இன்று உலகின் அனைத்து மனிதர்களும் ஒரு விடயத்துக்காக ஏங்குகின்றார்கள் என்றால் அது உண்மையான அன்பிற்கு தான்.
ஆனால் யாருக்கும் இந்த உண்மையான அன்பு கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்..
எங்கு சென்றாலும் எதிர்பார்ப்புகளுடன் பழகுகிற உறவுகளே அநேகம்...
தாயானுலும், தகப்பனானாலும், மகனானாலும், மகளானாலும், கணவனானாலும், மனைவியானாலும் வேறே எந்த உறவானாலும் எதிர்பார்ப்புக்களுடனே நம்முடன் பழகுகிறது.. இன்று தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் அன்பு தணிந்து போனதை காண கூடியதாயிருக்கிறது.. தகப்பன் தன் இரத்தமாகிய தான் பெற்ற மகளை கற்பழிப்பதும், சொத்துக்காக பெற்றோரை கொலை செய்யும் பிள்ளைகள், மனைவியை வெட்டி கொல்லும் கணவன், கள்ள தொடர்புகளுக்காக கணவனை திட்டமிட்டு கொலை செய்யும் மனைவி இவ்வாறு அடுக்கி கொண்டே போகலாம்.. இவைகள் கொடூரத்தின் உச்ச கட்டங்களாக குறிப்பிடலாம்.
இவை எல்லாவற்றிற்கும் அடித்தள காரணமாக இருப்பது அன்பு இல்லாமையே ஆகும்...
இவ்வுலகில் அன்பிற்கு உதாரணமாக இருப்பது தாய், அதாவது சிறந்த அன்பாக உலகில் கருதப்படுவது தாயன்பு மாத்திரமே.. சில வேளைகளில் அதுவும் பொய்மையான நேரங்கள் உண்டு...
பரிசுத்த வேதத்தில் குறிப்பிடப்பட்ட விதமாக இன்று அநேகரின் அன்பு தணிந்து போய் கொண்டிருக்கிறது..
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
மத்தேயு 24 :12
ஆனால் இவைகள் எல்லாம் இப்படி இருந்தாலும்............
தாயின் அன்பு மாறும்
தகப்பனின் அன்பு மாறும்
கணவனின் அன்பு மாறும்
மனைவியின் அன்பு மாறும்
மாறாதது மாறாதது
நம் நேசர் அன்பு மாறாதது
நம் இயேசு அன்பு மாறாதது....
என்ற பாடலின் பிரகாரம் நமக்காக மரித்து தன் ஜீவனை எமது பாவத்தின் தண்டனைக்கு பரிகாரமாக கொடுத்த ஒருவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து... அந்த அன்பு தெய்வத்தின் அன்பு ஒன்று மட்டுமே எதிர்பார்ப்பு இல்லாத உன்னத அன்பு.. அது எப்பவும் மாறாத அன்பு, அள்ள அள்ள குறையாத அன்பு, ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு....
அதற்கு சான்றாகவே அந்த கோர சிலுவையை அந்த அன்பு தெய்வம் சுமந்து தீர்த்தது.. அவர் எம்முடைய அக்கிரமங்களுக்காக அடித்து நொறுக்கப்பட்டார் என்பது நாம் அறிந்த மறக்க கூடாத உண்மையாகும்..
நமது அக்கிரமத்தின் நிமித்தம் நமக்கு கிடைக்க வேண்டிய அதியுட்ச தண்டனையை நம்மேல் வைத்த அதியுன்னத அன்பின் நிமித்தம் அவர் ஏற்று கொண்டு நம்மை இரட்சித்தார்.... இது அவர் மேல் விழுந்த கடமையல்ல அவர் நம்மேல் வைத்த கிருபை..
கிருபை என்றால் நாம் செய்ய வேண்டியதை வேறு யாரோ நமக்காக செய்து முடிப்பது...
ஏசாயா 53 :
2. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
8 . என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம்......
இவை அனைத்தும் நம்மேல் அவர் வைத்த எதிர்பார்ப்பில்லா அன்பின் நிமித்தம் உண்டானது..
உலகிலே உன்னத அன்பாக கருதப்படுகின்ற தாயின் அன்பை விட மேலான அன்பே நம் இயேசுவின் அன்பு..
எனவே இயேசுவின் அன்பை பற்றி கொண்டு அவரையே சார்ந்து வாழ்வோம்..
அந்த அன்பு இல்லை என்றா நான் என்றோ மரித்து போயிருப்பேன்...
ஏற்ற நேரத்தில் என்னை தேடி வந்த அன்பு.. ஒரு காலத்தில் என் குடும்பத்தில் எந்த ஒரு நிம்மதியும் இல்லாமல் பல கஷ்டங்களும் துன்பங்களும் ஏற்பட்ட நேரத்தில் என் ஆண்டவரின் அன்பு என்னை தேற்றாமல் இருந்திருந்தால் நான் தற்கொலை பண்ணிக்கொண்டிருப்பேன்.
இப்படி பல காரியங்களை சொல்லி கொண்டே போகலாம்.. நான் அவரை விட்டு விலகி போனாலும் என்னை விட்டு ஒரு போதும் விலகாமல் இருந்தது அவர் அன்பு தான்... தடுமாறி கீழே விழுந்த நேரமெல்லாம் என்னை தாங்கி கொண்டதும் அவர் அன்பு தான்..
மேலும் நான் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வது அவரின் கிருபையும் அன்பும் நிமித்தம் தான்..