இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல!
Permalink  
 


மரணத்தை ஜெயிக்க முடியும் என்று வேதம் திட்டவட்டமாக சொல்கிறது.   இயேசு மிக தெளிவாக இக்கருத்து பற்றி திரும்ப சொல்கிறார். 
.
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
.
இயேசு மெய்யாகவே மெய்யாகவே என்று உறுதிபடுத்திய  சொன்ன இந்த வார்த்தையை கேட்ட ,  
 
யோவான் 8:52  யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசு பிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.
.
என்று ஏளனம் செய்தார்கள்.  
.
ஆகினும் இயேசு மீண்டும் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.  
.
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.  
.
இதை விசுவாசிப்பது கடினம் என்பதால்தான் இதை விசுவாசிக்கிறாயா?  என்றும் கேட்கிறார்.
 
.
இன்றைய விசுவாசிகளும் இவ்வார்த்தைகளை விசுவாசிக்கததொடு  இக்கருத்தை விளக்கி சொல்லும் என்னையும் ஏளனம் செய்வதில்  ஆச்சர்யம் ஏதும் இல்லை என்றே எண்ணுகிறேன்.  

 -- Edited by SUNDAR on Friday 14th of February 2020 03:37:10 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

தேவனாகிய கர்த்தர் 1992ஆம் ஆண்டு அடியேனை தனது வல்லமையின் ஆவியினால் இரண்டு முறையாக மொத்தம் 7 நாட்கள் அபிஷேகித்து வேதத்தில் உள்ள அனேக ரகசியங்களை தெரியப்படுத்தினார்.அந்த சமயங்களில் ஒருமுறை என் உடம்பு மட்டும் பூமியில் இருக்க என் ஆத்தும சரீரத்தில் இருந்த நான் தாழ்ந்த பாதளம் வரை சென்று அங்கு ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரித்த ஆத்துமாக்களை அப்படியே நேரில் பார்ப்பது போல பார்த்து அவற்றின் வேதனையை அனுபவித்தேன். அத்தோடு இன்னொருமுறை என்னை நரகத்தில் உள்ள கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் தூக்கி போட்டுவிட்டார்கள். கொதிக்கும் எண்ணெய் கொப்பரை ஒன்றில் போடப்பட்ட மனிதன் எப்படி துடிப்பானோ அதுபோல பூமியில் கிடந்த என் மாமிசம் துடித்து அங்கும் இங்கும் துள்ளி கை கால்களில் அனேக அடிபட்டு காயம் ஏற்பட்டு அனேக நாட்கள் ஆராமல் இருந்து. நான் நரகத்தில் விழுந்தேன், நரகத்தை பார்த்தேன் என்று சொன்னதை யாரும் நம்பவில்லை. எனக்கு பயித்தியம் பிடித்துவிட்டு என்று நினைத்து இரஜாவூர் என்னும் ஒரு உரில் உள்ள RCசர்ச் ஒன்றில் கை கால்களில் சங்கிலியால் கட்டி சுமார் ஒரு மாதம் போட்டுவிட்டார்கள்.
.
நரகம் பாதாளத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நான்."ஆண்டவரே அந்த கொடூரமான நரகத்துக்கு யாரும் போகக்கூடாது, அங்கு ஒருவர் போய் வேதனை பட்டாலும் என்னால் தாங்கமுடியாது என்று சொல்லி அனேக நாட்கள் இறைவனிடம் மிகுந்த பாரத்தோடு கண்ணீர் சிந்தி கெஞ்சினேன். அப்பொழுது இறைவன். மொத்த மனித வர்க்கத்தின் மீட்புக்கும் வழி உள்ளது என்றும் ஆனால் அது மிக கடினமான வழி என்றும். சக மனிதர்களே யாரையும் அதில் நடக்க விடாமல் தடுத்து விடுவார்கள் என்றும் சொல்லியதோடு, "மனிதன் மரணம் இல்லாமல் வாழவும் பைபிளில் வழி சொல்லப்பட்டுள்ளது " என்றும் "கேருபின்களாலும், வீசும் சுடரொளி பட்டயத்தாலும் பாதுகாக்கப்பட்டிருக்கும் ஜீவ விருட்சத்தை" அடைவதர்க்கான வழி எது என்பதையும் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார்.
.
உலகத்தின் முடிவும், சாத்தானின் அழிவும், மொத்த மனித வர்க்கத்தின் மீட்பும் அங்கேதான் இருக்கிறது என்று இறைவன் தெரியப்படுத்தி உள்ளதால், அது அறிந்துகொள்ள முடியாதபடி சாத்தானால் மறைக்கப்படுள்ளது. அவர் தெரியப்படுத்திய அந்த கடினமான வழியில் நடந்து அந்த இலக்கை அடைவதர்க்காக கடந்த 16வருடமாக முயன்று வருகிறேன். விருப்பம் இருந்தால் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்களேன். எப்படியாவது ஒருவரும் நரகம் போகக்கூடாது என்பதுதான் என்னுடைய வாஞ்சை அதுதான் இறைவனின் வாஞ்சையும் கூட!
.
யாரும் இதை நம்புகிறீர்களோ இல்லையோ எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. என்னை அழைத்த தேவனை நான் அறிந்திருக்கிறேன் அவர் காட்டிய இலக்கையும் நான் அறிந்திருக்கிறேன் எல்லாமே என் கண் முன்னால் ஒரு அழியாத படம் போல தெளிவாக உள்ளது. அகவே ஆபிரகாம், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டுக்கொண்டு இருக்காமல் அவன் சொந்த தேசத்தை விட்டு புறப்பட்டு போனது போல இந்த மாய உலகத்தின் எல்லா காரியங்களிலும் இருந்து விடுபட்டுக்கொண்டே போகிறேன். நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
.
உம்முடைய நீதியை நான் என் இருதயத்தில் மறைத்து வைக்கவில்லை...... உம்முடைய கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடி நான் ஒளித்துவைக்கவில்லை (சங்:40;10) என்ற வார்த்தைக்கு இணங்கியும்,
.
நாளை இறைவன் முன்னால் நியாய தீர்ப்புக்காக நிக்கும்போது "எனக்கு இப்படி ஒரு வழி இருந்தது தெரியவே தெரியாதே" என இறைவனிடம் சொல்ல கூடாது என்பதற்க்காக இறைவன் இதை எழுதி வெளியிடும்படி சொன்னதால் வெளியிடுகிறேன். எல்லாவற்றிற்கும் வசன ஆதாரமும் தருகிறேன் உங்களால் முடிந்தால் நீங்களும் முயற்சி பண்ணலாம். இறைவன் பச்சபாதம் உள்ளவர் அல்ல. யார் சரியாக நடந்தாலும் ஜீவ விருட்சத்தின் கனியை பெற முடியும்.
.
மேலும் இந்த வார்த்தைகள் உங்களுக்கு தவறானவை போல தெரியுமானால் நீங்கள் இறைவனிடம் அமர்ந்து ஜெபம்பண்ணி இதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால் விட பிடியாக ஜெபித்து கேட்க வேண்டும். சாதாரண ஜெபத்தால் இதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியாது
 
(இதில் எழுத்து பிழைகள் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்)
.
பைபிளில் உள்ள வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகள்தான் என முழுமனதோடு நம்பும் உங்களுடன் அந்த வேத வார்த்தைகள் ஆதாரத்துடன் பேசுவது நல்லது என நினைக்கிறேன். ஏனென்றால் ஆண்டவர் இயேசுவை சோதித்த பிசாசானது வேத வார்த்தைகள் மூலமாகத்தான் சோதித்து என்பது எல்லோரும் அறிந்ததே! அதுபோல் நான் எழுதும் செய்தியில் எதாவது தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால் சரியான வசன அதாரத்தோடு COMMAND பகுதியின் மூலம் கேள்வி கேட்கலாம்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

இயேசு பூமிக்கு வந்து இரத்தம் சிந்தியத்தின் முக்கியமான நோக்கம்:

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்ததன் நோக்கம் என்ன என்று உங்களிடம் கேட்டால்

 • பாவத்தில் இருந்து மனிதனை ரட்சிக்க
  இழந்து போனதை தேட
  பிசாசின் தலையை நசுக்க.
  மரணத்தின் கூரை ஒடிக்க
  சபையை ஸ்தாபிக்க
  மனிதனை இறைவனோடு ஒப்புரவாக்க.
  மனிதனை பரலோக ராஜ்யம் அழைத்துச்செல்ல.
  பாதாளம் நரகம் இவற்றிலிருந்து மனிதனை மீட்க

