நன்மை பற்றி சிந்திக்கும்போது நாம் இதை செய்தால் ..கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் .நாம் இதைச் செய்யாவிட்டால் கடவுள் நம்மைத் தண்டிப்பார் அல்லது சாபம் என்கிற நம்பிக்கையும்,
தீமையைக் குறித்து சிந்திக்கும்போது இதைச் செய்தால் சாபமும் இதைச் செய்யாவிட்டால் கடவுள் நம்மோடு இருப்பார் என்ற நம்பிக்கையை நம் இருதயம் கொண்டிருக்கும் நிலை என்பது நியாயப்பிரமாண கிரியைகளை ஒத்து வாழ்வது.
"அப்பா" என்று அழைக்கும்போது...இங்கு பாசத்தின் பிணைப்புகள் உண்டாகும் வாழ்கை ஒருசார் அன்பு அல்ல இங்கு தகப்பன்,மகனுக்குள்ளான பாசத்தின் உச்சம்.
தகப்பனோடு சஞ்சரிக்கும் ஒரு அனுதின வாழ்கை!
இப்பொழுது அப்பாவின் சத்தத்தை ஆவியின் சிந்தையினால் கேட்டு அதன்படியே வாழ்வது!
இதை பிறர் ஆராய்ந்து அறியமுடியாது.
ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்
ஒரு சகோதரர் என்னிடம் சில காரியங்களைச் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொண்டார் அவரிடம் சரி நான் இதைச் செய்கிறேன் என்று அவர்மேல் வைத்த அன்பினால் உறுதிக்கூறிவிட்டேன் .
பின்பு அவைகளைச் செய்ய எத்தனிக்க என் சிந்தையில் அவைகளை நிதானிக்கும்படி முயன்றபோது அப்பாவின் சிந்தை அல்லது ஆவியின் உணர்த்துதலை அறிந்து அவைகளைச் செய்யாதபடி இருதயத்தில் தீர்மானித்தேன்.
இங்கு நான் வாக்கு கொடுத்தவருக்கு உண்மையாக இல்லை ஆனால் அப்பாவுக்கு கீழ்படிந்தேன்.
வாக்கு கொடுத்தவரிடம் போய் அவர் என்னைப்பற்றி என்ன நினைப்பார் என்று என்னுடைய நீதியை சுட்டிக்காட்ட சாக்குபோக்கும் சொல்லவில்லை காரணம் அதையும் அப்பா விரும்பவில்லை.
நாட்கள் கடந்தன நான் யாரிடம் வாக்கு கொடுத்தேனோ அவரும் என்னிடத்தில் அதைப்பற்றி கேட்கவில்லை ! என் விசுவாசம் அப்பா அவருடன் உறவாடும்போது உணர்த்திருக்கலாம் .
எந்த செயலும் செய்யும் முன்பே அப்பாஇதை செய்ய அனுமதிப்பாரா என்று சிந்திக்கும் முன்பே நாம் பிறருக்கு வாக்கு கொடுப்பது என்பது ஆவிக்குரிய வாழ்வில் சரியான செயல் இல்லை என்பதை அந்த சம்பவத்தில் உணர்ந்தேன்.
பொய் சொல்லி இதை செய்யவேண்டாமே என்கிற ஆவியின் சிந்தையில் ...
அதே
உண்மையைச் சொல்லி செய்யும்பட்சத்தில் லாபம் இல்லை என்பதால்..செய்யாமல் இருப்பதே உத்தமம்.
அப்பாவை சார்ந்து வாழுன் வாழ்வில் விசுவாச தடுமாற்றம் உண்டாகும் ஆனால் அன்பில் தடுமாற்றம் கொஞ்சம் கூட உண்டாகாது.
விசுவாச தடுமாற்றம் என்பது நம்மைப்பற்றி நாம் சிந்திக்கும்போது உண்டாகிற எண்ண அலைகள்.
அன்போ எவ்வித பயத்தையும் அறியாது தன்னைப்பற்றி சிந்திக்காது,அப்பாவின் உறவில் இருக்கும் நிலையைக் குறித்தே சிந்திக்கும்.
ஆகையால்தான் உறவில் சிறு இடைவழி உண்டானாலும் சமாதானத்தை உணரமுடியாமல் நம் ஆவி தவிக்கும் எவ்வித உலக விசயமும் இருக்காது ஆனால் அப்பாவிடம் அப்பா அப்பா என்று அவரிடம் போகும்போது வரும் கண்ணீர் நம் ஆவியின் ஏக்கத்தை சாந்தப்படுத்தி சமாதானம் உடனே வரும் .
கிறிஸ்துவுக்குள் உள்ள வாழ்கையை நாம் பிறரிடம் விவரிக்க முடியாது.அனுபவிக்கும் சந்தோசமும் இளைப்பாறுதலும் சொல்லி அளவிடமுடியாதது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)