கடந்த நாளில் எங்கள் வீட்டில் சமையல் செய்த சில உணவு பொருட்க்கள் சரியாக பராமரிக்காத காரணத்தால் அதிகமான உணவு கெட்டு போய் விட்டது.
அடிக்கடி இப்படி நடப்பதால் வெறுப்பான நான் கொஞ்சம் கோபமாகவே என் மனைவியை கடிந்துகொண்டேன். எத்தனையோபேர் போதிய உணவு இல்லாமல் இருக்கும்பொது நமக்கு கிடைத்ததை சிக்கனமாக பராமரித்து பயன்படுத்த வேண்டும் என்று சொன்னேன் இதை பலமுறை சொல்லியும்விடடேன்.
ஆனால் அவளோ என் ஆதங்கத்தை கொஞ்சமும் புரியாமல் "வீடு என்றால் அப்படிதான் இருக்கும், எதையாவது குறிப்பிட்டு அறிவுரை சொல்வதே உங்கள் வேலையாக போய்விட்ட்து. நீங்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது " என்று அடுக்கிக்கொண்டே போனாள்.
நான் ஒன்றும் சொல்லவில்லை இவர்களுக்கெல்லாம் புரிய வைப்பது கடினம் என்று நினைத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பிவிடடேன்.
வேலைக்கு வரும் வழியில் திடீர் என்று மனைவியிடம் இருந்து போன் கால் " என் மொபைலில் பணம் தீர்ந்துவிட்டது எனக்கு 399 ரூபாக்கு உடனே ரீ சார்ஜ் பண்ணுங்கள் குறைவாக பண்ண வேண்டாம்". என்ற வேண்டுகோள்!
நானும் கேட்டு ரீசார்ஜ் பண்ணிவிட்டு சொன்னேன் "உனக்கு ஏதாவது தேவைன்னா என்னிடம் கேட்டு, பணம் வேணும் பட்டு வேணும். பவுடர் வேண்டும் அதுவும் உடனே வேண்டும் என்று கேட்டு வாங்குவதற்கு மட்டும் நான் வேண்டும். ஆனால் நாம் இப்படி செய் அப்படி செய் அது நல்லது என்று ஏதாவது சொன்னால், நீங்கதான் எனக்கு பிரச்சனையே என்று சொல்லி என்னை வீடடை விடடே விரட்டிவிட பார்க்கிறாய்" இது என்ன கேடுகெடட நியாயம்? என்பதுபோல் கேட்டேன். அவள் பதிலேதும் சொல்லவில்லை.
இப்படி நமக்கு தேவையானதை மாத்திரம் அக்கறையோடு கேட்ப்பதும் பிறர் சொல்லும் நல்ல வார்த்தைகளைக்கூட கேட்டு நடக்க விரும்பாமல் புறம் தள்ளுவதும் எல்லோர் பார்வைக்கும் ஒரு நியாயமற்ற செயலாகவே தெரியும்.
அனால் உண்மையில் பார்த்தால் இதுபோல்தான் இன்று மனுஷனுக்கு கடவுளுக்கும் இடையே உள்ள உறவு நிலை இருக்கிறது!
தனக்கு ஏதாவது தேவை என்றால் ஆண்டவரிடம் போய் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் வீடு வேண்டும் வண்டி வேண்டும் சுகம் வேண்டும் என்று ஓயாத ஜெபம் முழு இரவு ஜெபம் உபவாச ஜெபம் பண்ணுவார்கள்.
ஆனால் ஆண்டவர் நம்முடைய நன்மைக்காக
நீ ஜீவனில்பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் (மத் 19:17) என்று சொன்னால்
அது எனக்கு இல்லை எவனுக்கோ சொன்னது என்பார்கள்
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. (மத் 5:39) என்று சொன்னால்
அது எப்படிங்க கொடுக்க முடியும்? அப்படி கொடுத்த நம்மள இளிச்ச வாயன்னு அல்லவா நினைப்பார்கள் என்பார்கள். ஒரு அடி இடம் கூட கொடுக்க மாடடேன் அதனால் என்ன வந்தாலும் சரி என்பார்கள்.
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; மத் 5:37 என்று சொன்னால்.
இவருக்கு வேற வேலையே இல்லை. இப்படி எதையாவது சொல்லி வச்சுட்டாறு! இந்த காலத்தில் இப்படியெல்லாம் உண்மையை சொல்லி வாழ முடியுமா? என்று சொல்கிறார்கள்.
ஆனால் தங்களுக்கு ஏதாவது தேவை வீட்டில் பிரச்சனை என்றால் "ஆண்டவரே எங்களுக்கு இரங்கும்" என்று சொல்லி தாரை தாரையாக கண்ணீர் வடித்து கதறுவார்கள் அவர்களை பார்த்தால் நமக்கே அழுகை அழுகையாக வரும்.
சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளை கேட்டு கொஞ்சமாவது தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாத இவர்கள் பக்தியும் பாசமும் பயனன்ற ஓன்று என்று இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?
ஏதோ தேவன் மிகுந்த இரக்கமுள்ளவர் என்பதால் மனுஷர்களின்
//////////////////தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. (மத் 5:39) என்று சொன்னால்///////////////////////
எனக்கு சட்டென்று கோவம் வருவதால் மற்றவர்கள் எதாவது புரிந்து கொள்ளாவிட்டாலோ தவறு இழைக்கும் போதோ எனக்கு பொறுமை இருக்காது ஆனால் இன்று மீண்டும் இவ்வார்த்தை என்னோடு பேசியது..