இந்த உலகத்தில் அநேக விபத்துக்கள் நடந்துகொண்டே இருக்கிறது. பல கிறிஸ்த்தவ விசுவாசிகள்கூட விபத்தில் மாட்டி ICUவில் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள் என்ற ஜெப விண்ணப்பங்களை அடிக்கடி படிக்கிறோம்.
வாகனங்கள் மோதல் / தீவிரவாதிகள் தாக்குதல் / கட்டிடங்கள் இடிந்து விழல் /விமானங்கள் நொறுங்குதல் / பேருந்துகள் ஆற்றிலோ பள்ளத்திலோ வீழ்தலில் ஆரம்பித்து சாலை விபத்துக்கள் /கலவரக்காரன் கையில் மாட்டுதல்/ போலீஸ் கையில் மாட்டுதல் வரை எல்லாமே விபத்துக்கள் தான். .
இந்த விபத்துக்கள் ஏன் நடக்கிறது? அதில் தேவ பிள்ளைகளும் அநேக நேரங்களில் மாட்டிக்கொள்ள காரணம் என்ன? அதை எப்படி தவிர்ப்பது அல்லது தடுப்பது என்பது குறித்து ஒரு தெளிவு இல்லாமல் இருந்ததால் ஆண்டவரிடம் பல நாட்கள் விசாரித்துக்கொண்டு இருந்தேன்.
ஒருமுறை மும்பையில் ஒருவன் என் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றுவிடடான். சிறிது நேரத்தில் அவன் தர்ச்செயலாக எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வரவே, அவனை அடையாளம் கண்டு தண்டித்துவிடடேன். ஆனால் அவனோ ஒரு பெரிய ரவுடி கும்பலை சேர்ந்தவனாக இருந்து அநேக கூடடத்தை கூட்டிவந்து எங்கள் வீடடை சூழ்ந்து கொண்டார்கள் அந்த இடத்தில் இருந்து நான் மிகசுலபமாக தப்பித்து விடுத்தேன் ஆனால் அதில் சம்பந்தமே இல்லாத என் நண்பர் அவர்களிடம் மாட்டிக்கொள்ள அவரை அதிகமாக அடித்துவிடடார்கள்.
சமீபத்தில்கூட சென்னையில் ஓரிடத்தில் ஒருவன் காலி மனை வாங்கித்தருவதாக கூறி எங்களிடம் பணம் ஏமாற்றிவிடடான் அது போலீஸ் கம்பளைட் ஆகி, ஒருநாள் இரவு நேரத்தில் நான் போலீஸ் நிலையம் சென்றிந்த போது அதன் உள்ளேயே அநேகர் சேர்ந்து தனியாக இருந்த என்னை அடிக்க வந்துவிடடார்கள். உள்ளே இருந்த போலீஸ் பயந்து உள்ளே வைத்து சண்டை போடக்கூடாது வெளியே போங்கள் என்று வெளியில் இருட்டுக்குள் என்னை விரட்டினார். வெளியில் வந்து எல்லோரும் என்னை சூழ்ந்துகொண்ட அந்நேரம் எதிர்பாராத விதமாக அவ்விடம் வந்த எனக்கு ஒரே ஒரு நாள் பழக்கம் உள்ள ரவுடி ஒருவர், என்னை அடிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தி என்னிடம் மெதுவாக "ஓடிவிடு" என்று சொல்லிவிட்டு அவர்களிடம் காரணம் விசாரிப்பவர் போல மரித்துக்கொண்டார் நான் ஓடி போய் ஒரு பஸ்ஸில் ஏறி வந்துவிடடேன்.
அந்த நேரம் எனக்கு தெரிந்தவர் அங்கு வந்தது மற்றும் சரியான நேரம் பஸ் வந்தது எல்லாமே தேவ செயல்தான்.
இதுபோல் பல நேரங்களில் நாம் தற்செயலாகவே விபத்தில் இருந்து தப்பித்து கொள்வோம் அதேபோல் சில தேவையில்லாமல் வலிய போய் விபத்தில் மாட்டிக்கொண்டவர்களும் உண்டு. இப்படி சிலர் தப்பிக்கவும் சிலர் ஆபத்தில் மாட்டவும் காரணம் என்ன தெரியுமா?