போன்ற எத்தனையோ காரணங்களை சொல்லலாம். எல்லாம் உண்மைதான். ஆனால் அனேகருக்கு தெரியாமல் போன தெரியக்கூடாது என சாத்தான் மிகமிக தந்திரத்தோடு மறைத்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான நோக்கம் ஒன்று உண்டு. அதுதான் இதுவரை எல்லோரையும் ஆட்கொண்டுவரும் மாமிச மரணத்தையும் ஜெயித்து யாருமே அனுபவித்திராத மரணம் என்பதே இல்லாத நித்திய வாழ்க்கையை மனிதனுக்கு தர என்பது.
.
முதலில் மரணம் என்று இந்த உலகில் எதை சொல்கிறோம்?
.
நமது மாமிசம் இயக்க நிலையை முடித்து அது மண்ணில் அடக்கம் பண்ணப்படுவதைதான் உலகில் எல்லோரும் மரணம் என்று குறிப்பிடுகிறார்கள். அந்த "மரணம்" இல்லாமல் வாழ முடியும் என்று வேதம் வழி சொல்கிறது தவிர, ஒருவன் நான் இருக்கிற பிரகாரமாக அப்படியே இருந்துவிடுவான் என்ற பொருளில் அல்ல! அதாவது உலகத்தார் சாவதுபோல செத்து அடக்கம் பண்ணப்படுவதில்லை.
.
சரி இப்பொழுது பவுல் அவர்கள் 1 தெசே 4ல் இப்படி சொல்கிறார்
17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்"
.
இதில் உயிரோடு இருக்கும் நாமும் எடுத்துக்கொள்ளபடுவோம் என்று சொல்வது மரித்தா? அல்லது மரிக்காமலா? என்று பார்த்தால் கீழ் கண்ட வசனம் இப்படி சொல்கிறது
.
53 For our dying bodies must be transformed into bodies that will never die அதாவது நமது உடம்பு சாகாமையை தரித்துகொள்ளும் என்று. இங்கு என்ன நிகழும்? நமது மாமிசம் அப்படியே கீழே விழுந்து விடுமா, என்ன? இல்லை, அது அப்படியே சாகாத உடம்பாக மாறிவிடும்! என்பது தான் எனது வேதம் சொல்லும் கருத்து! அதாவது மனிதர்கள் சாவதுபோல நான் செத்துபோவதில்லை சாகாதவனாக மாறிவிடுவேன் என்று சொல்கிறேன்.
.
அதாவது
ஓன்று, மாமிசத்தில் மரித்தவர்கள் சாகாத உடம்புடன் எழுந்திருப்பார்கள். இன்னொன்று உயிரோடு இருக்கும் நான் சாகாமலேயே அப்படியே சாகாத உடம்பாய் மாறிவிடுவேன். அது முடியாது, நடக்காது என்று சொல்பவர்களுக்கு நடக்காது. நீங்கள் விசுவாசித்த படியே உங்களுக்கு நடக்கும் என்பதும் வேத வாக்கு!
.
மாம்சம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியுமா?

"மாமிசமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது: என்று 1கொரி:15:50ல் சொல்லப்பட்டிருக்கும் போது அது எப்படி முடியும்? என்று நீங்கள் நினைக்கலாம். அதை பற்றி பின்னால் வசன ஆதாரத்தோடு விளக்குகிறேன்
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
.
உயிர்தெழுந்த இயேசு மாமிசத்தில்தான் வந்தார், அவரது கல்லரை இன்றுவரை திறந்தே உள்ளது மேலும் அவரே அவருடைய வாயாலே "நீங்கள் காண்கிறபடி மாம்சமும் எலும்பும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே" என்று (லுக்:24:39)ல் சொல்லியதோடு அப்படியேதான் பரலோகம் ஏறி போனார் இதற்குமேல் ஒரு சாட்சி நமக்கு தேவை இல்லை என நினைக்கிறேன். மேலும் எலிசா, ஏனோக்கு இருவரும் மரணத்தை காணாமல் மாமிசத்தோடு தேவனிடம் போனதும் எல்லோருக்கும் தெரிந்ததே.
.
அத்தோடு சங்கீதம் 16:19ல் "என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கி இருக்கும்" என சங்கீதக்காரன் சொல்வதன் மூலம் மாம்சத்துக்கும் ஒரு நம்பிக்கை உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
.-- Edited by SUNDAR on Friday 14th of February 2020 04:06:36 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

சாகவே சாவை x பிழைக்கவே பிழைப்பாய்
ஆதியில் தேவனாகிய கர்த்தர் மனிதனை மண்ணினால் செய்து அவனை பார்த்து "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய்" என ஆதாமிடம் சொன்னார். அதனால் தான் மரணம் என்ற ஒன்று (ஆவிக்குரிய மரணம் மற்றும் மாமிச மரணம் இரண்டுமே) இந்த பூமிக்குள் நுழைந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
.
அந்த சாகவே சாவாய் என்ற சாபத்துக்கு நேர் எதிர்பதமான வார்த்தை "பிழைக்கவே பிழைப்பாய்" என்பது, அது வேதத்தின் ஒரே ஒரு புத்தகத்தில் மட்டும்தான் 8முறை காணப்படுகிறது அதுதான் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம்.
.
எப்படி தேவனின் சாகவே சாவாய் என்ற வார்த்தையின் வல்லமையால் ஆவிக்குரிய மற்றும் மாமிச மரணம் வந்ததோ அதேபோல் இந்த பிழைக்கவே பிழைப்பாய் என்ற வார்த்தையின் மூலம் ஆவிக்குரிய மற்றும் மாமிசத்துக்குரிய ஜீவன் கிடைக்கும் என்பது அதிக நிச்சயமல்லவா? எனேன்றால் தேவனின் வார்த்தை மிகவும் வல்லமை உள்ளது அதை குறைத்து கூட்டி எடை போட முடியாது.

.
மேலும் தேவனாகிய கர்த்தர் நீதிமான் என்ற வார்த்தைக்கு மிகவும் மதிப்பு கொடுத்து அவர்களுக்கு அனேக ஆசீர்வாதங்கள் சொல்லியிருப்பதை வேதத்தின் கிட்டத்தட்ட 150 வசனங்களில் காணலாம்.
உதாரணமாக
"நீதிமான்கள் பூமியை சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதில் வாசமாய் இருப்பார்கள்" (சங்: 37:29)
கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான் (நீதி: 18:10)
நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜியத்திலே சூரியனை போல பிரகாசிப்பார்கள் (மத்: 13:43)
போன்றவை
.
யார் அந்த நீதிமான்கள்? நீதிமான்கள் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் என்ன? கர்த்தருடைய பார்வையில் யார் நீதிமான்?
.
WHAT IS THE CORRECT DEFINITION FOR RIGHTEOUS?
.

பல்வேறு கர்த்தருடைய தாசர்கள் பல்வேறு விளக்கங்களை கொடுத்தாலும்.
அதே எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்தில் கர்த்தரே தனது பார்வையில் யார் யார் நீதிமான் என தெளிவாக விளக்கமாக சொல்லியுள்ளார். ஆனால் நானும் எத்தனையோ போதனைகளை கேட்டுவிட்டேன், எவ்வளவோ புத்தகங்களை படித்துவிட்டேன் யாரும் இந்த முக்கியமான வசனங்கள் குறித்து எதுவும் சொல்வதில்லை. ஆகையால் இறைவனின் கட்டளைக்கு இணங்கி இதை வெளியிடுகிறேன். படித்து பயன்பெற்று மரணம் இல்லாமல் வாழ என வாழ்த்துக்கள்.
.-- Edited by SUNDAR on Friday 14th of February 2020 04:10:00 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

மரணமில்லா வாழ்க்கை நிச்சயம் உண்டு : .
முதலில் மரணமில்லா வாழ்க்கை உண்டு என்பது பற்றி பைபிள் எந்தெந்த இடங்களில் சொல்கிறது என பார்ப்போம்.

 1. ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகள் உண்டு (சங்:68:20)

 2. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அங்கே மரணம் இல்லை (நீதி: 12:28)

 3. அவர் (கர்த்தர்) மரணத்தை ஜெயமாக விழுங்குவர் (ஏசா:25:8)

 4. அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; (ஓசி 13:14)

 5. என் கட்டளைகளின் படி நடந்து, என் நியாயங்களை கைக்கொண்டு உண்மையாக இருப்பானாகில் அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் (எசே:18:9)

 6. ஒருவன் என் வார்த்தையை கை கொண்டால் அவன் என்றென்றும் மரணத்தை காண்பதில்லை.(யோ:8:51)

 7. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்(யோ:8:26)

 8. தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்பிப்பார் (ரோ: 8:11)

மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையாலும் பிழைப்பான் (மத:4:4) என வேத வசனம் சொல்லும் பட்சத்தில்,
.
இத்தனை முறை மனிதன் மரணமில்லாமல் வாழ வழி இருக்கிறது என இறைவன் சொல்லியும் அதை நம்பாமல் அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்பான சகோதரனே! சகோதரியே! எத்தனையோ வேத ஆராய்ச்சியாளர்களுக்குகூட இந்த வார்த்தைகள் இத்தனை காலம் ஏன் கண்ணில் படவில்லை என்பது எனக்கே தெரியவில்லை.

