொரு நல்ல கம்பெனியை அடையாளம் காட்டி உடனே அடுத்த வேலையை பெற்று தந்தவர்.
இதுபோல் இன்னும் ஆயிரம் சொல்ல முடியும்.
எனவே நாம் கர்த்தர் மீது உண்மையும் உத்தமுமாக இருந்தால் இந்த் அற்ப உலக காரியங்கள் குறிந்து கலங்கவோ பயப்படவோ வேண்டிய அவசியமே இல்லை!
எனது அப்பா/ மாமா வங்கியில் வேலை பார்க்கிறார் நான் படித்து முடித்தவும் எனக்கு நிச்சயம் எதாவது வேலை வாங்கி தருவார் என்று ஒரு சாதாரண மனுஷனை குறித்து அநேகர் பீற்றிக்கொண்டு திரிவதை பார்க்கலாம்.
நாம் வணங்கும் தேவனோ ஜீவனுள்ளவர், சர்வ வல்லவர் சர்வத்தையும் உண்டாக்கி ஆண்டு நடத்துபவர்.
அவரை தேவனாக கொண்டுள்ள நாம் ஒரு புறம் அவரை தொழுதுகொண்டு மறுபுறம் மனதில் உலக பயத்தோடு வாழ்வதில் எந்த பொருளும் இல்லை.