இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நியாயப்பிரமானமும் தேவனின் கிருபையும்

வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
நியாயப்பிரமானமும் தேவனின் கிருபையும்
Permalink  
 
நியாயப்பிரமாணத்தை கை கொள்ளுவதால் மாத்திரம் நீதிமான்களாக்கப்படுவதில்லை என்று வசனம் சொல்கிறது. அப்படியாயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவன் நீதிமானல்ல என்று பொருள் கொள்ள நேரிடுகிறது?

இதை சற்று விளக்கவும் ..

ரோமர் 3:20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை..

கலாத்தியர் 2:16 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.

ரோமர் 3:28 ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

கலாத்தியர் 3:11 நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

கலாத்தியர் 3:12 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

பாவம் இன்னெதென்று அறிய மாத்திரமா நியாய பிரமாணம்?

ரோமர் 10:4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

எபேசியர் 2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,

கிறிஸ்துவின் இறப்பிற்கு பின்னர் நியாயப்பிரமாணம் முடிகிறதா ? 

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

நியாயப்பிரமாணம் சாபமா ? 

கலாத்தியர் 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.

நியாயப்பிரமானமும் கிருபையும் எதிர் எதிரானதா? 

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

ஆவியினால் நடத்தப்படுகிறவர்களுக்கு நியாயப்பிரமாணம் தேவையில்லையா ? 

I தீமோத்தேயு 1:9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல்,

நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படவில்லையா? 

I யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

நியாய பிரமாணத்தை மீறுகிறதே பாவம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது 

கிருபை மற்றும் நியாயப்பிரமாணம்  இவை இரண்டையும் சற்று தெளிவாக விளக்கவும் __________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 
சிஸ்ட்டர் இந்த தலைப்பு குறித்து பலமுறை விவாதங்கள் நடந்துள்ளது  ஆகினும் மிக சுருக்கமாக என் புரிதலை சொல்கிறேன்.
 
நியாயப்பிரமாணம் என்பது இந்த பூமியில் நாம் மாம்சமாக இருக்கும்போது உலக துன்பங்களில் இருந்து தப்பித்து பிழைக்க நமக்கு அவசியமானது  
 
லேவியராகமம் 18:5 என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
 
ஆனால் இந்த நியாயப்பிரமான கிரியைகளால் மாத்திரம் நாம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. வெறும் நியாயப்பிரமாணத்தை மட்டும் பிடித்துக்கொண்டு நாம் நின்றால் கிருபையில் இருந்து விழுந்துவிடுவோம்.
 
எனவே, இயேசுவின் பேரில் உள்ள விசுவாசம் மிகவும் அவசியமானது 
 
யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; 
 
எபிரெயர் 10:38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
 
சுருங்க சொல்லின் 
 
பூமியில் வாழும்போது துன்பம் இல்லாமல் பிழைக்க நியாயப்பிரமாணம் அவசியம்.
 
மரித்தபின்னர் பரலோகத்தில் போய் சேர்வதற்கு இயேசு மேலுள்ள விசுவாசம் / கிருபை அவசியம்.  
 
எனவே பூமியில் நாம் வாழும்வரை இரண்டுமே நமக்கு அவசியம். 
 
பவுலின் பல கருத்துக்கள் நியாயப்பிரமாணம் தேவையே இல்லை என்பதுபோல் இருக்கும் அப்படி அவர் அதை ஒதுக்கியதால்தான் சாகும் வரை அவர் சரீரத்தில் ஒரு முள் (வேதனை) இருந்தது என்பது எனது கருத்து. ஆகினும் அவர் அதை பெரியதாக பொருட்படுத்தாமல் தேவனுக்காக 
வைராக்கியமாக ஜீவித்தார். அப்படி எந்த பெரிய வியாயாதியையும் துனபங்களையும்  தாங்கிக்கொண்டு தேவனுக்காக வைராக்கியமாக வாழ முடியும் என்றால் நீங்கள் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்வது பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஆவியின் பிரமானத்தில் நடந்தால் போதும். 
 
எனவே இந்த பூமியில் சரீர  வேதனை மற்றும் பிரச்சனைகளில்  இருந்து விடுபட தேவனின் கற்பனைகள் நீதி நியாயங்களின்படி நடப்பது அவசியம்.
 