.
வேதத்தை இறைவார்த்தை என உறுதியாக நம்பும் உங்களுக்கு இந்த எளிமையான அர்த்தம் உள்ள வசனங்களை நம்ப முடியவில்லையா? அல்லது புரியவில்லையா? அல்லது உலகத்தில் எல்லோரும் மரிக்கிறார்கள் அப்படி இருக்க இதில் இறைவன் எதோ தவறாக சொல்லிவிட்டார் என நினைக்கிறீர்களா?.
.
அன்பானவர்களே! இறைவன் என்றுமே தவறுவது இல்லை நடக்காததை சொல்வதுமில்லை. மனிதர்களாகிய நாம் தான் எங்கோ தவறு பண்ணுகிறோமே அன்றி வேறொன்றும் இல்லை. . ஆம்! மிகப்பெரிய ரகசியம் அதில் இருப்பதால் சாத்தான் எல்லோருடைய கண்ணையும் இத்தனை காலமாக கட்டி வைத்துவிட்டான் ஏனென்றால் அங்குதான் அவனின் முடிவும் இருக்கிறது, ஆனால் இனியும் அது முடியாது எனேன்றல் அவனது முடிவு காலம் மிகமிக நெருங்கி விட்டது! அகவே தான் கடந்த 15வருடங்களாக மறைத்து வைத்திருந்த அனேக காரியங்களை இறைவன் எல்லோருக்கும் வெளிப்படுத்தும்படி சொல்லிவிட்டார்.
.
இறைவனின் வார்த்தைகள் இத்தனை முறை மரணம் இல்லாமல் வாழ வழி உள்ளது என சொல்லியும் இதுவரை எந்த பரிசுத்தவானும் ஏன் அப்போஸ்தலர்கள் கூட அப்படி வாழவில்லையே அவர்கள் எல்லோருமா தவறி விட்டார்கள் என கேள்வி எழலாம்.
.
வேதம் மிகபெரிய ரகசியங்கள் நிறைந்தது:-
நாம் ஒரு முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்ளுதல் நல்லது என நினைக்கிறேன். அதாவது இறைவனின் அறிவு ஞானம் எல்லாம் நம்மால் கணக்கிட்டு சொல்ல முடியாது. மேலும் இந்த உலகின் அனாதி ரகசியங்கள் எதுவும் நமக்கு தெரியாது. பாம்பு ஆதாமை வஞ்சித்தது, அந்த சர்ப்பத்துக்கு வஞ்சிக்கும் தன்மை எங்கிருந்து வந்தது அல்லது லூசிபருக்கு இறைவனை போல ஆகவேண்டும் என்ற எண்ணம் வர யார் காரணம்?. இறைவன் எல்லோரையும் நல்லவராகத்தனே படைத்திருப்பார் அப்படி இருக்க தீமை எப்படி உள்ளே வந்தது? போன்ற கேள்விக்கு பதில் தெரியாது.
.
இறைவன் ஒரு மனிதனை தெரிந்துகொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக தெரிந்து கொள்கிறார். அதை சரியாக செய்து பலபேர் தனது வாழ்க்கையை முடிக்கின்றனர் (நோவா, தானியேல், யோபு, இயேசு, பவுல்) ஆனால் தனக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷமான கர்த்தரின் அழைப்பை அசட்டை பண்ணி வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்களும் உண்டு (சிம்சோன், சாலமோன், கேயாசி, எத்தனையோ ராஜாக்கள், யூதாஸ் போன்றவர்கள்) அதற்காக அவ்வளவுதான் கர்த்தரின் வழிகள் என நாம் முடிவு எடுக்க முடியாது. அவரிடம் இன்னும் எத்தனையோ புது புது வழிகள் உள்ளன. நாம் யாரும் அதில் அக்கறை செலுத்தி அதை அறிந்து கொள்ள விரும்புவது இல்லை. மேலும் இறைவன் எல்லோருக்கும் எல்லா ரகசியங்களையும் தெரியப்படுத்துவது இல்லை. ஒரு மனிதனுக்கு ஒரு ரகசியத்தை தெரியப்படுத்தினால் அவன் அதை சரியாக பின்பற்றி தனது நோக்கத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றுவான் என்பதை எல்லாம் அறிந்து அதற்கு தகுந்த மாதிரித்தான் வெளிப்படுத்துவார். பன்றிகள் முன் முத்தை போட்டால் அதனால் பயன் ஏதும் இல்லை என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியும்.
.
வேதத்தில் மிக பெரிய ரகசியங்கள் எல்லாம் இருப்பதால் தான் சங்கீதகாரன் அவற்றை புரிந்துகொள்ளும் அறிவை கேட்டிருக்கிறான். மிகவும் வாஞ்சையோடு கேட்டு புலம்பி, குழம்பி பெருமுச்சுவிட்டு அழுகிறவர்களுக்குதான் அவைகள் வெளிப்படுத்தப்படும்.
.-- Edited by SUNDAR on Friday 14th of February 2020 04:12:11 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

பரலோகம் போகும் கூட்டமா, நரகம் போகும் கூட்டமா யார் அதிகம்?

மனம் திரும்பினோம், இயேசுவை ஏற்றுகொண்டோம், பரிசுத்த ஆவியை பெற்றுகொண்டோம், ஜெபம் பண்ணுவோம், உழியம் செய்வோம், சபைக்கு போவோம், காணிக்கை போடுவோம், எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்ந்து பரலோகம் பொய் சேர்ந்துவிடுவோம் என்பது அநேகரின் செயலாக உள்ளது அதிலும் அநேகர் இந்த உலக காரியங்களுக்காகத்தான் இறைவனையே தேடுகின்றனர். இன்னும் கொஞ்சம் அதிகமாக செய்பவர்கள் பேய் பிசாசை விரட்டுவார்கள், அதிசய அற்புதம் செய்வார்கள், சுகமக்குவார்கள் அவ்வளவு தான்.
.
சரி ஆதி அப்போஸ்தலரான தோமாவால் சுவிசேஷம் சொல்லப்பட்ட நமது இந்தியாவை எடுத்துக்கொள்வோம் கடந்த 2000 வருடத்தில் என்ன சாதித்துவிட்டோம். இந்திய மக்கள் தொகையில் 5% கூட கிறிஸ்தவர்கள் இல்லை. ஒரு ஆத்துமாவை கிறிஸ்துவுக்குள் கோண்டுவர நாம் படும் கஷ்டம் என்ன? அதே நேரத்தில் எத்தனையோ புறஜாதி குழந்தைகள் இந்த பூமியில் பிறந்து விடும்.
.
கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லப்படும் தேசங்கள் எல்லாம் மிகவும் முன்னேறி கிறிஸ்துவையும் கடந்து எங்கேயோ போய்விட்டார்கள். ஆபாச இணையதளங்கள், இறைவன் வெறுக்கும் ஹோமோ செக்ஸ் மற்றும் காமகளியாட்டங்கள் எல்லாம் அங்குதான் நடக்கிறது. தான் கெட்டது போதாது என்று அதன் மூலம் உலத்தையே பாவத்துக்குள் வழிநடத்துகின்றனர் . பவுல் அடியார் ஆரம்பித்த கொரிந்து சபையில் அவர் இருக்கும்போதே பிரிவினைகள் பேதங்கள் எல்லாம் ஏற்பட்டுவிட்டதை அவர் எழுதியுள்ளார்.
.
ஏன் நமது நாட்டில் கூட உள்ள ஊழியர்களை கூட சில கேள்விகள் கேட்போம்:-

 • சொந்த சபை வைத்திருப்போர் எத்தனைபேர் அதன் பொறுப்பை தனக்குப்பின் சபையில் உள்ள வேறொரு மூப்பரிடம் ஒப்படைக்க முன்வருவார்கள்.

 •  

  இறைவன் உங்களிடம் இந்த சபையை அப்படியே வேறொருவருக்கு கொடுத்துவிட்டு வேறு இடம் போய் புதிதாக உழியம் செய்யசொன்னால் செய்ய தயாரா?

 •  

  தன் சபையில் புதிதாக வந்த ஒரு சதாரண விசுவாசியின் வார்த்தைகளை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்படிய முடியுமா?

 •  

  தன் சபையில் 1ரூபாய் காணிக்கை போடும் ஒரு விசுவாசியின் வாழ்க்கைத்தரத்தை விட குறைந்த வாழ்க்கை தரத்தில் வாழ முடியுமா?