யோபு 38:33 வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அதுபூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
ஆம் ஆண்டவர் எனக்கு தெரிவித்தபடி பூமியை படைத்து அதை வேத வசனங்களின் அடிப்படையிலேயே சுற்ற வைத்திருக்கிறார். ஓடும் வாகனங்கள், நடக்கும் மனுஷன், பறக்கும் விமானத்தில் இருந்து சாலையில் நடக்கும் மாடுவரை எல்லாமே வசனத்தின் நியமண அடிப்படையிலேயே அடியெடுத்து வைக்கும்
அவ்வசனம் என்னவென்பதை எல்லாமே நமக்கு தெளிவாக எழுதியும் கொடுத்துவிடடார்.
கர்த்தரை தேடி அவர் சொன்ன வார்த்தைகளின்படி வாழ்ந்தால் நாம் தானாகவே நன்மைக்கு நேராக நடத்தப்படுவோம் எந்த தீங்குகள் நம்மை அணுகுவது இல்லை. அதே நேரம் கர்த்தரைவிட்டும் வேத வார்த்தைகளை விட்டும் பின்வாங்கிப்போனால் நன்மை வருவதைக்கூட காண முடியாமல் நெடுக்கப்போய் ஆபத்தில் மாட்டிக்கொள்வோம்.
பழைய ஏற்பட்டில் கர்த்தரை விட்டு பின்வாங்கியபோதெல்லாம் ஜனங்கள் பிரச்சனைக்குள் கடந்து போனதையும் தேவ வசனத்தின்படி நடந்த ராஜாக்கள் எல்லாம் எல்லா இடங்களிலும் தப்பிக்கப்படத்தையும் அநேக இடங்களில் திருஷ்டாந்திரமாக படிக்கிறோம்.
சத்துருக்களை நிர்மூலம் ஆக்கிய தாவீது வேத வசனத்தை மீறியபோது அசைக்கப்பட்டான் அவன் சொந்த மகனே அவனுக்கு எதிரியானவன்.
இதெல்லாம் ஏற்க்கெனவே நிர்ணயிக்கப்பட்ட்து அது ஆட்டொமேட்டிக்காக நடக்கும். அதை எந்த மனுஷனும் தடுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது. நாம் நம் தேவைக்கு ஏற்ப இந்த வசனம் எனக்கு இல்லை இந்த வசனப்படி நான் நடக்கவேண்டிய அவசியம் இல்லை என்று தீர்மானிக்கலாம் ஆனால் தேவன் நிர்ணயித்தது நிர்ணயித்ததுதான்.
உபாகமம் 10:13நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும்
இதையே தேவன் காயீனிடம் இவ்வாறு சொல்கிறார்.
ஆதியாகமம் 4:7நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;
ஆம் வாசலில் படுத்திருக்கும் அதை யாருமே விரட்டிவிட முடியாது. நீங்கள் வேத வார்த்தைகளை அறிந்தும் அதை மீறி நடந்தால்
ஏசாயா 47:11 தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.
மனுஷன் வாழ்க்கையில் அடிமேல் அடியும் காயத்தின் மேல் காயமும் பிரச்சனை மேல் பிரச்சனையும் உருவாக காரணம் "தேவனின் வார்த்தைகளை மீறுதல் மட்டுமே" என்பது நான் அறிந்த அனுபவ பூர்வ உண்மை.
ஆம்! தேவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்பவன் எந்த ஆபத்துக்கும் பயப்படாமல் அமைதியாய் இருக்க முடியும்.
எனவே, தேவனின் வார்த்தைகளை தியானித்து அதை கைக்கொண்டு நடக்கும் எந்த பிள்ளையும் ஆபத்துக்கோ ஆக்சிடன்ட்க்கோ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. நாம் அந்த இடத்தில் இருக்கும்வரை எந்த ஆக்சிடண்டும் அங்கு நடக்கவே நடக்காது.
அதேநேரம் ஆண்டவரின் வார்த்தைகளை மீறி துணிகரமாக பாவம் செய்துவிட்டு ஆலயத்துக்குள் போய் ஒழிந்தாலும்
அங்குகூட அடைக்கலம் கிடைக்காது.
-- Edited by SUNDAR on Wednesday 19th of October 2016 01:22:18 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)