அந்த சிறுபெண் மரித்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படி சொல்ல காரணமென்ன ? 24. விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.
ஏன் அவள் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என கூறினார்? தயவு செய்து விளக்கவும்
அந்த சிறுபெண் மரித்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படி சொல்ல காரணமென்ன ? 24. விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள்.
ஏன் அவள் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என கூறினார்? தயவு செய்து விளக்கவும்
மரித்து உயிர்த்தவர்களில் முதல் பலனானவர் கிறிஸ்து என்று 1 கொரி 15: 23, அப் 26:23 சொல்கிறது.
மற்ற மரித்தவர்கள் யாரும் கிறிஸ்த்து உயிர்ப்பதற்கு முன்னர் உயிர்க்கவே முடியாது.
எனவே ஆண்டவர் பார்வையில் அது மரணம் அல்ல நித்திரை காரணம், அந்த சிறுமியை அவர் எழுப்பப்போகிறார்.
நித்திரை செய்பவர் மட்டுமே எழுந்திருக்க முடியும் எனவே ஆண்டவர் அவ்வாறு கூறினார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சரி அண்ணா... ஆண்டவராகிய இயேசு தான் முதட்பலனானவர் என்று வேதம் சொல்லியிருக்க
12. அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
13. கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
14. கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 7 :15. மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
ஆண்டவர் பார்வையில் இவைகள் இறப்பு அல்ல நித்திரையா?
எனக்கு புரியவில்லை இயேசு முதட்பலனாயிருக்க மரித்தவனை அவர் உயிரோடு எழுப்புகிறார் அல்லவா?
-- Edited by Debora on Wednesday 24th of February 2021 03:51:56 PM
எபிரெயர் 9:27அன்றியும், ஒரேதரம்மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
நியாயத்தீர்ப்பு அடைவதற்கு ஏதுவான மரணம் மட்டுமே மரணம் எனப்படும்.
இங்கு இயேசுவால் எழுப்படடடவர்கள் எல்லோருமே மீண்டும் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவான இன்னொரு
மரணத்தை சந்தித்திருப்பதால் அதற்க்கு முன் நடந்தது உலக பார்வைக்கு மரணம் என்று சொல்லப்படடாலும் இயேசு அவர்களை எழுப்பிவிடட ஒரே காரணத்துக்காக அது மரணம் அல்ல நித்திரைதான்.
நித்திரை பண்ணுபவர்கள்தான் திரும்ப எழுப்புவார்கள். .