ஒரு 10 விசுவாசி உள்ள சபையின் பாஸ்டருக்கு கூட தான் பாஸ்டர் என்ற லூசிப்பரின் பெருமை வந்து விடுகிறது. இயேசுவை அறிந்த மக்களே அநேகர் வழி தவறி போய்கொண்டு இருக்கின்றனர். இதே நிலைமையில் போனால் பரலோகம் போகும் கூட்டத்தை விட நரகம் போகும் கூட்டம்தான் அதிகமாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
.-- Edited by SUNDAR on Friday 14th of February 2020 04:14:15 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

இதுதான் இறைவனின் முடிவான திட்டமாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

இல்லவே இல்லை! ஒருவரும் கெட்டு நரகம் போகக்கூடாது என்பதுதான் இறைவனின் மன விருப்பம். ஒரு ஆத்துமா நரக அக்கினியில் கிடந்தது துடித்தாலும் அதை இறைவன் சகித்துக்கொண்டு இருப்பவர் அல்ல!

 

II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

 

 

மத்தேயு 18:14  இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

 

I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

 

தேவனுக்கு ஒரு சித்தம் இருந்தால் அதை நிறைவேற்றும் வழியும் அவரிடம் நிச்சயம் இருக்கும் என்பதை நாம்  வேண்டும்.  

 

அதை இறைவன் பலமுறை என்னிடம் சொல்லிவிட்டார் இதை எழுதிம்போதே கண் கலங்குகிறேன்.

 

அதற்காக நான் சுவிசேஷம் சொல்லக்கூடாது உழியம் செய்யக்கூடாது என சொல்லவரவில்லை. நடைமுறை கிறிஸ்த்தவ உழியங்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாமே இயேசு எதிர்பார்க்கும் ஒன்றுதான். அதில் ஏதும் மாற்றம் இல்லை! நாம் கண்டிப்பாக இயேசுவைபற்றி பிறருக்கு சொல்லவேண்டும் அது இறைவனின் கட்டளை. ஆனால் தற்போது உள்ள கிறிஸ்தவ நடவடிக்கைகள் மூலம் எல்லோரையும் மீட்பது சாத்தியமா?

.
ஆனால் எல்லோரையும் நரகஅக்கினியில் இருந்து மீட்பது சாத்தியம் என்றும் அதற்கான வழியையும் சேர்த்தே இயேசு ஏற்படுத்தியுள்ளார் என்றும் அது திறந்தே இருக்கிறது ஆனால் அது யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்றும் இறைவன் வெளிப்படுத்தியுள்ளார்.

 

 will be continued....-- Edited by SUNDAR on Friday 14th of February 2020 04:24:45 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 622
Date:
Permalink  
 

Pls continue anna.. Want to know more about this article..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

தொடர்ந்தது உண்மைகளை அறியும் முன் தேவனால் பழைய ஏற்பட்டில் கொடுக்கப்படட நியாயப்பிரமாணம் முடிந்துவிட்ட்தா என்பதை அறிவது அவசியம் ஆகிறது.   __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 622
Date:
Permalink  
 

நியாயப்பிரமாணம் முடியுமா? புரியவில்லை அண்ணா தயவு செய்து விளக்கவும் நீங்கள் கூற வருவது என்ன?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

அநேகர் பழைய ஏற்பாடு முடிந்துபோய்விட்ட்து என்று எண்ணி நியாயப்பிரமாணத்தை  உள்ள வார்த்தைகளை பெரிதாக எடுத்துகொள்வது இல்லை எனவே நியாயப்பிரமாணம் முடிந்துவிட்ட்தா என்பது குறித்து சற்று விவரமாக பார்ப்போம்.  

 
 

நியாயபிரமாணம் முடிந்துவிட்டதா?

இயேசு கிறிஸ்துவின் சீடர்களும் அவரோடு கூட இருந்து உழியம் செய்த அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் எழுதிய நிருபங்களில் எங்கும் நியாயபிரமாணம் முடிந்தது பற்றி எதுவும் கூராதிருக்க பவுல் அவர்கள் மட்டும் தன் நிருபங்களில் 122முறை நியாயபிரமாணம் என்ற வார்த்தையை உபயோகித்ததோடு எல்லாவற்றிற்கும் மேலாக

 • "விசுவாசித்த யாவருக்கும் நீதி உண்டாகும்படி கிறிஸ்து நியாயபிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் (ரோமர் 10:4) என்றும்
 • "முந்தின கட்டளை பயனற்றதுமாய் இருந்தபடியால் மாற்றப்பட்டது (எபி: 7;18) என்றும் சொல்லியுள்ளார்.

.

உண்மையில் நியாயபிரமாணம் முடிந்துவிட்டதா? மாற்றப்படுவிட்டதா? இதை பற்றி பழைய ஏற்பாட்டில் கர்த்தரும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவும் என்னசொல்லியுள்ளனர்? என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
.
நியாயபிரமாணம் என்றால் என்ன?

நியாயம் என்றால் என்னஎன்பதை சொல்லும் கட்டளைகளும் பிரமாணங்களும் நியாயபிரமாணம் ஆகும். வேதத்தில் முதல் முதலில் நியாயபிரமாணம் என்ற வார்த்தை யாத்ராகமம் 16:4 ல் வருகிறது அதில் கர்த்தர் மோசேயை நோக்கி "...... அதினால் அவர்கள் என் நியாயபிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்க மாட்டார்களோ என்று அவர்களை சோதிப்பேன்" என்று சொல்லுகிறார் அதன் மூலமும் அதன் பின் வரும் யோசுவா புத்தகத்தின் பல்வேறு வசனங்கள் மூலமும் (யோசு:8:30,32,34)"நியாயபிரமாணம் என்பது சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளும் பிரமாணங்களும்தான்" என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

.

சீனாய் மலையில் மோசேயிடம் கொடுக்கப்பட்ட இறைவனின் வார்த்தைகளை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்

 1. கர்த்தரின் பத்து கட்டளைகள்
 2. கர்த்தரின் நீதி நியாயங்கள்
 3. கர்த்தரின் வாசஸ்தலம் அமைக்கும் முறை
 4. கர்த்தரின் கட்டளை அல்லது நியாயங்களை தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீறிவிட்டால் அந்த பாவத்தை நிவர்த்தி செய்யும் பலிகள்.

.

இந்த நான்கில் எவற்றை இயேசு கிறிஸ்த்து முடித்துவிட்டார்? என்பதை பார்ப்போம்

.

கர்த்தரின் பத்து கட்டளைகள், நீதி நியாயங்கள் முடிந்துவிடதா?
கொலை செய்யாதிருப்பயாக, களவு செய்யாதிருப்பாயாக, விபச்சாரம் செய்யாதிருப்பயாக என்ற கட்டளைகள் இயேசு மரித்தவுடன் முடிந்து "கொலை செய்யலாம்" என்றோ அல்லது "களவு செய்யலாம்" என்றோ மாறிவிடுமா? மாறாதல்லவா?

ஆகவே பத்து கட்டளைகள் துளிகூட மாறவில்லை.

(எபிரோன் சபையின் பாஸ்டர் எடிசன் அவர்கள் 60 நாட்கள் தொடர்ந்து அதிகாலை ஜெபிதபோது இறைவன் அதே பத்து கற்பனை அடங்கிய பலகையை அவரது கையில் கொடுத்ததுபோல் தரிசனம் கண்டார்களாம், அதே தரிசனம் AGசபை பாஸ்டர் மோகன் அவர்களுக்கும் இருந்ததாக பாஸ்டர் எடிசன் தனது மாத பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்)

.

அதுபோல அவர் சொன்ன நீதி நியாயங்களில் எது முடிந்து போய்விட்டது?

 • தகப்பனையும் தாயையும் சபிப்பவன் கண்டிப்பாக கொலை செய்யப்படவேண்டும் (யாத 21:17)
 • சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம் (யாத்:22:18)
 • மிருகத்தொடே புனருகிறவன் எவனும் கொலைசெய்யபடவேண்டும் (யாத்:22:19)
 • விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காது இருப்பீர்களாக(யாத்:22:22)

இது போல் எத்தனையோ நல்ல நல்ல நீதி நியாயங்களை சொல்லியுள்ளார்
யாத்ராகமம் முழுவதும் படித்து பாருங்கள் அவர் கொடுத்த நீதி நியாயங்கலெல்லாம் மிகவும் சரியானவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம், அவைகள் ஒருபோதும் முடிந்துபோகாது. மேலும் இறைவன் சொன்ன நீதி நியாயங்களை யாராலும் மாற்றவோ முடிக்கவோ முடியாது. ஒரு தவறை செய்தவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று சொன்ன அதே இறைவனே "பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கே உரியது" என்றும் சொல்லியுள்ளதால அவர் வார்த்தைகளை கைகோள்ளுவதுதான் நமது கடமையே அன்றி கைகொள்ளாதவனை நியாயம் தீர்ப்பதை தேவனிடம் விட்டுவிட வேண்டும்

.

சங்கீதக்காரன் என்ன சொல்கிறான் பாருங்கள்

 • உம்முடைய நீதி நித்திய நீதி உம்முடைய வேதம் சத்தியம் (சங்: 119:142) 
 • உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம் உம்முடைய நீதி நியாயங்கலெல்லாம் நித்தியம்(சங்: 119:160)
 • நீர் கட்டளையிட்ட சாட்சிகள், நீதியும் மகா உண்மையுமானவைகள் (சங்:119:138)

மேலும் கர்த்தர் தனது தீர்க்கதரிசிமூலம் என் நீதி அற்றுப்போவதில்லை (ஏசா:51:6) என்று கூறியுள்ளார்

.

இதோடு மட்டுமல்லாமல் அவர் நீதி நியாயங்கள் கொடுக்கப்பட்டது முதல் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தீர்க்கதரிசன புத்தகங்களின் கடைசி புத்தகமாகிய மல்கியா(4:4)வரை கர்த்தர் திரும்ப திரும்ப என் கட்டளைகளையும் நீதி நியாயங்களையும் கவனியுங்கள், கை கொள்ளுங்கள் என தலை தலையாய் அடித்துக்கொள்கிறார் (பார்க்க ஏசா:48:18, எசேக் 18:19)
ஆனால் நாம் ரொம்ப சிம்பிளாக நியாய பிரமாணம் முடிந்துவிட்டது என சொல்லி அவரை வாயடைத்து விடுகிறோம்.

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். (ஓசி 8:12)

இந்த வசனம் இந்த இடத்தை விட வேறு எங்கு இவ்வளவு சரியாக பொருந்தும்! 

.

அது "பழைய ஏற்பாடு" என்று பலபேர் முணுமுணுப்பது எனக்கு புரிகிறது. அகவே புதிய ஏற்பாடு நியாய பிரமாணம் பற்றி என்ன கூறுகிறது என்பதையும் "என் பிதா சொன்னதையே செய்கிறேன்" என்று சொன்ன தேவ குமரன் இயேசு என்ன சொல்கிறார் என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்-- Edited by SUNDAR on Thursday 20th of February 2020 07:38:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

இயேசுவின் வார்த்தைகளும் நியாயபிரமாணமும்:

 

இயேசு கிறிஸ்துவை பற்றி எழுதப்பட்ட எந்த சுவிசேஷத்திலும் நியாயபிரமாணம் முடிந்து விடும் என்றோ முடியபோகிறது என்றோ அதற்கு ஒப்பான வார்த்தைகளோ கூட சொல்லப்பட்வே இல்லை.
.
இயேசு முதல்முதலில் நியாயபிரமாணம் பற்றிய செய்தியை மத்தேயு 5:17,18ல் கூறியுள்ளார் அதில் மிக தெளிவாக:

.

"நியாயபிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதர்கு வந்தேன் என எண்ணிகொள்ளாதீர்கள், அழிக்கிறதர்கு அல்ல நிறைவேற்றுவதர்க்கே வந்தேன்" எனவும்

 

"வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நியாய பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்".

என்று சொன்னதோடு

.

நித்ய ஜீவனை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வாலிபனுக்கு இயேசு சொன்ன பதில் என்ன: "நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைகொள் என்பதே" (மத்: 19-16-19) அவன் கற்பனைகளை எல்லாம் சிறு வயது முதலே கை கொள்கிறேன் என்று சொன்னபிறகு தான் அடுத்த ஸ்டெப்பாகிய "உனக்கு உள்ளதை விற்று தரித்திரருக்கு கொடு" என்று சொல்கிறார்.

 

மேலும்

 

இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் பார்த்து மயக்காரரே உங்களுக்கு ஐயோ என்று ஏன் சொன்னார்:" ...நீங்கள் ........(எல்லாவற்றிலும்) தசமபாகம் செலுத்தி, நியாயபிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்ய வேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்" (மத்:23:23) என்று சொல்லி நியாயபிரமாணத்தை விடக்கூடாது என குறிப்பிடுள்ளார்

.

இப்படி இயேசு கிறிஸ்து எல்லா இடங்களிலும் மிக மிக தெளிவாக கர்த்தரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து சொன்னபிறகு வேறு யார் விளக்கம் உங்களுக்கு தேவை.

.

இயேசு பூமியில் வாழ்ந்த காலங்களில் பலமுறை தான் மரித்து மூன்றாம் நாளில் எழும்பபோவதாக கூறியுள்ளார் அப்படி கூறும்போது எங்காவது நான் எழுந்த பிறகு நீங்கள் நியாயபிரமாணத்தை கைக்கொள்ள வேண்டியதில்லை என கூறியுள்ளாரா? இல்லவே இல்லை.

.

மேலும் இயேசு இரண்டு பிரதான கற்பனைகளை கொடுத்து இதில் நியாய பிரமாணம் தீர்க்க தரிசனம் எல்லாம் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார் நல்லது! அதாவது இரண்டு மாங்காய்களை ஒரு கவரில் போட்டு இந்த கவரில் இரண்டு மாங்காயும் இருக்கிறது என்று சொன்னால் அதற்க்கு என்ன அருத்தம் எடுப்பார்கள் என்று புரியவில்லை. மாங்காயை தூர போட்டுவிட்டு கவரை கையில் எடுத்துக்கொண்ட கதையாக உள்ளது இன்றைய கதை!
.

இயேசு சொன்ன பிரதான கற்பனைகள்:

மத்தேயு 22;39,40ன் படி இயேசு பிரதான கற்பனை என்று இரண்டு கற்பனைகளை சொல்லி அதில் நியாய பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியுள்ளது என கூறியுள்ளார் அவைகள்:

 1. உன் தேவனாகிய கர்த்தர் மீது முழு இருதயத்தொடும் முழு ஆத்துமாவோடும் அன்பு செலுத்துவாயாக
 2. உன்னிடத்தில் நீ அன்பு கூறுவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக .

 

இந்த இரண்டு வசனங்களும் பழைய ஏற்பாட்டில் உள்ளதுதான்:

 1. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தொடும் உன் முழு அத்துமாவோடும், உன் முழு பலத்தொடும் அன்பு கூறுவாயாக (உபா: 6:5)
 2. உன்னில்நீ அன்புகூறுவதுபோல பிரனிலும் அன்பு கூறுவாயாக (லேவி 19:18)

முழு அன்பு செலுத்துதல் என்றால் என்ன?

 

அன்பு என்ற மூன்றெழுத்து வார்த்தைக்கு அனேக அர்த்தங்கள் இருந்தாலும் வேதாகமத்தின்படி இயேசு அன்பு செலுத்துதல் என்றால் என்ன என்று கீழ் கண்ட வசனங்களில் சொல்கிறார்:

 • ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தை கைகொள்வான் (யோவா:14:21)
 • என் கற்பனையை பெற்றுக்கொண்டு அவைகளை கைகொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாய் இருக்கிறான் (யோவா 14:23)
 • யோவான் அவர்களும் "நாம் தேவனுடைய கற்பனைகளை கைகொள்ளுவதே அவரிடத்தில் அன்பு கூறுவதாகும்" ( 1யோவா:5:3)

என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது நாம் இப்படி பார்ப்போம்:-

 

புதிய ஏற்பாடு காலத்தில் வாழும் நாம் இயேசுவின் கட்டளைகளை கை கொள்ள வேண்டுமா இல்லையா? (சிலர் வேண்டாம் பவுல் அவர்கள் நிருபத்தில் உள்ளதை கைகொண்டால் போதும் என நினைத்தால் பரவாயில்லை நீங்களும் பரலோகராஜ்யம் போக வழிஉண்டு. ஆனால் மாமிசத்தில் மரித்த பிறகுதான் அது முடியும்) ஆனால் ஒருவன் இயேசுவிடத்தில் அன்பாயிருக்கிறேன் என்றோ அவருக்காக வாழ்கிறேன் என்றோ சொன்னால் அவர் கட்டளையை கண்டிப்பாக கைகொள்ள வேண்டும்.

.

இப்பொழுது இயேசுவின் முதல் பிரதான கட்டளை என்ன?

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தொடும் முழு அத்துமாவோடும் அன்பு செலுத்துவாயாக என்பதே

அன்பு செலுத்துவது என்றால் என்ன?

அவர் கற்பனைகளை கை கொள்ளுவது

.

அதனால் இயேசுவின் பிரதான கற்பனையே "கர்த்தரின் கற்பனைகளை கைகொள்" என்பதுதான் அது நியாயபிரமாணத்தில் உள்ளதுதான்

.

