சத்துரு யாருக்குள் எப்பொழுது எப்படி நுழைவான் என்பதை அறியவே முடியாது. இயேசுவின் கூடவே இருந்த யுதாசுக்குள் கூட அவன் சுலபமாக புகுந்துகொள்ள முடிந்தது. அதேபோல் பேதுருவின் உள்ளே கூட அவன் இருந்து செயல்பட்டதை "அப்பாலே போ சாத்தானே" என்று இயேசு சொன்னதன் மூலம் அறிய முடிகிறது.
இந்நிலையில் சத்துருவாகிய பிசாசானவன் நமக்கு உள்ளே வந்துவிடாமல் தடுக்க மிக சுலபமான ஒரு வழியை சொல்கிறேன்:
நாம் எப்பொழுதுமே யாருக்கும் தலைமையாக இருக்க விரும்பாமல் ஒவ்வொருவரும் பிறருடைய தலைமையை மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருப்பது.
இப்படிபட்டவர்களால் சத்துருவுக்கு எந்த பயனும் இருக்காது ஏனென்றால் அவன் எப்பொழுதும் தேவனைப்போல மேலான இடத்தையே தேடி அலைகிறான் நம் இருதயத்தில் நாம் தலைமையை இருக்க விருப்பம் இல்லாமல் இருந்தால் அவன் நம்மிடம் நிச்சயம் இருக்கமாட்டான்.
மத்தேயு 20:26உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப்பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உண்மைதான் அண்ணா. இன்று சபைகளில் தலைமைத்துவம் என்ற பாடத்தை கற்றுக் கொண்டும் தலைமைத்துவத்துக்காக போட்டி போடுபவர்களை பார்க்கையில் நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது.
__________________
.................................................. எப்போதும்நான் ஒரு வேதாகமமாணவனே ...............................................
தேவன் நம்மை ஏற்படுத்தும் போது அதற்கு கீழ்ப்படிவதே உத்தமம் சகோதரா. ஆனால் இங்கே சொல்லப்படுவது என்னவென்றால் நாம் தலைமையாய் இருக்க விரும்புதல் போட்டியிடுதல் பற்றிய கருத்தாகும்