இன்று அனேக கிறிஸ்த்தவர்கள் நான் பாவ மாம்சத்தில் இருக்கிறேன் ஆனவரே என்னால் அதை செய்ய முடியாது இதை செய்ய முடியவில்லை என்று சொல்லி புலம்புவதை பார்க்க முடிகிறது.
நானும்கூட சில நேரங்களில் அவ்வாறு புலம்புவது உண்டு. ஆனால் நேற்று என் மனதில் ஒரு கோபமான உணர்த்துதலை உணர்ந்தேன். "எந்தளவும் நீங்கள் முடியவில்லை முடியவில்லை என்று புலம்பிக்கொண்டு இருப்பீர்கள். முடியவில்லை என்று புலம்புவதர்க்கா நான் ஜீவனை கொடுத்து என் ஆவியை உங்களுக்குள் வைத்திருக்கிறேன்" என்பது போல் இருந்தது.
சங்கீதத்தில் நிறைய புலம்பல் இருக்கிறதே என்று அதுகுறித்து தியாநித்தபோது:
தாவீது (எத்தியனாகிய உரியாவின் மனைவி பற்றிய காரியத்தை தவிர) தன வாழ் நாளெல்லாம் கர்த்தரின் வார்த்தையைவிட்டு முன்னோ பின்னோ விலகாமல் அப்படியே கீழ்படிந்து நடந்தான். .
I இராஜாக்கள் 15:5தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
அவனுடைய சங்கீத புலம்பல்கள் எல்லாமே அவன் செய்த அந்த ஒரே கொடிய பாவத்தை மன்னிக்கும்படியும் அதனால் வரும் தண்டனைகளில் இருந்து தன்னை விலக்கி காக்கும் படிக்கும் மருகி உருகி அழுது கேட்பதாகத்தான் இருக்குமேயன்றி மீண்டும் மீண்டும் பாவம் செய்வதை நான் தவிர்க்க முடியாமல் இருக்கிறேன் அதானால் என்னை மன்னித்துக்கொண்டே இரும் என்பதாக இருப்பது போல் தெரியவில்லை என்பதை நாம் சற்று கருத்தில் கொள்வது நலம்!
முடியவில்லை முடியவில்லை என்று சொல்லி புலம்புவதை முடிந்த அளவுக்கு விரட்டியடிப்போம். ஏனெனில் "முடியவில்லை" என்று
சொல்வதற்கு தேவனே தன ஆவியால் நம்மை அபிஷேகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
"கர்த்தருக்குள் எல்லாம் செய்ய எனக்கு பெலனுண்டு " என்று நெஞ்சை நிமிர்த்தி சாத்தானை பார்த்து சொல்லவே தேவனே நம்மை அபிஷேகித்துள்ளார்.
தேவன் நம் உள்ளிருதயங்களை ஆராய்ந்து பார்க்கும்போது அவருக்கு பிடிக்காத காரியயங்கள் சிந்தைகள்கூட எதுவும் நம் மனதில் / சரீரத்தில் இருக்கவே கூடாது.
எனவே இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் ஆண்டவரே? எங்கே நான் என்னை இன்னும் சரிசெய்ய வேண்டும் ஆண்டவரே? எனக்கு தெரியபடுத்துங்கள் நான் செய்ய தயார்! என்று துணிந்து கேட்பதே நமது ஜெபமாக இருக்க வேண்டும். என்பது எனது வேண்டுகோள்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)