ஆக பிதாவும் குமாரனும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல்

 • "இவர் என் நேச குமரன் இவர்க்கு செவி கொடுங்கள்" என்று பிதாவும்
 • "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடு அன்பு செலுத்து" என்று குமாரனும் சொல்லியிருக்க.

.

கலாத்தியர் 5:14 பவுல் அவர்கள் உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக என்ற ஒரே கற்பனையில் நியாய பிரமாணம் முழுவதும் நிறைவேறும் என சொல்லியிருப்பது எப்படி பொருந்தும் என தெரியவில்லை

அக மொத்தம்

 

தேவன் 10 கட்டளைகளை கொடுத்தார்

தேவகுமாரன் அதை இரண்டாக சுருக்கி கொடுத்தார்

பவுல் அவர்கள் அதை ஒன்றாக மாற்றினார்

மனிதர்கள் அதை ஒன்றுமில்லாமல் மாற்றிவிட்டனர்.

 

சரி இப்பொழுது " உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக என்ற ஒரே கற்பனையில் நியாயபிரமாணம் முழுவதும் அடங்குமா என பார்ப்போம்.

.

"உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக" "உன்னை நீ நேசிப்பது போல பிறரை நேசிப்பாயாக" என்பதற்கு உண்மை அருத்தம் என்ன?

.

அதன் அர்த்தம் மிக உயர்த்து அதை முழுமையாக விளக்க முடியாவிட்டாலும் அதை சுருக்கி சொன்னால்: "

.

ஒரு மிகப்பெரிய கஷ்டத்தில், அல்லது பிரச்சனையில், அல்லது துன்பத்தில், அல்லது பண நெருக்கடியில், அல்லது நோயில், அல்லது தேவையில் இருக்கும் ஒருவர் நம்மிடம் ஒரு உதவி கேட்டு வரும் போது அதே மோசமான நிலையில் நாம் இருந்தால் நாம் எப்படி நடந்துகொள்வோம் அல்லது எதிர் தரப்பினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவோமோ அதை நாம் செய்வது ஆகும்.

.

தன்னை தானே நேசிக்ககாவன் இந்த உலகத்தில் வாழ முடியாது. எல்லோரும் தான் நன்றாக வாழ வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும். எந்த ஒரு துன்பமோ துயரமோ தனக்கோ தன் மனைவிக்கோ தனது பிள்ளைகளுக்கோ வந்துவிடக்கூடாது என்றுதான் நினைப்பார்கள் அதற்காகத்தான் அவர்கள் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைக்கிறான். அதில் தவறில்லை

ஆனால்

நாம் நம்மையும் நமது குடும்பத்தையும் நேசிப்பது போல அடுத்தவரையும் அவர்களது பிள்ளையையும் நேசிக்கிறோமா? நம்மை போலத்தானே அவர்களும் என்று அவர்களின் துன்பத்தை நமது துன்பம்போல எடுத்துக்கொண்டு ஓடி சென்று உதவி செய்கிறோமா. நண்பனை மட்டுமல்ல பகைவனையும் அதுபோல நேசிக்க வேண்டும். அவன் உங்களுக்கு எத்தனை முறை கெடுதல் செய்திருந்தாலும் சரி அவனையும் தன்னை போல நேசிக்க வேண்டும். தன்னை நெசிப்பவர்களையே நேசிப்பதால் பலன் இல்லை என இயேசு சொல்லியுள்ளார்.
.
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்:

நமக்கு பழக்கம் இல்லாத பக்கத்து வீட்டுக்காரரின் 5 மாத குழந்த்தை இரவு 11 மணிக்கு இடைவிடாமல் அழுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம், அந்த அழுகுரல் உங்களுக்கு கேட்கிறது என்றால், தன் குழந்தை அழுதால் நாம் எப்படி துடிப்போமோ அதுபோல் ஓடி சென்று நம்மால் செய்ய முடிந்த உதவியை (பண உதவி, கடைக்கு போவது, தன்னிடம் உள்ள ஒரு பொருளை கொடுத்து உதவுவது போன்றவை) செய்வது ஆகும்.

.

எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை அந்த இடத்தில் நிறுத்தி நாம் இப்படி இருந்தால் என்ன எதிர்பார்ப்போம் என்று யோசித்து நாம் எதிர்பார்ப்பதை பிறருக்கு செய்வது

.

இது மிகப்பெரிய கட்டளைதான். எல்லோரும் இதேபோல் செய்தால் இந்த உலகமே சொர்க்கமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை!

.

ஆனாலும் இதன் மூலம் இறைவனின் கட்டளைகளாகிய நியாயபிரமாணம் நிறைவேறும் என்று சொல்வது தவறு

எப்படியெனில்.

"ஒருவர் மிகப்பெரிய நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் உள்ளார். அவருக்கு உடனடியாக கொஞ்சம் பணம் தேவை. நம்மிடம் கேட்கிறார். ஆனால் நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை. நாம் அவரை நம்மை போல நேசித்து இறக்கப்பட்டு அலுவலக பணத்தை தெரியாமல் எடுத்து உதவி செய்தால் களவு செய்யாதிருப்பாயாக என்ற நியாயபிரமாணத்தை மீறிவிடுவோம.

.

"ஓய்வு நாளில் ஒருவர் உங்களை ஒரு வேலைக்கு அழைக்கிறார். அந்த வேலை அந்நாளில் முடியாவிட்டால் அவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில் உன்னை போல அவரை நேசித்து வேலைக்கு போவோமேன்றால் "ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்ற நியாயபிராமாண கட்டளையை மீறிவிடுவோம.

.

பிறன் மனைவியின் மீது ஒருவன் தகாத ஆசை வைத்து தற்கொலை செய்ய துணிந்தால் அவனை தன்னை போல நேசித்து அவன் ஆசையை பூர்த்தி செய்ய முற்படும்போது விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தை மீறப்படும்.

.

அகவே தன்னை நேசிப்பது போல பிறரை நேசி என்ற கற்பனை உயர்ந்ததுதான். ஆனால் அதில் நியாயபிரமாணம் முழுவதும் அடங்க எந்த வாய்ப்பும் இல்லை அகவே தான் இயேசு கர்த்தரிடத்தில் அன்பு செலுத்தி(கற்பனைகளை கைக்கொண்டு) உன்னை நீ நேசிப்பது போல பிறரை நேசி என்றார்.

.

இனி இன்றைய கிறிஸ்தவர்கள் (வைராக்கியத்தோடு?) பின்பற்றும் நிருபங்கள் நியாயபிரமாணம் பற்றி என்ன சொல்கின்றன என்பதை பார்ப்போம்

.

நிரூபங்களின் பார்வையில் நியாயபிரமாணம்:-

பாவம் செய்ய கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு கட்டளை. தேவனால் பிறந்தவன் எவனும் பாவம் செய்யான் என்றும் பாவம் செய்பவன் எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் என்றும் வேதம் தெளிவாக சொல்கிறது.

 • பவுல் அவர்களும் நாம் நியாயபிரமாணத்துக்கு கீழ் பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் பாவம் செய்யலாமா? கூடாதே? என்று ரோமர் 6:15லும்
 • கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்று எபேசி 4:16லும் கூறியுள்ளார்

சரி பாவம் செய்ய கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும்

எது பாவம்?

பாவம் செய்யக்கூடாது என்று போதிக்கும் சபைகள் பாவம் என்றால் என்ன? எதுவெல்லாம் பாவம் என்று தெளிவாக போதிப்பது இல்லை. இன்றைய கிறிஸ்தவர்களிடம் எது பெரிய பாவம் என்று கேட்டால்,

.

பீடி சிகரட் பான்பராக் உபயோகிப்பது, மது அருந்துவது, சபைக்கு போகாதது, ஜெபம் பண்ணாதது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, திருவிருந்தில் கலந்து கொள்ளாதது போன்ற அனேக காரியங்களை சொல்வார்கள்.

.

ஆனால் வேதத்தில் பல முறை சொல்லியிருக்கும் பொய் சொல்லக்கூடாது, ஒரு சிறு பொருளை கூட திருடக்கூடாது, வட்டி வாங்கக்கூடாது, நியாயமாய் நடக்க வேண்டும், பத்து கட்டளைகளை கண்டிப்பாக கை கொள்ள வேண்டும், ஒய்வு நாளில் பணம் சம்பாதிக்கும் வேலை செய்யக்கூடாது போன்ற இறைவனின் உண்மை வார்த்தைகளை பாவம் என்று போதிப்பது இல்லை.

உண்மையில் பாவம் என்பது எது என்று ஆராய்வோமானால். முதன் முதலில் பாவம் எப்படி பூமிக்குள் வந்தது?

 

ஆதம் ஏவாள் இருவரும் தேவன் கட்டளையை மீறி புசிக்க கூடாது என்று சொன்ன கனியை புசித்தனர் அது பாவமாயிற்று.