பிரசங்கி 8:5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்;
 
உன்னதத்தின் ஆசீர்வாதம் மற்றும்   ஆக்கினை தீர்ப்பில் இருந்து தப்புவதற்கு  ஆவியின் பிரமாணங்கள்  அவசியம்  
 
ரோமர் 8:1 கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
 
கீழ்கண்ட திரியை சற்று வாசிக்கவும் 
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 
இவைகளுக்கு ஒவ்வொன்றாக விளக்கம் தரவும்

பாவம் இன்னெதென்று அறிய மாத்திரமா நியாய பிரமாணம்?

ரோமர் 10:4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.

கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

எபேசியர் 2:15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,

கிறிஸ்துவின் இறப்பிற்கு பின்னர் நியாயப்பிரமாணம் முடிகிறதா ? 

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

நியாயப்பிரமாணம் சாபமா ? 

கலாத்தியர் 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.

நியாயப்பிரமானமும் கிருபையும் எதிர் எதிரானதா? 

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

ஆவியினால் நடத்தப்படுகிறவர்களுக்கு நியாயப்பிரமாணம் தேவையில்லையா ? 

I தீமோத்தேயு 1:9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல்,

நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படவில்லையா? 

I யோவான் 3:4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

நியாய பிரமாணத்தை மீறுகிறதே பாவம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது 

கிருபை மற்றும் நியாயப்பிரமாணம்  இவை இரண்டையும் சற்று தெளிவாக விளக்கவும்

இயேசுவின் இறப்புக்கு பின்னர் நியாய பிரமாணத்தை கைக்கொள்ள சொல்லும் வசனங்களை பதிவிடவும்__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 
  1. ரோமர் 7:1. சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?

மேலே சொல்லப்பட்டுள்ள வசனப்படி ஒரு மனுஷன் உயிரோடு இந்த பூமியில் இருக்கும்வரை அவனை நியாயப்பிரமாணம் ஆளுகிறது. அதை யாராலும் மாற்றவே முடியாது.
 
ஆனால் ஆண்டவராகிய இயேசுவின் மூலம் நாம் நியாயப்பிரமானத்துக்கு மரித்தவர்கள் ஆகிறோம்  
 
4. அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
 
இப்பொழுது ஒரு மரித்தவன் மீது கத்தியை வைத்து வெட்டினால் அவனுக்கு வலிக்குமா? வலிக்காது அல்லவா? இயேசுவை எப்படியெல்லாமோ அடித்தார்கள் அவர் வாயை திறவாமல் தாங்கிக்கொண்டார் அல்லவா? 
 
மேலும்  பவுலும்  அவமானம், நிந்தை, கசையடி, நிர்வாணம் போன்ற எல்லா கஷடங்களையும் அனுபவித்தும் அனைத்தையும் தாங்கிக்கொண்டார் அல்லவா?  
 
அதுபோல் மனுஷன்மேல் ஆளுகை செய்யும் நியாயப்பிரமானத்தை  மீறுவதால் ஏதாவது தண்டனை கிடைக்குமானால் நீங்களும் மரித்தவருக்கு எப்படி வலிக்காது அதுபோல் ஏற்றுக்கொண்டு கடந்து போகவேண்டியதுதான்.
 
இல்லை உங்களுக்கு வலிக்கிறது என்றால் நீங்கள் முழுமையாக மரிக்கவில்லை என்றுதான் அர்த்தம். அந்த வலி வேண்டாம் என்று நினைத்தால் தேவன் கடடளையிடட கற்பனைகள் மற்றும் நீதிநியாயங்களை கைக்கொள்வது அவசியம்.
 
I யோவான் 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
   
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 
பவுல் அவர்கள் இரண்டையுமே சொல்கிறார் நியாய பிரமாணம் தேவை என்பது போலவும் தேவை இல்லை என்பது போலவும் சொல்லியிருக்கிறார்.

எது எப்படியோ தேவனின் கட்டளைகளை கைகொள்ளுவதே எனக்கு மேலானதாக தோன்றுகிறது..

ஆண்டவராகிய இயேசுவே சகல கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளுக்குள் அடக்கி அவைகளை கைக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

மத்தேயு 22:40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

I யோவான் 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.

ஆம் இதுவே நலமாக தோன்றுகிறது..

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard