////////////////////// இரண்டாவதாக நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறக்கும்போதே பாவத்தில்தான் பிறக்கிறோம் "என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்" என்று சங்கீதம் சொல்கிறது. எப்படியெனில் புசிக்க கூடாது என்று இறைவன் விலக்கிய கனியை புசித்த பிறகுதான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிந்து முதல் குழந்தையே பிறந்தது. எனவே முதல் குழந்தை பிறந்ததே பாவம்தான். அதாவது பிறக்க தகுதியில்லாத நாம் பாவத்தின் காரணமாக பூமியில் பிறந்து விட்டோம். அந்த பிறந்த பாவத்தை மன்னிக்க ஒருவர் இறந்தே ஆகவேண்டும் அது இயேசுவின் மூலம் நிறைவேறியது. ./////////////////////
அவர்கள் பாவம் செய்யாமல் இருந்துருந்தால் குழந்தை பிறந்திருக்காதா?
ஆண்டவர் பல்கி பெறுக தானே சொன்னார்
ஆனால் ஏன் அநேக பரிசுத்தவான்கள் மரணத்தை ஜெயிக்கவில்லை ? ஏன் அவர்கள் மரித்து போனார்கள்? ஏனோக்கையும் எலியாவையும் தவிர..
மரணத்துக்கு நீங்கலாக வழிகள் இருக்கிறது என்பதை அந்த பரிசுத்தவான்கள் அறியவில்லையா ? அநேக தீர்க்க தரிசனங்களை வெளிப்படுத்தின அவர்களுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லையே.. அவர்கள் ஏன் மரித்து போனார்கள்? மரணம் இல்லாமல் வாழ்ந்த யாருமே தற்போது இல்லையே ? கூடினர் 100 , 150 வயதுக்கு மேல் யாருமே இருப்பது இல்லையே ஏன் ?
ஆதியாகமம் 1ம் அதிகாரத்தில் தேவன் சிருஷ்டித்தவர்களை பார்த்துதான் இவ்வாறு சொல்கிறார்.
ஆதியாகமம் 1:28பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
ஆதாம் ஏவாளை பார்த்து அப்படி சொல்லவில்லை. அவர்கள் சாத்தானின் சொல்லை கேட்டு பலுகி பெருகும் வழியை தெரிந்துகொண்டதால் ஏவாளை பார்த்து இவ்வாறுதான் சொல்கிறார்
16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்
அதன்பின்னர் பூமியை நீரினால் அழித்து அதில் தப்பிய நோவா என்ற நீதிமானின் சந்ததியை பார்த்தும் இப்படி சொல்கிறார்.
ஆதியாகமம் 9:1பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
காரணம் "தேவன் நீதிமானுடைய சந்தத்தோயோடே இருக்கிறார்" என்று வசனம் சொல்கிறது. எனவே நோவா என்னும் நீதிமானின் சந்ததியின்மூலம் இயேசுவின் மீட்ப்பின் திடடம் நிறைவேற இருப்பதால் அவ்வாறு பலுகி பெறுக சொன்னார்.
ஆதாமும் ஏவாளும் தேவன் சொன்னதை மீறி சாத்தானுக்கு செவிகொடுத்து அவர்களேபலுகி பெருகும் வழியை தெரிந்துகொண்டார்கள் . எனவேதான் பிறக்க தகுதியற்ற நாம் மீறுதலினால் பிறந்துவிட்டொம் எனவே தாவீது என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம்தரித்தாள் என்று சொல்கிறான்.
(ஒருவேளை ஆதாம் ஏவாள் நன்மை தீமை விருட்ச்சத்தின் கனியை புசிக்காமல் ஜீவ விருட்ச்சத்தின் கனியை புசித்திருந்தால் தேவனே அவர்கள் பலுகி பெருகும் வழியை போதித்திருகைகூடும்)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஏன் அநேக பரிசுத்தவான்கள் மரணத்தை ஜெயிக்கவில்லை ? ஏன் அவர்கள் மரித்து போனார்கள்? ஏனோக்கையும் எலியாவையும் தவிர..
மரணத்துக்கு நீங்கலாக வழிகள் இருக்கிறது என்பதை அந்த பரிசுத்தவான்கள் அறியவில்லையா ? அநேக தீர்க்க தரிசனங்களை வெளிப்படுத்தின அவர்களுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லையே.. அவர்கள் ஏன் மரித்து போனார்கள்? மரணம் இல்லாமல் வாழ்ந்த யாருமே தற்போது இல்லையே ? கூடினர் 100 , 150 வயதுக்கு மேல் யாருமே இருப்பது இல்லையே ஏன் ?
ஏன் அநேக பரிசுத்தவான்கள் மரணத்தை ஜெயிக்கவில்லை ? ஏன் அவர்கள் மரித்து போனார்கள்? ஏனோக்கையும் எலியாவையும் தவிர..
மரணத்துக்கு நீங்கலாக வழிகள் இருக்கிறது என்பதை அந்த பரிசுத்தவான்கள் அறியவில்லையா ? அநேக தீர்க்க தரிசனங்களை வெளிப்படுத்தின அவர்களுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லையே.. அவர்கள் ஏன் மரித்து போனார்கள்? மரணம் இல்லாமல் வாழ்ந்த யாருமே தற்போது இல்லையே ? கூடினர் 100 , 150 வயதுக்கு மேல் யாருமே இருப்பது இல்லையே ஏன் ?
முதலாவதாக பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை பொறுத்தவரை பாவத்துக்கான நிரந்தர மீட்டிப்பாகிய இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டிராத காரணத்தால் அவர்களால் மரணத்தை ஜெயிக்க முடியாத நிலை இருந்தது. ஆட்டு மாட்டு இரத்தத்தினால் நித்தய மீட்ப்பை பெறமுடியாது.
ஏனோக்கு எலிசா போன்றவர்கள் மரிக்காமல் மரணத்தை ஜெயித்து உலகத்தில் வாழவில்லை மாறாக தேவனால் எடுத்துகொள்ளப்படடார்கள். அது வேறு ஒரு நிலை. தேவனால் எல்லாம் கூடும் என்பதன் அடிப்படையில் அதை எடுத்துகொள்ளலாம்.
நான் சொல்லும் இந்த ,மரணத்த்தை ஜெயித்தல் என்பது "மறுரூபமாகி இவ்வுலகில் மரணமில்லாத வாழ்க்கை வாழ்வது" குறித்தது. .
புதிய ஏற்பட்டு பரிசுத்தவான்கள் எல்லோரும் இதுவரை மரிக்க காரணம் என்ன?
இதற்க்கு பலவிதமாக பதில் தரலாம்.
1. காலம் நிறைவேறியபோது ஆண்டவராகிய இயேசு மாம்சத்தில் வெளிப்படடார் என்று வசனம் சொல்வதுபோல காலம் நிறைவேறும்போது சில காரியங்கள் வெளிச்சத்துக்கு வரும் அவ்வாறு ;வெளிப்ப்டும்வரை அந்த உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும்.
2. எல்லோருக்கும் எல்லா விஷயமும் தேவனால் தெரிவிக்கப்படுவது இல்லை. அவரவர் அழைக்கப்பட்ட்தான் நோக்கம் ஓன்று இருக்கிறது உதாரணமாக பவுலை குறித்து ஆண்டவர் அழைக்கும்போது
அப்போஸ்தலர் 9:15அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.
என்று சொல்கிறார்.
பேதுருவை குறித்து சொல்லும்போது:
மத்தேயு 16:18நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அழைப்பு இருந்தது.
ஆனால் மரிக்காத ஒரு நிலை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.
உதாரணமாக ஆண்டவர் யோவானை பற்றி சொல்லும்போது
யோவான் 21:22அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.
அடுத்தாக பவுல் மரணமில்லாமல் வாழ்வது குறித்து இவ்வாறு சொல்கிறார்
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசிஎக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
இங்கு நித்திரையை அடைவதில்லை என்ற பதம் மரணம் அடைவதில்லை என்பதையே குறிக்கிறது.
பவுல் மரணமடையாமல் மறுரூபம் ஆவது குறித்து விசுவாசித்துள்ளார். ஆண்டவர் கூட யோவான் குறித்து அவ்வாறு கூறியுள்ளார்.
எனவே மரணத்தை ஜெயித்து மறுரூபம் அடைவது என்பது பலருக்கு தெரிந்திருக்கிறது ஆனால் காலம் நிறைவேறாத காரணத்தால் அது அவர்களுக்கு கைகூடவில்லை.
ஆனால் தற்போழுது ஆண்டவர் குறிப்பிடட அந்த கடைசி வேளை வந்துவிட்ட்தால் ரகசியமானது வெளியரங்கமாக எல்லோருக்கும் சொல்லப்படுகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படியானால் காலம் நிறைவேறாததால் இன்றும் மரணத்தை ஜெயிக்க முடியவில்லை அப்படியா?
தற்போது மரணத்தை ஜெயிக்க ஒரு மனுஷன் என்ன செய்ய வேண்டும்?
நான் அறிந்திருக்கிரபடி தேவன் எதிர்பார்க்கும் சரியான பரிசுத்த நிலையை இன்னும் ஒருவரும் எடடாத காரணத்தால் இன்னும் மரணம் ஜெயிக்கப்படவில்லை.
மரணத்தை ஜெயிக்க என்ன செய்யவேண்டும் என்பதற்கான பதிலைத்தான் மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல! என்ற திரியில் எழுதி வருகிறேன்.
முக்கியமாக எசேக்கியேல் 18ம் அதிகாரத்தை வாசித்தால் யார் நீதிமான் என்று அங்கே சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய நீதிமானே சாகவே சாவாய் என்ற சாபத்தில் இருந்து விமோச்சனம் பெற்று பிழைக்கவே பிழைப்பாய் என்ற தேவனின் சாப விமோச்சனத்துக்கு தகுதியுள்ளவன் ஆவான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)