அகவே சுருக்கமாக சொன்னார்

 

தேவன் சொன்ன வார்த்தையை மீறினால் அது பாவம்.

தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது அந்த வார்த்தைகளின் படித்தான் இந்த உலகமே அந்தரத்தில் நிலைநிற்கிறது, தன்னை தானே சுற்றுகிறது. பகல் இரவு கொடை குளிர் எல்லாமே ஏற்படுகிறது. அதன் படி நடப்போருக்கு ஆட்டமேடிக்காக சகல நன்மைகளும் வந்து சேரும் அதை யாரும் தடுக்க முடியாது

அவர் சொன்ன வார்த்தையை மாற்ற அவர் ஒருவருக்கே அதிகாரம் உள்ளது. தேவ குமாரனாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூட கர்த்தர் சொன்ன வார்த்தைகளை இன்னும் கடினமாக்கினாரே தவிர எதையும் கைக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவே இல்லை.


அகவே தேவனால் சொல்லப்பட்டு பின்பு அவரால் மாற்றப்படாத வார்த்தைகள் எல்லாம் கண்டிப்பாக கைகொள்ளப்பட வேண்டும். அதை மீறினால் அதுதான் தேவனின் பார்வையில் உண்மையான பாவம். மேலும் தேவன் செய்யமுடியாத கட்டளைகள் ஒன்றையும் நமக்கு கொடுக்கவில்லை. மிகவும் கஷ்டமான பலியிடுதல், இரத்தம் சிந்துதல் போன்றவற்றை கர்த்தர் பின்னாளில் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று சொல்லி மாற்றி விட்டார்.
.

நியாயபிரமாணத்தின் மூலம் ஒருவரும் நீதிமானாக்கப்படுவது இல்லை ஆனால் இயேசுவின் இரத்தம் மூலம் நீதிமானாக்கப்பட்ட நாம் அந்த நீதியில் தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டுமென்றால் தேவனின் வார்த்தையை மீறி பாவம் செய்யாதிருப்பது மிகமிக அவசியம். ஏனென்றால் மீண்டும் நாம் தேவனுடைய வார்த்தையை மீறி மரணத்துக்கேதுவான பாவம் செய்வோமானால் நம்மை மீட்க வேறொரு பலி இல்லை.

நிரூபங்கள் என்ன சொல்கின்றன?

 • நியாயபிரமாணத்தை மீறுவதே பாவம்(1 யோவா:3:4)

 • பாவத்தை அறிகிற அறிவு நியாயபிராமணத்தினாலே வருகிறபடியால்(ரோம 3:20)

 • பாவம் இன்னதென்று நியாயபிராமணத்தினாலே அறிந்தேனேயன்றி மற்றபடியல்ல. (ரோம 7:7)

 • நியாயபிரமாணம் இல்லாது மீறுதல் இல்லை (ரோமர் 4:15)

.

நியாய பிரமாணம் முடிந்துவிட்டது என்று எழுதியிருக்கும் பவுல் அவர்கள் "தகப்பனையும் தாயையும் கணம் பண்ணுங்கள்" என்றும் "விபசாரக்காரன்.. விக்கிரக ஆராதனைகாரன் தேவனுடய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை" என்றும் எதன் அடிப்படையில் கூறுகிறார்.
.

"தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக" மற்றும் "விபச்சாரம் செய்யாதிருப்பாயாக"
என்பது பத்து கற்ப்பனையில் உள்ளவைகள் அல்லவா?
.

அவ்வாறு இருக்கையில், முடிந்துபோனத்தை ஏன் பவுல் திரும்ப இழுக்கவேண்டும்?

.

ஏனெனில், எது பாவம், எது பாவமல்ல என்பதை நியாய பிரமாணம்தான் சொல்கிறது என்பதை எல்லோரும் ஒப்புகொள்கின்றனர். இப்பொழுது மேலே சொன்னவற்றை ஒரு தொகுப்பாக பார்த்தால்

 • மனிதன் பாவம் செய்யலாமா? - கூடாது.
 • பாவம் எவைகள் என எப்படி அறிந்துகொள்ளலாம்? -நியாயபிரமானணத்தின் மூலம்

 • பாவம் எது? - நியாயபிரமாணத்தை மீறுவது.

நியாய பிரமாணத்தை மீறக்கூடாது என்றால் அவைகள் கைகொள்ளப்பட வேண்டுமல்லவா?

.

பிறகு எப்படி நியாயபிரமாணம் முடிந்து போகும்?.

 

.

சாக்கு போக்கு சொல்லும் மனிதகூட்டம்:

அக மொத்தம் தேவன் விலக்கிய கனியை புசித்துவிட்ட ஆதாம் தேவனிடமே துணிந்து "நீர் எனக்கு துணையாக கொடுத்த ஏவாள் தந்ததால் புசித்தேன்" என்று ஏவாள் மேலும் அவளை உண்டாக்கிய தேவன் மேலும் பழியை போட்டதுபோல இன்றைய மனித கூட்டமும் எதற்கு எடுத்தாலும் ஒரு சாக்கு போக்கு சொல்லுவது அல்லது யார் மேலாவது பழியை போடுவது என தொடர்ந்து வெற்றிகரமாக ஆதாமின் பாவத்தை நிறைவேற்றி வருகிறது என்பதை சுலபமாக புரிந்துகொள்ளலாம்.-- Edited by SUNDAR on Thursday 20th of February 2020 07:49:35 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2003
Date:
Permalink  
 

நீங்கள் யாருக்கு முழுமையாக கீழ்படிகிறீர்கள் ?

பழைய ஏற்பாட்டில் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்ட:-

 • ஒய்வு நாளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது (உப:5:13)

 • நீரில் வழ்பவைகளில் சிறகும் செதிலும் இல்லாதவைகளை புசிக்ககூடது (லேவி)

 • ஸ்திரி விலக்காய் இருக்கும் போது ஏழு நாள் அவளுடன் சேரக்கூடாது.
 • பணத்தை வட்டிக்கு கொடுக்கக்கூடாது (வங்கியில், PF கூட) (எசெக்18:8)

போன்ற அனேக தேவனின் கட்டளைகள் கைகொள்ளப்படுவது இல்லை. காரணம் கேட்டால் பழைய ஏற்பாடு முடிந்து விட்டது என்கிறார்கள்

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொன்ன:-

 • உன்னிடத்தில் கேட்பவனுக்கு கொடு( லூக் : 6:30)
 • உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புபவனுக்கு மனம் கோணாதே (மத்:5:42)
 • பூமியிலே உங்களுக்கு பொக்கிசங்களை சேர்த்துவைக்க வேண்டாம் (மத்:6:21)
 • உங்களுக்கு உண்டானவைகளை விற்று பிச்சை கொடுங்கள் (லூக்:12:33)
 • திருப்பி கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில் கடன் கொடாதே.
 • உன் வீட்டில் விருந்து பண்ணும் போது ஏழை பிச்சைகாரனை கூப்பிடு
 • ஒரு கன்னத்தில் அடித்தல் மறு கன்னத்தை திருப்பி கொடு(லூக்:6:29)

போன்ற தேவ குமாரனின் கட்டளைகள் கை கைகொள்ளப்படுவது இல்லை. காரணம் கேட்டால் இந்த உலகத்தில் வாழும் நாம் அப்படியெல்லாம் செய்ய முடியாது அது மிக கடினம் என்றோ அல்லது எதோ ஒரு சாக்கு சொல்கின்றனர்

அட்லீஸ்ட் பவுல் அப்போஸ்தலர் எழுதிய:

சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசக்கூடாது, பேசும் படி அவர்களுக்கு உத்தரவில்லை(1கொரி:14:34)

 • அர்த்தம் சொல்லுகிறவர் இல்லை என்றல் சபையில் அன்னிய பாஷை பேசக்கூடாது(1கொரி:14:27,28)
 • உண்ணவும் உடுக்கவும் உண்டயிருந்தால் போதும் என்று இருக்கக்கடவோம் (1 தீமோத்:6:8)
 • தெய்வ பயத்தொடே ஒருவருக்கொருவர் கீழ்படியுங்கள் (எபே 5:21)
 • பொய்யை களைந்து அவனவன் பிறருடன் மெய்யை பேசுங்கள்(எபே:4:25)
 • ஒருவருக்கொருவன் அன்பு கூறுகிற விஷயத்திலன்றி ஒன்றிலும் கடன்படாதிருங்கள்

.

போன்ற ஆவியானவரின் வார்த்தைகளும் கைக்கொள்ளபடுவதில்லை ஏன் என்று கேட்டால் நாங்கள் ஆவியில் நடத்தப்படுகிறோம் பாவம் எங்களை மேற்கொள்ள மாட்டாது அல்லது நாங்கள் வாக்குவாதம் பண்ண மாட்டோம் என்று சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

.
ஆவியால் நடத்தப்பட்டால் பாவம் மேற்கொள்ள முடியாதா?

