நாம் ஜெபிக்கும் போது தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு பின்னர் வரும் வசனத்தில் தலைமயிர் முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறதே என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன?
நாம் சில நேரங்களில் பார்க்கும் போது வேத வார்த்தைகள் போடப்பட்டிருப்பதை வாசிப்பதுண்டு அந்த நேரங்களில் சில நேரம் நாம் தலையை மூடி கொள்ள முக்காடை வைத்திருப்பதில்லை அநேரங்களில் என்ன செய்வது?
பவுல் மேலே சொல்லும் ஆலோசனைப்படி நடக்கவிரும்பினால் அல்லது ஆண்டவர் உங்களுக்கு உணர்த்தினால் முக்காடு போட்டுகொள்ளுங்கள் அது ஏற்றதுதான். போடவில்லை என்றாலோ போட மறந்துவிடுதலோ அதனால் பெரிய பாவம் எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
I தீமோத்தேயு 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
I கொரிந்தியர் 14:35 ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
வார்த்தை இவ்வாறு இருந்தாலும் இன்று அநேக பெண்கள் சபைகளில் பேசுகிறார்கள் தேவனும் அவர்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்துகின்றார்
இது பற்றி தெளிவாக விளக்கவும் அண்ணா
///////////////இதில் எனது ஆலோசனை என்னவெனில்
பவுல் மேலே சொல்லும் ஆலோசனைப்படி நடக்கவிரும்பினால் அல்லது ஆண்டவர் உங்களுக்கு உணர்த்தினால் முக்காடு போட்டுகொள்ளுங்கள் அது ஏற்றதுதான். போடவில்லை என்றாலோ போட மறந்துவிடுதலோ அதனால் பெரிய பாவம் எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை//////
இதை நான் ஏற்று கொள்கிறேன்
ஆனால் பெண்களுக்கு முக்காடாக தலைமயிர் கொடுக்கப்பட்டுள்ளதா? அத்தைய பவுல் சொல்ல வருகிறார்?