ஓடிவந்து "பயப்படாதே" என்று சொல்லி தேற்றி திடப்படுத்தவில்லை. ஆகினும் யாரையுமே அவர் பாதுகாக்காமல் விடவும் இல்லை.
அதேபோல் இன்றும் நம் வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் வரும்போது வேத வசனங்கள் மாத்திரமே நமக்கு ஆறுதலாகவும் நம்மை
திடப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கவேண்டுமேயற்றி ஆண்டவர் வந்தோ அல்லது யார்மூலமாகவோ
ஏதாவது புதிதாக சொல்லி ஆற்றி தேற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனெனில் வார்த்தையை எழுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர் அவர் எப்படியும் அவர் சொன்ன வார்த்தைகளை காப்பாற்றுவார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நம்மை பிழைக்கவைக்கும் என்று வேதம் சொல்கிறது.
லூக்கா 4:4மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
எனவே அவ்வார்த்தைகளை உறுதியாக பிடித்துக்கொள்ளும் பட்ச்சத்தில் அவ்வார்த்தைகள் நம்மை நிச்சயம் காப்பாற்றும் என்று அறிந்து கலங்காமல் இருக்க கடவோம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)