ஆவியால் நடத்தப்படுகிறோம் என்ற மாயபோர்வை ஒன்றை போர்த்திக்கொண்டு எதற்கும் முழு பிரதிஷ்ட்டையோடு கீழ்படியாமல் உலகத்தோடு ஒத்த வேஷம் போட்டு வாழும் சகோதரனே சகோதரியே ஆவியானவர் சபைக்கு எழுதிய செய்திகளை வெளி: 2 ம் அதிகாரம் முதல் பார்க்கிறோம் அதில் சொல்லப்படும் 7 சபையில் 2 சபைதான் ஆவியானவரால் கடிந்துகொள்ளப்படவில்லை மற்ற 5 சபையும் ஆவிக்குரிய சபைதான் அந்த சபையை இறைவன் விரும்பாத பாவம் எப்படி மேற்கொள்ள முடிந்தது என்று சற்று யோசிக்கவும். இதன் மூலம் ஆவியால் நடத்தபபடுகிறவரும் வஞ்சிக்கப்பட முடியும் என்ற உண்மையை தெரிந்துகொள்ளலாம்

.

மேலும் நாம் நியாயபிராமணத்துக்கு கீழ்பட்டிராமல் கிருபைக்கு கீழ்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது என ரோமருக்கு எழுதும் போது :6:14ல் பவுல் அவர்கள் எழுதுகிறார்கள். அதனால் அநேகர் பாவத்தை மிகவும் சுலபமாக செய்ய துணிகின்றனர். ஆதி திருச்சபையில் இருந்த அனனியா சபீராள் இருவரும் கிருபையின் காலத்தில் வாழ்ந்த ஆவியை பெற்ற கிறிஸ்தவர்கள்தான் எப்படி அவர்களை இதயத்தை சாத்தான் நிரப்பி ஆவியானவரிடமே பொய்சொல்ல வைத்தான் அவர்களை பாவம் எப்படி மேற்கொண்டு மரணம் வரை கொண்டு சென்றது?

.

பாவம் எந்த நேரமும் யாரையும் வஞ்சிக்க வல்லது மோசம் போகாதிருங்கள்
.

மேற்சொன்ன காரணங்களை தொகுப்பாக பார்த்தால் எதற்கும் முழுமையாக கீழ்படிய விரும்பாத மனித கூட்டத்தின் கீழ்படியாமையினால்தான் இன்று வரை மரணம் இல்லாமல் வாழ முடியவில்லை என்பதை மிக சுலபமாக புரிந்துகொள்ளலாம் .

.

சாத்தானின் திசை திருப்பும் தந்திரம்:

மனிதன் இப்படி கீழ்படிய விரும்பாமல் இருக்கும்போது சாத்தான் என்ன செய்கிறான் பாருங்கள்.

பிசாசையே தெய்வமாக வழிபடும் ஒரு கூட்டத்தை வைத்துள்ளான்

அதை மீறி வந்தால்

இறைவன் இல்லை என சொல்லும் அளவு ஒரு கூட்டத்தை பிடித்து வைத்துள்ளான்.

அதையும் மீறி இறைவன் என்று ஒருவர் உண்டு என வந்தால்

கல்லையும் மண்ணையும் சிலையையும் வழிபடும்படி ஒரு கூட்டத்தை திசை திருப்பி வைத்துள்ளான்.

அதையும் மீறி வருபவர்களை வஞ்சிக்க

பைபிளை போலவே ஒரு வேதம் ஒன்றை உருவாக்கி அதை வைராக்கியத்தோடு பின்பற்றும்படி வைத்து இயேசுவால் கிடைக்கும் பாவ மன்னிப்பை மட்டும் நம்பாமல் இருக்கும்படி ஒரு பெரிய கூட்டத்தை திசை திருப்பியுள்ளான்.

அதையும் மீறி இயேசுவை அறிந்து கொண்டால்

மரியாள் தெய்வமாக்கி அவர்கள் மூலமாகத்தான் இயேசுவை வணங்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தை திசை திருப்பி வைத்துள்ளான்.

அதையும் மீறி இயேசுவிடம் வந்தால்

மீட்பின் முத்திரையாகிய பரிசுத்த ஆவியை நம்பாமல், அதனால் அணலும் குளிரும் இல்லாமல் இருக்கும்படி ஒரு கூட்டத்தை திசை திருப்பி உள்ளான்.

அதையும் மீறி உண்மையான வழிக்கு வந்துவிட்டால்

இறைவனின் உண்மை வார்த்தையை கைகொள்ளாமல் மிக சுலபமாக எப்படி பரலோகம் போய் சேரலாம் என தவிக்கும் மனிதர்களுக்கு ஆவியனவரின் வார்த்தைகளை அவர்களுக்கு ஏற்றார்போல் புரட்டி காண்பிக்கிறான் அவர்களும் சுலபமாக அவன் வலையில் விழுந்து விடுகின்றனர். பரலோகம் போய் சேர்ந்தால் போதும் என என்னும் அளவுக்கு சோதனையையும் துன்பங்களையும் கொடுத்து எப்படியாவது தன் வலையில் இழுக்க பார்க்கிறான். முடியவில்லை, அதையும் மீறி அவர்கள் சரியான பாதையில் நடந்து பரலோகம் போய் சேர்ந்துவிட்டால் தலையில் உள்ள ஒரு முடி போனது போல "போ" என விட்டு விட்டு மீண்டும் உலகில் உள்ள அடுத்த விசுவாசியை நோக்கி கண்களை திருப்புகிறான்.

.
ஒருவர் பரலோகம் போனதினால் சாத்தானுக்கும் அவனுடைய ராஜ்ஜியத்துக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அவன் ராஜ்ஜியம் பூமியில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு இறைவனை பற்றி தெரியுமோ இல்லையோ அவனுக்கு இறைவனை பற்றி நன்றாக தெரியும். இறைவன் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்றும் அவர் ஒரு ஆத்துமா அவனது பிடியில் உள்ளவரை அவனை அக்கினி கடலுக்கு அனுப்பமா ட்டார் என்றும் அவன் அறிந்து வைத்திருக்கிறான் .மேலும் அவனுக்கும் இது வாழ்வா சாவா என்ற போராட்டம் அகவே அவன் தன் முழு பெலத்தையும் தந்திரத்தையும் உபயோகித்து எல்லோரையும் வஞ்சித்து வருகிறான்.

.

இனியும் நான் காலதாமதம் பண்ணாமல் முதலில் மரணமில்லா வாழ்க்கைக்கு வழியை எழுதிவிட்டு பிறகு அதற்கான மற்ற வசன ஆதாரங்களை எழுதுகிறேன்.

 

 

.-- Edited by SUNDAR on Tuesday 25th of February 2020 04:46:17 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 622
Date:
Permalink  
 

///////////////////அதற்காக நான் சுவிசேஷம் சொல்லக்கூடாது உழியம் செய்யக்கூடாது என சொல்லவரவில்லை. நடைமுறை கிறிஸ்த்தவ உழியங்கள் மற்றும் செயல்பாடுகள் எல்லாமே இயேசு எதிர்பார்க்கும் ஒன்றுதான். அதில் ஏதும் மாற்றம் இல்லை! நாம் கண்டிப்பாக இயேசுவைபற்றி பிறருக்கு சொல்லவேண்டும் அது இறைவனின் கட்டளை. ஆனால் தற்போது உள்ள கிறிஸ்தவ நடவடிக்கைகள் மூலம் எல்லோரையும் மீட்பது சாத்தியமா?

.
ஆனால் எல்லோரையும் நரகஅக்கினியில் இருந்து மீட்பது சாத்தியம் என்றும் அதற்கான வழியையும் சேர்த்தே இயேசு ஏற்படுத்தியுள்ளார் என்றும் அது திறந்தே இருக்கிறது ஆனால் அது யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்றும் இறைவன் வெளிப்படுத்தியுள்ளார்.///////////////

இதட்கான பதிலையும் எழுதுங்கள் .. உங்கள் கருத்துப்படி பார்த்தால் ஊழியம் செய்வதால் பயனில்லையா ? தெளிவாக விளக்குங்கள்__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 622
Date:
Permalink  
 

பயனுள்ள கட்டுரை அண்ணா.. 

 

தொடர்ந்து மரணமில்லா வாழ்க்கைக்கான செய்தியை எழுதுங்கள். வசன ஆதாரத்துடன் தொடருங்கள்.. யார் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் எதிர்த்தாலும் தொடர்ந்து எழுதுங்கள் .. 

 

கர்த்தர் தாமே உங்களை மென்மேலும் பயன்படுத்துவராக.. 

 __________________
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard